பட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?

அன்புகோழீஸ், என்ன வீக் எண்ட் அதுவுமா பறக்குறது, நடக்குறது, ஓடுறது, நீந்துறது எல்லாத்தையும் வறுத்து பொரிச்சு வயத்துக்கு அனுப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா? உங்களை யார் நிம்மதியா விட்டா? இதோ வந்துட்டேன் பட்டிமன்ற தலைப்போட..

நம் அறுசுவையின் அன்புத்தோழி அன்பரசி அவர்களின் தலைப்பாகிய

*************************************************************
அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா ?
வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
*************************************************************

சிறு மாறுதல் செய்து இங்கே தந்துள்ளேன். அன்பு தலைப்புக்கு நன்றி பா :)

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

என்ன தலைப்பை பார்த்துட்டீங்கல, இன்னும் என்ன வேடிக்கை? மளமளன்னு உங்க அழுத்தம், எதிர் வீட்டு அழுத்தம், பக்கத்து வீட்டு அழுத்தம் எல்லாத்தையும் போட்டு இங்கே அழுத்த வாங்க. எல்லாத்தையும் வாங்கி ஒரு பெரிய சாக்கு பைல போட்டு அழுத்தி வைக்க நான் இங்கே காத்திருக்கேன். வாங்க கோழிகளே!! வாங்க !! வாங்க !!

கல்பனா,

இந்த பட்டியில் நம் தோழிகளின் வாதத்தை, அதை படு பக்குவமாக நடத்தி செல்லும் உங்கள் திறனை, கடைசி வரை இருக்க பொறுக்காமல், இடையே ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துட்டு போனேன்! (ஒரு பதிவில் :)) அதற்க்கப்புறம் ஒரு வாரமா, பயங்கர வேலை! :( (இன்னும் ஒரு நாள் போனால், அடுத்த பட்டியே தொடங்கிடுமேன்னு அரக்கப்பரக்க ஓடிவந்திட்டேன்... கண்விழித்தாவது பதிவு போட்டே விடுவதென்று!)

உங்க தீர்ப்பு... ரொம்ப எதிர்ப்பார்ப்போட காத்திருந்து படித்தேன்! அருமையோ அருமை கல்பனா! முதலில் எத்தனை பெரிய அழகான தீர்ப்பு பதிவு!!! பல உணர்ச்சிமிக்க உதாரணங்கள், சில ஆழமான விளக்கங்களுடன் அருமையா தொகுத்து தந்திருக்கிங்க... சான்ஸே இல்லை கல்ப்ஸ்!! நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!!

கவிசிவாவின் ப்ரம்மாஸ்திர கவிதை!, அதைத்தொடர்ந்து வந்த சீதாலஷ்மிம்மா, இளவரசி, மற்றும் நம் தோழிகளின் பதிவுகள் என... ரொம்ப நாள் இந்த பட்டியை நினைவிலிருந்து அகலாது செய்த பெருமை உங்களையும், பட்டியில் பதிவிட்ட நமது அருமை தோழிகளையும் சேரும்!
அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க பதிவு பார்த்து எனக்கும் சந்தோஷம் ..
ஸ்பேஸ் பார் வொர்க் ஆகாத ஆனா அடிச்சு பட்டையை கிளப்புனிங்க தானே..

என்னை நியாபகம் இருக்கா.? பட்டிக்கும் அருசுவைக்கும் புதுசு தான்.
ஆனான் பழைய பட்டியில் (ஒப்பனை ) உங்க வாதம் பிடிச்சது.

அடுத்தடுத்த பட்டியில எதிர்பார்த்தேன்.
வாங்க முடிந்த போது.
உங்க பதிவு படிக்க ஆசையா இருக்கு.

என்றும் உங்கள் மனம், வாழ்க்கை ரெண்டும் மலர் போல் மென்மையாக இருக்க
வாழ்த்துக்கள்

//ஸ்பேஸ் பார் வொர்க் ஆகாத ஆனா அடிச்சு பட்டையை கிளப்புனிங்க தானே// - ஸ்பேஸ் பார் போனது கல்பனா கீபோர்ட் தானே??? ;) ஒரே குழப்பமா இருக்கே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஜாதா,

தொடந்து பாராட்டிட்டே இருக்கீங்க பா. ரொம்ம்ம்ப சந்தோஷம் பா. ரொம்ம்ப சந்தோஷம்.// (இன்னும் ஒரு நாள் போனால், அடுத்த பட்டியே தொடங்கிடுமேன்னு அரக்கப்பரக்க ஓடிவந்திட்டேன்... கண்விழித்தாவது பதிவு போட்டே விடுவதென்று!)// இடைப்பட்ட நாள்ல கண்டிப்பா என்னை நினைச்சுட்டு இருந்திருப்பீங்கல, எனக்கு பதிவு போடனும்னு, அதுக்காகவே இன்னும் நாளை நீட்டிச்சே பதிவு போட்டிருக்கலாம் ;) இருக்கட்டும் பா. என் நினைப்பு உங்களுக்கு இருந்ததே, அதற்கே நான் நன்றிகளை சொல்ல வேண்டும்.

சுஜாதா, உங்கள் மனம் நிறைந்த பாராட்டு, விமர்சனத்திற்க்கு மிக்க நன்றிகள் பா.:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி & உத்தூ,

////ஸ்பேஸ் பார் வொர்க் ஆகாத ஆனா அடிச்சு பட்டையை கிளப்புனிங்க தானே// - ஸ்பேஸ் பார் போனது கல்பனா கீபோர்ட் தானே??? ;) ஒரே குழப்பமா இருக்கே.// இதுக்கு தான் சண்டேஸ்ல பதிவு போடாதீங்கன்னு சொல்றது. பாருங்க மயக்கத்துல என்ன சொல்றோம்னே தெரியாம ரெண்டு பேரும் குழம்பி போயிருக்கீங்க ;) அட... ஏன் அப்படி முறைக்கறீங்க? வீக் எண்ட் ஆச்சே, நல்ல சாப்பாடு சாப்ட்ட மயக்கம்னு சொல்ல வந்தா.. ஏதேதோ நினைச்சுட்டு... நல்லவிதமாவே யோசிக்க விடாதீங்கப்பா.. பேட் கேர்ள்ஸ்..:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கடசி வரை ஸ்பேஸ் பார் யாரோடது உடைஞ்சுதுன்னு சொல்லமாலே விட்டுட்டீங்களே!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரண்டர் ..(தப்பை கூட சரியா தப்போட செய்வோம்ல நாம )
ரெண்டு பேரும் ஒழுங்கா இருக்கிங்களா ன்னு செக் பண்ண போட்டா இப்படியா ..
//சண்டே சாப்பிட்ட மயக்கமா???// (தூக்கம் பா அறுசுவையை தூக்கத்தில நடக்கிற வியாதி போல் தூக்கத்திலேயே ஓபன் பண்ணி பதிவிட்டதுனாலே இப்படி ஆயிபோச்சு..ஹிஹிஹிஹி..)நாங்கெல்லாம் அறிவு ஜீவி .

வனி இந்த ஜெ அப்படியாவது பதில் சொல்லுவாங்கலான்னு போட்டேன் .. நீங்க ஏன்பா என்னை குழப்பிவிட்டிங்க .. இப்போ நான் என்ன பண்ணுவேன் ஈது பண்ணுவேன்..

சரி போட்டும் விடுங்க!!அறுசுவை தோழிகள் ஆயிரம் உடல் ஒருஉயிர் தானே !!

ஒருத்தருக்காக ஒருத்தர் பதில் சொல்லி தானே ஆவணும்..

சரி ஸ்டாப் ஸ்டாப் (என்னை சொன்னேன் )
எனிவெ ரெண்டு பேருக்கும் நன்றி நன்றி (ரெண்டு பேர் தானே )

ஜெய அவர்களே !!
உங்க கணினி நல்லா வொர்க் ஆவலைன்னாலும் என்னை மட்டுமே திட்டணும் ஆமாம் சொல்லிபுட்டேன் !!

அடடா! உங்க கிட்ட நானும்தானே பேசனும்னு இருந்தேன்;-) எப்படியோ இன்னிக்கு பேசிட்டேன்..;) உங்க பதிவை நான் இப்பதான்பார்த்தேன்;-)

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிபா;)உங்க வாழ்த்தும் எனக்காக நீங்க போட்ட பதிவும் எனக்கு மகிழ்ச்சியைத் தருது;)உங்களுக்கும் வாழ்த்துக்கள்;-)

வனி ஸ்பேஸ் பார் உடைஞ்சது கல்ப்ஸோடுதுதான் கல்ப்ஸ் தட்ற அளவுக்கு இன்னும் என் விரல்களில் வலிமை இல்லை நான் ரொம்ப நோஞ்சான் புரிஞ்சுக்குங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்;(

ஆனாலும் வனி உங்க கடமை உணர்வை நான் ரொம்ப பாராட்டறேன்..! ;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்