போஷி (Boashi)

தேதி: February 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. வாழைப்பூ (போஷி) - 1
2. வெங்காயம் - 2
3. காய்ந்த மிளகாய் - 3
4. கறீவேப்பிலை - சிறிது
5. பூண்டு - 3 பல்
6. எண்ணெய், உப்பு
7. டூனா மீன் துண்டுகள் - சிறிது (விரும்பினால்)


 

வாழைப்பூவை மேலே உள்ள பூ எல்லாம் நீக்கி நடுவே இளசாக இருப்பவை மட்டும் எடுத்து கொள்ளவும். அவற்றை மிக மெல்லியதாக நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதில் உப்பு நீரில் இருக்கும் பூவை பிழிந்து எடுத்து சேர்த்து உப்பு போட்டு கலந்து மூடி வேக விடவும்.
டூனா சேர்க்க விரும்பினால் இது வெந்ததும் சேர்த்து கலந்து மூடி மீண்டும் சில நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
சுவையான போஷி தயார்.


இங்கே நம்மை போல் மேலே இருக்கும் பெரிய பூக்களை சமைப்பதில்லை. அவற்றை நீக்கி விட்டு நடுவே உள்ள இளம் பூக்களை மட்டுமே நறுக்கி செய்வார்கள். உப்பு சுவை பார்த்து சேர்க்கவும், உப்பு நீரில் போட்டு எடுப்பதால் எப்படியும் கொஞ்சம் சுவை இருக்கும். அப்படி போட்டு எடுப்பதால் கசப்பு தன்மை இருக்காது, பூ கருக்காது. சிலர் இதை சமைக்கும் போது வெங்காயத்துடன் சிறிது Pandan Leaves சேர்ப்பார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

"மேலே இருக்கும் பெரிய பூக்களை சமைப்பதில்லை. அவற்றை நீக்கி விட்டு நடுவே உள்ள இளம் பூக்களை மட்டுமே நறுக்கி செய்வார்கள்"

இது சரியாக புரியவில்லையே. விளக்குங்கள், please.

அன்புடன்
ஜெயா

நாம் எப்பவும் கோன் மாதிரி இருக்க பூவை ஒவ்வொரு லேயரா பிரிச்சு உள்ளே அடுக்கா இருக்க பூக்களை எடுத்து அதன் நடுவே உள்ள கொண்டை மற்றும் தொப்பை நீக்கி சுத்தம் செய்வோம் தானே. இங்கே நம்மை போல் வாழைப்பூவில் நன்றாக முத்திய பூக்களை ஆய்ந்து எடுத்து சமைக்க மாட்டார்கள். அதை அத்தனையும் குப்பைக்கு அனுப்பிட்டு கடைசியாக உள்ளே இனி பிரித்து எடுக்க இயலாத ஸ்டேஜ்ஜில் உள்ள பிஞ்சு பூக்களை மட்டுமே சமைப்பார்கள். அதை தான் சொல்லி இருக்கேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா