பட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?

அன்புகோழீஸ், என்ன வீக் எண்ட் அதுவுமா பறக்குறது, நடக்குறது, ஓடுறது, நீந்துறது எல்லாத்தையும் வறுத்து பொரிச்சு வயத்துக்கு அனுப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா? உங்களை யார் நிம்மதியா விட்டா? இதோ வந்துட்டேன் பட்டிமன்ற தலைப்போட..

நம் அறுசுவையின் அன்புத்தோழி அன்பரசி அவர்களின் தலைப்பாகிய

*************************************************************
அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா ?
வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
*************************************************************

சிறு மாறுதல் செய்து இங்கே தந்துள்ளேன். அன்பு தலைப்புக்கு நன்றி பா :)

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

என்ன தலைப்பை பார்த்துட்டீங்கல, இன்னும் என்ன வேடிக்கை? மளமளன்னு உங்க அழுத்தம், எதிர் வீட்டு அழுத்தம், பக்கத்து வீட்டு அழுத்தம் எல்லாத்தையும் போட்டு இங்கே அழுத்த வாங்க. எல்லாத்தையும் வாங்கி ஒரு பெரிய சாக்கு பைல போட்டு அழுத்தி வைக்க நான் இங்கே காத்திருக்கேன். வாங்க கோழிகளே!! வாங்க !! வாங்க !!

நடுவரே!! வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இயந்திரத் தனமான வாழ்க்கை முறை. சாப்பாட்டைக் கூட ரசித்து, ருசித்து சாப்பிட முடியாது. குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியாது. குடும்ப விசேஷங்களுக்கு போக முடியாது. ஏனென்றால் அந்த நேரத்திலும் அவர்களை வேலை அழைக்கும். லீவ் கிடைக்காது. நினைத்த நேரத்தில் தூங்கி ரெஸ்ட் எடுக்க முடியாது. வேலை, வேலை, வேலை இதுதான் தமிழில் அவங்களுக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை நடுவரே!!
அவர்களுடைய சொந்த வேலையையெல்லாம் சனி, ஞாயிறுக்கு கொடுத்துட்டு அந்த நாட்களையும் கடமைக்கு பலி கொடுக்கனும்.
காலையில் அரக்க, பரக்க வேலைக்கு போய், மாலை சோர்வோட வீடு திரும்பி இருக்குற மிச்ச மீதி வேலையெல்லாம் செஞ்சு அலுத்துப்போய் தூங்கி திரும்ப ஏர்லி மார்னிங் தூக்க கலக்கத்தோட எழுந்து அதே ரொட்டீன் வொர்க். ஒருநாள் இல்ல ஒருநாள் என்னடா லைஃப்னு நினைக்கத் தோனாதா நடுவரே!!
அலுவலகத்தில் மேலதிகாரி திட்டினாலும் வாங்கனும், இதோட மாமியாரோட ஏச்சு, பேச்சையும் கடந்து போகனும், சொந்த பந்தத்தோட குற்றக் குறைகளையும் பொறுத்து போகனும், குழந்தைகளை திருப்தி படுத்தி சந்தோஷமா வெச்சிக்கனும், மாத பட்ஜெட் போடனும், குழந்தைகளின் எதிர்காலத்துக்கும், தங்களின் வயதான காலத்துக்கும் சேமிக்கனும்.
இதெல்லாம் இல்லத்தரசிகளுக்கும் இருக்குதானேன்னு எதிரணியினர் கேட்கலாம். ஆமாம் இருக்குதான் நாமெல்லாம் இதை இருக்குற 24 ஹவர்ஸ்ல எப்ப வேணாலும் செய்யலாம். ஆனா வேலைக்கு போற பெண்களுக்கு கிடைக்கிற 4,5 மணி நேரத்துல இதெல்லாம் அழுத்தமா மாறிடுது.
வீட்டை விட்டு வெளியே போனாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. வேலைக்கு போற இடத்தில் இருக்குற ஆண்களெல்லாம் நல்லவங்க கிடையாது. எத்தனையோ காம பார்வைகளை சகிக்கனும்.
கணவர் ஆபீஸ்ல இருந்து வந்தவுடன் நாம ஏதாவது கேட்டால் சிலசமயம் சிடுசிடுப்பார். பிறகு சொல்வார் வொர்கிங் பிரஷர் என்று. ஆணுக்கே இவ்வளவு ப்ரஷர் இருக்கும் போது, குடும்பத்தையும் தாங்கி நடத்தி அதற்காக வேலைக்கு போகும் பெண்களுக்கு எவ்வளவு ப்ரஷர் இருக்கும்.
ஐடி கம்பெனியில் வொர்கிங் பிரஷர் தாங்காம தற்கொலை செய்துட்ட ஆண்களெல்லாம் இருக்காங்க, ஆண்களுக்கே இந்த நிலைன்னா பெண்களுக்கு?
எதிரணியினர் சொல்லலாம் அவங்களுக்கென்ன வேலைக்கு போய் வீட்டு பிரச்சினைகளை மறக்கலாம்னு வேலையிலிருந்து வந்ததும் திரும்ப அதே பிரச்சினையை அனுபவிச்சுதான் ஆகனும் அவங்க. இதே இல்லத்தரசியா இருந்தா ஃபீரீயா யோசிச்சு அந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுடலாம். அவங்களுக்கு யோசிக்க கூட மூளை வேலை செய்யாது. இதுவும் ஒரு அழுத்தமா மாறி அவங்களை அழுத்தும்.
இல்லத்தரசிகளெல்லாம் கொடுத்து வெச்சவங்க, சுக வாசிகள்னு தான்னு சொல்லனும். இல்லத்தரசிகளுக்கு வீடே உலகம்!! வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உலகமே வீடு!! அப்ப யாருக்கு மன அழுத்தம் அதிகம் வேலைக்கு செல்லும் பெண்களுக்குதானே நடுவரே!!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

வேலைக்குப் போரவங்களாவது கொஞ்சனேரம் வெளித்தொடர்பால் கவலைகளை மரப்பர் ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் யார்க்கிட்டயும் பேசாமல் தனக்குல்லே போட்டு குழம்புவாங்க வேலைக்குச்செல்லும் பென்கள் தங்கள் குழந்தயை நர்சரி அபடி விட்டுச்செல்கின்ரனர் ஆனால் வீட்டிலுள்ள் பென்கள் ஓய்வு இல்லாமல் அவங்களே தான் பார்க்கின்ரனர் வேலக்குச்செல்லுபவர்கள் வீட்டில் பிரிட்ஜ் பார்த்தாலே தெருயும் ஒரு வாரம் தேவையானது சமைத்து இருக்கும் ஆனால் வீட்டில் இருப்பவர்கள் எல்லார் தேவையானது செய்துவிட்டு எல்லார்படுத்தபின் பட்டுத்து எல்லார்க்கும் முன் எழவேனும் வேலக்குப்போரவங்க சன்டே லேட்டா எழுந்து ஹோட்டல் போவாங்க ஆனால் வீட்டிலுள்ள பென்கலுக்கு ஓய்வு கிடையாது இதில் யார்க்கு மனாழுத்தம் ஜாஸ்தி நடுவரே.ஏதாவது பங்சன்னா வேலைக்கு லீவ் போடமுடியாதுன்னு சாக்குபோக்கு சொல்வாங்க ஆனா நாங்க வீட்டிலும் செய்து அங்க போயும் வேலைஉஎல்லாம் செய்ய உம் அப்புரம் சொல்வாங்க வீட்டில் சும்மாதான் இருக்க அப்பிடுன்னு பேங்க் போரதுகரன்ட்பில் முதல் கொன்டு வீட்டிர்கு தேவையானது எல்லாம் பார்க்கனும் காலையிலிருந்து வேலை சுத்தி சாப்பிடக்கூட நேரம் இருக்காது இவங்கலாவது மத்தியானமாவது நிம்மதி யா சாப்பிடுராங்க எங்கலுக்கு அதுக்கு கூட நேரம் இருக்காதுகணவர் திட்டினால் திரிப்பிக்கூட இவர்கல் பேசிவிடலாம் ஆனால் நாங்கள் பேசினால் உனக்கு என்னத்தெரியும் என்பார்கள் இவர்கலுக்காவது ஆபிஸ் பிரன்ட்ஸ் இருப்பார்கல் ஆனால் வீட்டிலிருக்கும் பென்னுக்கு கணவன் குழந்தை இது தான் உலகம் இதில் எங்களுக்கு தான் மன அழுத்தம் அதிகம்

வாழ்க வளமுடன்

ப்ரியா, வரும்போதே அணியையும் முடிவு செய்து வந்தீர்கள். மகிழ்ச்சி.

//வேலைக்குப் போரவங்களாவது கொஞ்சனேரம் வெளித்தொடர்பால் கவலைகளை மரப்பர் ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் யார்க்கிட்டயும் பேசாமல் தனக்குல்லே போட்டு குழம்புவாங்க// வைக்கும் குழம்பையும் குழப்பிடுவாங்க ;(

// வேலைக்குச்செல்லும் பென்கள் தங்கள் குழந்தயை நர்சரி அபடி விட்டுச்செல்கின்ரனர் ஆனால் வீட்டிலுள்ள் பென்கள் ஓய்வு இல்லாமல் அவங்களே தான் பார்க்கின்ரனர்// ஒருகுழந்தை பெற்ற மகராசியா இருந்தா பரவாயில்லயே.. அதுவே 2க்கு மேல போயிருந்ததோ, அவங்க வீடே ஒரு நர்சரி தான்.பாவம் அந்த புள்ளை எந்த வேலைன்னு பார்க்கும் ;(

//வேலக்குச்செல்லுபவர்கள் வீட்டில் பிரிட்ஜ் பார்த்தாலே தெருயும் ஒரு வாரம் தேவையானது சமைத்து இருக்கும்// எங்க வீட்டு ப்ரிட்ஜை எப்ப திறந்தீங்க? அதுல போன வருஷ ஐயிட்டமெல்லாம் கூட இருக்குமே ;)

//வேலக்குப்போரவங்க சன்டே லேட்டா எழுந்து ஹோட்டல் போவாங்க ஆனால் வீட்டிலுள்ள பென்கலுக்கு ஓய்வு கிடையாது இதில் யார்க்கு மனாழுத்தம் ஜாஸ்தி நடுவரே.// கண்டிப்பா அவர் கணவருக்கு தாங்க மன அழுத்தம். ஒருவார துணியை தோய்ச்சு,காயவச்சு, வீடு பெருக்கி, கூட்டி..;((

//ஏதாவது பங்சன்னா வேலைக்கு லீவ் போடமுடியாதுன்னு சாக்குபோக்கு சொல்வாங்க ஆனா நாங்க வீட்டிலும் செய்து அங்க போயும் வேலைஉஎல்லாம் செய்ய உம் அப்புரம் சொல்வாங்க வீட்டில் சும்மாதான் இருக்க அப்பிடுன்னு//அப்படியே இவங்க பங்கசன் வீட்டுக்கு போனா என்ன வேலை செய்வாங்க.. பூண்டு உரிக்கறதும், வெங்காயம் உரிக்கறதும் தான். யாரும் இவங்களை குத்தம் சொல்லவும் முடியாது வேலை செய்யலைன்னு, அதே சமயம் உடம்பு நோகாம செய்த மாதிரியும் ஆச்சு... அப்படி தானேங்ங்க்ளீங்க்... ;)

//பேங்க் போரதுகரன்ட்பில் முதல் கொன்டு வீட்டிர்கு தேவையானது எல்லாம் பார்க்கனும் காலையிலிருந்து வேலை சுத்தி சாப்பிடக்கூட நேரம் இருக்காது இவங்கலாவது மத்தியானமாவது நிம்மதி யா சாப்பிடுராங்க// போன உடனே ஒரு ப்ரேக்.. அது முடிஞ்சு கொஞ்ச நேரத்துல லஞ்ச் ப்ரேக்.. அஸ்புஸ்னு நிமிர்றதுக்குள்ளே சாயந்திரம் காபி டைம்.. அதை ஊதி குடிச்சு முடிக்கறதுக்குள்ளே, வீட்டுக்கு கிளம்பற டைம்... இதெல்லாம் இந்த அணியினர் சொல்ல சொல்லி சொன்னதுங்க.. நான் சொல்லைல..

// எங்கலுக்கு அதுக்கு கூட நேரம் இருக்காதுகணவர் திட்டினால் திரிப்பிக்கூட இவர்கல் பேசிவிடலாம் ஆனால் நாங்கள் பேசினால் உனக்கு என்னத்தெரியும் என்பார்கள்//நம்மை பத்தி தெரியாம சொல்லிட்டாங்க.. மன்னிச்சு விட்ருவோம் ப்ரியா..

பட்டியின் தொடக்கமே அனல் அடிக்கர மாதிரி மனசுல எத்தனை புழுக்கத்தை வச்சு, சுட சுட கொட்டி தீர்த்துட்டீங்க ப்ரியா. என்னப்பா எதிரணி பேச் மூச்சே காணோம். சண்டே களைப்பு தீரலயா? கமான்...கமான்...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தனா, உங்கள் அன்பிற்கும், வாழ்த்திற்கும் மகிழ்ச்சி. நீங்களும் இல்லத்தரசிகள் பக்கம் தானா? குட்..குட்.. பலம் ஏறுதே.. சீக்கிரம் வாதத்தோட வாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தான்யா, வரும்போதே அணியையும் தெளிவாக தேர்வு செய்து வாதத்தோட வந்திருக்கீங்க. நீங்களாச்சும் அனாதையா இருந்த அணிக்கு ஆதரவு தந்தீங்களே. உங்களுக்கு புண்ணியம் உண்டாகட்டும் ;) இல்லத்தரசிகளுக்கு ஒருபக்கம் தான் இடி. வேலை செய்பவர்களுக்கு இரண்டு பக்கமும் இடியென்று இடி என முழங்கி விட்டீர்கள். எதிரணி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம். உங்கள் அன்பான பிரார்த்தனைக்கு மிக்க மகிழ்ச்சி தோழியே !

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பூங்காற்று, கெளதமி,காயத்ரி, மூவரும் இல்லத்தரசிகளுக்கேன்னு அணியின் அழுத்தத்தை பலமடங்கு கூட்டிகொண்டு சென்று விட்டீர்கள். சந்தோஷம். அதே அழுத்தத்தோட வாதத்தையும் முன் வைங்க.

//நீங்க ரொம்பநல்ல நடுவருங்கோ!!!!// காயத்ரி, இதுக்கு மீனிங் புரியல. விளக்கம் ப்ளீஸ் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா, தலைப்புகள் அத்தனையும் நம்ம தோழிகள் தந்ததாச்சே. நிச்சயம் அருமை தான். நீங்களும் இல்லத்தரசியா? ஓகே..ஓகே..காலைல தெம்பா வாதத்தோட வாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நெத்தியடியாக அணியையும் தேர்வு செய்து வாதத்தோடு வந்த உங்களுக்கு என் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள் பவித்ரா.

//உங்களுக்கே இவ்வளவு அழுத்தம்னா, வெளியயும் வேலை செய்து, வீட்டிலும் வேலை செய்யும் எங்களுக்கு எவ்வளவு இருக்கு அழுத்தம்'னு கொஞ்சம் யோசித்து பாருங்க. // ஆமாங்க.. உண்மையாவே இது நெஞ்சழுத்தம் தான் ;) ரெண்டு வேலையையும் மெயிண்டெயின் பண்ண நெஞ்சுல உரம் வேணும் இல்லீங்களா? அதை சொன்னேன்.

//மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி என்றால் எங்களுக்கு திரும்பும் அனைத்து திசைகளில் இருந்து இடி தான் நடுவரே!!// உங்கள நினைச்சா பாவமா இருக்குங்க ;((

//காலையில் போட்ட பாத்திரம் முதல் எல்லாமே அப்படியே இருக்கும். ஏன்னா வேலைக்காரி வச்சா மாமியாருக்கு பிடிக்காதாம்!!// 'மாட்டு'பெண் இருக்க வேலைக்காரி எதற்குன்னு யோசிச்சிருப்பாங்களோ என்னமோ?

//அரசி என்கிற போது அவங்களுக்கு எப்படிங்க நடுவரே அழுத்தம் இருக்க முடியும். இன்று டிவியில் சீரியல்கள் மெகா சைசில் விஸ்வரூபம் எடுப்பதற்கு முக்கிய காரணமே இவர்கள் தானே!!// அரசி சீரியலை சொல்றீங்களா? நான் சின்னபிள்ளையா இருந்தப்ப எங்க கொள்ளு பாட்டி பார்த்த சீரியலாம் அது. எனக்கு தெரியாதுங்க அதபத்தி ;D

//அந்த குழந்தையை நினைத்தாலே வந்து விடும் மன அழுத்தம். // அதையேன் கேக்குறீங்க பவித்ரா.. எனக்கு நினைக்கலனாலும் அழுக்காச்சி காவியம் தான் ;(

//உங்க குழந்தைக்கு உடம்பு முடியலை என்றதும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கணும்னு சொல்றீங்களே,// ஒரு உண்மையை எதார்த்தமா, பதார்த்தமா சொல்லக்கூடாதுங்கறாங்கப்பா. அதை புடிச்சுட்டு எவரெஸ்டே ஏறிடறாங்க.. ஆய்..பசங்க X-(

//நான் இவ்வளவு சொன்னதுக்கப்புறம் இல்ல இல்லத்தரசிகளுக்கு தான்'னு தீர்ப்பு மட்டும் சொன்னீங்க, உங்க வீட்டுக்கு உங்களை தேடி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும் வேலையில் சேர!!!// அந்த அப்பாயிண்மெண்ட் எனக்கு வருதோ இல்லையோ.. உங்களை அந்த நிமிஷமே நம்ம அங்கிள் சனீஸ்வரனுக்கு புடிச்சி போகும்னு அர்த்தம். அவ்ளோ பாசக்காரபுள்ளைங்க நாங்க ;)

நீண்ட நாள் கழித்து பட்டியில் உங்கள் பதிவை பார்த்தது மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் மதிப்புமிக்க வாதங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தான்யா,

//அவர்களுடைய சொந்த வேலையையெல்லாம் சனி, ஞாயிறுக்கு கொடுத்துட்டு அந்த நாட்களையும் கடமைக்கு பலி கொடுக்கனும்.// இந்த வார்த்தைகளிலேயே இவர்களின் வலியும் உணர முடிகிறது தான்யா.

//வேலையெல்லாம் செஞ்சு அலுத்துப்போய் தூங்கி திரும்ப ஏர்லி மார்னிங் தூக்க கலக்கத்தோட எழுந்து அதே ரொட்டீன் வொர்க்.// மப்பு இளநீ அடிச்ச மாதிரி தாங்க ஆய்டும். தூக்கம் இழந்தா அதெல்லாம் அடிக்காமயே அந்த நிலைக்கு போய்டுவோம் ;(

//வீட்டை விட்டு வெளியே போனாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. வேலைக்கு போற இடத்தில் இருக்குற ஆண்களெல்லாம் நல்லவங்க கிடையாது. எத்தனையோ காம பார்வைகளை சகிக்கனும்.// இருக்கும் அழுத்தம்மெல்லாம் போதாதுன்னு இதெல்லாம் வேற இலவச இணைப்புகளா சேரும்.

//ஐடி கம்பெனியில் வொர்கிங் பிரஷர் தாங்காம தற்கொலை செய்துட்ட ஆண்களெல்லாம் இருக்காங்க, ஆண்களுக்கே இந்த நிலைன்னா பெண்களுக்கு?// எனக்கு தெரிஞ்ச பெண் இந்த வேலைல சேர்ற வரைக்கும் நல்லா இருந்தா. சேர்ந்த பிறகு பாதி மரை கழண்ட மாதிரி தான் மாறிப் போய்ட்டா. பார்க்கவே பாவமா இருந்தது ;(

தான்யா, நீங்கள் சொன்ன அத்தனையும் மறுக்க முடியாத உண்மைகள் தான். பொறுத்திருந்து பார்க்கலாம். எதிரணி என்ன சொல்றாங்கன்னு. நான் இப்பவே முதுகை பார்த்துட்டேன். பின்னே ரெண்டு அணியும் இந்த குழப்பு குழப்பி தலையய சுத்த வச்சுட்டீங்களே. கடவுளே.. ரெண்டு பக்கம் தானே தாண்டியிருக்கு அதுக்குள்ளயா? எங்கம்மா அப்பவே சொன்னாங்க... ;( அரட்டைல தனியா நிக்காதே. பட்டில புடுச்சி உக்கார வச்சிடுவாங்கன்னு.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழிகளே, எனக்கு கிடைத்த இந்த அமைதியான நேரத்தில் விடிகாலை (1.00) என்னால் முடிந்த பதிவுகளை போட்டுள்ளேன். நீங்கள் இதே போல உற்சாகத்தோடு தொடர்ந்த உங்கள் வாதங்களை வையுங்க. நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவிடுகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்