லோணு மிருஸ் (Lonumirus)

தேதி: February 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. மிளகாய் வற்றல் - 15
2. சின்ன வெங்காயம் - 5 அல்லது பெரிய வெங்காயம் - 1
3. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி [விரும்பினால்]
4. பூண்டு - 5 பல்
5. மிளகு - 1/2 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - 1 கொத்து
8. உப்பு
9. எலுமிச்சை - 1 அல்லது சின்ன மாங்காய் - 1


 

அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
மாங்காய் இல்லாமல் எலுமிச்சை சேர்ப்பதாக இருந்தால் மற்றவை அரைத்த பின் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.


திவேகியில் லோணு (எந்த ‘ல’ எந்த ‘ன’னு கேட்டுடாதீங்க) என்றால் உப்பு, மிருஸ் என்றால் மிளகாய். மாலத்தீவு உணவில் இது மிக முக்கியமானது. காரம் இல்லாமல் செய்யப்படும் கறி வகைகளுக்கு பக்க உணவாகவோ அல்லது மீன் வகைகள் வறுக்க மேலே தடவும் விழுதாகவோ பயன்படுத்துவார்கள். முக்கியமா கருதியா சாப்பிடும் போது ரோஷி, கருதியா கூட இது தான் முக்கியமான பக்க உணவு. காரம் தாங்காது... நமக்கு!!!

மேலும் சில குறிப்புகள்


Comments

ලුණුමිරිස් (சிங்களம்) குறிப்போ என்று எட்டிப் பார்த்தேன் வனி. ;) இது வித்தியாசமாக இருக்கிறது.

//திவேகியில் லோனு (எந்த ‘ல’ எந்த ‘ன’னு கேட்டுடாதீங்க) என்றால் உப்பு, மிருஸ் என்றால் மிளகாய்.// ம்.. சிங்களத்தில் ලුණු (லுணு) - உப்பு, මිරිස් (மிரிஸ்) - மிளகாய்.

‍- இமா க்றிஸ்

எனக்கு தெரியுமே உங்க ஊரில் இது உண்டுன்னு ;) எப்படி தெரியுமா??? பேரு நான் கொடுத்த பேரில் ஆனா வேறு விதமா இருக்கும் பார்க்க, இங்க கடைகளில் இலங்கையில் இருந்து விர்பனைக்கு வந்திருக்கும், பார்த்திருக்கேன். எண்ணெய் இருக்கும் அதில். இப்போ ‘னு’ / ‘ணு’ குழப்பிட்டீங்களே என்னை ;) மிக்க நன்றி இமா. ஆனா சிங்களம் எல்லாம் எனக்கு டப்பா தான் வருது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;) திவேகி தெரியாது வனி. சிங்களம்... லு"ணு"தான். 'னு'வுக்கு வேறு எழுத்து உண்டு.

‍- இமா க்றிஸ்

ஹிஹிஹீ... இனிம இவங்க சொல்றதை உத்து கவனிக்கனும்... அப்பதான் சரியான எழுத்தை கண்டு பிடிக்க இயலும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா