பட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?

அன்புகோழீஸ், என்ன வீக் எண்ட் அதுவுமா பறக்குறது, நடக்குறது, ஓடுறது, நீந்துறது எல்லாத்தையும் வறுத்து பொரிச்சு வயத்துக்கு அனுப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா? உங்களை யார் நிம்மதியா விட்டா? இதோ வந்துட்டேன் பட்டிமன்ற தலைப்போட..

நம் அறுசுவையின் அன்புத்தோழி அன்பரசி அவர்களின் தலைப்பாகிய

*************************************************************
அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா ?
வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
*************************************************************

சிறு மாறுதல் செய்து இங்கே தந்துள்ளேன். அன்பு தலைப்புக்கு நன்றி பா :)

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

என்ன தலைப்பை பார்த்துட்டீங்கல, இன்னும் என்ன வேடிக்கை? மளமளன்னு உங்க அழுத்தம், எதிர் வீட்டு அழுத்தம், பக்கத்து வீட்டு அழுத்தம் எல்லாத்தையும் போட்டு இங்கே அழுத்த வாங்க. எல்லாத்தையும் வாங்கி ஒரு பெரிய சாக்கு பைல போட்டு அழுத்தி வைக்க நான் இங்கே காத்திருக்கேன். வாங்க கோழிகளே!! வாங்க !! வாங்க !!

ஜென்னி,

தெளிவா, அழகா, விளக்கமா வேலைக்கு செல்லும் பெண்களின் பணிகளையும், அவர்கள் படும் கஷ்டங்களையும் எடுத்து சொல்லிட்டார். இதுக்கு பிறகும் இல்லத்தரசிகளுக்கு தான் மன அழுத்தம்னு சொன்னா நல்லார்க்காதுங்க. நிச்சயம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தான்னு சொல்லுவேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//வேலைக்கு போகும் போது காலையில் 9 மணிக்கு ஆபீஸ் போகனும்... அங்க போனா எல்லா நாளும் பெண்ட் நிமிராது... பல நாள் அங்க வெட்டியா இருந்தது உண்டு. அப்படியே வேலை அதிகமா இருந்தாலும் கூட ஃப்ரெண்ட்ஸ், கேண்டீன், மாசம் ஒரு முறையாவது ட்ரீட் என்ற பெயரில் ஒரு அவுட்டிங், ட்ரிப், டூர்.... இப்படி ரிலாக்ஸ் பண்ண நேரம் இருந்தது. தினமும் லன்ச் 1 மணி நேரம்னா இடையே வெட்டியா போய் டீ குடிச்சுட்டு பஜ்ஜி சொஜ்ஜி சமோசான்னு தின்னுட்டு எவன் தலையிலயாவது மிளகாய் அரைச்சுட்டு (பில்ல தான் சொன்னேன் நடுவரே)//

கண்டிப்பா இது கல்யாணத்துக்கு முன்னாடி நடந்திருக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்கு போறதெல்லாம் ஒரு டைம் பாஸ். இப்போ நாங்க ஒருத்தர் தலையில மிளகா அரைச்சா அதை அவர் திருப்பி நமக்கு செய்யும் போது நம்ம பைசா போகும் வீடில மாத்துதான் வாங்கனும். கல்யானத்துக்கு மின்னாடி நம்ம சம்பளம் எவ்வளவுன்னு கூட நம்ப அப்பா அம்மா கேட்க மாட்டங்க அப்ப யாரு மிளகா அரைச்சாலும் பரவாயில்ல ஆனா கல்யானத்துக்கு அப்புறம் வேலைக்கு போறது இருக்கே .........

//இப்பலாம் மாமனார் மாமியார் கூட வேலைக்கு போகும் மருமக வீட்டில் தாங்க டேரா போடுறாங்க... சம்பாதிச்சு குடுக்கறாளே.... //

அட அதுக்கு இல்லைங்க நீங்களும் வீடில இருந்து அவங்களூம் வீட்டில இருந்தா நொச்சி நொச்சின்னு வேல சொல்லிட்டு இருப்பிங்க அவங்க செய்யலன்னா நீங்க அவங்களை ஒன்னும் சொல்லமுடியாது ஆனா பாத்திரம் பண்டம் எல்லாம் தானா விழும் இது அவங்களுக்கு distubence தானே ஆனா நாங்க காலையிலேயே எல்லாம் செய்துவைத்துட்டு வந்திடுறோம் வேளா வேளாக்கு சாப்பிட்டிட்டு டீவி பாக்காலாம் தூங்கலாம், எந்த disturbence இல்லாம ஒன்லி ரெஸ்ட் அதாங்க காரணம்

ponni

அருமையான தலைப்பு வாழ்த்துக்கள்.

கண்டிப்பாக மனஅழுத்தம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கே ஸ்கூல் போர பசங்க என்னைக்கு லீவு வருதுன்னு காத்துகிட்டு இருப்பாங்கலே அதே நிலைமைதான் வேலைக்கு போர பெண்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை என்னிக்கு வருதுன்னு பார்த்துகிட்டே இருந்து லீவு விட்டதும் காலையில் 8மணி வரைக்கும் படுக்கையில் இருந்து எழுந்துக்க மனம் வராமல் புரண்டுகிட்டே இருக்கரது எவ்லோ சுகம்.9 மணிக்கு காஃபி, 11 மணிக்கு டிபன் , 3 மணிக்கு லன்ச் நடுவிலே சிரு சிரு வீட்டு வேலைகள் மாலை பீச் சினிமா வர 10 மணி ஆகிடும் அப்ரம் தூக்கம் மறுநாள் காலையில் 5.30 இல்லனா 6.00 மணிக்கு எழுந்து எங்க நிம்மதியா வேலைக்கு போக முடியும்.

அன்புடன்
ஸ்ரீ

அன்பு நடுவர் அவர்களே...

அசத்தலான தலைப்பு எடுத்ததற்கு முதலில் பாராட்டுக்கள்..மன அழுத்தம் தான் வாழ்வின் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்..இதில் இல்லத்தரசிக்கு அழுத்தம் இல்லை..ஆனால் வொர்க்கிங் ராணிகளுக்கு அழுத்தம் இருக்கு ன்னு சொல்ல முடியாது.. மனுஷங்க எல்லாருக்குமே இருக்குப்பா இந்த ஸ்ட்ரெஸ் .. அதுல உண்மையா பார்த்தோம்னா இந்த சம்பளத்துக்கு வேலைக்கு போகும் (சம்பளம் இல்லா வேலை இல்லம் பராமரிப்பு தான் ன்னு எதிர் அணியினர் சொல்ல கூடும் )வொர்க்கிங் ராணிகளுக்கு ஏகப்பட்ட டென்ஷன் .. அதனால் என்ன சொல்ல வரேன்னா நான் வேலைக்கு போகும் பெண்களுக்கு மன அழுத்தம் உடல் அழுத்தம் எல்லாமே ஜாஸ்திங்கோ! ஜாஸ்தியோ ஜாஸ்திங்கோ !! ன்னு சொல்லி ஏன் வாதத்தை ஆரம்பிக்கிறேன் யுவர் ஆனர்!!

நீங்க போய் எந்த வேலைக்கு போகும் பெண்களை கேட்டாலும் , எனக்கு வேலைக்கு போக தான் பிடிச்சிருக்கு..யாருபா விட்ல இருப்பாங்க, அது செம போர் !!அப்படின்னு சொல்வாங்க .. ஆனா அதெல்லாம் கொஞ்ச நாள் தான்.. உடம்பு நல்லா இருக்க வரைக்கும் , குழந்தைங்க படிப்பு கெடாத வரைக்கும் தான், மத்தபடி இதில் ஏதாவது ஒண்ணுன்னா கூட , இங்கேயும் சொல்ல முடியாம , மெல்லவும் முடியாம , விழுங்கவும் முடியாம , அவங்க படர அவஸ்த்தை இருக்கே ....

அச்சச்சோ !!ரொம்பவே கஷ்டம்ங்க !! (என்ன அனுபவம் பேசராப்ல இருக்குது )ன்னு நீங்க சொல்றது என் காதுக்கு கேக்குது .. ஆமாமுங்க நான் வொர்க்கிங் ராணியா பதவி வகிச்சுட்டு , இப்போ நாற்காலியை விட்டு கொடுத்துட்டு இல்லத்தரசியா ஜம்முனு இருக்கேங்க..
சோ ரெண்டு குதிரையிளையும் சவாரி செஞ்சதாலே நமக்கு கொஞ்சம் அனுபவம் ஜாஸ்தி தான்.. அதை விட என் வொர்கிங் தோழிகளின் அனுபவம் வேற இருக்கே !!

மன அழுத்தம் ..சாக்கெலாம் போறாது .. ஒரு கப்பல் வேணும்.கப்பலே கவுந்தாலும் இவங்க பிரச்சினை தீராதுப்பா!!

விட்ல வேலை செய்யும் வேலையாளிடம் ஆரம்பித்து நண்டு சிண்டு , பெரியவர் சின்னவர், வேலை செய்யற இடத்தில் மேநேஜரிலிருந்து ப்யூன் வரை எல்லாரை [பற்றியும் அப்டேடட் ஆ இருக்கணும்..
கொஞ்சம் மறந்து தொலைசீங்க .. உங்களை தொலைச்சு கட்டிருவாங்க!!

ஸ்ட்ரெஸ் பச்டர்ஸ் பண்ண கூட டைம் இருக்காது இந்த வொர்க்கிங் ராணிகளுக்கு .. அதுக்குள்ளே அடுத்த அசைன்மென்ட் வந்துரும்பா..

சரி சரி நிறைய வாதத்தோட திரும்ப வரேன்..
எனக்கென்னப்பா இல்லத்தரசி, (தலையில் ஒரு கொண்டை முடிஞ்சு அதுவே ஒரு கிரீடம் போல் இருக்குல்ல ..அது தான் அரசியாச்சே !! )

எப்போ வேணா வருவோம் போவோம் .. வந்து பதிவும் போடுவோம் .. நமக்கு கொஞ்சம் அழுத்தம் கம்மியா இருக்குல்ல..

மீண்டும் அழுத்த (அதான் பா கீபோர்டை அழுத்த ) வரேன்..

நடுவரே... நாம வாதம் பண்ணும் முன்னாடி கொஞ்சம் காலம் முன்னாடி சினேகா நடித்த படம் ஒன்னு வந்ததே... ஹீரோ பேரு நியாபகம் இல்லை. மன்னிக்கனும். நமக்கும் சினிமாக்கும் ரொம்ப தொலைவு. அதில் சினேகா கடைசியில் பைத்தியம் ஆகும் நிலையில் இருப்பதா டாக்டர் சொல்வார். இது நிஜத்தை சொன்ன கதை. உண்மை தான்... நான் சிரியாவில் இருந்த போது எனக்கு படம், டிவி எதுவும் கிடையாது... அங்க தமிழ் சேனல் ஒன்னும் வராது. இவர் காலை அராபிக் படிக்க பள்ளிக்கு போவார், மதியம் ஆபீஸ் போவார், மாலை எதவாது டின்னர், லொட்டு லொசுக்குன்னு கிளம்பிடுவார். புது ஊர், புது இடம்... தனிமை... எப்படி இருந்ததுன்னு சொல்ல முடியாது நடுவரே. அந்த படம் பார்த்தப்போ என்னையே பார்த்த மாதிரி இருந்தது எனக்கு. அக்கம் பக்கம் யாரையும் தெரியாது... ஒரு சத்தம் கேட்டா கூட அழுதுருவேன்... அத்தனை பயம். வீட்டில் தனிமை தெரியாம இருக்க தமிழ் பாட்டு சிடியை போட்டு விட்டுடுவேன். அது என்ன பாட்டு போகுதுன்னு கூட காதில் விழாது... ஏதோ சத்தம் வீட்டில் இருக்கனும் அவ்வளவு தான் எனக்கு தேவை. இல்லன்னா வீட்டு நினைவு, பிள்ளைகள் இல்லை, பிரெச்சனைகள் பற்றிய நினைவு... இப்படியே இருக்கும். அவர் வர கொஞ்சம் லேட் ஆனா சண்டை போடுவேன்... தனியா இருக்க என்னை பற்றி யோசிச்சியான்னு.

அப்போ அவரே சொன்ன தீர்வு என்ன தெரியுமா??? வேலை தேடு... எங்கையாவது போய் வந்தா 4 பேரை பார்த்தா மனசுக்கு நிம்மதியா இருக்கும், இப்படி தனியா இருந்தா உன்னால நிம்மதியா இருக்க முடியாது. அவர் சொன்னது உணமை தான்... மாதத்தில் ஒரு முறை லேடீஸ் லன்ச் நடக்கும்... அந்த ஒரு நாள் தான் அங்கே இருந்த வேலை பார்க்காத பெண்கள் எங்களை போல் பலருக்கு விடுதலை, அமைதி, மகிழ்ச்சி எல்லாமே.

மாமியார் இருக்க வீட்டில் வேலைகு போகும் மருமகளாவது கொடுத்து வெச்சவங்க... அவங்க வேலை பார்த்தலும் வெளிய போயிடுறாங்க, மாமியாரோடு இருக்கும் நேரம் குறைவு... தப்பி தவறி வீட்டில் இருக்க மருமகள் கூட இருந்தா மாமியார், மருமகள் சண்டையே பைத்தியமாக்கிரும். அந்த வகையிலும் எதிர் அணி மக்கள் தப்பிச்சவங்க தான்.

உண்மையில் எதாவது ஒரு பொருள் மேல ஆசை பட்டா கூட கணவ்ர் வாங்கி தந்தா தாங்க எங்களூக்கு... 5, 10க்கு கூட கணவர் கையை எதிர் பார்த்து தான் எங்க வாழ்க்கை. ஆனா ஆபீஸ் மக்கள்... விரும்பினதை வாங்கறாங்க. கேட்க முடியாது கணவர், இந்த சின்ன சின்ன செலவெல்லாம். விரும்பினா பிறந்த வீட்டுக்கு கூட பணம் கொடுக்கலாம் (எல்லாராலையும் முடியலன்னாலும் ஒரு சிலராது செய்ய தான் செய்யறாங்க)... ஆனா விட்டில் கணவர் சம்பாத்தியத்தில் வாழும் பெண்கள்... நினைச்சா என்ன, எப்படி பணக்கஷ்டம் என்றாலும் பிறந்த வீட்டுக்கு உதவ முடியாதுங்க. ஏன்னா தன் பணமில்லையே. கணவனுக்கே கஷ்டம் என்றாலும் உதவ முடியாது. அதுவே பெரிய வருத்தம்.

பிள்ளைகளுக்கு உடல் நலமில்லைன்னா கூட வீட்டில் இருக்கும் பெண்கள் தனியா ஹாஸ்பிடல் போக கஷ்டப்படுவாங்க நடுவரே... வெளியே போய் வரும் பெண்கள் அளவுக்கு பலருக்கு தைரியம் இருப்பதில்லை. எல்லாத்துக்கும் கணவரை எதிர் பார்ப்பது பெரிய கொடுமை.

அவங்களூக்கு ஞாயிறு ஒரு நாளாவது வெளியே போக ரெஸ்ட் எடுக்க சான்ஸ் இருக்கு... எங்களுக்கு “எப்பவும் வெளிய சாப்பிடறேன், இன்னைக்காவது வீட்டில் வெரைட்டியா சமை”னு வீட்டில் தான் இருப்பாங்க... ஏன்னா நாங்க வீட்டோட இருக்கோமே, எங்களுக்கு ஓய்வு எதுக்குன்னு ஒரு எண்ணம் ஆண்களூக்கு. கொடுமையை யாரிடம் சொல்ல நடுவரே??? உங்ககிட்ட தான் புலம்ப முடியுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே கஷ்ட்டம், சுமை யாருக்குன்னா கேட்டுருக்கீங்க இல்லையே மன அழுத்தம் யாருக்கு அதிகம்னு தானே
வேலை பழு அதிகம் இருவருக்குமே இருக்கும் நடுவரே அதாவது இல்லத்தரசிகளுக்கும்,வேலைக்கு செல்லும் பெண்களுக்கும்

மன அழுத்தம் முதலில் எங்க ஆரம்பிக்குதுன்னு பாருங்க நடுவரே நிச்சயம் குடும்பத்துலதான் அங்க நடக்கும் ப்ரச்சனையாலதான் ஒருத்தருக்கு மன அழுத்தம் ஏற்ப்பட காரணமா இருக்கும் மூனாவது மனுசங்களால நிச்சயமா நமக்கு உளைச்சல் ஏற்படாது அதாவது ஆபிஸில் உயர் அதிகாரியோ இல்லை கூட வேலை செய்பவர்களாலயோ ஏற்படாது

ஆபிஸ்ல வேலை செய்யலைன்னா இல்லை லேட்டா போனா திட்டுவாங்கதான் ஆனால் அது அன்னியோட மறந்துடும் அப்படியும் இல்லைன்னா மாச கடைசியில சொளையா சம்பள கவரை பாத்ததும் அதெல்லாம் பஞ்சா பறந்துடும்.

இல்லத்தரசிகளின் நிலை அப்படியா சொல்லுங்க என்னதான் மாடா உழைச்சாலும் எப்பவும் கெட்ட பேருதான் எல்லோரிடமும்.
மன அழுத்தம் ஏற்பட இல்லத்தரசிகளுக்கு ஏகப்பட்ட விசயங்கள் இருக்கும் நடுவரே

என்னதான் மந்திரம் போட்டாளோ இப்படி மகனை மயக்கி கையில போட்டுக்கிட்டாளேன்னு ஒரு பக்கம்

யாரையும் கண்ணுக்கு தெரியல பொண்டாட்டிய தங்க தட்டுல வச்சி தாங்குறான்ன்னு இன்னொறு பக்கம்

என்ன சமைக்கிறா வாயில வைக்க முடியலன்னு இன்னொறு பக்கம்

இப்படிப்பட்ட வார்த்தைகள் வசைபாடுகளில் இருந்து தப்பிக்க எங்களுக்கு வழி இல்லையே நடுவரே, வேலைக்கு போனால் கொஞ்ச நேரமாவது தப்பிக்கலாமே இப்பேச்சுகளில் இருந்து.இந்த மாதிரியான வசவுகள் தான் மன அழுத்தத்திற்க்கு காரணமே.

///ஞாயிற்றுக்கிழமை என்னிக்கு வருதுன்னு பார்த்துகிட்டே இருந்து லீவு விட்டதும் காலையில் 8மணி வரைக்கும் படுக்கையில் இருந்து எழுந்துக்க மனம் வராமல் புரண்டுகிட்டே இருக்கரது எவ்லோ சுகம்.9 மணிக்கு காஃபி, 11 மணிக்கு டிபன் , 3 மணிக்கு லன்ச் நடுவிலே சிரு சிரு வீட்டு வேலைகள் மாலை பீச் சினிமா வர 10 மணி ஆகிடும்///

பாருங்க நடுவரே வேலைக்கு போனாலாவது ஞாயிற்றுகிழமை 8 மணி வரை தூக்கம் வேலைக்கு போகும் பெண்களுக்கு, ஆனால் எங்களுக்கு ஞாயிறாவது திங்களாவது எல்லா நாளும் ஒன்றுதான் காலை 6 மணிக்கு எழுந்தா இரவு படுக்கும் வரை வேலைதான் எங்களுக்கு லீவே இல்லை நடுவரே நினைச்சு பார்த்தா அழுகை அழுகையா வருது போங்க :(

வாரத்துல ஒரு நாள் பீச்,சினிமா,8 மணிவரை தூக்கம் என்னா சொகுசு வாழ்க்கை பாருங்க!!

எங்க நிலமைய நினைச்சு பாருங்க நடுவரே வேலைக்கு போகும் கணவரிடம் சினிமாக்கு போகலாமான்னு கேட்டா அவ்ளோதான் நானே வாரத்துல ஒரு நாள் தான் வீட்டுல இருக்கேன் இன்னிக்கும் வெளில போகனுமா அப்படின்னு சொல்லி தட்டிகழிச்சுடுவாங்க இல்லத்தரசிகளுக்கும் பொழுது போக்கு வேனும்னு நினைக்கமாட்டாங்க .

எங்களுக்கெல்லாம் பீச்சாவது,சினிமாவது ம்கூம் எதுவும் இல்லைங்க நாங்களாம் ”அடுப்படியே திருப்பதின்னு” வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கோம் என்பதை புரிஞ்சி தீர்ப்ப நல்லா யோசிச்சு அடுத்த வாரம் சொல்லுங்க இப்பவே சொல்லனும்னு அவசரம் இல்லை :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நடுவரே எதிர் அணியினர் //ஞாயிற்றுக்கிழமை என்னிக்கு வருதுன்னு பார்த்துகிட்டே இருந்து லீவு விட்டதும் காலையில் 8மணி வரைக்கும் படுக்கையில் இருந்து எழுந்துக்க மனம் வராமல் புரண்டுகிட்டே இருக்கரது எவ்லோ சுகம்.9 மணிக்கு காஃபி, 11 மணிக்கு டிபன் , 3 மணிக்கு லன்ச் நடுவிலே சிரு சிரு வீட்டு வேலைகள் மாலை பீச் சினிமா வர 10 மணி ஆகிடும் அப்ரம் தூக்கம்// இவங்க இப்படி சொல்லுறாங்க நாங்க ஞாயிற்று கிழமை வந்தால் அப்பவும் தினமும் எழும் நேரத்திற்கு தான் எழுகிறோம் பசங்க, கணவர் முதல் நாளே சொல்லிறாங்க நாளைக்கு லீவ் அதுனாலே எனக்கு டிபன் அது வேணும் லஞ்ச் இது வேணும் என்று சரி அதற்க்கு அவர்கள் எதாவது மனைவி தான் அம்மா தான் தினமும் சமைக்கிரரே நான் இன்று லீவ் ஒரு நாள் ஹெல்ப் பண்லாம் என்று நாம் தான் எல்லா வேலையும் செய்ய வேண்டும் சரி ஒரு நாள் வெளியே போயி சாப்பிடலாம் என்று கணவரிடம் கேட்டால் இன்று ஒரு நாள் தான் எனக்கு லீவ் அதுனாலே நான் ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லி விடுகிறார் தினமும் காலை எல்லாரும் எழும் முன்பு நாம் எழுந்து கணவருக்கு காலை டிபன் குழந்தைகளுக்கு அவர்கள் கேட்கும் லஞ்ச் ரெடி பண்ணனும் அது ஒரு நாள் டென்ஷன் ல கொஞ்சம் taste கம்மி ஆனாலும் அது அப்படியே வீட்டுக்கு வந்துரும் இன்னைக்கு பொண்ணுக்கு ஸ்கூல் லீவ் husband வீட்டில் இல்லை சரி காலை கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்தேன் ஆனால் என் பசங்க எழுந்துடாங்க அப்புறம் நான் எங்கே தூங்குறது காலைல எழும் போதே இன்னைக்கு டென்ஷன் தான் எல்லா வேலையும் டென்ஷன் ஆகுது வெளியில் போகிறவர்கள் வீட்டில் இருக்கும் டென்ஷன் மறப்பதற்கு வேற வேலை பார்க்கும் போது ஒரு வாய்ப்பு கிடைக்கும் ஆனால் எங்களுக்கு அதை நினைத்து நினைத்து இன்னும் டென்ஷன் ஆகிறது சரி பசங்க படிக்கிறதுல எதாவது தப்பு நடந்தாலும் நீ வீட்டுல சும்மா தானே இருக்கே இதை கூட சரியாய் பார்க்க மாட்டியா என்று கேட்கிறார்கள் இப்போ வரும் சீரியலில் எல்லாம் எங்கே டைம் பாஸ் வருது அதிலும் நம்ம வீட்டில் வரும் problem எவ்ளோ மேல்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ராதாம்மா,

//அன்புக்கும், பெருமைக்கும், மரியாதைக்கும், நகைச்சுவைக்கும் பேர் பெற்ற நடுவருக்கு வணக்கம்....வணக்கம்...வணக்கம்!// அப்பப்பா... எவ்ளோ ஜில்லுனு இருக்கு இந்த வார்த்தைகளை கேக்க. யார்கிட்டயும் சொல்லாதீங்க.. தீர்ப்பு உங்க பக்கம் தர யோசிக்கறேன் ;)

உங்கள், அன்பான விசாரிப்புக்கும்,பிரார்த்தனைக்கும் நன்றி மா.

//மனக் குழப்பம் யாருக்கு?// மன அழுத்தத்தை மாத்தி புரிஞ்சுட்டீங்க.

//நடுவரே....வாதத்தை உங்ககிட்ட இருந்தே ஆரம்பிக்கிறேன்..இப்போ உங்க குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை...ஆனால் நீங்கள் வீட்டில் இருப்பதால் கவனம் எடுத்து அந்தக் குழந்தையை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள முடிகிறது.// அடாடா.. விட மாட்டாங்க போலருக்கே பா.. நான் சொன்னது அத்தனையும் வாபஸ்..வாபஸ்..வாபஸ்

//கணவரும் 'என்னால் லீவ் போட முடியாது' என்று சொல்லும்போது அந்தப் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? வீடா? அலுவலகமா? இரண்டையும் விட முடியாமல் மனக் குழப்பம் ஏற்படுவது அவர்களுக்குதானே?// லூசாங்க அவரு, ஆபிஸ்லயும் வேலை செய்துட்டு, வீட்லயும் வேலை செய்ய..

ராதாம்மா, நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்களின் கஷ்டங்களை நன்கு அறிந்து அவர்கள் சார்பாக வாதிட வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடருங்க உங்கள் வாதங்களை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவரே!! எதிரணி இல்லத்தரசிகள் வீட்ல என்னதான் செய்யலாம்னு இருக்காங்களாம். வீடுன்னா நாலும் இருக்கத்தானே செய்யும் நடுவரே!! இதையே இவங்களால சமாளிக்க முடியலன்னா, குடும்பத்தையும், அலுவலகத்தையும் சேர்த்து சுமக்கிற பெண்களுக்கு பளு அதிகம்தானே!!
ஆசிரியர் பணிக்கு செல்லும் ஒரு பெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள் நடுவரே!! அவர் ஸ்கூலுக்கு போய் பென்ச்ச தேய்ச்சிட்டு உட்கார்ந்திருக்க முடியுமா?
//இப்பலாம் ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ்னு வேலை பார்க்கவங்களுக்கு நிறைய செய்றாங்க கம்பெனியே...// வீட்டுவேலை, கொத்தனார் வேலை, சேல்ஸ்கேர்ள் வேலை, துப்புறவு வேலை, கனரக வாகனங்கள் ஓட்டும் வேலை, இப்படி சாதாரண வேலை செய்யும் பெண்களுக்கு கூட ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ்னு கம்பெனி செய்றாங்களா நடுவரே!!
டாக்டர் தொழில் செய்யும் பெண்களுக்கு எவ்வளவு ரிஸ்க் இருக்கு, காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு எவ்வளவு கடமை இருக்கு, இவங்கெல்லாம் சாதாரணமா தொழிலை பார்த்தாங்கன்னா நாம சந்தோஷமா இருக்க முடியுமா? இல்ல இவங்களுக்கெல்லாம் குடும்பம்தான் இல்லையா? அதையெல்லாம் கவனிக்கமாட்டாங்களா!! அப்ப இவங்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்கும்னு நீங்களே யோசிங்க நடுவரே!!
//கொஞ்சம் காலம் முன்னாடி சினேகா நடித்த படம் ஒன்னு வந்ததே... ஹீரோ பேரு நியாபகம் இல்லை. மன்னிக்கனும். நமக்கும் சினிமாக்கும் ரொம்ப தொலைவு. அதில் சினேகா கடைசியில் பைத்தியம் ஆகும் நிலையில் இருப்பதா டாக்டர் சொல்வார். அப்போ அவரே சொன்ன தீர்வு என்ன தெரியுமா??? வேலை தேடு... எங்கையாவது போய் வந்தா 4 பேரை பார்த்தா மனசுக்கு நிம்மதியா இருக்கும்,// நடுவரே!! அந்த படத்தின் பேர் பிரிவோம் சந்திப்போம். ஹீரோ சேரன். அந்த படத்தில் சினேகா ஏங்குவது உறவுகளுக்குதான். வெளியூரில் அல்லது வெளிநாட்டில் இருக்கும் வசிக்கும் பெண்ணான சினேகாவுக்கு அது கிடக்காததால்தான் டாக்டர் வேலைக்கு போக சொல்வார். உள்ளூரில் குடும்ப உறவுகளோடு வாழும் பெண்களுக்கு வேலைக்கு போவதென்பது ஸ்ட்ரெஸ்தான் நடுவரே!!
//உண்மையில் அந்த சீரியல் பார்ப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்னு அவங்களுக்கு தெரியாது. அது கொடுக்கும் மன அழுத்தம் எவ்வளவுன்னு தெரியாது.// அந்த கொடுமையான சீரியலை ஏன் நடுவரே பார்க்கனும், அந்த நேரத்தில் வீட்டிலேயே ஏதாவது வேலை செய்து பணம் சேர்க்கலாம்தானே!! தொட்டதுக்கெல்லாம் கணவரை எதிர்பார்க்காமல் இருக்கலாம்தானே!!
நடுவரே!! எனக்கு தெரிந்த இரண்டு இல்லத்தரசிகள் பொறுப்பாக குடும்பம் நடத்தும் அழகை சொல்றேன் கொஞ்சம் கேளுங்க!! நடுவரே இதுல நீங்க ஒரு பாயின்ட் கண்டிப்பா நோட் பண்ணனும் ""வேலைக்காரி''.
1.அந்த இல்லத்தரசிக்கு ரெண்டு பசங்க, கணவருக்கு சாதாரண வேலைதான். காலையில் மனைவி எழும்போதே அவரும் எழுந்து குழந்தைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ண ஆரம்பிச்சுடுவார். மனைவி வேலைக்காரியோடு சேர்ந்து சமைக்க ஆரம்பிக்கும் முன் "ஏங்க கொஞ்சம் கடைக்கு போய் காய்கறி வாங்கி வாங்க" என்பார்.
அடுத்தது "கோயிலுக்கு போய்ட்டு வரேன், வர்ற வரைக்கும் குழந்தைகளை பார்த்துக்குங்க" என்பார்
அடுத்து அவரே குழந்தைகளை ஸ்கூல் பஸ் ஏற்றி விடனும் என்பார். அடுத்து அவர் கிளம்பி ரெடியாகி வேலைக்கு போற வழியில் அம்மா வீட்ல விட்டுட்டு போங்க என்பார்.
இதையெல்லாம் செஞ்சிட்டு பாவம் அந்த மனுஷன் வேலைக்கு போய் உட்கார்ந்தா அது, இதுன்னு ஆயிரத்தெட்டு போன் பண்ணுமாம் அந்த அம்மா.
மாலை அவரே பசங்களை கூட்டிட்டு வந்து திரும்ப டியூசன்ல விட்டு அழைச்சிட்டு வரனும்.
அதுமட்டுமில்லாம பக்திங்குற பேர்ல தினம், தினம் கோயிலுக்கு கூட்டிட்டு போன்னு டார்ச்சர் வேறயாம்.
இதனாலேயே வேலையில் சரியா கவனம் செலுத்த முடியாத அவரை கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளாத குறையா வேலைய விட்டு அனுப்பிட்டாங்க நடுவரே!!
அந்தம்மா கிட்ட கேட்டா பொம்பள நானே எப்படி இதெல்லாம் செய்ய முடியும், அவர்தானே செய்யனும்ங்கறார். இந்த அழகுக்கு வேலக்காரி வேற. மாமனார், மாமியாரையும் கூட வெச்சிக்காம அடம் பிடிக்குது. இப்படி பட்ட புரியாத பெண்களை வீட்ல இருக்க உனக்கென்ன தெரியும்னு திட்டினா என்ன தப்பு நடுவரே!!
2.அடுத்த பெண்ணுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை. கணவர் சாஃப்ட்வேர். காலை 8 மணிக்கே கணவர் வேலைக்கு கிளம்பிடுவார். இந்தம்மாவுக்கும் சேர்த்து டீ போட்டு வெச்சிட்டு. இவங்க ஒரு 10, 11 மணிக்குதான் எழுந்திரிப்பாங்க. அதுக்கப்புறம் வேலைகாரிக்கு ஃபோன் பண்ணி வர சொல்லிட்டு, கூடவே அவங்க அம்மாவையும் வர சொல்லிடுவாங்க. குழந்தை எழுந்து பசிக்கு அழும், அதை போட்டு நாலு சாத்து சாத்திட்டு. இந்தம்மா பல் விலக்கி குழந்தைக்கும் டீ கொடுத்துட்டு தானும் குடிக்கும். அதுக்குள்ள அவங்கம்மாவும், வேலைக்காரியும் வந்துட்டா, அவங்கதான் வீட்டையும் குழந்தையயும் பார்த்துப்பாங்க!! இந்தம்மா அப்படியே ஹாயா இருப்பாங்க!! அடிக்கடி ஹோட்டல் போகனும், சினிமா போகனும், ஷாப்பிங் போகனும் இதுதான் இந்த இல்லத்தரசியின் வேலை நடுவரே!!
இந்த மாதிரி இல்லத்தரசிகளை பார்த்தா வேலைக்கு போற பெண்களுக்கு பத்திக்கிட்டு வராதா நடுவரே!! வேலைக்கு போறவங்களால இப்படியெல்லாம் இருக்க முடியுமா நடுவரே!!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

கவிதா,

//இல்லத்தரசினா உஸ்னு உக்காரலாம்,மல்லாக்க படுக்கலாம் ரிலாக்ஸா இருக்கலாம் நாம தான் அப்படி இல்லையே// எதிரணி நோட் திஸ் பாயிண்ட்.

//நம்ம லஞ்ச் பாக்ஸ தூக்கிக்கிட்டு லொக்கு லொக்குனு ரெக்கைய கட்டிக்கிட்டு பறக்கனும் // ஓடுறதுல மூச்சு தான் வாங்கும்னு கேள்விபட்டிருக்கேன். இருமல் கூட வருமா? லொக்..லொக்குன்னு..

//அதுவும் கொஞ்சம் அழகா என்ன மாதிரி பொறந்துட்டா அம்புட்டுதான் கல்யாணம் ஆகிருச்சா இல்லையா//கவிதா நான் உங்களை பார்க்கலேங்கறதுக்காக இப்பிடியெல்லாம் அபாண்டமா பேசப்படாது ;)

//நான் பார்த்த வேலைகூட அப்படித்தான் போங்க ஒரு ஹாஸ்பிட்டல்ல 1 வருஷம் ரிஷப்ஸனிஸ்டா இருந்தேன் என்ன இ இ இ இ இ நு பல்ல காமிச்சுக்கிடே இருக்கனும்// கோல்கேட் விளம்பரமா?

//அவங்கல ஆபிஸுக்கு அனுப்பிட்டு அப்படியே விட்டத்த பாத்துக்கிட்டு மல்லாக்க படுத்து தூங்குனா ஐயோ எம்புட்டு சுகம் டென்ஷனே இருக்காது போங்க....// அப்ப பெரும்பாலும் வீடுகள்ல கணவன்மார்கள் தான் சமைச்சு வச்சுட்டு போறாங்களா? அவிக கிளம்பினதும் இவிக விட்டத்தை பார்த்துட்டு படுத்திருப்பாய்க..புரிஞ்சுட்டுது.. எதிரணி கேட்டுகிட்டீங்களா? நீங்க சும்மாவாம்...

//நடுவரே உங்க 2 பசங்களுக்கு முடியல உடம்பு சுகமில்லையினு சொன்னிங்களே நீங்க வேலைக்கு போனா பக்கத்துல இருந்து பார்க்க முடியுமா முடியாதுல்ல அப்புடியே வேலைக்கு போனாலுமுங்கனால நிம்மதியா தான் வேலைய செய்ய முடியுமா?// அய்யோடா சாமியோவ்... இன்னும் எத்தன பேர் இருக்கீங்க.. இதையே கேக்க.. அப்புறம் நடுவர் ஒப்பாரி வச்சு அலுதுடுவேன்.. பார்க்க சகிக்காது..அங்காங்க்க்க்க்...;(

இந்த கைப்புள்ள தொல்லை தாங்கலப்பா.. ஆவன்னா லெப் ஹேண்ட், ரை ஹேண்டுன்னு ஒரே ரவுசா போச்சு. எதிரணி நீங்களாச்சும் வந்து என்ன ஏதுன்னு கேக்கப்படாதா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்