Dear friends pls pray for me

Dear Friends, I am very well know to you all. There is a problem in family now. I love my husband very much but a small issue became big problem and he even decided to get seperated. My parents tried to convince him but still he is not back to normal. I have decided very strongly to correct myself so that I would not hurt his feelings again. Kindly pray for me that my husband should be back to normal and we should lead a peaceful life again.

தோழியே, உங்கள் பெயர் என்ன என்று தெரிய வில்லை. நீங்கள் உங்களுக்கிருக்கும் இந்த பிரச்சனையால் இப்படி ஒரு பெயரில்லாத ஐடியை க்ரியேட் பண்ணீர்களா என்று தெரியவில்லை. எதுவாக இருக்கட்டும். பிரச்சனையை சூட்டோடு சூடாக பார்த்தால் எல்லாமே தவறாக தான் தெரியும். சூடு ஆறிய பிறகு நடந்து முடிந்த பிரச்சனையின் தொலைவு அதிகமாகும். அப்போது அதன் பலமும் குறையும்.

இந்த சமயத்தில் நீங்கள் அமைதியாக இருப்பதே நல்லதும், புத்திசாலிதனமும் கூட. இப்போது உங்கள் பிரச்சனையை பேசினாலும் தவறாக தான் தெரியும். கொஞ்ச நாள் விட்டு பிடியுங்கள். அவருடைய கோபம் குறைந்த பிறகு, மூன்றாவது ஆள் எவரையும் துணைக்கு அழைக்காமல், போனில் பிரச்சனை குறித்து அலசாமல், நேரில் அவரை சந்தித்து இருவர் மட்டுமே மனம் திறந்து, மனம் விட்டு பேசுங்கள். எல்லாமே சீக்கிரம் முடிவுக்கு வரும். பழைய சந்தோஷத்தோடு சேர்ந்து வாழ்வீர்கள்.

தோழியே, பெரும்பாலும் திருமணமான தோழிகள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு பிரச்சனைகளை இதுபோல சந்தித்திருப்பார்கள். யாராக இருந்தாலும் சரி, தனிப்பட்ட இருவர் பிரச்சனையை அவரவர் பெற்றோர் தலையீடும் இல்லாமல் முடிக்க பாருங்கள். ஏனென்றால் அவர் வீட்டில் உங்களை பெற்றோரை பற்றியோ உங்களை பற்றியோ ஒன்றுக்கு இரண்டாக சொல்லி அவரை குழப்பியிருப்பார்கள். இந்த சமயத்தில் உங்கள் பெற்றோரோ, நீங்களோ சென்று பேசினால் அது எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தது போலாகும். காலம் எல்லாவித காயங்களையும் ஆற்றும் சக்தி படைத்தது. என் நெருங்கிய சொந்தம் ஒன்றுக்கு ஒரு சிறு பிரச்சனையை பெரும் பிரச்சனையாக்கி டைவர்ஸ் வரைக்கும் சென்று இன்று அதே ஜோடி பரஸ்பர புரிதலில் ஒன்றாக இணைந்து நன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள். அதனால் தான் உங்களுக்கும் சொல்கிறேன் தோழியே. இந்த சமயத்தில் யார் உங்களை குழப்பி விட்டாலும், உங்கள் கணவருக்கு எதிராக சொல்லிக் கொடுத்தாலும் எதற்கும் செவி சாய்க்காமல் பொறுமை காத்து வரவும். எல்லாம் நன்மைக்கே. இது கூட உங்கள் அருமை உங்கள் கணவர் புரிந்து கொள்ளவே கடவுளின் திருவிளையாடல் என்றே நினைத்துக் கொள்ளுங்கள். சீக்கிரமே நீங்கள் விரும்பிய செய்தி கிடைக்கும். நல்லதே நடக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி கல்பனா அவர்களே. என் பெற்றோர் மட்டுமே அவரிடம் பேசுகின்றனர். அவருக்கு பெரியவர்கள் யாரும் இல்லை.
என் பெற்றோருக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவரும் என் தந்தையிடம் பேசுவது மனதுக்கு ஆறுதலாக உள்ளதாக கூறுகிறார்.

தோழியே, அப்ப கவலையை விடுங்க.. அவர் ஏதோ ஒரு மனக்குழப்பத்தில் அப்படி சொல்லி இருப்பார். நீங்க எதையும் மனசுல வச்சுக்காம முடிஞ்சா இப்பவே பேசி பாருங்க. அவர் கண்டிப்பா கேப்பார். உங்க அப்பா பேச்சை கேப்பார்னு சொன்னீங்கள்ல அப்பவே நம்பிக்கை வந்துருச்சி. அவர் வேறு ஏதோ ஒரு குழப்பத்தில் தான் சொல்லியிருப்பார். நீங்க வீண் கவலைகளை வச்சுக்காதீங்க. அவர்கிட்ட முடிந்த அளவில் இறங்கி போயே பேசுங்க. இதில் எந்த தவறும் இல்லை. நம் வாழ்க்கை நம் கையில். நல்லதே நடக்கும். சீக்கிரம் ரெண்டு பேருமே பழையபடி சந்தோஷமா இருப்பதை இங்கே சொல்ல தான் போறீங்க பாருங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு தோழி.. கல்பனா சொன்ன மாதிரி பிரெச்சனை பெருசா முன்னாடி நிக்கும்போது பேசி பேசி சமாதானம் பண்ண முயற்சி செய்ய கூடாது... அமைதியா இருக்குறது தான் இப்போ முக்கியம். கொஞ்சம் கோவம் போகட்டும், பிரெச்சனை வீரியம் குறையட்டும், அப்பறம் நாம பேசுறது காதில் விழும், புரிந்து கொள்ளவும் முயற்சி செய்வாங்க.

புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம் தான்... அப்பப்ப நாம போறோம்கிறதும், அவங்க நீ வேணாம்ன்றதும்.. ஆனா உண்மையில் பிரிய முடியாது... அது ஒரு வித்தியாசமான பாசம், பினைப்பு... விட்டு போவது சுலபம் இல்லை... உங்களுக்கு மட்டுமல்ல, அவருக்கும் தான். அவருக்கும் பெரியவர்கள் யாருமில்லைன்னு சொல்றீங்க... அப்படி இருக்க இதுக்குலாம் நீங்க வருந்தவே வேண்டாம். பாருங்க இன்னும் சில நாட்களில் பிரெச்சனை ஏதும் இல்லைன்னு வந்து நீங்களே பதிவு போடுவீங்க. இங்க உள்ள எல்லாருக்கும் எங்க எல்லார் பிராத்தனைகளும் எப்பவும் உண்டு.

நம்பிக்கை வைங்க... நம்பிக்கையும் தைரியமும் தான் வாழ்க்கை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

dont worry my friend trust in god he will do the miracle in ur life. myself and our friend definetly pray for u

with love kalamurugan

நானும் வேண்டுகிறேன்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

நானும் வேண்டுகிறேன்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

நீங்க உங்க பெயரை சொல்லவே இல்லையே.

சொல்வதெல்லாம் கல்ப்ஸ் , வனி சொல்லிடாங்க நீங்க இப்போ அமைதியாக இருப்பது தான் நல்லது. காலம் எல்லாத்தையும் மாத்தும் என் நம்புங்கள் அது போதும் உங்களவர் உங்களிடம் சீக்கரமே வந்தினைவார் நான் கடவுளிடம் வேண்டுகிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

Me too pray for you, you will get all the happiness soon.

Vaarungal thozhigale!

i pray for you to u and ur husband back to normal .
i am a new user, but i regularly notice all forums.
in my family also i am having problem,for the 15 years back there have one fracture in my spine and later i am fine and there is no problem.before five years i married, last year january having problem in my spine due to that not able to walk but i am now fine able to walk.. at that time i went to my native mother home. at that time my husband also caring about me . i am having one child .before that my husband family members are not having in good terms .but he give first first first importance for them .he will do what they said whether it is right or wrong. after 3 months my husband only talk thro phone and not accept me to come to chennai.now his family members forced to him give divorce because in future there may posssiblity have the same problem and also for other child. till the month of december (last 2 months)he talk to me thro phone he told that i wount leave u. but now in front of others he said that i want to seperate and also that me and my family cheat them .now i only faith in god . please pray for me , my husband and my child also.

மேலும் சில பதிவுகள்