சுரைக்காய் மோர்க்குழம்பு

தேதி: February 18, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.2 (5 votes)

 

சுரைக்காய் - 1 1/2 கப் (நறுக்கிய துண்டுகள்)
மோர் - ஒரு கப்
ம‌ஞ்ச‌ள்தூள் - அரை தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌ம் - அரை தேக்க‌ர‌ண்டி
க‌டுகு - கால் தேக்க‌ர‌ண்டி
காய்ந்த மிளகாய் - ‍ 3
க‌றிவேப்பிலை - ‍ சிறிது
எண்ணெய் - தாளிக்க‌
உப்பு - தேவையான‌ அள‌வு
அரைக்க‌:
தேங்காயத்துருவல் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5


 

சுரைக்காயை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும்
தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திர‌த்தில் தாளிக்க‌ தேவையான‌ அள‌வு எண்ணெய் விட்டு, சூடான‌தும் க‌டுகு போட்டு பொரிந்த‌‌தும், சீரக‌ம், காய்ந்த‌‌ மிள‌காய் போட்டு சில‌ நொடிக‌ள் வ‌றுக்க‌வும்.
பிற‌கு இத‌னுட‌ன் கறிவேப்பிலை சேர்த்து, கூட‌வே ந‌றுக்கி வைத்த‌ சுரைக்காய், மஞ்சள்தூளை போட்டு வ‌த‌க்க‌வும்.
காய் சில‌ நிமிட‌ங்க‌ள் வ‌த‌ங்கிய‌தும், அத‌னுட‌ன் அரைத்து வைத்த‌ தேங்காய், ப‌ச்சை மிள‌காய் விழுதை போட்டு, சிறிது வ‌த‌க்கி, ஒரு க‌ப் அள‌விற்கு த‌ண்ணீரை ஊற்ற‌வும். காய்க்கு தேவையான‌ அள‌வு உப்பை சேர்க்க‌வும்.
இத‌னை மூடிப்போட்டு சில‌ நிமிட‌ங்க‌ள் காய் வேகும் வ‌ரை விட‌வும்.
காய் வெந்துவிட்டதை உறுதிப்ப‌டுத்திக் கொண்டு, மீதி உள்ள‌ உப்பு, மோர் இர‌ண்டையும் விட்டு க‌லந்து விட‌வும். மோர் விடும்போது அடுப்பை குறைந்த தீயீல் வைக்கவும். நீண்ட‌ நேர‌ம் கொதிக்க‌ விட்டால், மோர் திரிந்துவிடும்.‌ லேசாக ஒரு கொதி வரவிருக்கும் நிலையில், அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான சுரைக்காய் மோர்க்குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அந்த கடைசி படத்தில் இருக்கும் பவுல் மோர் குழம்பு எனக்கே எனக்கு :) என்னா அழகா இருக்குங்க காம்பினேஷன்... சான்ஸே இல்ல. நானும் செய்யறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் மோர் குழம்பு அதும் சுரக்காய்ல நான் இது வரை கூட்டு, பொரியல் தான் பன்னுவேன் இப்போ மோர் குழம்பு அடுத்த முறை இதுதான் விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

சூப்பர். கம கம வாசன வருது. எங்க வீட்டிலும் மோர்க் குழம்பு செய்வோம். அதுல வெண்டைக்காய், பூசணி தான் போடுவோம். நீங்க சுரைக்காய் ல பண்ணி இருக்கிங்க. அடுத்து மோர் குழம்பு செய்த சுரைக்காய் ட்ரை பண்ணுவேன்.

மோர்குழம்பு-_சுஸ்ரீ ரொம்ப சூப்பரா வைச்சுருக்கிங்க,இது கேரளத்து மோர்குழம்பு தானே, அவங்க தான் வெள்ளரி,சேம கிழங்கு,வாழைகாய்,சுரைக்காய் ,போட்டு வைக்கிறது ரொம்ப நாளா எனக்கு டவுட்டா வே இருந்துச்சு எப்படி வைக்கிறாங்க நாமலும் அதே மாதிரி வைக்கனுமு நினைச்சேன் கரக்டான நேரத்துல நான் உங்க குறிப்ப பார்த்துட்டேன் வாழ்த்துக்கள் சுஸ்ரீ இன்னும் நிறைய செய்து அசத்துங்கோ பா
வாழ்க வளமுடன்,,,,,

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

சுஸ்ரீ மோர் குழம்பு அருமையா இருக்குப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் கொஞ்சம் வேர மாதிரி செய்வேன், சுரைக்காய்ல இதுவரை செய்ததில்லை பூசணியில் செய்துருக்கேன் அடுத்த முறை செய்துபார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஜாதா, மோர் குழம்பு நாங்க வேறு மாதிரி வைப்போம் பா. நீங்க செய்திருக்கும் முறை மிகவும் நன்றாக உள்ளது. இதுவரை மோர் குழம்புல காய்கறி எதுவும் போட்ட அனுபவம் இல்லை. இந்த முறையை நிச்சயம் ட்ரை பண்றேன் பா. படங்களும், விளக்க குறிப்புகளும் மிகவும் நேர்த்தி. பச்சைமிளகாயை அழகா பூ டிசைன்ல வச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள் சுஜா :) பேரை கரெக்டா பிடிச்சுட்டேனா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மோர்குழம்பு செய்முறை ஈஸியா இருக்கு சுஸ்ரீ. வீட்டுல எப்பயாவதுதான் மோர்க்குழம்பு செய்வாங்க. உங்க குறிப்புப பார்த்ததும் ஆசை வந்துடுச்சு வீக் எண்ட் செய்து பார்த்துட்டு சொல்றேன்.

இன்னும் நீங்க இந்த பக்கம் வரலயா... நான் இன்னைக்கு உங்க மோர் குழம்பு செய்துட்டேன் :) வாசமும் சுவையும் சூப்பரோ சூப்பர். எல்லாருக்கும் பிடிச்சுதுங்க. மிக்க நன்றி சுவையான மோர் குழம்புக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Morkuzhambu super. CUCUMBER vaithum pannalam. CHOVCHOV pottum pannalam.

குறிப்பை வெளியிட்ட அட்மின் & அறுசுவை குழுவினருக்கு என் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வனி,
எப்போதும் போல முதலாளாக வந்து பாராட்டியிருக்கிங்க. ரொம்ப நன்றி! உங்களுக்கு இல்லாமலா?! அப்படியே பவுலோட எடுத்துக்கோங்க.... :) நன்றி!

தனா,
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தனா. விருப்பப்பட்டியலில சேர்த்திட்டிங்களா?! சந்தோஷம். செய்துபார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

@கௌதமி...
உங்க வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. அம்மாவும் மோர்க்குழம்புல பூசணி, வெண்டைக்காய் எல்லாம் போட்டு செய்வாங்க‌. இது என்னோட‌ முய‌ற்சி! செய்துபார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

@க‌விதா...
உங்க பாராட்டுக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி. என் ப்ர‌ண்ட் ஒருத்த‌வ‌ங்க‌ இதுப்போல‌ அரைத்துவிட்டு செய்வாங்க‌, நான் கொஞ்ச‌ம் காய் சேர்த்து ட்ரை ப‌ண்ணிய‌து இது. நீங்க எதிர்ப்பார்த்த‌ நேர‌த்தில் வ‌ந்திருப்ப‌து குறித்து ம‌கிழ்ச்சி! செய்துபார்த்து எப்ப‌டி இருந்த‌‌துன்னு ம‌ற‌க்காம‌ சொல்லுங்க. கட்டாயம் எனக்கு தெரிந்தவற்றை தோழிகளுடன் பகிர்ந்துகொள்கிறேன்பா. மீண்டும் ந‌ன்றி!

@சுவ‌ர்ணா...
உங்க வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி! என‌க்கும் மோர்க்குழ‌ம்பு ரொம்ப‌ பிடிக்கும்பா. அவ‌சிய‌ம் செய்துபார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க சுவ‌ர்ணா. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வாங்க‌ க‌ல்பனா, ஆமாம்.. மோர்க்குழ‌ம்பில்தான் மொத்த‌ம் எத்த‌னைவித‌ம்?!! நானும்கூட‌ ப‌ல‌வாறு வைப்பேன். அம்மா செய்வ‌தில், வெண்டைக்காய், பூச‌ணிக்காய் எல்லாம் இட‌ம்பெறும். இந்த‌‌மாதிரி காம்பினேஷ‌ன்ல‌ அரைச்சு காய் போட்டு செய்ய‌ற‌து ரொம்ப‌ ந‌ல்லா வ‌ரும். உங்களுக்கு முடியும்போது ஒருமுறை ட்ரை ப‌ண்ணிப்பாருங்க‌ க‌ல்ப்ஸ். அப்புறம் அடிக்கடி செய்வீங்க! :) பச்சைமிளகாய் டிசைன் முதற்க்கொண்டு எல்லா பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி!
பேர்... அதே, அதே! :), அம‌ர்க்க‌ள‌மா க‌ண்டுபிடிச்சிட்டிங்க‌ளே... சூப்ப‌ர்!

அன்புடன்
சுஸ்ரீ

@வினோஜா...
உங்க வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!
உங்களுக்கும் மோர்ர்குழம்பு செய்ய ஆசை வந்தாச்சா?! அப்ப உடனே செய்துபார்த்திடுங்க. எப்படி இருந்ததுன்னும் சொல்லுங்க வினோ. நன்றி!

@நிகிலா...,
உங்க‌ வ‌ருகைக்கும் பாராட்டிற்கும் ரொம்ப‌ ந‌ன்றி! உங்க‌ ஐடியாஸும் ந‌ல்லா இருக்கு! ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஆஹா... சூப்பர் வனி! நான் இப்பதான் பார்த்து பதில் போடறேன். நீங்க அதுக்குள்ள செய்துபார்த்திட்டே வந்திட்டிங்களா?!! :) ரொம்ப ரொம்ப சந்தோஷம் வனி, உங்க எல்லாருக்கும் பிடிச்சி இருந்ததுன்னு கேட்டு. செய்துபார்த்து க‌ருத்து சொன்ன‌த‌ற்கு நான்தான் ந‌ன்றி சொல்ல‌னும்! :) மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க?

உங்க மோர்குழம்பு நானும் செய்து பார்த்துட்டேன். நல்ல இருந்ததது. நன்றி.

வினோ,
நீங்களும் செய்திங்க, நல்லா இருந்ததுனு கேட்க, ரொம்ப மகிழ்ச்சி! :)செய்துபார்த்து மறக்காம வந்து பின்னூட்டமும் போட்டதற்கு மிக்க நன்றி.

அன்புடன்
சுஸ்ரீ

தோழி சுஸ்ரீ இன்று உங்கள் மோர் குழம்பு செய்தேன். நல்ல சுவையோடு இருந்தது. எல்லாம் மதியமே தீர்ந்து போனது. சுவையான மோர் குழம்பு வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

Innaiku lunch ku unga suraikkaai morkuzhambu thaan pa senju iruken. Enaku taste romba pidichu iruku. Naanga idhuvarai kaai pottu senjadhu illa. Idhu thaan first time. and naan kaaramum kuraichu thaan serthen sri. Thanks for your recipe.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.