மீன் பொரியல் / மீன் பொடிமாஸ்

தேதி: February 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.9 (7 votes)

 

டின் டூனா மீன் - 200 கிராம்
அல்லது ஃப்ரெஷ் மீன் வேக வைத்து முள்ளில்லாமல் உதிர்த்தது.
சின்ன வெங்காயம் - 100 கிராம்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்
சீரகம்,சோம்பு - தலா அரைடீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மல்லி கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.


 

டின் மீனை தண்ணீர் வடித்து உதிர்த்து வைக்கவும்.வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.சீரகம்,சோம்பு,இஞ்சி பூண்டு,பச்சை மிள்காய் மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,அரைத்த விழுதை போடவும்,வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன்,உதிர்த்த மீனை போட்டு நன்கு பிரட்டி விடவும்,தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.தேங்காய் துருவல் சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.பிரட்டி இறக்கவும்.

சுவையான மீன் பொரியல்/ மீன் பொடிமாஸ் ரெடி.


புளிப்பு தேவைப்பட்டால் பாதி எலுமிச்சை பழம் பிழிந்து கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ASIA OMAR AVARGALUDAIYA MEEN PODIMASS SEIVATHARKKU ELIMAIAGAUM UNBATHARKKU ERRA NALLA SUVAIYAGAUM IRUNTHATHU