ப்ரோகோலி ஸ்டிர் ஃப்ரை

தேதி: February 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரோகோலி- 1கப்(1இன்ச் பூக்களாக வெட்டியது)
பூண்டு- 5பல்
சிக்கன் ஸ்டாக் அல்லது வெஜ் ஸ்டாக் க்யூப்- சிறிதளவு
சோயா சாஸ்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார்- 1 1/2 தேக்கரண்டி


 

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து 1மேசைக்கரண்டி உப்பு சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
ப்ரோகோலி பூக்களை அதில் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடித்து வைக்கவும்.
நான் ஸ்டிக் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக வெட்டிய பூண்டு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
ப்ரோகோலி சேர்த்து ஸ்டாக் க்யூப், சோயா சாஸ், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
கார்ன் ஃப்ளோரை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறி செமி சாலிட் ஆக இறக்கவும்.
சூடாக பரிமாறவும்.


இந்த சமையல் முழுவதும் அதிக தீயில் வைத்து செய்ய வேண்டும். சூடாக சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும். Authentic சைனீஸ் உணவின் சுவை பிடித்தவர்களுக்கு இதுவும் பிடிக்கும்.

மேலும் சில குறிப்புகள்