நாசி குன்னிங் (Yellow rice)

தேதி: February 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாஸ்மதி அரிசி- 1கப்
கெட்டி தேங்காய் பால்- 3/4கப்
லெமன் கிராஸ்- 2
பன்டான் இலை-2
எலுமிச்சை இலை - 1(விரும்பினால்)
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு


 

லெமன் கிரஸ் நுனிப்பகுதியை வெட்டி விட்டு தடிமனாக உள்ள பகுதிய லேசாக தட்டிக் கொள்ளவும்
அரிசியுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து மேலும் 1கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் அல்லது ரைஸ்குக்கரில் வேக வைக்கவும்.
வெந்ததும் லெமன் கிராஸ் பன்டான் இலைகள், எலுமிச்சை இலையை நீக்கி விட்டு பரிமாறவும்.


ஜாஸ்மின் அரிசி அல்லது தாய் பச்சரிசியில் செய்தால் இன்னும் சுவை கூடும். காரமான சிக்கன் கிரேவியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நெத்திலி கருவாடு சம்பல்(http://www.arusuvai.com/tamil/node/5181), முட்டை ஆம்லெட் இதற்கு சிம்பிள் காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பன்டான் இலை என்றால் என்னங்க? please

பந்தன் / ரம்பை இலைன்னு சொல்வாங்க. இது ஃப்ளேவரிங்காக சேர்ப்பது. நம்ம ஊரில் கறிவேப்பிலை போல தான்னு கூட சொல்லலாம். சில நேரம் இனிப்புகளில் வாசம் மற்றும் வித்தியாசமான சுவை, கலர் எல்லாத்துக்காகவும் சேர்ப்பாங்க. சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா, தாய், சீனாவின் சில பகுதிகள், மாலத்தீவு, இலங்கை போன்ற நாடுகளில் இவை பிரபலம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா