மசாலா டீ

தேதி: February 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

இஞ்சி - ஒரு துண்டு
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு -1
ஏலக்காய் -1
சுக்கு - கொஞ்சம்
பால் - ஒரு தம்ளர்
சீனி - தேவையான அளவு
டீ தூள் - தேவையான அளவு


 

பால்,சீனி ,டீத்தூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்யவும்.
பாலை காய்ச்சி அதனுடன் டீத்தூள் சேர்த்து ஒருகொதி வர விடவும்.கொதித்த பாலோடு மசாலா பொடியை சேர்க்கவும்
டீ நிறம் மாறியதும் இறக்கி வடித்து வைக்கவும்.இதனுடன் சீனி சேர்த்து சூடாக சாப்பிட மசாலா டீ ரெடி.
டீ தூள் சேர்க்காமல் அப்படியே மசாலா பாலாகவும் அருந்தலாம்..


மேலும் சில குறிப்புகள்


Comments

இதில் சிறிது மிளகு சேர்த்து கொண்டால் சளி இருமல் நேரத்தில் அருமையாக இருக்கும்... உடம்பிற்கும் நல்லது

Archana Radhakrishnan

அப்படியா உங்க முறைப்படி ஒரு முறை செய்து பார்க்கிறேன் அர்ச்சனா. நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

masala tea migavum nantra ullathu. migga nandri kumari.

thank u krithijems

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி, இன்று ஈவ்னிங் இந்த டீ தான் செய்தேன். அனைத்து மசாலாக்களின் கூட்டணி மணத்தோடு மனதிற்கும், நாவிற்கும் மிகவும் ரம்மியமாக இருந்தது. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி கல்பனா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி இன்று மாலை உங்களின் மசாலா டீ குடித்தோம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி பா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சுக்கு-இஞ்சி இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

இஞ்சி - Fresh Ginger
சுக்கு - Dry Ginger

பதப்படுத்தப்பட்டு உலர்ந்த இஞ்சி தான் சுக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா