பட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?

அன்புகோழீஸ், என்ன வீக் எண்ட் அதுவுமா பறக்குறது, நடக்குறது, ஓடுறது, நீந்துறது எல்லாத்தையும் வறுத்து பொரிச்சு வயத்துக்கு அனுப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா? உங்களை யார் நிம்மதியா விட்டா? இதோ வந்துட்டேன் பட்டிமன்ற தலைப்போட..

நம் அறுசுவையின் அன்புத்தோழி அன்பரசி அவர்களின் தலைப்பாகிய

*************************************************************
அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா ?
வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
*************************************************************

சிறு மாறுதல் செய்து இங்கே தந்துள்ளேன். அன்பு தலைப்புக்கு நன்றி பா :)

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

என்ன தலைப்பை பார்த்துட்டீங்கல, இன்னும் என்ன வேடிக்கை? மளமளன்னு உங்க அழுத்தம், எதிர் வீட்டு அழுத்தம், பக்கத்து வீட்டு அழுத்தம் எல்லாத்தையும் போட்டு இங்கே அழுத்த வாங்க. எல்லாத்தையும் வாங்கி ஒரு பெரிய சாக்கு பைல போட்டு அழுத்தி வைக்க நான் இங்கே காத்திருக்கேன். வாங்க கோழிகளே!! வாங்க !! வாங்க !!

நடுவருக்கும் தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள்! சூப்பர் தலைப்பு நடுவரே! தலைப்பு தந்த தோழி அன்பரசிக்கு வாழ்த்துக்கள்.

நடுவரே தலைப்பை பார்த்ததும் அணியை முடிவு பண்ணிட்டேன். ஆனா ஏதாவது ஒரு பக்கம் ஆள் குறையுதுன்னா அந்தப் பக்கம் போயிடலாமோன்னு நினைச்சேன். அதான் நேற்று இரவே பதிவிடவில்லை. ஆனா மனசாட்சி ஒத்துக்க மாட்டேங்குது. அப்படி ஒன்னு இருக்கான்னு எல்லாம் கேட்கப் படாது. அழுதுடுவேன். அம்பூட்டு மன அழுத்தம் எங்களுக்கு. இப்போ புரிஞ்சிருக்குமே நான் எந்தப் பக்கம்ன்னு :).

இல்லத்தரசிகளுக்கே மன அழுத்தம் அதிகம் என்பது எனது வாதம். (வனி கூட்டணி அமைச்சாச்சு).

எதிரணி சொல்லுவது வீட்டையும் கவனித்து வேலைக்கும் செல்வது எவ்வளவு மன அழுத்தம் தெரியுமா என்கிறார்கள். அவர்களுக்கு மன அழுத்தமே இல்லை என நாங்கள் கூறவில்லை. அவர்களை விட இல்லத்தரசிகளுக்கு மன அழுத்தம் அதிகம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

பெயர்தான் நடுவரே இல்லத்தரசி! உண்மையில் சம்பளம் இல்லா வேலைக்காரி. நம்ப ஊர்ல ஆறு குளத்துக்கெல்லாம் பெண் பெயரை வச்சு தெய்வம் ரேஞ்சுக்கு உய்ர்த்திட்டு உண்மையான் பெண்களை காலில் போட்டு மிதிப்பார்களே அதே போலத்தான் பெயர் மட்டும் நல்லா ஷோகா இல்லத்தரசி. ஆனா அவ படுற பாடு இருக்கே... கடவுளே சொல்லி முடியாது.

பொதுவா இந்த வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஒரு எண்ணம் உண்டு. இல்லத்தரசிகளுக்கு எவ்ளோ ஃப்ரீ டைம் இருக்குது. நினைச்ச நேரத்துக்கு வேலை செய்துக்கலாம். எப்போ வேணும்னாலும் தூங்கலாம். நிறைய சீரியல் பார்க்கலாம் அப்படீன்னு நினைச்சுக்குவாங்க. ஆனால் உண்மையில் அந்த சீரியல் பார்ப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்னு அவங்களுக்கு தெரியாது. அது கொடுக்கும் மன அழுத்தம் எவ்வளவுன்னு தெரியாது. அவங்க வேலைக்கு போயிடறதால இந்த சீரியல் கொடுமைகளில் இருந்து பகல் பொழுதுகளில் தப்பிச்சுடறாங்க.

ஆனால் வீட்டில் யாருமே இல்லாமல் பேசனும்னா சுவர் கூட மட்டுமே பேச முடியுங்கற நிலைமையில் அவர்களின் மன அழுத்தம் எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க நடுவரே! பொதுவாகவே பெண்கள் அதிகம் பேசுவார்கள். அவர்களுக்கு இது எவ்வளவு பெரிய தண்டனை?

எதிரணியினர் நினைக்கற மாதிரி நினைச்ச நேரத்துக்கெல்லாம் ஒன்னும் தூங்க முடியாது. அவ்வளவு வேலைகள் வீட்டில் இருக்கும். உடனே எதிரணியினர் நாங்க எல்லாம் இந்த வேலையும் முடிச்சு வச்சுட்டுதானே வேலைக்கும் போறொம் அப்படீம்பாங்க. ஆனா அவங்களுக்கு உதவ கணவர் முன் வருவார். இல்லத்தரசிகளுக்கு கணவர் என்ன வீட்டுல இருக்கற பொட்டுப் பொடிசுங்க கூட ஒரு துரும்பை அசைச்சுடாது. ஏதாவது சொன்னோம்னு வையுங்க வீட்டுல வெட்டியாத்தானே இருக்க நாங்க வேலைக்குப் போறோம் படிக்கறோம்னு ஏதோ இல்லத்தரசிகள்னா சும்மா காலாட்டிக்கிட்டு இருந்து சாப்பிடறவங்க அப்படீங்கற ரேஞ்சுக்கு டயலாக் எல்லாம் கேட்க வேண்டிய அபாக்கிய நிலைமை.

எல்லாத்துக்கும் மேல வேலைக்குப் போகும் பெண்களுக்கு பொருளாதார பாதுகாப்பும் பொருளாதார சுதந்திரமும் இருக்கு. நினைத்ததை வாங்கிக் கொள்ள முடியும். ஆனா இல்லத்தரசிகளுக்கு அப்படி முடியாது. எது வேண்டும் என்றாலும் கணவரை எதிர்பார்க்கும் நிலை! இது எவ்வளவு பெரிய மன அழுத்தம் தெரியுமா?

எல்லாத்துக்கும் மேல இல்லத்தரசிகள்னாலே ஒரு அலட்சியம் எல்லோருக்கும். இங்கிட்டுதான் இல்லத்தரசின்னு கவுரவமா சொல்லிக்கறோம். உண்மையில் என்ன பண்றாங்கன்னு கேட்டா "சும்மாத்தான் இருக்கா" அப்படீம்பாங்க. ஏதோ எதுவுமே செய்யாமா காலாட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்காங்கன்ற மாதிரி :(

"வெட்டியாத்தானே இருக்கற", "சும்மாத்தானே இருக்கற", "வேலையில்லாமத்தான இருக்கற" "உனக்கென்ன வீட்டுலதான இருக்கற" இந்த மாதிரி பேச்சுக்களை கேட்கும் போது வரும் மன அழுத்தம் அதிகம் நடுவரே! இதைக் கேட்காத இல்லத்தரசிகளே இருக்க முடியாது.

இன்னும் நிறைய இருக்கு நடுவரே! விரைவில் எதிரணிக்கான பதில்களோடும் வாதங்களோடும் மீண்டும் வருகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தோழிகளே ,

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டு டென்ஷன் மட்டும் தான்பா. ஆனா வேலைக்கு போகும் பெண்களுக்கு எவ்வளவு டென்ஷன் தெரியுமா?

1 . காலைல சீக்கிரம் எழுந்து காலை மற்றும் மதிய உணவை கணவருக்கு, குழந்தைகளுக்கு சமைக்க வேண்டும்.
2 . அவருக்கு மதியம் டிபின் பாக்ஸ் கட்டி தர வேண்டும்.
3 . அவருக்கு குளிக்க அனைத்தையும் கரெக்டா எடுத்து வைக்கணும்.
4 . குழந்தையை ரெடி பண்ண வேண்டும் இதோடு நாமும் கிளம்ப வேண்டும்
5 . பஸ் பிடிக்க ஓட வேண்டும். டைமிங் பஸ் என்றால் மிக மிக கஷ்டம்.
6 . பஸ்சில் இருக்கும் நம் இடிசல் மன்னர்களிடம் இருந்து நேக்காக தப்பிக்க வேண்டும்.
7 . அடித்து பிடித்து டைமிங்குள்ள ஆபீஸ் போய்டணும். 5 min லேட் ஆனாலும் 1 நாள் சம்பளம் போய்டும்.
8 . ஆபீஸ் work அனைத்தையும் ஒன்று விடாமல் முடிக்க வேண்டும்
9 . மறுபடியும் பஸ் பிடித்து வீடு வருவதற்கு முன் குழந்தையை தூக்கி கொண்டு வர வேண்டும்.
10 . பின் குழந்தைக்கு ஏதாவது செய்து குடுத்துவிட்டு மாலை வேலைகளை செய்ய தொடங்க வேண்டும். துணி துவைப்பது, இரவு சாப்பாடு செய்வது என்று
11 . மறுநாள் போடும் துணிகளை இரவே எடுத்து அயன் செய்து வைக்க வேண்டும்.
12 . இரவு அனைவருக்கும் உணவு பரிமாறி விட்டு தானும் சாப்பிட்டு முடித்து அனைத்து பத்திரங்களையும் துலக்கி வைத்து விட்டு அப்பாடா என்று படுக்க மணி 11 மேல் ஆகிவிடும்.

இதில் அனைவரையும் புரிந்து அனுசரித்து நடக்க வேண்டும். கணவர் அவரது ஆபீஸ் டென்ஷன் நம்மிடம் காட்டுவார்கள். நாம் தான் பொறுமையாக போக வேண்டும்.

மிச்சத்தை அப்புறமா வந்து சொல்றேன்

ஜென்னிவினோ

Dare To Paly With Life

அன்புக்கும், பெருமைக்கும், மரியாதைக்கும், நகைச்சுவைக்கும் பேர் பெற்ற நடுவருக்கு வணக்கம்....வணக்கம்...வணக்கம்!

குழந்தைகளை நல்லா கவனிச்சுக்குங்க. சீக்கிரம் உடம்பு குணமாக கடவுளை வேண்டிக்கிறேன்.

நல்ல தலைப்பு நடுவரே! மனக் குழப்பம் யாருக்கு? ரொம்ப நேரம் யோசித்ததில் கன்டிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்ணுக்குதான் என்பதைப் புரிந்து கொண்டேன்! அதனால் என் வாதம் பாவப்பட்ட வொர்கிங் வுமன்களுக்கே!!

நடுவரே....வாதத்தை உங்ககிட்ட இருந்தே ஆரம்பிக்கிறேன்..இப்போ உங்க குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை...ஆனால் நீங்கள் வீட்டில் இருப்பதால் கவனம் எடுத்து அந்தக் குழந்தையை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள முடிகிறது. இப்பொழுது நீங்கள் அலுவலகம் செல்லவில்லை. ஆனாலும் இந்த பட்டிக்கு பதிவிட நேரம் கிடைக்காது என்று சொல்கிறீர்கள்...நீங்கள் வீட்டில் இருப்பதால் எப்ப வேண்டுமானாலும் கம்ப்யூட்டரில் வேலை செய்யலாம். இதுதான் இல்லத்தரசி!

இதையே அலுவலகம் செல்லும் பெண்ணை நினைத்துப் பாருங்கள். அவளால் அன்று விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலையாக இருக்கும். முக்கியமான வேலையை முடிக்க வேண்டியிருக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுப் போக முடியாமல் மனது தவிக்கும். கணவரும் 'என்னால் லீவ் போட முடியாது' என்று சொல்லும்போது அந்தப் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? வீடா? அலுவலகமா? இரண்டையும் விட முடியாமல் மனக் குழப்பம் ஏற்படுவது அவர்களுக்குதானே?

இன்னும் வாதங்களுடன் வருகிறேன்.

வணக்கம் நடுவரே நல்ல அருமையான தலைப்ப குடுத்துருக்கிங்க தலைய பிச்சுக்கிரமாதிரி ஓகே எல்லோரும் மோதி பார்த்துர வேண்டியதுதான்
என் ஓட்டு இந்த பக்கம் தான் நடுவரே கன்டிப்பா வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தான் மன அழுத்தம் அதிகம்
ஏன்னு கேக்குரிங்கலா? ஐயோ பாவம் அவங்க ஒரு மெஷின் வாழ்க்கை நடத்துராங்கனு தான் சொல்லனும் எனக்கும் அந்த அனுபவம் இருக்கு நடுவரே நானும் வேலைக்கு போனவ தான் ,, காலையில எழுந்திருக்கும் போதே அரக்க பறக்க எழுந்துருச்சு அப்ப அலாரம் அடிக்கும் பாருங்க 4 மணிக்கு அந்த சத்தம் காதுல யாரோ சங்கு ஊதுர மாதிரியே இருக்கும் அங்கையே ஸ்டாட் ஆகிருச்சு மன அழுத்தம் அதுல இருந்து நைட்டு 12 மணிக்கு அதே அலாரத்த நாமளே வைச்சுக்கிட்டு மறுபடியும் தூங்க போவோம் பாருங்க (மறுபடியும் முதல்ல இருந்தா.....)
அடுத்து கிச்சனுக்கு போயி பறந்துக்கிட்டே சமையல் பன்னுவோம் அத்தனை வேலையும் நாமளே தான் பாக்கானும் அவர ஆபீஸ்க்கு அனுப்பிட்டு குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு இல்லத்தரசினா உஸ்னு உக்காரலாம்,மல்லாக்க படுக்கலாம் ரிலாக்ஸா இருக்கலாம் நாம தான் அப்படி இல்லையே ....அவங்கல அனுப்பிவிட்டுட்டு நம்ம லஞ்ச் பாக்ஸ தூக்கிக்கிட்டு லொக்கு லொக்குனு ரெக்கைய கட்டிக்கிட்டு பறக்கனும் வேலை செய்யுர இடத்துக்கு கொஞ்சம் லேட்டா போனா அங்க போனவுடனையே காதுல ரத்தம் வந்துரும் போங்க அங்க அவங்க குடுக்குர சவுண்டுல......
ஒரு பொண்ணா பொறந்து கண்டவனுக கிட்ட எல்லாம் திட்ட வாங்கி அவங்கல சமாளிச்சு வெளிய வருரதுக்குல்ல போது போதுமுனு ஆகிரும் அதுவும் கொஞ்சம் அழகா என்ன மாதிரி பொறந்துட்டா அம்புட்டுதான் கல்யாணம் ஆகிருச்சா இல்லையா அப்பிடியெல்லாம் பாக்க மாட்டானுங்க விடுர ஜொல்லு இருக்கே ஒவ்வொருத்தனும் கொரஞ்ச்து 2 லிட்டராவது விடுவானுங்க
நான் பார்த்த வேலைகூட அப்படித்தான் போங்க ஒரு ஹாஸ்பிட்டல்ல 1 வருஷம் ரிஷப்ஸனிஸ்டா இருந்தேன் என்ன இ இ இ இ இ நு பல்ல காமிச்சுக்கிடே இருக்கனும்
அதுமட்டுமா நடுவரே வேலைக்கு போன கொஞ்ச நேரத்துல ஒரு போன் வரும் உங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லை கூட்டிட்டு போங்கனு சொல்லுவாங்க ஸ்கூல்ல இருந்து அப்பரம் என்ன மறுபடியும் இங்க திட்ட வாங்கிக்கிட்டு அங்க பறக்க வேண்டியதுதான் அப்புடி இப்புடி வேலை எல்லாம் முடுச்சுட்டு வீட்டுக்கு வந்தா நிம்மதியாவா இருக்க முடியும் அவருக்கு சந்தேகம் அதோட மாமனார் மாமியாருக்கு வக்கனையா சமைக்கனும் டென்ஷன் மேல டென்ஷன் வந்துக்கிட்டெ இருக்கும் போங்க கடைசியில அவருக்கும் எனக்கும் சண்டையில முடிஞ்சு வேலைய விட்டுட்டு நிம்மதியா இருக்கேன் இனி என்ன அவரயும் குழந்தையையும் அனுப்பிட்டு அப்படியே காஃபி ய குடிச்சுக்கிட்டு ஹாயா தூங்கி எழுந்திருக்க வேண்டியதுதான் எவ்வளவு மன அழுத்தம் இருந்துச்சு வேலைக்கு போகையில இப்போ எவ்வளவு ஃபிரியா இருக்கேன் நிம்மதியான பெருமுச்சு விட்டுக்கிட்டு
அதுவும் அவங்கல ஆபிஸுக்கு அனுப்பிட்டு அப்படியே விட்டத்த பாத்துக்கிட்டு மல்லாக்க படுத்து தூங்குனா ஐயோ எம்புட்டு சுகம் டென்ஷனே இருக்காது போங்க....

கன்டிப்ப இல்லத்தரசிக்கு மன அழுத்தமே இல்லங்க நடுவரே வேலைக்கு போகும் பெண்களுக்கு மட்டுமே மட்டுமே
நடுவரே உங்க 2 பசங்களுக்கு முடியல உடம்பு சுகமில்லையினு சொன்னிங்களே நீங்க வேலைக்கு போனா பக்கத்துல இருந்து பார்க்க முடியுமா முடியாதுல்ல அப்புடியே வேலைக்கு போனாலுமுங்கனால நிம்மதியா தான் வேலைய செய்ய முடியுமா? போய் பசங்கல நல்லா கவனிச்சு பார்த்துக்கிங்கோ நடுவரே அப்புடியே நல்லா யோசிச்சு முடிவு சொல்லுங்க பட்டிக்கு தீர்ப்ப...... அப்பறம் ஏடாகூடமா ஆகிப்போகிரும் பாத்துக்கிங்கோ
நான் கொஞ்சம் வில்லங்கமான ஆளு தெரியுமுல்ல ஓருற ரயில ஒத்த ஹேண்டுல அதுவும் லெப்டு ஹேன்டுல நிப்பாட்டுனவங்க
நாட்டாமை தீர்ப்ப மாத்து மாத்துனு கதற விட்டுராதிங்க ஓகே நான் வரட்டுமா? அப்பறம் என்ன கைபுள்ள வண்டிய கட்ட வேண்டியதுதானே,,,கைப்புள்ள எடு வண்டிய....டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

என்ன வச்சுருக்கிரது மாட்டு வண்டி அப்பறம் என்ன ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உ

சரி நடுவரே நம்ம எதிரணியில என்ன சொல்லுராங்கனு பார்ப்போம் நீங்க எப்படி எங்கலுக்குள்ள கோலி மூட்டிவிடுரீங்கனும் பார்ப்போம் எதிர் வாதத்தோட நாம சந்திப்போம் நடுவரே
எனக்கு பட்டியில் வாய்ப்பளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி கூறி என் உரையை இப்போது முடிக்கிறேன் மறுபடியும் வருவேன் வண்டியில வண்டி வண்டியா ஏத்திக்கிட்டு ஓகே!

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மன அழுத்தம் அதிகம் இருப்பது இல்லத்தரசிகளுக்கே..
பணம் தான் இங்கே எல்லாத்துக்கும் காரணம்.. தன் கையில் காசு இருக்கு..என்னால் சொந்த காலில் நிற்க முடியும் என்ற எண்ணமே எந்தவித மன அழுத்தம் இருந்தாலும் அதை அடித்து விரட்டிவிடும் நடுவரே..

இல்லத்தரசி மற்றும் வேலை செல்லும் பெண்கள் இருவருக்கும் மன அழுத்தம் இருக்கிறது..அவ்வளவு ஏன்.. இந்த காலத்துல ஒரு குழந்தைக்கு கூட மனழுத்தம் இருக்குனு சொல்றாங்க.. ஹோம் ஒர்க் செய்வதில் தொடங்கி, அம்மா அப்பா பிரச்சனை பார்ப்பது, வேண்டிய பொருள் கிடைக்காத வரை பல விஷயத்தில் குழந்தைக்கே மன அழுத்தம் இருக்கிறது.மனிதனா பொறந்தவனுக்கு மன அழுத்தம் இருந்தா தான் அவன் மனுஷன் அப்படிங்கற நிலை வந்திட்டது.அக்கறைக்கு இக்கறை பச்சை. இப்படி குழந்தைகளுக்கே மன அழுத்தம் இருக்கும் போது வேலைக்கு போனா என்ன போலைனா என்ன பெண் மட்டும் விதிவிலக்கு ஆகிறாளா? ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால், வேலைக்கு செல்லும் பெண் மனழுத்தத்தை கையாளுவதில் அத்தனை சிரமம் இருக்காது.ஏனெனில் பணம்..

சரி..அப்படி வேலைக்கும் சென்று குடும்பத்தையும் கவனிப்பதால் மனஅழுத்தம் அதிகம் எனும் எத்தனை பெண்கள் வேலையை விட தயாராக இருக்கிறார்கள்? குடும்ப சூழல் காரணமா? சரி.. அப்படி குடும்ப சூழலுக்காக அழுத்ததை அவள் பொறுத்துக் கொண்டு செல்கிறாள் என்றால், வேலைக்கு போகாமல் இல்லத்தரசியாக இருந்து, சும்மா இருக்கிறோமே என நினைக்கும் போது... வேலைக்கு செல்லும் போது ஏற்படும் அழுத்தத்தைவிட பலமடங்கு அவளுக்கு அதிகரிக்கும்.அது தான் உண்மை.. இத்தனை கஷ்டத்துல, நம்மால வேலைக்கு போயி சம்பாதித்து உதவி செய்ய முடியலையேனு ஏக்கம் வரும் போது ஏற்படும் சொல்ல முடியாத மன அழுத்தம்.

வேலைக்கு செல்வதால் மன அழுத்தம் ஏற்படுதுனு, வேலைக்கு செல்ல தேவையே இல்லாத பெண்கள் கூட போயிட்டு தான் இருக்காங்க..என்ன தான் சொல்லுங்க.. நம்ம கையிலும் நாலு காசு இருக்குங்கறப்ப வர தைரியத்துக்கு அளவே இருக்காது..

வீட்டில் பையன் இல்லை.. பெண்கள் தான் எனும் போது, அப்பா அம்மாக்கு உதவலாம், தங்கைக்கு எதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்தால், அதற்கு கணவரை எதிர்ப்பார்க்கும் போது ஏற்படும் மன அழுத்தத்தை விட ஆயிரம் மடங்கு மன அழுத்தம் அலுவலில் ஏற்பட்டாலும் ஒரு பெண்ணானவள் சமாளித்துவிடுவாள்.

கண்டிப்பா நாளு பேரை வெளியில் பார்க்கும் போது, மனதில் இருக்கும் பாரம் கொஞ்சமாவது குறையும்.வேலைக்கு போறவங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை, அவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்.

எதுவாக இருந்தாலும் தனித்து முடிவெடுக்க ஒரு வாய்ப்பு இருக்கும்.. இல்லைனா உனக்கு என்ன தெரியும், நீ சும்மா இரு.. நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறேன் எனக்கு எல்லாம் தெரியும். நாய் படாதபாடுபடுபவன் நான் தானே.. நீ கொஞ்சம் பொறுத்து போனா என்னனு.. உன் அப்பன் வீட்டு காசா? காசோட அருமை தெரியுமா? எனக் கேட்டு பெண்ணுக்குனு ஒரு மனசு இருக்கு..அதிலும் வலி இருக்கு நினைக்காம பேசுவாங்க.சோ கண்டிப்பா வீட்டில் இருக்கும் பெண்க்கு தான் மன அழுத்தம் அதிகம்..

எனவே சுதந்திரத்தை வேலைக்கு போகும் பென்கள் பெற்று மன அழுத்தத்தை குறைத்துக் கொள்கிறார்கள்..ஆனால் இல்லத்தரசிக்கு அப்படி இல்லை.. இங்கே பிரதானம் பணம் கொடுக்கும் தன்னம்பிக்கையும்,தைரியமும் தான்..

நேரம் கிடைத்தால் வருகிறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவருக்கு மீண்டும் வணக்கம். நடுவரே எதிரணியினர் காலையில் இருந்து மாலை இரவு வரை செய்யும் வேலைகளை எல்லாம் பட்டியலிட்டு அதனால் வேலைக்குப் போகும் பெண்களுக்குத்தான் மன அழுத்தம் அதிகம் என்கிறார்கள். அவர்கள் செய்யும் எல்லா வேலகளையும் இல்லத்தரசிகளும் செய்கிறார்கள். வேலைக்கு செல்வதற்கு பதிலாக தனிமை என்னும் கொடுமையை அனுபவிக்கிறார்கள். வேலையிடத்தில் கிடைக்கும் மன அழுத்தத்தை விட இந்த தனிமையினால் ஏற்படும் மன அழுத்தத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது நடுவரே!

வீட்டில் இருப்பதில்ல் என்ன மன அழுத்தம் வந்து விடப் போகிறது என்பார்கள்! வேலைக்குப் போய் இப்போது சூழ்நிலை காரணமாக இல்லத்தரசிகளாக இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள் வேலைக்குப் போய் வந்த காலம் சொர்க்கம் என்பார்கள். காரணம் வேறொன்னும் இல்லை எல்லாம் இந்த தனிமை படுத்தும் பாடு :(.

குடும்பத்தில் ஒரு பணப் பிரச்சினை என்றால் மன அழுத்தமும் கூடவே வரும். வேலைக்குப் போகும் பெண்களால் இந்த பொருளாதார நெருக்கடியில் கணவனுக்கு தோள் கொடுக்க முடியும். அதில் கொஞ்சமாவது ஆத்ம திருப்தி கிடைக்கும். ஆனால் இல்லத்தரசிகளால் உதவவும் முடியாமல் கணவர் படும் அவஸ்தையையும் பார்க்க முடியாமல் மனதிற்குள் புழுங்கியே சாவார்கள்.

அன்த காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்ததில் இல்லத்தரசிகளுக்கு இந்த தனிமை பெரிய விஷயம் இல்லை. ஆனால் இன்றைய அணு குடும்பங்களில் இது மிகப் பெரும் பிரச்சினை. நமது முந்தைய தலைமுறையினர் இளமையில் தனிமையை அனுபவிக்கவில்லை. மாறாக பிள்ளைகளின் வேலை காரணமாக முதுமையில் தனிமையை அனுபவிக்கிறார்கள். ஆனால் இன்றைய இளம் இல்லத்தரசிகள் இளமையிலும் தனிமைக் கொடுமை நாளைக்கு பிள்ளைகள் வளர்ந்த பின்னரும் தனிமைக்கொடுமை. பாவம் இல்லையா இன்றைய இல்லத்தரசிகள். யோசியுங்கள் நடுவரே!

அதுவும் நல்லா படிச்சுட்டும் இல்லத்தரசிகளா இருக்கறது பாருங்க மகா கொடுமை. படித்த படிப்பு வீணாப் போகுதேங்கற மன அழுத்தம் ஒரு புறம். இவ்வளவு படிச்சுட்டு வெட்டியா இருக்கீங்களே ஏன் வேலை கிடைக்கலியானு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கும்பல்களால் கிடைக்கும் மன அழுத்தம் மறுபுறம். இப்படி மனசுக்குள்ளயே புழுங்கிகிட்டு இருக்கறப்போ அவங்களுக்கு என்ன ஜாலியா வீடுல இருக்கறாங்கன்னு சொல்லும் கும்பலைப் பார்த்தால் அப்படியே கழுத்தை நெறிச்சுடலாமான்னு வரும் அதிலும் இந்த "வெட்டியா" ங்கற வார்த்தையை கண்டுபுடிச்சவன் மட்டும் மாட்டினான் வெட்டியே போட்டுடுவோம் கூல் நடுவரே. கூல் கூல் இதெல்லாம் மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான் :). அதனால் யோசிச்சு தீர்ப்பு சொல்லுங்க. மன அழுத்தத்தில் நாங்க என்ன செய்வோம்னு எங்களுக்கே தெரியாது ஆமா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே... யார் வாதத்தையும் படிக்கல, எங்க மக்கள் கூட்டணியை பார்த்தேன், பெரும் மகிழ்ச்சி :)

நடுவரே... நான் வேலைக்கும் போயிருக்கேன், வீட்டில் இப்படி உட்கார்ந்து விட்டத்தை பார்த்துட்டும் இருக்கறேன்... அந்த அனுபவத்தில் சொல்றேன்... நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிற வேறொன்றும் இல்லை.

வேலைக்கு போகும் போது காலையில் 9 மணிக்கு ஆபீஸ் போகனும்... அங்க போனா எல்லா நாளும் பெண்ட் நிமிராது... பல நாள் அங்க வெட்டியா இருந்தது உண்டு. அப்படியே வேலை அதிகமா இருந்தாலும் கூட ஃப்ரெண்ட்ஸ், கேண்டீன், மாசம் ஒரு முறையாவது ட்ரீட் என்ற பெயரில் ஒரு அவுட்டிங், ட்ரிப், டூர்.... இப்படி ரிலாக்ஸ் பண்ண நேரம் இருந்தது. தினமும் லன்ச் 1 மணி நேரம்னா இடையே வெட்டியா போய் டீ குடிச்சுட்டு பஜ்ஜி சொஜ்ஜி சமோசான்னு தின்னுட்டு எவன் தலையிலயாவது மிளகாய் அரைச்சுட்டு (பில்ல தான் சொன்னேன் நடுவரே) கெக்க புக்கன்னு சிரிச்சுட்டு... காலையில் இருந்து செய்த வேலை அப்பவே மறந்து போகும் நடுவரே.

அதோட மட்டுமில்ல... இப்பலாம் ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ்னு வேலை பார்க்கவங்களுக்கு நிறைய செய்றாங்க கம்பெனியே... அவங்க பாடு நிம்மதி தான். இதெல்லாம் கூட வேண்டாம் நடுவரே... சம்பாதிக்குறாங்க என்ற ஒரே காரணத்துக்காக இவங்களுக்கு கட்டிக்கிட்ட புருஷன், சம்பலம் இல்லாம வேலை செய்ய மாமியார்... இப்படி சலுகைகள் ஏராளம் ஏராளம்!!! இவ்வளவு ஏன் நடுவரே... பெற்ற பிள்ளையை கூட பார்த்துக்க மாட்டாங்க... அடுத்தவங்களை பார்த்துக்க சொல்லி விட்டுட்டு கிளம்பிடுவாங்க. எல்லாம் பணம்.

ஆனா வீட்டில் இருக்குறது அத்தனை சுலபமில்லை நடுவரே. கொடுமையிலும் கொடுமை.

காலை எழுந்து நாம ஆபீஸ் போறது கூட போயிரலாம்... இந்த புருஷனை ஆபீஸ் அனுப்புற கொடுமை இருக்கு பாருங்க... ஆச்சசோ சொல்லி முடியாது. அவங்க 7 மணீக்கு போகனும்னா நம்ம 5 மணிக்கு எழனும். உடம்பு சரி இல்லன்னு ஒரு நாள் படுத்தா கூட உதவ ஆளிருக்காது நமக்கு. அதுவும் மனைவி வேலைக்கு போகாத வீடுகளில் ஒரு விஷயத்தை நல்லா கவனிக்கலாம்... புருஷனுக்கு தண்ணி கூட உட்கார்ந்த இடத்தில் வேணும். ஈவினிங் வரும் போதே காபி, டீ, ஸ்னாக்ஸ்... எதாச்சும் மிஸ் ஆச்சுன்னு வைங்க “என்னடி பண்ண... வீட்டுல இவ்வளவு நேரம்???” இருந்து பார்த்தா தானே தெரியும்!!!

அவ்வளவு ஏங்க... வேலைக்கு போறவங்களுக்கு பிள்ளையை ரெடி பண்ணி அனுப்ப கூட புருஷன், மாமியார் உதவி இருக்கும். நம்ம நிலைமை அப்படி இல்லை... அதுகளையும் ஸ்கூலுக்கு நாம தான் கிளப்பனும். இப்பலாம் சிட்டில ஸ்கூல் பஸ் டைம் 6.30, 7ன்னு நினைச்சாலே பயமா இருக்குங்க. பின் தூங்கி முன் எழுவாள்.... இது வீட்டில் இருக்க பெண்களுக்கே உண்டாக்கின வசனம்ங்க. ரத்திரி புருஷன், பிள்ளை எல்லாம் நிம்மதியா தூங்க, இந்தம்மா வீட்டு வேலை எல்லாம் முடிச்சு ஓதுங்க வெச்சு படுக்க 12 ஆகும்... காலை 5 மணிக்கு “திட்டு வாங்கிடாத... லேட்டாச்சு... ஆத்துக்காறர் பஸ் மிஸ் ஆனாலும், பிள்ளை பஸ் மிஸ் ஆனாலும் உனக்கு தான்டி டோஸு...”னு மனசுல ஒரு அலாரம் அடிக்கும்.

வீட்டிலே காலை இவ்வளவு டென்ஷனா எல்லாரையும் கிளப்பி விட்டுட்டு மதிய சமையல், இரவு சமியல், துணி, பாத்திரம், காய போட, மடிச்சு வைக்க, அயர்ன் பண்ண, வீடு சுத்தம் பண்ண, தொடைக்க, கழுவன்னு... வீட்டில் இருக்க பெண்களூக்கு நேரா நேரத்துக்கு சாப்பாடு கூட உள்ள போறதில்லைங்க. ஈவிங்க பிள்ளைக்கு என்ன செய்ய, கணவருக்கு என்ன செய்யன்னு குழம்பியே மண்டை காயுது. வேலைக்கு போய் வந்தா நம்ம கைல கிடைக்குறதை ஈஸியா எதை செஞ்சு வெச்சாலும் வாய திறக்காம சாப்பிடுவாங்க... ஆனா வீட்டில் இருந்தா அப்படி அவங்களுக்கு இறங்காது... “இவ்வளவு தான் செய்ய முடிஞ்சுதா??? பகலெல்லாம் வெட்டியா தானே இருந்திருப்ப...”னு ஒரு கேள்வி.

இப்பலாம் மாமனார் மாமியார் கூட வேலைக்கு போகும் மருமக வீட்டில் தாங்க டேரா போடுறாங்க... சம்பாதிச்சு குடுக்கறாளே.... வேலைக்கு போகாம வீட்டில் இருந்தா பிள்ளை குட்டிக்கு உடம்பு சரி இல்லன்னா கூட வந்து உதவ மாட்டாங்க... வந்து பார்த்துட்டு போகும் விசிடர்ஸ் தான்... ஏன்னா அடுத்த நாள் வேலைக்கு போற மருமகளுக்கு சமைச்சு போடனும் பாருங்க... தங்கிலாம் போக முடியாதே. ஆல் கொடுமைஸ் நடுவரே.

இப்படி தனியா இருந்து இருந்து பேச்சு துணைக்கு கூட ஆளில்லாம கணவர் 1 மணிக்கு வந்தாலும் விட்டத்தை பார்த்துட்டு இருக்க பெண்களீன் நிலை ரொம்ப மோசம் நடுவரே. இப்ப லேப்டாபாது இருக்கு... கரண்ட் இல்லை, லேப்டாப் இல்ல என்ற சூழல் எல்லாம் தனியா... நினைக்கவெ எமுடியல நடுவரே. இந்த அறுசுவை இல்லன்னா... இங்க இருக்க பல இல்லத்தரசிகள் பைத்தியமா தான் அலஞ்சிருப்போம்.

ஒரு நாள் ஞாயிறு... அறுசுவைக்கு ஹாலிடே.. இவருக்கு ஒர்கிங் டே... நான் வாசலுக்கும் வீட்டுக்கும் நடையா நடப்பேன் தெரியுமா நடுவரே???? ஏங்கறீங்க??? சமையல், வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சா கூட என்ன செய்யன்னு புரியாது... யாரும் இல்லாம ஹாலில் தனியா உட்கார்ந்திருக்க கூட கொடுமையா இருக்கும். வெளிய போய் இவர் வராரான்னு எட்டி எட்டி பார்த்துட்டு இருப்பேன். அவரும் வந்து 4 வார்த்தை பேசாம பிசி ஆயிட்டார்னு வைங்க... முடிஞ்சுது என் கதை. வையாங் வையாங்னு கத்துவேன். இதெல்லாம் எதனாலன்னு நினைக்கறீங்க... முழு நாளும் தனிமை தந்த வெறுமை... கொடுமை நடுவரே.

நீங்களும் அனுபவிக்க தானே செய்யறீங்க... நான் இவ்வளவு சொல்லியும் புரியாமலா போகும்???

நேரம் இல்லை நடுவரே... வேலை ஆள் வந்தாச்சு, சமைக்கனும், குழந்தைக்கு உணவு கொடுக்கனும், இவருக்கு லீவ்... கொஞ்சம் வெரட்டியா சமைக்கனும்... ஏகமா தலைக்கு மேல் வேலை இருக்கு... அதுவும் ஏசி ரூமில் ஹாயா உட்கார்ந்து செய்யும் வேலை இல்லைங்க... அடுப்படியில் ஃபேன் கூட இல்லாம வெந்து வேகும் வேலை. கிளம்பறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்த நடுவருக்கும் தலைப்பை கொடுத்த அன்பரசிக்கும் நன்றி.
நடுவர் அவர்களுக்கு வணக்கம்,இல்லத்தரசிகளுக்கு தான் மன அழுத்தம் அதிகம்னு பேச வந்துருக்கேன்.

ஏற்கனவே தோழிகள் பேசினதையே சொல்லிருந்தா கண்டுக்காதீங்க நடுவரே ஏன்னா நான் எதையும் இன்னும் படிக்கல.
நடுவரே வேலைக்கும் போகும் பெண்களை விட இல்லத்தரசிகளுக்க்தான் மன அழுத்தம் அதிகமுங்க ஏன்னா நாங்க வேலைக்கு போறேன்னு சொல்லி 8 மணி நேரம் தப்பிக்கமுடியாதே.

24 மணிநேரமும் என்னதான் உழைச்சாலும் எங்களுக்கு கிடைக்கும் பேர் என்னவோ வீட்டுல சும்மாதான் இருக்கா அவளுக்கென்ன நல்லா சாப்டு சாப்டு டீவி பாத்து தூங்க வேண்டியது இதான் நடுவரே எங்களுக்கு கிடைக்கு பேர்.
என்னதான் வீட்டுல இருந்தாலும் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் சமாளிக்கனுமே அங்கயே மன அழுத்தம் அதிகமாயுடுதே மாமியார்,நாத்தனார்,கொழுந்தனார்ன்னு எத்தனை பேரை சமாளிக்க வேண்டி இருக்கு பாருங்க.

வேலைக்கும் போகும் பெண்களுக்கு குடும்பம் இல்லையான்னு கேட்காதிங்க நடுவரே இருக்குதான் ஆனால் அவங்க வேலை என்ற பெயரில் வெளில போகும் சாக்கில் இதிலுருந்து தப்பிச்சுடுராங்க எங்க நிலமை அப்படியா சொல்லுங்க.

என்னதான் அருமையா சமைச்சாலும் அழகா வீட்டை கவனிச்சுக்கிட்டாலும் ஏதாவது ஒரு நொட்டு சொல்லுவாங்க பாருங்க மாமியார் அப்ப வரும் பாருங்க இந்த மன அழுத்தம்.

மன அழுத்தம் உருவாக காரணமா இருப்பதே இல்லம் தானே நடுவரே ஆபிஸ்ல இருக்கவங்களை எப்படி வேனாலும் சமாளிச்சுக்கலாம் ஆனால் குடும்பத்தை அப்படி டீல் பண்ணமுடியுமா சொல்லுங்க.

வேலைக்கும் போகும் பெண்கள் வீட்டில் ஏற்படும் மன அழுத்தத்தை மறந்து உடன் வேலை செய்பவர்களோடு ஐக்கியமாகிடுவாங்க நாங்க அப்படியா என்னதான் மனசு சரியில்லைன்னாலும் வெளில சொல்லமுடியாது வெளியில் போகவும் முடியாது இதுதான் இல்லத்தரசிகளின் நிலமை நடுவர் அவர்களே.
இல்லத்தரசிகளா வாழறோமோ இல்லையோ மன அழுத்தத்தோடு வாழ்கிறோம் என்பதுதான் உண்மை நடுவர் அவர்களே.

ஏதோ எனக்கு தெரிஞ்சதை உளறி இருக்கேன் நடுவரே மீண்டும் வருகிறேன் எனக்கூறி இப்பொழுது விடை பெறுகிறேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவிசிவா

//நேற்று இரவே பதிவிடவில்லை. ஆனா மனசாட்சி ஒத்துக்க மாட்டேங்குது. அப்படி ஒன்னு இருக்கான்னு எல்லாம் கேட்கப் படாது. அழுதுடுவேன்.// நடுவர் அலுதுடுவேன்..ஆமா ;(

//நம்ப ஊர்ல ஆறு குளத்துக்கெல்லாம் பெண் பெயரை வச்சு தெய்வம் ரேஞ்சுக்கு உய்ர்த்திட்டு உண்மையான் பெண்களை காலில் போட்டு மிதிப்பார்களே அதே போலத்தான்// அலங்காரம் பண்ணி ஆட்டை பலி தர்ற கதை.

//அந்த சீரியல் பார்ப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்னு அவங்களுக்கு தெரியாது. அது கொடுக்கும் மன அழுத்தம் எவ்வளவுன்னு தெரியாது// கவி, இதையும் சொல்லாதீங்க.. நான் ஓஓஒன்னு அலுதுடுவேன். எல்லா ஊர்க்காரகளும் கூடிப்பேசி தான் சீரியல் எடுப்பாங்க போல இருக்கு. இங்கே சீரியல் பார்த்து பார்த்து நானே ஒருமாதிரி தான் இருக்கேன். இருந்தாலும் சுதாரிச்சுட்டு 2 வாரமா அது பக்கமே தலைவச்சு படுக்கறதில்ல. இப்ப கொஞ்சம் சுமராயிருக்கு நிலைமை.

//பொதுவாகவே பெண்கள் அதிகம் பேசுவார்கள். அவர்களுக்கு இது எவ்வளவு பெரிய தண்டனை? // வருஷக்கணக்குல சோறு தண்ணி இல்லாம கூட இருக்கலாம்.. பேசாம எப்படிங்க இருக்க முடியும்? அது நரக வேதனையாச்சே ;(

//ஏதாவது சொன்னோம்னு வையுங்க வீட்டுல வெட்டியாத்தானே இருக்க நாங்க வேலைக்குப் போறோம் படிக்கறோம்னு// ஒருநாள் எல்லாத்துக்கும் ஸ்ட்ரைக் பண்ணா தெரியும் இவங்களுக்கு.. யார் வெட்டி..யார் சுட்டின்னு..

//எது வேண்டும் என்றாலும் கணவரை எதிர்பார்க்கும் நிலை! இது எவ்வளவு பெரிய மன அழுத்தம் தெரியுமா?// மத்த மன அழுத்தங்களை விட, இந்த பண அழுத்தம் படுத்தும் பாடு இருக்கு பாருங்க...

//உண்மையில் என்ன பண்றாங்கன்னு கேட்டா "சும்மாத்தான் இருக்கா" அப்படீம்பாங்க. ஏதோ எதுவுமே செய்யாமா காலாட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்காங்கன்ற மாதிரி :(// அவங்க சொல்லிட்டா மறுபேச்சே இல்ல. உடனே சும்மா இருந்துடனுங்கறேன். அப்ப தெரியும் அந்த வார்த்தையோட பவர் என்னன்னு..

கவி, இந்த சின்ன வயசுல குட்டி மனசுல இத்தன பாரங்களா? கேக்குற எனக்கே அலுகையா வருது. பாவம் கிடந்து அவஸ்தைபடுறவங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்க அலாதீங்க கவி. கண்ண துடச்சுட்டு சமத்து புள்ளையா போய் வீட்டு வேலைய பாருங்க. அப்புறம் வெட்டி ஆபிசர்னு யாராவது சொல்லிட போறாங்க ;(

ஏம்மா, எதிரணி யார்ப்பா வர போறீங்க. கவிசிவா எரிமலை வெடிக்க தொடங்கியிருக்கு. எதுவா இருந்தாலும் எட்டடி தூரமா நின்னு பேசுங்கப்பா. அப்புறம் எதாச்சும் ஆச்சுன்னா நடுவர் பொறுப்பு இல்ல..ஆமா சொல்லிட்டேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவருக்கும் எல்லா தோழிகளுக்கும் வணக்கம். தலைப்பை பார்த்ததும் என்னாலையும் இருக்க முடியல அதான் முதன் முதலா களம் இறங்கியிருக்கிறேன். தொடர்ந்து வரமுடியுமான்னு தெரியல ஏன்னா வேலைக்கு போற எங்களுக்கு மன அழுத்தமும் அதிகம் வேலையும் அதிகம். இன்னைக்கு வீட்டில போய் என்ன பண்ணனும்ன்னு ஆபிஸ் விட்டு போகும்போதே முடிவுசெய்யனும் அடுத்த நாள் ஆபிஸ் ல வந்து என்ன வேலையெல்லாம் செய்யனும்னு வீட்டிலேயே தயார் படுத்திட்டு வரணும் அப்படியில்லைன்னா குழப்பம் தான் அடிதடிதான் என் அணி தோழி சொன்னமாதிரி திரும்பற இடமெல்லாம் அடிதான் நடுவரே குழந்தைங்கள நர்சரியில விட்டுட்டு வேலைக்குவாறோம் ஒரு தோழி சொல்லியிருந்தாங்க ஆமாங்க நாங்க விட்டுட்டு வாறோம் ஆனா நீங்க குழந்தைங்க பக்கத்தில எப்போதும் இருக்குறீங்க இந்த வாக்கியத்தை இரண்டு தடவை ஆழ்ந்து வாசித்து பாருங்க எங்க வேதனை உங்களுக்கு புரியும். என் அனுபவத்தையே சொல்றேன் கேளுங்க , போன வாரம் திடீர்ன்னு கலையில ஸ்கூளுகு கிளம்பும் போது பையnukku ஒரே வாமிட் என்ன பன்றதுன்னு புரியால ஏன்னா நான் முன்னறிவிப்பில்லாம லீவ் போடமுடியாது சரின்னு சில மருந்து கொடுத்து வீட்டில வேலை செய்றவங்ககிட்ட விட்டுட்டு நான் வேலைக்கு வந்துட்டேன். ஒரு ஒருமணி நேரம் கழித்து வீட்டிலிருந்து போன் பிள்ளை எதுசாப்பிட்டலும் வாமிட் பண்றான் தண்ணிகூட குடுக்க முடியலைன்னு என்ன செய்வேன் சொல்லுங்க ஹஸ்க்கு போன் பண்ணா போன் ஸ்விச் ஆப் என் ஆபிஸ் இன்டீரியர் untimla டிரான்ஸ்போர்ட் கிடைக்காது என் நிலைமைய யோசிச்சி பாருங்க. என் தோழிக்கு போன் செய்தேன் அவங்க ஹஸ் வீடில இருந்ததால பையன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் மருந்துவாங்கிட்டு அவங்க வீட்டிலேயே என் தோழி வீட்டில் இருப்பதால் விட்டுட்டு போனார், திரும்பி நான் வீட்டுக்கு போய் என் பையன பாக்குற வரைக்கும் என் மனநில சொல்லமுடியலங்க. ஆனா வீடில இருக்கும் நீங்க எந்த டைமும் வீட்டில இருக்கலாம் குழந்தைங்க கூட . பொருளாதார சுதந்திரம் பற்றி சொல்றிங்களா அப்படின்னா என்னாங்க ஏன்னா எங்க பேங்க் கார்ட் சீக்ரட் நம்பர் எங்களுக்கு எழுதிவைச்சாதான் நியாபகம் இருக்கும். வீடில மாமியார் பிரச்சனைசமாளிக்கனும்னு சொல்றீங்க உங்களுக்காவது ஒரு மாமியார்தான் சமாளிக்கனும் எங்க ஆபிஸ் பாஸ் சில நேரம் மாமியார மாறிடுவாங்க அப்ப நாங்க இரண்டு மாமியார சமாளிக்கனும் நாங்க மன அமைதியை தேடிதான் வாங்கனும் ம்ம்ம்ம்ம் என்ன சொல்ல

ponni

மேலும் சில பதிவுகள்