கேழ்வரகு கூழ் - எளிய முறை

தேதி: July 26, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

கேழ்வரகு மாவு - 1/2 கப்
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 கப்


 

கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து வேக விடவும்.
மாவு வெந்தவுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.


இது மிகவும் எளிய முறை. காலையில் ஒரு டம்ளர் குடித்தாலே போதும். நல்ல தெம்பாக இருக்கும். டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது. இது 4 டம்ளர் வரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தயிர் அளவை குறைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்தும் அருந்தலாம்

உங்கள் கேழ்வரகு கூழ் நன்றாக இருந்தது ...தயிர் கொஞ்சமாக சேர்த்தேன் சுவை நன்றாக இருந்தது....நன்றி ..

வாழு, வாழவிடு..