பான்புகியோ ரிஹா

தேதி: February 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

திவேகியில் பான்புகியோ என்பது Bread Fruit. ரிஹா என்றால் Gravy அல்லது Curry எனலாம்.

 

பான்புகியோ - பாதி
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு, எண்ணெய்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் துருவல் (ஹுனி) - கால் கப்
வறுத்த சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - பாதி பல்
பச்சை மிளகாய் - 2


 

காயை பாதியாக நறுக்கி தோல் நீக்கி, நடுவே உள்ள தண்டு போன்ற பகுதியை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி உடனே நீரில் போடவும். இல்லை என்றால் கருத்துவிடும். சிலவற்றில் பால் அதிகம் வரும், கையில் எண்ணெய் தேய்த்து கொண்டு செய்தால் ஒட்டாது.
அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸில் போட்டு தேவையான நீர் விட்டு நைசாக அரைக்கவும்.
காயுடன், பொடியாக நறுக்கிய பாதி வெங்காயமும் சேர்த்து நீர் விட்டு மூடி வேக விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதம் உள்ள பாதி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதில் வெந்த காயை சேர்த்து பிரட்டவும்.
பின் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு, தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து எடுத்து எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். சுவையான பான்புகியோ ரிஹா தயார்.
மாலத்தீவு சமையலில் அனுபவம் உள்ள திருமதி. சோனாலி ரவி அவர்கள் செய்து காட்டியது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி பான்புகியோ ரிஹா நல்லாருக்குங்க சித்ராம்மா போய் இப்போ சோனாலியா ம்ம்ம் கலக்குங்க வாழ்த்துக்கள் இருவருக்கும் ....:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ஆமாம் இப்போ சோனாலியும் வேலை பார்க்கறாங்க, அவங்க இலங்கை காரங்க. அவங்க ஊர் சமையலும் இந்த ஊர் சமையலும் ஒரே மாதிரி என்பதால் நிறைய தெரியும் இவங்களுக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்யாசமான குறிப்பா இருக்கே இந்த பான்புகியோ வை நா எங்க போயி தேடுவேன் நீங்களே செஞ்சு எனக்கு அனுப்பிடுங்க ரொம்ப நல்லா இருக்கு அக்கா உங்க குறிப்பும் அதை செய்த சோனாலி அக்காவும் by Elaya.G

ரொம்ப நல்லா,வித்தியாசமா இருக்குது.பான்புகியோ என்பது பலாக்காய் தானா வனி.ஏன்னா போட்டோவில் பார்க்க பலாக்காய் போல தெரியுது.உங்களுக்கும் சோனாக்கும் என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

பான்பூகிபா வனி, நான் திரும்ப திரும்ப சொல்றேன். பான்பூகிபா, பான்பூரியான்னு குறிப்பை தந்து என்னை மேலும் மேலும் கடுப்பேத்தறீங்க. இதுக்கு தண்டனையா ஊருக்கு வந்ததும் ஒருவாரம் உங்க வீட்ல தான் சாப்பிட போறேன் ;) வனி, இந்த காயை டிவி சமையல் புரோக்ராம்ல பார்த்திருக்கேன். அதானா இது? எனக்கு இது கண்டிப்பா கிடைக்க போறதில்ல. அதனால நீங்க பார்சல் பண்றத தவிர வேற வழி இல்ல. வித்யாசமான காய் + வித்யாசமான குறிப்பு. வனி கலக்குங்க.. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மிக்க நன்றி. நம்ம ஊரில் ஈர பலான்னு கிடைக்குதுன்னு சோனாலி சொன்னாங்க. எனக்கும் தெரியாது. அவங்க கல்யாணம் பண்ணது தமிழரை... அதனால் அங்க கிடைக்கும்னு தெரியும்னு சொன்னாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ஈர பலாக்காய்னு சொல்றாங்க... ஆனா இது பெருசாகாது, இவ்வளவு தான் சைஸ். பலாவும் இதுவும் ஒரே வகை, ஆனா ஒன்னு இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. பார்சலே அனுப்பிடுறேன்... ஆளுக்கு ஒரு பேர் சொன்னாலும் எல்லா பேரும் நல்லாவே இருக்கு :) இல்லன்னா ஊருக்கு வரும்போது உங்களுக்காக கொஞ்சம் காய் கொண்டு வந்துடறேன். சரியா?? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா சின்னதாய் உள்ள பலாக்காய் ல செட்டிநாடு பக்கம் பலாக்காய் பிரட்டல்(அ)மசாலா,பலாக்காய் கூட்டு செய்வார்கள்.அதுவும் நீங்கள் போட்டோவில் காட்டுவதை போல தான் உள்ளது.அதனால் தான் கேட்டேன்.நீங்கள் கூறியதை போல அதை நறுக்கும் போது எண்ணெய் தேய்த்து கொள்வோம்,பிசு பிசுவென்று இருக்கும்.நறுக்கிய பின் தண்ணீரில் போட்டு விடுவோம்.

Expectation lead to Disappointment

எனக்கு நம்ம ஊரில் இருந்தவரைக்கும் இத பத்தி ஒன்னுமே தெரியாது... அதனால் தான் எனக்கு சரியா சொல்ல தெரியல. நானும் முதல்ல இதை பலாக்காய்னு தான் நினைச்சேன்... ஆனா அதுவும் இதுவும் வெவ்வேறன்னு சொல்லிட்டங்க. ஆனா பலாவில் செய்யும் எல்லாம் தான் இதுலையும் செய்யறாங்க... டவுட்டே வேண்டாம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாக்கா எப்படி இருக்கீங்க எனக்கு கொஞ்சநாள் உடம்பு சரியில்லை அதனால் அறுசுவைக்கு வர முடியல்ல.குறிப்பு நன்றாகவுள்ளது. இதை எங்கள் ஊரில் ஆசனிப் பலாக்காய் என்பார்கள்.

குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு. பலாக்காயில் இது போல் செய்து பார்க்கணும். வாழ்த்துக்கள் வனிதா! கொடுத்து வெச்ச மகராசி! தினமும் தினுசு தினுசா சமையல்! அதை செய்யற ஆளும் புதுசா?!! ஹ்ம்ம்....ஜாலிதான் போங்க!!!

கூகுள் இமேஜில் Bread fruit னு போட்டு பாருங்க அத்தனை ஃபோட்டோஸ் வரும். இந்தியாவில் இது கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா, எங்க டார்ச்சர் தாங்க முடியாம.. இந்தியாவில் இந்த காய் கிடைக்கும் வழியை காட்டிட்டீங்க பிழைச்சு போங்க. வனி நீங்க தப்பிச்சீங்க ;) கவி தேங்க்ஸ் பா. உடனே போட்டு பார்த்தேன். தெளிவான குறிப்புகளோட படங்கள். பயனுள்ள தகவல்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி,
வித்தியாசமான குறிப்பு! நானும்கூட படத்தை பார்த்ததும் பிஞ்சு பலாக்காய் என்றுதான் நினைத்தேன் . அப்புறம்தான், உங்க விளக்கங்கள், கவிசிவாவின் படம் லிங்க் எல்லாம் பார்த்து விஷயம் தெரிஞ்சிக்கறேன்.

நீங்க சும்மாவே கலக்குவிங்க, இதில ஒருத்தருக்கு இரண்டு பேரா வேற கூட இருக்காங்களா?! நீங்க போட்டு தாக்குங்க... :) வாழ்த்துக்கள் வனி! சோனாலிக்கும் சேர்த்துதான், சொல்லிடுங்க. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அடடா... உடல் நலமில்லையா?? என்னாச்சு? இப்போ எப்படி இருக்கீங்க? உடம்பை பார்த்துக்கங்க கிஃபா... நானும் நினைச்சுட்டே இருந்தேன், எங்கடா எப்பவும் நம்ம குறிப்பில் இவங்க பதிவிருக்குமே, இப்போ காணோமேன்னு. பரவாயில்லை, உடம்பை பாருங்க. பதிவுக்கு மிக்க நன்றி கீஃபா... இன்னொரு பெயரா??? நல்லா இருக்கு இதுவும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. என்னத்த கொடுத்து வெச்சனோ... அது இங்க வந்து பார்த்தா தானே தெரியும் ;) அவசியம்ச் எய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா... ஆமாம் சமைக்குறதுக்கு முன்னாடி, நானும் அதெல்லாம் பார்த்தேன், இது பலாகாயான்னு கண்டு பிடிக்க... இது என்ன காய்ன்னு ஆராய்ச்சி பண்ண... ;) நன்றி கவிசிவா.

கல்பனா... தேன்க்ஸ்... நான் தப்பிச்சதுக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. எத்தனை நாளைக்குங்க கலக்க போறோம்... வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்க வேண்டியது தான் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான பேரோட குறிப்புகள்.அசத்துறீங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி. எல்லாம் மாலத்தீவு சமையல்... அதான் புது பேரு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதுமையான அருமையான குறிப்பு..எனக்கும் இந்த காய் பத்தி ஒண்ணும் தெரியல..இனிமே தான் தேடிப்பார்த்து செய்யணும்....எப்படித்தான் கண்டுபிடிக்கறீங்களோ..:)

இது சப்பாத்தி,ரொட்டிக்கு நல்ல பொருத்தமா?வேறேதுதுக்கு பொருத்தமா இருக்கும்?
வாழ்த்துக்கள் ..என் பாராட்டா சோனாலிக்கும் சொல்லுங்க

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மிக்க நன்றி. சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே நல்லா இருக்கும். நம்ம ஊர் குருமா போல தான். :) நானெங்க கண்டு பிடிச்சேன்... இங்க மார்க்கட் பக்கம் போனா இது தான் ஏகமா கிடைக்கும், என்னன்னு ரொம்ப நாள் மணடையை கொடஞ்சுகிட்டிருந்தேன், இப்போ இவங்க புண்ணீயத்தில் சமைக்க கத்துகிட்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இந்தியாவில் இதை பார்த்த மாதிரியும் இருக்கு பார்க்காத மாதிரியும் இருக்கு. குறிப்புக்கு மிக்க நன்றி வனி. அடுத்து எந்த நாட்டு உணவை எங்களுக்கு அறிமுக படுத்த போறீங்க வனி? ஆவலோடு இருக்கோம். வாழ்த்துக்கள் உங்களுக்கும் சோனியாவிற்க்கும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனி பெயரே புதுமையா இருக்கு. வித்தியாசமான குறிப்பு வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மிக்க நன்றி. இதுல என்ன சந்தேகம்... டெல்லி சமையல் தான் ;) எல்லாருக்கும் ஏற்கனவே தெரிஞ்சது தான்... நான் புதுசா செய்து காட்டா என்ன இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாம் திவேகி பெயர் வேற ஒன்னும் இல்லை ;) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று நான் உங்கள் குறிப்பு செய்தேன் . சூப்பெர் ஆக வந்தது . மதியம் 1 மனிக்காக காத்து கொன்டு இருக்கிறேன்

thanks for ur receipe

மிக்க நன்றீ. செய்து சுவை பார்த்தீங்களா??? பிடிச்சுதா? அதென்ன 1 மணி??? உங்க கணவர் / பிள்ளைகள் வரும் நேரமா??? புரியல.... அவசியம் அவங்களூக்கும் பிடிச்சுதான்னு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

superb taste!!!!!!!!!!!morning சமையல் முடித்து விட்டு duty-க்கு வந்து விட்டேன். மதியம் 1 மனிக்கு waiting. யெல்லரும் விரும்பி சாப்பிட்டாஙக ..thanks for ur receipe

ஓஹ்... ஏல்லாருக்கும் பிடிச்சுதா... அதுவே பெரிய சந்தோசங்க. செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி தோழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா