திடீர் ரசமலாய்

தேதி: February 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (8 votes)

 

பால் (Half & Half) - ஒரு லிட்டர்
ரெடிமேட் ரசகுல்லா டின் - ஒன்று
சர்க்கரை - கால் கப்
பிஸ்தா - 10
ஏலக்காய் - ஒன்று (விரும்பினால்)


 

ஏல‌க்காயை த‌ட்டி வைத்துக் கொள்ள‌வும். பிஸ்தா ப‌ருப்பை மெல்லிய‌தாக‌ சீவி, அல்ல‌து மிகச்சிறிய துண்டுகளாக உடைத்து/ந‌றுக்கி வைக்க‌வும்.
முத‌லில் பாலை ஒரு வாய‌க‌ன்ற‌ பாத்திர‌த்தில் ஊற்றி காய்ச்ச‌வும்.
பால் சூடாகி கொதி வ‌ரும் நிலையில், ச‌ர்க்க‌ரை, பொடித்து வைத்த‌ ஏல‌க்காய் சேர்த்து க‌லந்து விட‌வும். ச‌ர்க்க‌ரை கரைந்ததும், பிஸ்தா ப‌ருப்பை சேர்த்து க‌லந்துவிட்டு அடுப்பை அணைத்து விட‌வும்.
ர‌ச‌குல்லா டின்னை திறந்து, ர‌ச‌குல்லாவை ஒவ்வொன்றாக எடுத்து, லேசாக விரல்களால் அழுத்தி ச‌ர்க்க‌ரை பாகை வ‌டித்துவிட்டு ஒரு பாத்திர‌த்தில் வைக்க‌வும். (அழுத்தும் போது மென்மையாக‌ அழுத்த‌ வேண்டும், இல்லையென்றால் உடைந்துவிட‌ வாய்ப்புள்ள‌து).
பால் சிறிது நேரம் ஆறி, சற்றே இள‌ஞ்சூடாக‌ இருக்கும் போது, ர‌ச‌குல்லாக்க‌ளை க‌வ‌ன‌மாக‌ ஒவ்வொன்றாக‌ பாலில் போட‌வும்.
ஆறிய‌பின், பிரிட்ஜில் வைத்து குளிர்வித்து ப‌ரிமாற‌வும். சட்டென்று செய்துவிடக்கூடிய சுவையான‌ திடீர் ர‌ச‌ம‌லாய் த‌யார்!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பவுலும் ரசமலாயும் அமர்க்கலமா இருக்கே... இதய வடிவில் இதயத்தை அள்ளுதே... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ, நேரம் பார்த்து தான் ரசமலாயை அந்த பவுலில் போட்டு வச்சிருக்கீங்க. திடீர் ரசமலாய் அட்ராக்சனா இருக்கு பா. நிச்சயம் செய்து பார்க்கறேன். வாழ்த்துக்கள் சுதா :) ஹை... பேரை கண்டுபிடிச்சுட்டேனே. இது என் அக்காவோட பேர் பா. சோ... நீங்க எனக்கு அக்கா.. இதை மறுக்கவே முடியாது ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுஸ்ரீ சூப்பர் வாலண்டன்ஸ் டே ஸ்பெஷலா சூப்பர். ரொம்ப ஈசியாவும் இருக்கு சீக்கிரம்த்தில் செய்துடலாம் போல. சூப்பரா இருக்கு ஹார்ட் சேப் பெளல்ல ரெட் மேட்ல.

சுஸ்ரீ, முந்தின பதிவோட தொடர்ச்சி இது. மாற்றுல போய் மாத்துறதுக்குள்ள இந்த யாழி பொண்ணு நுழைய விடாம பண்ணிட்டா :-x

ரசகுல்லாவை பார்த்ததும் என் பையன் சொல்றது தான் ஞாபகத்துக்கு வந்தது பா. ரசமா..............குல்லா... இப்படி தான் அவர் சொல்லுவார். நடுவே இருக்கும் கேப் அரை மணி நேர கேப். ரசமா சொல்லிட்டு கொஞ்ச நேரம் எல்லாருமே மறந்திருப்போம். அப்ப குல்லாவை போட்டு முடிப்பார். என்னடா பையன் குல்லா போடுறானேன்னு பார்த்தா.. ஆஹா.. அரைமணி நேரம் முன்னாடி சொன்ன ரசத்துக்கு போட்ட குல்லா இது தானான்னு, நாங்களே முடிவு பண்ணிப்போம் ;) குட்டி தலைவருக்கு குல்லான்னா இஷ்டம். இதை தான் சொல்ல நினைச்சேன் பா. திடீர் ரசமலாய் ரொம்பவே ஈசியா இருக்கு. சாப்பிட ஆசை வந்தாச்சு. நாளையே நிறைவேத்திடுறேன் உங்க புண்ணியத்துல. மறுபடி என் வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ம்ம் சுஸ்ரீ ரொம்ப ஈசியா செய்துட்டீங்க, நல்ல இருக்கு.

Jaleelakamal

சுஸ்ரீ...ரச மலாய் ஈசி செய்முறை....ஆனால் ரசகுல்லா ஸ்டாக் இல்லை...நாளைக்கு வாங்கி வந்து பண்ணிப் பார்க்கறேன். வாழ்த்துக்கள் சுஸ்ரீ.

சுஸ்ரீ சரியான நேரத்துல அனுப்பியிருக்கீங்க போல:)
ரசமலாயும்,பவுலும் அழகோ அழகு கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வேலண்டைன் ஸ்பெஷலா சுஸ்ரீ, ரசகுல்லா பவுலோட பார்க்கவே சூப்பரா இருக்கு. ரசகுல்லா டின்னாவே கிடைக்குதா பார்ட்டிக்கு சூப்பரா செய்து அசத்தலாம். வாழ்த்துக்கள்.

அடி சக்கை நானா.....சரியான நேரத்தில் சரியான டிஷ். என்ன பவுலுடன் ஆள் எஸ்கேப்பா? சரி சரி பொறுமையா வந்து என்ன கொண்டாட்டம் என்று சொல்லுங்க....சரியா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தக்க சமயத்தில் குறிப்பை வெளியிட்ட‌ அறுசுவை குழுவினருக்கு மிக்க‌ ந‌ன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ

எப்போதும்போல முத‌லாவ‌தாய் வந்து அழ‌கா வ‌ர்ணித்து பாராட்டியிருக்கிங்க‌... :) மிக்க‌ ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

க‌ல்பனா,

பாராட்டிற்கு மிக்க‌ ந‌ன்றி! அதேதான்..., ப‌ட‌ம் இன்னைக்கு போட பொருத்த‌மா இருக்குமேன்னு அனுப்பி விட்டேன். ந‌ம்ம‌ டீமும் ச‌ரியா வெளியிட்டு க‌ல‌க்கிட்டாங்க‌!
பேர்... அட‌டா, நெருங்கி வந்திட்டிங்க‌! ஜ‌ஸ்ட் இன்னும் ஒரு எழுத்துதான் மிச்ச‌ம்! :)
அப்புறம், உங்க வீட்டு வாண்டுக்கு ர‌ச‌....... குல்லா பிடிக்கும்‍ற‌ க‌தையைப்ப‌டிக்க‌ ரொம்ப‌ ஜாலியா இருந்தது. :) அட‌, இதுவே தீடீர் ர‌ச‌ம‌லாய்தானே, ஆசை வரும்போதே ச‌ட்டுனு செய்து சாப்பிட்டிடுங்க‌... :) எப்படி இருந்ததுன்னும் மறக்காம வந்து சொல்லுங்க. மீண்டும் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்க‌ளுக்கும் ந‌ன்றி க‌ல்ப்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

யாழினி,
பாராட்டிற்கு மிக்க ந‌ன்றி! ந‌ல்ல‌ அப்ச‌ர்வேஷ‌ன்! ரெட் க‌ல‌ர் மேட்டையும் கரெக்ட்டா நோட் ப‌ண்ணியிருக்கிங்க‌ளே?!! :)

அன்புடன்
சுஸ்ரீ

ஜ‌லீலாக்கா,
வாங்க,வாங்க‌...எவ்வளவு நாளாச்சி உங்களோடல்லாம் பேசி!
உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்த‌தில் ரொம்ப சந்தோஷ‌மா இருக்கு! :) ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ரசகுல்லா வாங்கி உடனே செய்துபார்த்திடுங்க... அப்படியே எப்படி இருந்ததுன்னும் மறக்காம வந்து சொல்லுங்க. வாழ்த்துக்க‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

//சுஸ்ரீ சரியான நேரத்துல அனுப்பியிருக்கீங்க போல:) //
:)
அவ‌சிய‌ம் செய்து பார்த்து எப்ப‌டி இருந்த‌‌துன்னும் வந்து சொல்லுங்க‌. பாராட்டிற்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஆமாம் வினோ, ர‌ச‌க்குல்லா ரெடிமேட் டின்னாக‌வே கிடைக்கிற‌து. இங்கே நிறைய வகை ப்ராண்ட்கள் கிடைக்கின்றன. நான் நிறைய‌த்த‌ட‌வை இந்த‌‌மாதிரி quick & easy ர‌ச‌ம‌லாய் செய்து சிறிய‌ கெட்டுகெத‌ர்க‌ள் நட‌த்தி இருக்கிறேன். வ‌ரவ‌ங்க‌ எப்ப‌வும் செக‌ண்ட்ஸ் எடுக்காம‌ போக‌மாட்டாங்க‌! :)

பாராட்டிற்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ

//அடி சக்கை நானா.....சரியான நேரத்தில் சரியான டிஷ். ...என்ன பவுலுடன் ஆள் எஸ்கேப்பா? //

:) :) ஆமாம் லாவண்யா, காலைல இருந்து வேலை சரியா இருந்தது... ஈவினிங் வீட்டுக்கு வந்ததும், பசங்களுக்காக ஒரு குட்டி சாக்லெட் கேக் செய்தேன், ஹார்ட் ஷேப்பில்! :) உங்களுக்கு எப்படி போச்சு கொண்டாட்டம் எல்லாம்?!

அன்புடன்
சுஸ்ரீ

ஆக்‌ஷுயலா சில நாள் முன் விஜய் டிவியில் இதே போல் ரெடிமேட் ரசகுல்லா வெச்சு செய்த ரசமலாய் குறிப்பு ஒன்னு பார்த்தேன்... அதில் கண்டன்ஸ்டு மில்க், முந்திரி பாதாம் பிஸ்தா எல்லாம் அரைத்து ஊற்றி பால் ஒரு மாதிரி ஆயிருச்சு... கடைசியில் அதை பார்க்கவே கஷ்டமா இருந்தது. இப்படி செய்திருக்கது தான் சிம்பில் அண்ட் பெஸ்ட் மெத்தட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதை யாருக்கு செய்து கொடுத்திங்க.. அதை சொல்லுங்க ;)
கல்ப்ஸ்ஸோட குல்லா கதை சூப்பர் :).. வாழ்த்துக்கள்.. அசத்திட்டிங்க :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு சுஸ்ரீ,

இந்தக் குறிப்பைப் பார்த்து, எங்க ஆஃபிஸ்ல ஒரு பொண்ணு, உடனே ட்ரை பண்ணிப் பாத்துட்டாங்க. எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு இந்தக் குறிப்பு.

எல்லாரும் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லச் சொன்னாங்க.

நானும் விருப்பப் பட்டியலில் சேர்த்துட்டேன். செய்துட்டு மீண்டும் வந்து சொல்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

இன்னிக்கி உங்க திடீர் ரசமலாய் செய்தேன்.செய்வதற்கு ரொம்ப சுலபமாவும் சுவையாவும் இருந்தது . 10 நிமிஷத்துக்குள்ள வேலை முடிஞ்சது. நான் haldiraams ரசகுல்லா டின்ல பன்னேன்.என் மாதிரி கத்துக்குட்டிகளுக்கு இது ரொம்ப ஈஸி. நான் அப்படி தான் ஒரு தடவ ரசகுல்லா பன்னுறேனு பன்னி 2 லிட்டர் பால வேஸ்ட் ஆக்குனது தான் மிச்சம். இவ்வளவு ஈஸியான் குறிப்ப கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.