வாழைக்காய் பொடிமாஸ்

தேதி: February 15, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

வாழைக்காய் - 2 (பெரியது)
காரட் - ஒன்று
தேங்காய் துருவல் - கால் கப்
எலுமிச்சம் பழம் - ஒன்று
பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 3 தேக்கரண்டி
இஞ்சி - சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 3
முந்திரி பருப்பு - 8
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை


 

தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாழைக்காயை துண்டுகளாக்கி தண்ணீரில் தோல் உரியும் பதத்திற்கு வேக விடவும்.
ஆறியதும் காரட் துருவியில் மெல்லியதாகச் சீவிக் கொள்ளவும். அதுப் போல் காரட்டையும் துருவவும். இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் பெருங்காயம், கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு, முந்திரி சேர்த்து சிவந்ததும், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
அதில் துருவிய காரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அத்துடன் துருவிய வாழைக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
மேலே தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து பரிமாறவும். சாம்பார், வற்றல் குழம்பு சாதத்துடன் சாப்பிட இந்த பொடிமாஸ் நன்றாக இருக்கும். விருந்துகளுக்கு ஏற்றது இது. இதையே வாழைக்காயைத் துருவாமல் வேகவிட்டதை கையால் உதிர்த்தும் செய்யலாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராதாம்மா, கலக்குறீங்க போங்க. முதல் தட்டின் அலங்காரம் சூப்பர். மிகவும் வித்யாசமான குறிப்பு. கேரட்டை சேர்த்து தந்திருக்கீங்க. ஊருக்கு வந்து ட்ரை பண்றேன். ஒரு குட்டியூண்டு டவுட். வாழைக்காயை தோலோட வேக வைச்சா உவர்ப்பா இருக்காதா? சுவையான, சத்தான குறிப்பு. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Radha amma simple dish.ana supera sanchitiga.athuvum vazhaka kuda carrat sarthu vithiyasama sanchitiga.naan night sayaparan.pasagalukum nallathu ithamathiri kodutha

Be simple be sample

வாழக்காய் பொடிமாஸ் ரொம்ப நல்லா இருக்கு கலர் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு நான் இது வரை பொரியல் இல்லேன்னா வறுவல் தான் பண்ணி இருக்கேன் அடுத்த முறை இதை முயற்சி செய்கிறேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு, அறுசுவக் குழுவினருக்கும் மிக்க நன்றி.

கல்பனா....முதல் ரசிகையாக வந்து பாராட்டியதற்கு நன்றி. வாழைக்காயை தோலுடன் தான் வேக வைக்க வேண்டும்.துவர்ப்பு வராது. அப்போதான் உரித்து துருவ முடியும்.

ரேவதி, தனா...பாராட்டுக்கு நன்றி. செய்து பார்த்து விட்டு கண்டிப்பாக சொல்லுங்கள்.

ரொம்ப வித்தியாசமா கலர்ஃபுல்லா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராதாம்மா,

வாழைக்காயில் ஓர் அருமையான குறிப்பு. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. நன்றி.

ஹலீமா.

அன்புடன்,
ஹலீமா

வாழைக்காயில் பொரியல், வறுவல் மட்டும் தான் தெரியும்வேற எதாவது செய்ய கத்துக்கனும்னு நினைத்தேன் குறிப்பு குடுத்துடிங்க, வாழைக்காய் வாங்கி செஞ்சு பாத்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்றேன்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

காரட் சேர்த்து செய்திருப்பது வித்தியாசம். நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்.

//பாத்திரத்தில் பூவெல்லாம் ஒட்டியிருப்பதை பார்த்தவுடன் எனக்கு பொங்கல் ஞாபகம் வந்து விட்டது :) //

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாழைக்காய் பொடிமாஸ் நல்லா இருக்கு. நான் வெறும் வாழைக்காயை வைத்து செய்திருக்கேன். கேரட் சேர்த்து செய்திருப்பதுனால நல்ல கலர்ஃபுல்லா வந்திருக்கு. அடுத்தமுறை இப்படி செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

வாழைக்காய் வறுவல்,மசாலா தவிர என்ன செய்யலாம் என்று நினைத்த போது உங்களுடைய குறிப்பு அருமை.காரட் சேர்த்திருப்பதால் சத்தும் அதிகம்.செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

வனிதா...பாராட்டுக்கு நன்றி...எனக்கு எல்லாமே கலர்ஃபுல்லா இருந்தா பிடிக்கும்!

ஹலீமா...வாழ்த்துக்கு நன்றி..

லாவண்யா...நல்லா இருக்கீங்களா?
//பாத்திரத்தில் பூவெல்லாம் ஒட்டியிருப்பதை பார்த்தவுடன் எனக்கு பொங்கல் ஞாபகம் வந்து விட்டது :) //
சும்மா ஒரு அழகுக்குதான்!!

சுஸ்ரீ...நன்றி...செய்து பார்த்து சொல்லுங்க....கேரட் சேர்ப்பதெல்லாம் நம்ம கற்பனைதான....பச்சைப் பட்டாணி கூட வேக வைத்து சேர்க்கலாம்...இன்னும் கலர்ஃபுல்லா இருக்கும்! சத்தும் கூட!!

மீனாள்....அவசியம் செய்து பார்த்து பின்னூட்டம் கொடுக்க மறக்காதீங்க...பாராட்டுக்கு நன்றி...

வாழைக்காய் பொடி மாஸ் சூப்பர்.. காரட் சேர்த்து புது விதமா செய்து இருக்கீங்க... கலர்புல் பொடிமாஸ் அருமையா இருக்கு... நிச்சயம் செய்வேன்..

"எல்லாம் நன்மைக்கே"

ராதாம்மா எனக்கு பிடிச்ச பொடிமாஸ் அப்படியே நான் செய்வது போலவே இருக்கு ஆனால் நான் முந்திரியும்,கேரட்டும் சேர்க்கமாட்டேன்,வாழ்த்துக்கள்ங்கம்மா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வித்தியாசமா இருக்கு..:) பூக்கள் கார்னிஷ் அழகு :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பாக்கியா...நன்றி...செய்து பார்த்து சொல்லு.

ஸ்வர்ணா....நலமா? நீ சொன்ன மாதிரி நம்ம தஞ்சை பக்கம் இந்த பொடிமாஸை உதிர்த்துதான் செய்வது வழக்கம். கேரட்டும் சேர்ப்பதில்லை. இது நான் ஒரு திருமணத்தில் சாப்பிட்டேன். உடனே அந்த குக்கிடம் கேட்டு செய்தேன். சத்தோடு கலர்ஃபுல்லாவும் இருப்பதால் இந்த முறையில்தான் நான் செய்வேன். நீயும் செய்து பார்த்து சொல்லு.

ரம்யா...பாராட்டுக்கு மிக்க நன்றி...

நேற்று உங்க வாழைக்காய் பொடிமாஸ் செய்து பார்த்தேன். துருவின வாழைக்காய் கேரட்டோடு வதக்கும்போது நல்லா வதக்கிட்டேன். கொஞ்சம் குழைந்துவிட்டது. டேஸ்ட் நல்லா இருந்துச்சுமா. நன்றி

வினோஜா...வாழைக்காயை ரொம்ப வேகவிடக் கூடாது....தோலி உரியும் அளவுதான் வேகவிட வேண்டும். நீ கொஞ்சம் அதிகமா வேக விட்டிருப்ப....அதான் குழைஞ்சு போயிருக்கும்.

இன்று லன்சுக்கு செய்தேன்..மிகவும் சுவையாக இருந்தது..குறிப்புக்கு நன்றி....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.