கடலைபருப்பு கிரேவி

தேதி: February 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (11 votes)

 

கடலைபருப்பு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 6 பல்
தக்காளி - ஒன்று (பெரியது)
உப்பு - தேவைக்கு
அரைக்க:
தேங்காய் - அரை கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
இஞ்சி - சிறிது
பூண்டு - 2 பல்
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
தாளிக்க:
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
சோம்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
கருவேப்பிலை - ஒரு கொத்து


 

வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு தாளிக்கவும்.
வெங்காயம், பூண்டு, தக்காளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும்.
அதில் அரைத்த தேங்காய் விழுதுடன் கடலைபருப்பை நன்கு அலசிவிட்டு சேர்க்கவும்.
4 தம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து இறக்கவும்.
கடலைபருப்பு கிரேவி தயார். இது தேங்காய் ரொட்டி, சப்பாத்தி, இட்லிக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் சுவா,இது தானா அது? எப்பவும் இந்த குறிப்பை சொல்லி என்னமா கடுப்பேத்துவீங்க என்னை. இனி, நானும் அடிக்கடி செய்து உங்களை கடுப்பேத்துவேனே..நிஜ்ம்மாவே வித்யாசமான குறிப்பு தான் பா. நீங்க சொல்ற ஒவ்வொரு குறிப்பையும் நான் முதல் முறை கேள்விபடுறேன். நாளைக்கே கண்டிப்பா செய்து பார்த்துட்டு சாட்ல சொல்றேன் பா. தொடர்ந்து இது போலவே புதுமையா கலக்குங்க சுவா. வாழ்த்துக்கள் :)சுவா, இந்த குறிப்புல நான் தான் பஸ்ட் பதிவு ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வித்தியாசமான குறிப்பு. ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் தான் மூன்றாவது பதிவு :-) ஸ்வர் வித்தியாசமா இருக்குப்பா ஈஸி கூட செய்துட்டு சொல்றேன் ஸ்வர். ஏன் ஸ்வர் முன்ன மாதிரி அடிக்கடி குறிப்புகள் வருவதில்லை

ரொம்ப நல்ல குறிப்பு அடுத்த முறை இட்லிக்கு இதை ட்ரை பண்றேன் நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி.......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அது தான் இது....:)))
ஹாய் கல்ப்ஸ் முதல் பதிவே உங்களோடதா ரொம்ப சந்தோசமா இருக்குப்பா கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுங்க.உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி கல்ப்ஸ்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி வனி,ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

யாழி மிக்க நன்றிப்பா:) கண்டிப்பா செய்துபாக்கனும் பிடிச்சுதான்னும் சொல்லனும் :)
ஆமாம் யாழி முன்ன மாதிரி அனுப்ப முடிவதில்லை உங்களை போன்ற தோழிகளின் ஊக்கம்தான் அப்பப்போவாவது அனுப்ப தூண்டுது இனி அடிக்கடி குறிப்பு அனுப்ப முயர்ச்சிக்கிறேன் பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தனா மிக்க நன்றிப்பா,கண்டிப்பா செய்து பாருங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நல்லா இருக்கு உங்க குறிப்பு இந்த வாரமே செய்து பார்த்துட்டு சொல்லுறேன் வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

இளையா மிக்க நன்றிப்பா,கண்டிப்பா செய்துட்டு சொல்லுப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் புதுசாவும் இருக்கு கண்டிப்பா ட்ரை பன்னனும்.

அன்புடன்
ஸ்ரீ

என்ன ஒரு ஆச்சர்யம்!! புதுமை !! மணம் குணம் தரம் , எல்லாம் நிறைஞ்ச ,

கடலை பருப்பு கிரேவி ,
இதல்லவோ நொடியில் ரெடி சமையல் ..
ஆஹா அருமை, சுவா கூடவே சப்பாத்தியோ, ரொட்டியோ
போட்டோவை போட்டிருந்தீங்கன்னா

அறுசுவை மணக்கும்..

சுவா, வாசம் வீசுதுப்பா!!

ஸ்ரீ மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உத்ரா என்னோட குறிப்புக்கு உங்களோட முதல் பதிவு ஆஹா ரொம்ப சந்தோசமா இருக்குப்பா மிக்க நன்றிப்பா.

இதுக்கு முந்தின குறிப்பில் ரொட்டியை அனுப்பிருக்கேன் பா.அதான் இவர் தனியா வந்திருக்கார் :)))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கடலைக்குழம்பு செய்முறை ஈஸியா இருக்கு ஸ்வர். காய்கறி எதுவும் இல்லேன்னா கூட சீக்கிரம் செய்திடலாம் போல. தேங்காய் ரொட்டிக்கு மேட்ச்சிங்கா இத செய்து பார்க்கனும்.

வினோ மிக்க நன்றிப்பா,செய்து பாத்துட்டு பிடிச்சதான்னு சொல்லுப்பா எங்க வீட்டுல தேங்காய்ரொட்டின்னா கடலைகுழம்பு அவசியம் இருக்கனும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸவர்னா நான் உங்க முட்டைவடைகுழம்பு போட்டோ அனுப்புனேன் ஆனா வரலை ஏன் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க

வாழ்க வளமுடன்

அருமையா இருக்கு..பார்க்கவே...நான் கடலைபருப்பை வடைக்கு த்தவிர கூட்டுக்கு கூட போட்டதில்ல...இத பார்க்கும்போது செய்ய தோணுது...தேங்காய் ரொட்டி குறிப்பு பார்த்துட்டு இரண்டும் முயற்சி பண்ணீட்டு சொல்றேன்..

ஒரு சின்ன சந்தேகம்...கடலைபபருப்புன்றது கடலிலிருந்து எடுக்கும்பருப்புதானே..:):) எடுத்துட்டா போச்சு:)

வாழ்த்துக்கள் ஸ்வர்ணா :)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ப்ரியா அனுப்பினதா சொன்னீங்க கொஞ்சம் வெய்ட் பன்னுங்க பா நிச்சயமா போடுவாங்க. நானும் அண்ணாகிட்ட கேட்டுபார்க்கிறேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளா உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா,கண்டிப்பா செய்து பாருங்க :)

//ஒரு சின்ன சந்தேகம்...கடலைபபருப்புன்றது கடலிலிருந்து எடுக்கும்பருப்புதானே..:):) எடுத்துட்டா போச்சு:)//

அடடா இந்த சந்தேக புயலைத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன் என் குறிப்புல உங்க பதிவு(சந்தேகம்) இல்லையேன்னு அந்த குறையை இன்னிக்கு தீர்த்து வச்சிட்டீங்க :)))ரொம்பவே சந்தோசம் இளா உங்கள் வருகை:)
அடிக்கடி வாங்க இதே மாதிரி சந்தேகத்தோட :)அப்படியாச்சும் உங்க கிட்ட பேசுறேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வித்தியாசமான குறிப்பு. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கடலைபருப்பு கிரேவி புதுசா இருக்கு. கண்டிப்பா ஒரு நாள் செய்து பார்க்கனும். கடைசிப்படம் சூப்பர்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

கடலைப்பருப்பு கிரேவி வித்தியாசமான குறிப்பாக இருக்கு. வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

லாவண்யா மிக்க நன்றிங்க.செய்துட்டு எப்படி இருந்துச்சி சொல்லுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா..:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரே ஆச்சர்யமா இருக்குப்பா ரொம்ப நாளாச்சு உன்னோட பதிவை பார்த்து
மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்,

உங்க குறிப்புக்கு நான்தான் பர்ஸ்ட் வோட் பண்ணினேன்,விருப்ப பட்டியல்லையும்

சேர்த்திட்டேன் ஸ்வர்.கிரேவி சூப்பராயிருக்கு ஸ்வர்,பார்க்கும் போதே ஆசையைத்

தூண்டுது,இட்லியோட ஜோடி சேர்த்து சாப்பிட்டு பார்க்கிறேன் ஸ்வர்.அருமையான

குறிப்பு கொடுத்த தங்கப்பெண்ணிற்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

சொல்ல மறந்துட்டனே!போட்டோஸ் அழகு ஸ்வர்.

அன்புடன்
நித்திலா

நீதானா நீதானா அன்பே நீதானா.......:))

ஹாய் நித்தி நீதான் வோட் பன்னினதா யாருடா பதிவே இல்ல அதுக்குள்ள வோட் போட்டதுன்னு நினைச்சேன்.
நித்தி வாழ்த்துக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிப்பா...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கடலைபருப்பு கிரேவி பார்த்தாலே ருசியா இருக்குன்னு தெரியுது.. பொறியல், வடை மட்டும் செய்யாமல் இது போல ஒரு கிரேவி ஐட்டம் கொடுத்ததற்கு நன்றி..

"எல்லாம் நன்மைக்கே"

பாக்யா உங்கள் வருகைக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அழகான படங்கள்.நல்ல கலர் :).. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ் மிக்க நன்றிடா,செய்து பார்த்து சொல்லுங்க.:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு சுவர்ணா... இன்று இரவு சப்பாத்திக்கு செய்து சுவைத்தாயிற்று. ரொம்ப அருமை. எறக்குறைய வடகறி சுவை... ஆனா எண்ணெய் குறைவான, சுலபமான செய்முறை. :) ரொம்ப பிடிச்சுது எல்லாருக்கும். இனி அடிக்கடி செய்வேன். நல்ல குறிப்புக்கு மனமார்ந்த நன்றிகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவர்ணா, உங்க கடலை பருப்பு கிரேவி இப்போ தான் செய்து சப்பாத்திக்கு சாப்பிட்டு விட்டு வரேன். மிகவும் அருமை. நல்ல சுவையாய் ஒரு ரெசிப்பி கொடுத்தமைக்கு நன்றிகள் பல.

இன்று இரவு தோசைக்கு உங்கள் கடலைப் பருப்பு கிரேவி தான்... நன்றாக இருந்தது.. குக்கர் விசில் மட்டும் 3 போத வில்லை 6-7 விசில் விட்டோம்.. :) நல்ல டேஸ்டியாக இருந்தது.. நன்றி.. :)

ஸ்வர்ணா இன்று கடலைபருப்பு கிரேவி செய்தேன். சப்பாத்திக்கு சூப்பரா இருந்தது.நன்றி

இதுவும் கடந்து போகும்