மாசி நாசிகோரிங்

தேதி: February 15, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பாஸ்மதி சாதம்- ஒரு கப்
மாசி கருவாடு தூள்- 2 ஸ்பூன்
வெங்காயம்-2
பச்சைமிளகாய்-2
பூடு-5
இஞ்சி-சிறுதுண்டு
முட்டை-2
மிளகுதூள்- சிறிதளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து


 

முட்டையில் மிளகுதூளை சேர்த்து நுரை பொங்க அடித்து அடையாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். பின் அதனை பொடிபொடியாக நறுக்கவும். அல்லது கைகளால் உதிர்த்துவிடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, தாளிக்கவும்.

பின் பொடித்த இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய் வதக்கவும்

அதன் பின்னர் வெங்காயத்தை சேர்த்து சிவந்ததும் மாசியை சேர்த்து கிளறவும்.

பின் சாதத்தை கொட்டி கிளறவும்.

இப்போது முட்டையை சேர்த்து பிரட்டவும்.


சாதத்தில் உப்பை பாதியளவு மட்டும் போடவும். மாசியில் உள்ள உப்பு போதுமானது. மேற்கொண்டு சேர்க்கதேவையில்லை.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமி..
என்னதிது எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்பூடி?.. ;) வனிக்குப் போட்டியா.. ?.. கருவாட்டையும் தூள் செய்தாச்சா.. ;) எந்த ஊர் பாஷை இது கொஞ்சம் விலாவாரியா சொன்னீங்கன்ன தெரிஞ்சுக்கிறேன்... :)

ஹா ஹா சாந்தினி நாசிகோரிங் அப்படீங்கறது மலாய் வார்த்தை. ஃப்ரைட் ரைஸ் தான் மலாயில் நாசி கோரிங். நாசி- சாதம், கோரிங்(கோரேங்- Goreng)- ஃப்ரைட். மாசின்னா டுனா கருவாடு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவாவே சொல்லிட்டாங்க :-)

கடற்கரையோர பகுதிகளில் மாசிகருவாடு என கேட்டாலே தருவார்கள். பார்க்க அச்சு அசலாக விறகுகட்டை போலவே இருக்கும். அதை அம்மியில் இடித்து பொடி செய்ய வேண்டும் அல்லது மிக்ஸியில் அடிக்கலாம். பொடித்த பின்னும் மரத்தூள் போலவே தான் இருக்கும். ஆனால் மனமும் சுவையும் சான்சே இல்ல :-) கருவாடு வீச்சம் இருக்காது :-) கிடைத்தால் செய்து பாருங்க

நன்றி கவிசிவா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரெண்டு பேருக்கும் நன்றி, விளக்கம் கொடுத்ததற்கு.. மலாய்ல சொன்ன இங்க இருக்கிறவங்ககளுக்குத் தெரிய வாய்ப்பு ரொம்பக் கம்மி! சமீபமாதான் குட்டி விறகு கட்டை மாதிரி ஒரு ஐடம் மார்கெட்ல பார்த்தேன்.. அது தானோ என்னவோ... தெலுங்குல தெரிஞ்சா அதையும் நீங்களே சொல்லிடுங்களேன். :)

தெலுங்கில் எனக்கு தெரியல பா.

அதே குட்டி விறகு கட்டை தான். முகர்ந்து பாருங்க. துனா வாசனை வரும் :-)
அப்ப கன்பார்ம் ஹி...ஹி...ஹி..

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி..

இட்ஸ் ஒகே.. அடுத்த வாரத்தில் முடிந்தால் செய்து விட்டுப் பதிவிடுகிறேன்..