பட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?

அன்புகோழீஸ், என்ன வீக் எண்ட் அதுவுமா பறக்குறது, நடக்குறது, ஓடுறது, நீந்துறது எல்லாத்தையும் வறுத்து பொரிச்சு வயத்துக்கு அனுப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா? உங்களை யார் நிம்மதியா விட்டா? இதோ வந்துட்டேன் பட்டிமன்ற தலைப்போட..

நம் அறுசுவையின் அன்புத்தோழி அன்பரசி அவர்களின் தலைப்பாகிய

*************************************************************
அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா ?
வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
*************************************************************

சிறு மாறுதல் செய்து இங்கே தந்துள்ளேன். அன்பு தலைப்புக்கு நன்றி பா :)

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

என்ன தலைப்பை பார்த்துட்டீங்கல, இன்னும் என்ன வேடிக்கை? மளமளன்னு உங்க அழுத்தம், எதிர் வீட்டு அழுத்தம், பக்கத்து வீட்டு அழுத்தம் எல்லாத்தையும் போட்டு இங்கே அழுத்த வாங்க. எல்லாத்தையும் வாங்கி ஒரு பெரிய சாக்கு பைல போட்டு அழுத்தி வைக்க நான் இங்கே காத்திருக்கேன். வாங்க கோழிகளே!! வாங்க !! வாங்க !!

ப்ரியா,

//பார்த்தா எல்லாரும் குளிச்சிட்டு தலைவிரித்துபோட்டு தான் வருவங அப்புரம் மாமியார் கதை பக்கத்துவீட்டுகத ஆபிஸ் நடந்ததுன்னு பேசி தலவாரி மேக்கப் போடுவாங்க// நல்லவேலை ட்ரெயின்லயே தங்கி,தூங்கி, கிளம்பாம போனாங்களே அதுவரை சந்தோஷம்.

// எங்க அழுத்தம் எல்லாம் பிள்ளகளின் முதுகில் தான் இரங்கும் நடுவரே// பாவம்ங்க பிள்ளைங்க. அதுவும் அழுத்தத்தை பொறுத்து அடியும் மாறுபடும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவரே, நான் அனைத்து வாதங்களையும் படிக்கவில்லை. ஏதோ படித்தவரை பதிவிடுகிறேன்

இப்போ பெண்கள் முக்கால்வாசி பேர் பார்ப்பது IT job தான். இங்கே எவ்வளவு பிரச்சனை இருக்கும் தெரியுமா ? Monthly target முடிக்கணும், மாலை கிளம்பும் போது கூட வேலை ஏதாவது சொன்னா இருந்து முடித்து விட்டு தான் போக முடியும். நாங்க வீட்டுக்கு கிளம்ப இரவாகி விடும். இதெல்லாம் எதிரணி கண்களுக்கு தெரியாது.

அவர்கள் கூறுவது - //சம்பலம் இல்லாம வேலை செய்ய மாமியா// எந்த காலத்திலும் மாமியார் மருமகளுக்கு நல்லா முழு மனதோடு உதவ மாட்டங்க. ஏதாவது குட்டி கலாட்டா பண்ணிகிட்டே தான் இருப்பாங்க. வேலை விட்டு தாமதமா வந்தாலும் வீட்டு வேலைகளையும் நாங்கள் தான் செய்ய வேண்டும்.

//பெற்ற பிள்ளையை கூட பார்த்துக்க மாட்டாங்க... அடுத்தவங்களை பார்த்துக்க சொல்லி விட்டுட்டு கிளம்பிடுவாங்க// இது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பெத்த பிள்ளையை கூட எங்களால் பக்கத்திலிருந்து பார்த்துக்க முடியலையேன்னு வேலைக்கு போற ஒவ்வொரு பொண்ணும் எவ்வளவு கஷ்ட பாடுவாங்கன்னு கொஞ்சமாவது யோசிங்க.

//தினமும் லன்ச் 1 மணி நேரம்னா இடையே வெட்டியா போய் டீ குடிச்சுட்டு பஜ்ஜி சொஜ்ஜி சமோசான்னு தின்னுட்டு எவன் தலையிலயாவது மிளகாய் அரைச்சுட்டு (பில்ல தான் சொன்னேன் நடுவரே) கெக்க புக்கன்னு சிரிச்சுட்டு...// இப்போவெல்லாம் ஆபீஸ்ல இப்படி யாரும் வேலை பார்ப்பது இல்லை. வெளிய வேணும்னா 1 மணி நேரம் லஞ்ச்ன்னு சொல்லிபாங்க ஆனா உண்மை அது இல்ல. 1 0 நிமிஷத்துல அவதி அவதியா சாப்டிட்டு ஓடனும். அப்போதான் மாலை வீடு இல்லைனா இரவுதான்.

//வீட்டில் பையன் இல்லை.. பெண்கள் தான் எனும் போது, அப்பா அம்மாக்கு உதவலாம், தங்கைக்கு எதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்தால், அதற்கு கணவரை எதிர்ப்பார்க்கும் போது ஏற்படும் மன அழுத்தத்தை விட ஆயிரம் மடங்கு மன அழுத்தம் அலுவலில் ஏற்பட்டாலும் ஒரு பெண்ணானவள் சமாளித்துவிடுவாள்.// கணவர்கள் எந்த நேரத்திலேயும் மனைவி பிறந்த வீட்டிற்க்கு செய்வதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நீங்களாவது வீட்டில் இருக்கிறீர்கள் அதனால் உங்களிடம் ஏதும் கேட்க மாட்டார்கள். வேலைக்கு போயும் தாய், தந்தைக்கு ஏதும் செய்ய முடியாமல் தவிப்போர் எத்தினை பேர் தெரியுமா? அது மிக கொடுமை. சாதாரணம் இல்ல.

வீட்டில் இருக்கும் நீங்கள் செய்வது என்ன? 7 மணிக்கு கணவர் ஆபீஸ் போகணும்ன்னா நீங்க 5 மணிக்கெல்லாம் எழுந்து வேலை முடித்து விடுவீர்கள். 7 மணிக்கு அவர் சென்ற பின் என்ன வேலை ? குழந்தையை பார்ப்பீர்கள் என்று பொய் சொல்ல வேண்டாம். 24 மணி நேரமும் அவர்களை பார்க்க போவது இல்லை. அவர்களை ஒரு பக்கம் விளையாட விட்டு விட்டு டிவி முன் அமர்வீர்கள். உங்களுக்கென்றே காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இருக்கிறது சீரியல்ஸ். அதை பார்த்து விட்டு தேவையில்லாத மன அழுத்தத்தை நீங்களே உருவாக்கி கொண்டு எங்களுக்கு தான் மன அழுத்தம் அதிகம் என்று கிங்காங் மாதிரி அடித்துக்கொள்ள கூடாது.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டு மன அழுத்தம் மட்டுமே. ஆனால் வேலைக்கு போகும் பெண்களுக்கு வீட்டு அழுத்தம் மட்டுமல்ல வேலை பார்க்கும் இடத்திலேயும் மன அழுத்தம்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நடுவர் அவர்களே!
நான் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தான் மன அழுத்தம் அதிகம் என்று வாதிட வந்துள்ளேன்..
வேலைக்கு செல்லும் பெண்கள் தான் ஆபிஸ்லயும் வேலை பார்த்து வீட்டு வேலையும் பார்த்து வெளி வேலையும் பார்க்க வேண்டியிருக்கு.. சினிமாவிலும், டிவியிலும் வேலைக்கு போகின்ற மனைவி, கணவனை வேலை வாங்குவது போல் "காமெடி"என்ற பெயரில் கான்பிக்கிறாங்க.. ஆனால் நிஜத்தில் அனைத்து ஆண்களும்(சிலரை தவிர) யாருமே வீட்டு வேலையில் கொஞ்சம் கூட உதவி செய்வதில்லை என்பதே உண்மை..
அவர்கள் சாப்பிட்ட தட்டை மட்டும் அவர்களே கழுவி வைத்தாலே 'என்ன என் மகனை கொடுமைபடுத்துறையா' என்று கேட்கும் மாமியார்களே அதிகம்..
ஆபிஸ்ல எல்லா வேலையும் முடித்து ஏழு மணிக்கு வந்தாலே நிம்மதி என்பது போல் நினைக்க தோன்றும்.. அதன் பின் பதினோரு மணி வரை வீட்டு வேலை.. அப்புறம் அப்பாடா என்று கண்ணை மூடி திறந்தால் காலை ஐந்து மணி!! நிம்மதியான தூக்கம் என்பது அவர்களுக்கு கிடையாது.. அதுவும் லீவ் வந்தால் அதனை விட அதிக வேலை வீட்டில் காத்துகொண்டு இருக்கும்..
இல்லத்தரசிகளுக்கு எல்லா வேலையும் முடித்து அவர்களுக்கு ஓய்வெடுக்க நிச்சயம் குறைந்தது ஒரு மூன்று மணி நேரமாவது கிடைக்கும்.. அந்த நேரத்தில் அவர்கள் பிரச்சனைக்கான காரணங்களை ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.. மன அழுத்தமும் குறையும்..
ஆனால் வேலைக்கு செல்பவர்களுக்கு நிம்மதியாக யோசிக்க கொஞ்சம் கூட டைம் கிடைப்பதில்லை என்பதே உண்மை..
வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையும் பார்த்து, வீட்டிலும் அனைவரையும் நன்றாக கவனித்து, அதிலேயே அவர்கள் கவனம் போய்விடுகிறது.. இதில் எங்கே அவர்கள் தங்கள் உடல்நலனை பார்க்க, ஏதும் உடம்புக்கு வந்தாலும் லீவ் போடலாம் தான் ஆனாலும் எத்தனை நாள்?? திரும்பவும் தொடர்கதை தான்...
டென்சன்.. டென்ஷன்..டென்ஷன்.. தான் வேலைக்கு செல்லும் பெண்களும் வாழ்க்கை...
இதை எப்படி மாற்றுவது??? முடியாது... இது தான் அவர்களின் நிலைமை..
எனவே நடுவர் அவர்களே!! வேலைக்கு செல்லும் பெண்கள் தான் அதிகமான மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர் என்று என்னுடைய கருத்தை முன்வைக்கிறேன்..

"எல்லாம் நன்மைக்கே"

நடுவரே... இதென்ன அநியாயம்?? 7 மணிக்கு அவர் கிளம்பினா வேற வேலையே இல்லாமலா நாங்க நேரத்துக்கு சாப்பிடாம கெடக்கோம்??? எங்களூகென்ன மண்டையில் கோலாரா???

அவர் கிளம்பினதும் நாங்க டிவி முன் உட்கார்ந்தா வீடு தானே சுத்தம் பண்ணிக்கும், துணி தானே துவைக்கும், தானே காய போடும், தானே இஸ்திரி போடும், பாத்திரமெல்லாம் கழுவி தானே அடுக்கிடும், மதிய உணவு தானா தயார் ஆயிடும்... இதென்ன மாயாஜால படமா?!!

நடுவரே... குழந்தைகளை பார்ப்பது அத்தனை சுலபமான வேலையாமா??? விட்டுட்டு வேலைக்கு போறது தான் கஷ்டமா??? அப்படின்னா சனி ஞாயிறு கூட இவங்க பிள்ளையை பார்க்குறதே இல்லை போலும் :)

நடுவரே... சாப்பாட்டில் கை வைப்போம்... இவங்க ஆய் போய் வைப்பாங்க... போட்ட சாப்பாட்டை அப்படியே வெச்சுட்டு அவங்களை சுத்தம் பண்ண ஓடனும். அவங்களை சுத்தம் பண்ணி அவங்க நாஸ்தி பண்ண இடத்தை சுத்தம் பண்ணி, வந்து திரும்ப தட்டை எடுக்குறதுகுள்ள அவங்க பசியில் கத்த ஆரம்பிச்சுடுவாங்க... ஒரு முறை போனா உடனே பசிசுடுமே அவங்களுக்கு. உடனே மீண்டும் தட்டை வெச்சுட்டு அவங்களுக்கு பால், சாப்பாடு, கஞ்சி தயார் பண்ண ஓடனும்... அதை ஆற வெச்சு பதமா கெஞ்சி கொஞ்சி ஊட்டி முடிச்சுட்டு திரும்ப வரும் முன் அடுத்த வேலை உணவுக்கு நேரம் ஆயிருக்கும். கடைசியில் தட்டில் போட்டு காஞ்சி போன உணவை பசி தாங்காம அள்ளி உள்ள போடனும், இல்ல தூக்கி போட்டுட்டு அடுத்த உணவை சமைக்க போகனும். இது தான் பிள்ளைகளை பார்க்கும் பொழப்பு.

இப்படி பிள்ளைகள் வீட்டில் இருந்தால் கூட பரவாயில்லை, பிசியா இருப்பது நல்லா இருக்கு... சாப்பாடு கூட வேண்டாம் எங்களுக்கு. அவர்கள் பள்ளிக்கு சென்ற பின் இருக்கும் தனிமை... அதை விட மோசம். நாங்க எங்களூக்கு உட்கார்ந்து ரூம் போட்டு யோசிக்க நேரம் வேணாம்னு தான் கெஞ்சுறோம் நடுவரே.... ஓய்வு ஓய்வுன்னு எதிர் அணி சொல்லும் அந்த தனிமையான நேரம் தான் எங்களை கொல்லுது. உங்களை போல் வெளி உலகை காண, பழக, பேச எங்களுக்கு மனம் துடிக்கிறது... எந்த நேரமும் உம்முன்னு சமைப்பதும், டிவி, இண்டெர்னெட் என இருப்பதும் எங்கள் மன நிலையை மாற்றி விடுகிறது.

எதிர் அணி சொல்லும் டென்ஷன் உண்மை என்றால் கொஞ்ச நாள் வேலையை விட்டுட்டு இருக்க சொல்லுங்க நடுவரே... யாரும் படிச்ச படிப்பு வீனா போனாலும் பரவாயில்லைன்னு வீட்டில் பாத்திரம் கழுவறாங்களான்னு பார்க்கலாம்... நாங்க நொந்து போய் இருக்கோம் நடுவரே... படிச்சுட்டு வேலைக்கு போக முடியாத கட்டாயம், சூழல் காரணமா படிச்சதை தூக்கி அடுப்புல போட்டுட்டு உட்கார்ந்திருக்கோம். எங்களை பெத்தவங்க எங்களூக்காக இத்தனை வருஷம் படிப்புக்கு பண்ண செலவும் கூட வீணா போன வருத்தம் எங்களுக்கு. எங்க சொந்த காலில் நிக்க முடியலயே என்ற ஆதங்கம் எங்களுக்கு.

நடுவரே... எதிர் அணியை மனசாட்சியோட சொல்ல சொல்லுங்க... அவங்க எல்லாம் விருப்பம் இல்லாம கட்டாயத்தால் வேலைக்கு போறாங்கன்னு... ஆனா இல்லத்தரசிகளா இருக்க பலர் கட்டாயத்தால் தான் இருக்காங்க.. வெகு சிலரே எனக்கு வீட்டில் இருக்க பிடிக்கும் என்பார்கள். உண்மையில் வேலைக்கு போகும் பலரால் வேலையை விட்டுட்டு இருக்கவே முடியாது நடுவரே. அனுபவத்தால் சொல்றேன், நம்பி தான் ஆகனும்.

//இதில் எங்கே அவர்கள் தங்கள் உடல்நலனை பார்க்க, ஏதும் உடம்புக்கு வந்தாலும் லீவ் போடலாம் தான் ஆனாலும் எத்தனை நாள்??// - அட நாங்களாம் உடம்பில் பிரெச்சனைன்னு சொன்னா காது கொடுத்து கேட்க வீட்டில் ஆளில்லைன்னு சொல்றோம்... எல்லாரும் காணாம போனா இரவு தானே திரும்ப வராங்க... நடுவில் வீட்டில் எங்களுக்கு என்ன ஆனாலும் பார்க்க ஆளில்லை.

//அவர்கள் சாப்பிட்ட தட்டை மட்டும் அவர்களே கழுவி வைத்தாலே// - எத்தனை சுலபமா கழுவி வைப்பதை பற்றி சொல்லிட்டாங்க நடுவரே... நாங்க இங்க சாப்பாட்டு தட்டை கழுவ போட்டாலே பெருசுன்னு இருக்கோம். குடிக்க தண்ணி கூட நம்ம சாப்பாட்டை வெச்சுட்டு போய் நடுவில் கொண்டு வந்து தரனும்.

நடுவரே... எனக்கு தெரிந்த ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர். அப்போது அவர் இல்லத்தரசி. தனிமை அவரை மிகவும் பயம்காட்டியதில் மன நோய்க்கு ஆளானவர். இது கதை இல்ல, சொந்த அனுபவம், கண் முன் அவர் நிலையை கண்டதால் சொல்கிறேன். அவர் பிள்ளையை அவரிடமே கொடுக்க முடியாத நிலையில் இருந்தார். இன்று மருத்துவம் பல பார்த்த பின் அவர் கணவர் செய்த ஒரே விஷயம்... வேலைக்கு அனுப்பியது தான். இப்போ நல்லா இருக்காங்க. லீவ்ன்னா கூட எதாவது வேலையை செய்ய கிளம்பிடுவார்... வெளி ஊரா இருந்தாலும் சரி. காரணம் கணவர் பிள்ளை வீட்டில் இருப்பது குறைவு, பெரும் மாநகரில் தனிமை கூடாதுன்னு அவரும் ஏதும் சொல்வதில்லை.

ஒரு ஆணுக்கே பெண் வேலைக்கு சென்று வந்தால் நல்லது, பாவம் தனியாக தவிக்கிறார் என்பது புரிகிறது... ஆனால் இங்கே பல பெண்கள் நாங்களாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம், உங்களை போல் வெட்டியா வீட்டில் டிவி பார்க்கலன்னு சொல்லிக்கறாங்க. நடுவரே... இனி எதிர் அணியை வேலையை விட்டுட்டு வெட்டியா டிவி பார்க்க சொல்லுங்க... நாங்க போறோம் வேலைக்கு, எங்களூக்கு இந்த அழுத்தத்தில் இருந்து விடுதலை வேண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே இல்லத்தரசிகள்னா என்னா நக்கல் பாருங்க எல்லாருக்கும். எல்லாத்தையும் அனுப்பிட்டு உட்கார்ந்து டிவி பார்க்க வேண்டியதுதானேங்கறாங்க. டிவி பார்க்கறது ஒரு நாளுக்கு ஒருமணிநேரமா இருந்தாதான் அதுக்கு பேரு ரிலாக்சேஷன். இல்லேன்னா அதுக்கு பேரு கொடுமை நடுவரே!

இல்லத்தரசிகள் இருக்கும் வீட்டில் எப்போதும் டிவி ஓடிக் கொண்டிருக்கும் என்பது உண்மைதான். ஆனா அதுக்கு அர்த்தம் எல்லாரும் விரும்பி கால் மேல கால் போட்டு உட்கார்ந்து ரசிக்கறோம்னு அர்த்தம் இல்லை. வீட்டில் யாருமில்லா தனிமையை போக்க, அந்த மயான அமைதியை விரட்ட, பயத்தைப் போக்க கண்டு பிடித்த உபாயம் அவ்வளவுதான் அது பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கும் அவ்வளவுதான்.

தனிமைச்சிறை கேள்வி பட்டிருக்கீங்களா?! ஒருவரை அதிகமா தண்டிக்கணும்னு நினைச்சா அவரை யாரும் இல்லா அறையில் ஒரே ஒருவாரம் வைத்திருந்தால் போதும் பைத்தியமாகி விடுவார். இல்லத்தரசிகள் தினம் தினம் தனிமைச்சிறையில் வாடுகிறார்கள். மன அழுத்தம் இருக்குமா இருக்காதா?

யார்கிட்டயும் போய் கை கட்டி வாய் பொத்தி நிற்காம வீட்டுல இருந்தே சம்பாதி அப்படீங்கறாங்க எதிரணியினர். அதுல கொஞ்சமா சறுக்கி நஷ்டம் வந்திடுச்சுன்னு வைங்க உள்ள நிம்மதியும் போயிடும். உன்னை யாரு சம்பாதிக்கலன்னு அழுதா இப்படி நஷ்டப்படுத்தி வச்சிருக்கியேன்னு நல்லா டோஸ் வாங்கலாம். ஆனா லாபமா சம்பாதிச்சா சந்தோஷபட்டு ஒரு பாராட்டு கிடைக்கும்னு நினைக்கறீங்க. அதுவும் கிடையாது. சின்ன சின்ன அங்கீகாரங்களுக்கு ஏங்குவதுதான் மனித மனம். ஆனால் இல்லத்தரசிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்ன தெரியுமா? சும்மா காலாட்டிக்கிட்டு இருக்காங்க வெட்டியா இருக்காங்க இதுதான் :(

நடுவரே பல நாட்களில் நான் வாய் திறந்து பேசும் வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். மவுன விரதம்லாம் இருக்கணும்னு அவசியமே இல்லை. பல நாட்கள் மவுன விரதம்தான் :(. ஒருநாள் இருந்தா மவுனவிரதம் பலநால் இருந்தா அதுக்குபேர் மன அழுத்தம் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே... எங்க அணி தோழி சொன்ன தனிமை சிறையை விட எங்க நிலையை உங்களுக்கு சொல்ல வேறு வார்த்தை தேவை இல்லை. இப்படியே என்நேரமும் டிவி பார்த்துகிட்டு வெட்டியா இருக்கோம்னு பெண்களே எங்களை சொல்லி சொல்லி தான் இந்த வாழ்க்கையில் இருந்து எங்களுக்கு விடுதலை என்ற ஒன்றை பற்றி ஆண்களும் சிந்திப்பதில்லை. உண்மையில் வேலைக்கு போறவங்களாம் பெருசா சாதிக்கல... அவங்க அவங்க வாழ்க்கையை அவஙக் விருப்பம் போல வாழறாங்க... நாங்க எல்லாத்தையும் விட்டு கொடுத்துட்டு, எங்க உறிமைகளும் பரிக்கப்பட்டு வாழறோம்.

வெளிய போய் வர பெண்களுக்கு நண்பர்கள் என சிலர் உண்டு. அங்கே அவர்களிடம் பேச பிரெச்சனைகளை சொல்ல மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள என வழி இருக்கு. ஆனா வீட்டில் இருக்கும் எங்களூக்கு தோழி என சொல்ல ஒரு ஆளில்லை. எங்களோடு நேரம் செலவு செய்ய யாருமில்லை. நட்பு என்ற ஒன்றை வீட்டில் இருக்கும் பெண்கள் தொலைத்து தான் விடுகிறார்கள். வரும் உறவுகள், நட்பு எல்லாம் கணவர் வழியிலேயே இருக்கும், நமக்குன்னு ஒன்னு இருக்காது. நம்ம நட்பை வீட்டுக்கு அழைக்க கூட நமக்கு உறிமை இல்லை. எங்கே கிடைக்கும் மகிழ்ச்சி, நிம்மதி??? தொலைத்தவருக்கே தெரியும் தொலைந்ததின் மதிப்பு.... எட்டி நின்று நகைப்பவருக்கு எப்படி புரியும்???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே!!
எதிரணியினர் சொல்கிறார்கள், வீட்டில் தனிமை சிறை என்று! உங்களை யார் வீட்டில் அடைத்து வைத்து இருக்கிறார்கள்.. அவர்களாகவே தங்களுக்கு வீடு தான் நமக்கு சிறை அதை விட்டு வெளியே வரகூடாது என்று நினைத்து கொண்டு இருக்குறார்கள்..
வீட்டை விட்டு வெளியே வாருங்கள்.. குழந்தைகளுடன் வாக்கிங் போங்க.. கடைகளுக்கு போங்க.. இன்னும் எவ்வளவோ இருக்கு.. ஆனா இதை செய்யாமல் வீட்டு வேலை பார்த்து முடிந்தவுடன் சுவரை வெறித்து வெறித்து பார்ப்பது என்று தங்களுக்குள்ளேயே ஒரு சிறையை போட்டு கொள்கிறார்கள்..வெளியே வராமலே அய்யோ தனிமை கொடுமை என்று தாங்களாகவே தான் ஒரு வட்டம் போட்டுக்குறாங்க..
ஆனால் வேலை செல்லும் பெண்களுக்கு? அவர்கள் வெளிச்சத்தை பார்ப்பது காலையில் கூட்ட நெரிசலில் அரக்க பறக்க என்று ஓடும் போது மட்டுமே.. எத்தனை பேர் நன்றாக சாப்பிட்டு போகிறார்கள்.. அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.. நிறைய பேர் பட்டினியாக தான் போவாங்க.. இப்படி சாப்பிடாமல் போய் டென்ஷனில் மயங்கி விழுந்தவர்களையும் பார்த்து இருக்கிறேன்..
எதிரணியினர் குழந்தைகளை பார்துக்குறதே கிடையாது என்று சொல்கிறார்கள்.. வேலைக்கும் போய் குழந்தையும் பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க.. எல்லோரும் ஜாலியாக பொழுதை கழிக்கவா வேலைக்கு போகிறார்கள்?? நிச்சயம் இல்லை.. தங்களுடைய குடும்பம் நல்லா இருக்க வேண்டுமென்று தான் கஷ்டப்படுகிறார்கள்.
வேலைக்கு போகும் பெண்கள் காலையில் போகும் போதும் மன இறுக்கத்துடன் தான் போவார்கள், அதை நீங்களே பார்த்திருப்பீங்க.. அதே மன நிலையுடன் வேலை பார்த்து, வீட்டிற்கு திரும்பும் போது கூட வீட்டில் என்னென்ன வேலை பாக்கணும், என்ன சமைக்கணும் என்று தான் பேசிக்கொண்டு வருவார்கள்..வீட்டிற்கு வந்து அனைத்து வேலையும் முடிந்து!! உட்காரும் போது தான் தெரியும் இரண்டு கால், கை, முதுகு, கழுத்து என்று வலி பின்னி எடுக்கும்.. அதையும் பொருட்படுத்தாமல் அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும்.
இல்லத்தரசிகளுக்கு ஏதும் உடம்புக்கு முடியலை என்றால் யார்கிட்ட சொல்வோம்? என்று கேட்கிறார்கள்..
அப்போ வேலைக்கு செல்லும் பெண்கள் யார்கிட்ட சொல்வாங்க? அதையும் அவங்க தாங்க பார்த்துப்பாங்க.. முடியலேன்னா வேற என்ன? டாக்டர்கிட்ட போவோம்.. அன்றாட வேலைகளை வேலைக்கு செல்லும் பெண்களும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க..

"எல்லாம் நன்மைக்கே"

எதிர் அணியாவது எங்களுக்கு 7 மணிக்கு மேல வேலையே இல்லை, வெட்டியா டிவி பார்க்கறோம்னு சொன்னாங்க... நாங்க அப்படிலாம் அவங்க உழைப்பை குறை சொல்லல... என்ன வேலையா இருந்தாலும் மனசுக்கு நிம்மதியா இருக்கு உங்களுக்கு, எங்களுக்கு அது இல்லைன்னு தான் சொல்றோம்.

எங்க நடுவரே வெளிய போக தினமும்??? சொல்லுங்க... இந்த மாலத்தீவில் ஒரு பார்க் கூட கிடையாது... எப்ப பார்த்தாலும் பீச்சை போய் பார்த்துட்டு உட்காரவா??? அதுக்கும் 4 கிலோமீட்டர் போய் வர வேணாமா??? தனியா நடந்து போறது சேஃப் இல்ல... தினம் கார் எடுத்துட்டு போனா விட்டுருவாங்களா ஆண்கள்??? இல்ல தினமும் விண்டோ ஷாப்பிங் போக முடியுமா??? கடைகாரனே உதைப்பான்... இது அப்பப்ப வரும், ஒன்னும் வாங்காதுன்னு... இல்ல போகும்போதெல்லாம் எதாவது வாங்கிட்டு தான் வர முடியுமா??? நடக்காத விஷயங்கள் நடுவரே... வெளிய இருந்து சொல்வது சுலபம்... செய்வது கடினம்.

வேலைக்கும் போகும் எல்லா பெண்களும் கட்டாயத்தில் போகல நடுவரே... பலரும் மாமியாரிடம் இருந்து தப்பிக்க, தன் படிப்பை விணாக்காம இருக்க, தன் சொந்த காலில் நிக்க ஆசைபட்டு இப்படி தான் போறாங்க. நல்லா கவனிங்க நடுவரே... நான் எல்லாரையும் சொல்லல, இப்படி போறவங்களும் இருக்காங்கன்னு தான் சொல்றேன். வீட்டில் இருந்து சமைச்சு போட்டு எல்லாம் பார்க்கும் எங்களை இவங்க வெட்டின்னு சொல்ற மாதிரி நாங்க யாரையும் சொல்லல.

இங்கன்னு இல்ல நடுவரே... பொதுவாவே பெண்கள் படிச்சுட்டோ, படிக்காமலோ வீட்டில் இருந்தா சுத்தி இருக்க வேலைக்கு போகும் பெண்கள் கேட்கும் முதல் கேள்வி... “எப்படி இப்படி எப்பவும் வீட்டில் சும்மா இருக்கீங்க??? போரடிக்காதா??? என்னால ஒரு நாள் கூட இப்படி இருக்க முடியாது”. என்னையே ஒருவர் கேட்டிருக்காங்க... அப்படியே ஒன்னு அப்பலாமான்னு வந்தது. என்ன பந்தா வேண்டி கெடக்கு??? அவங்க அவங்க கொடுமை அவங்க அவங்களுக்கு... இப்படிலாம் கேட்டு வெச்சா அப்பறம் நாங்க புலம்பிட்டு மனசு வருந்தாம ஜாலியா “நோ நோ எனக்கு இப்படி வெட்டியா டிவி பார்த்து தூங்க தான் பிடிக்கும்”னு சிரிக்கவா முடியும்??? அடுத்தவரை மட்டம் தட்டும் சுபாவம் பலருக்கும் இருக்கு... அதில் மாட்டும் முதல் ஆட்கள் இந்த வீட்டில் உள்ள பெண்கள் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//உங்களை யார் வீட்டில் அடைத்து வைத்து இருக்கிறார்கள்.. அவர்களாகவே தங்களுக்கு வீடு தான் நமக்கு சிறை அதை விட்டு வெளியே வரகூடாது என்று நினைத்து கொண்டு இருக்குறார்கள்..//

அடக்கொடுமையே! நாங்க என்ன விரும்பியா வீட்டுக்குள்ளாறவே உட்கார்ந்துக்கிட்டு இருக்கோம். அப்படி விரும்பி ஒரு விஷயத்தை செய்தால் எங்களுக்கு அது சந்தோஷத்தை இல்ல கொடுக்கணும். மாறாக மன அழுத்தத்தைக் கொடுக்குதுன்னா நாங்க அதை விரும்பலைன்னு அர்த்தம்.

தினம் தினம் எங்க போக சொல்றாங்க நடுவரே! இருக்குறதே ஒரு குட்டி தீவில். அதுல எங்கன்னு போக :(. அப்படியே போனாலும் எதிரணி மாதிரியான ஆட்கள் "பாவம் புருஷன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறான் இது ஊரை சுத்தி எல்லாத்தையும் அழிக்குது கஷ்டப்பட்டு சம்பாதிச்சாத்தானே அருமை தெரியும்" ன்னு நொட்டை சொல்லுவாங்க நடுவரே. அவங்க சொல்லுவதை எல்லாம் மனசுல எடுத்துக்கலாமான்னு இதுக்கும் காரணத்தை சொல்லிட்டு வருவாங்க எதிரணியினர். நடுவரே நாங்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் ஆசாபாசங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் உள்ளாகுபவர்கள். மகான்கள் இல்லை.

எங்க அணித் தோழி ஏற்கெனவே சொல்லிட்டாங்க இருந்தாலும் சொல்றேன். வேலைக்குப் போகும் பெண்கள் இல்லத்தரசிகளைப் பார்த்து பொதுவா கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம கேள்வி கேட்பாங்க "எப்படீங்க நாள் பூரா வீட்டுல இருக்கீங்க என்னால எல்லாம் ஒரு நாள் கூட இருக்க முடியாது" அப்படீம்பாங்க. இதுக்கு பேர்தான் எரியற கொள்ளியில எண்ணெயை ஊத்தறதுன்னு சொல்லுவாங்க. அப்படியே ஒன்னு விடலாம்னு தோணும் பாருங்க. அப்படீல்லாம் யாரும் கேட்க மாட்டாங்கன்னு எதிரையினர் சொல்ல முடியாது நடுவரே! ஏன்னா இந்த கேள்வியை பல விதங்களில் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதுவும் குழந்தையும் இல்லைன்னு வச்சுக்கோங்க எங்களை எல்லாம் சுத்த வேஸ்ட்டுன்னே சொல்லிடுவாங்க சொல்லியிருக்காங்க :(

வேலைக்குப் போகாம எப்படி இருக்கீங்கன்னு இல்லத்தரசிகளைப் பார்த்து ஆச்சரியமா கேட்கறாங்கன்னா வேலைக்குப் போவதில் அவங்களுக்கு மன அழுத்தம் இல்லைன்னுதானே அர்த்தம். வேலைக்குப் போவதில் மன அழுத்தம் இருந்தா இல்லத்தரசிகளைப் பார்த்து கொடுத்து வச்சவங்க நீங்கன்னுல்ல சொல்லியிருக்கணும்.

எந்த இல்லத்தரசியும் எப்படித்தான் வேலைக்குப் போறீங்களோன்னு அலுத்துக்கிட்டு கேட்பதில்லை. கொடுத்த வச்சவங்கப்பான்னு தான் சொல்றாங்க(றோம்).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

///நடுவர் அவர்களே!!
எதிரணியினர் சொல்கிறார்கள், வீட்டில் தனிமை சிறை என்று! உங்களை யார் வீட்டில் அடைத்து வைத்து இருக்கிறார்கள்.. அவர்களாகவே தங்களுக்கு வீடு தான் நமக்கு சிறை அதை விட்டு வெளியே வரகூடாது என்று நினைத்து கொண்டு இருக்குறார்கள்///

ஏங்க எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கனும்னு நாங்களே ஒரு சிறை போட்டு வெளிய வராம இருக்க நாங்க என்ன லூசா சொல்லுங்க.
நாங்களும் வெளிய நாலு இடம் போகனும்னு ஆசைதான் படறோம் ஆனால் எங்க நடக்குது சொல்லுங்க அப்படியே போகனும்னு ஆசை பட்டுட்டோம்னு வைங்க அதுக்கும் என்ன சொல்லுவாங்க தெரியுமா
குடும்ப பொண்ணுக்கு என்ன வெளில வேலை வேண்டிகிடக்குன்னு இதுக்கு பயந்து ஆசையை வெளிக்காட்டிக்காம இருக்காங்க எத்தனை வீட்டுல நடக்குது தெரியுங்களா(பக்கத்துலயே கண்கூடா பார்த்த விசயம்ங்க) வீட்டுக்கு வந்த பெண்ணை அம்மா வீட்டுக்கு கூட அனுப்பமாட்டாங்க அதே வீட்டுல வேலைக்கும் போகும் பெண்ணும் இருக்காங்க அவங்க என்ன பன்னுராங்க வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு அம்மா விட்டுக்கு போய்ட்டு வந்துடுறாங்க எவ்ளோ சௌகர்யம் பாருங்க இந்த வேலைக்கு போவது.

//நடுவரே!! எந்த காலத்தில் இருக்காங்க எதிரணியினர். புருஷன் சொல் பேச்சு கேக்கலைன்னு வரதட்சணை கேஸ் போட்டு உள்ள தள்ற காலமிது!!//

நாங்களும் இந்த காலத்துல தாங்க இருக்கோம் எந்த காலமா இருந்தாலும் தொட்டதுக்கெல்லாம் கேஸ்,கோர்ட்டுன்னு போறதுக்கு பேர் வாழ்க்கை இல்லைங்க.
அப்படியே கேஸ் போட்டாலும் நீங்களாம் வேலைக்கு போகும் தைரியத்துல செய்யலாம் ஏன்னா சுயமா சம்பாதிக்கிறீங்க நாங்க அப்படியா ஒரு காய் வாங்கவே புருசனோட கையை எதிர்பார்த்துதானே இருக்கோம் இதுல எங்க கேஸ் போடறது இதுதாங்க இல்லத்தரசிகளோட நிலமை.

///உங்களுக்கென்றே காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இருக்கிறது சீரியல்ஸ். அதை பார்த்து விட்டு தேவையில்லாத மன அழுத்தத்தை நீங்களே உருவாக்கி கொண்டு எங்களுக்கு தான் மன அழுத்தம் அதிகம் என்று கிங்காங் மாதிரி அடித்துக்கொள்ள கூடாது.///

என்ன அனியாயம் பாருங்க வீட்டுல இருக்கும் பெண்கள் எப்பவுமே சீரியல்தான் பார்க்கிறோமாம்
இததாங்க நாங்களும் சொல்றோம் என்னதான் உழைச்சாலும் கிடைக்கும் பேர் இதுதான் என்று
நாங்க செய்யும் வேலைகள் கண்னுக்கு தெரியாது எங்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு கூட யாறோ பேசிட்டு இருக்காங்க நாங்க தனிமைல இல்லைன்னு காட்டிக்கதான் அந்த டீவியே ஒடிட்டு இருக்குமே தவிர உக்காந்து பொலப்ப கவனிக்காம வெட்டியா பாக்க இல்லை :(

///வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டு மன அழுத்தம் மட்டுமே. ஆனால் வேலைக்கு போகும் பெண்களுக்கு வீட்டு அழுத்தம் மட்டுமல்ல வேலை பார்க்கும் இடத்திலேயும் மன அழுத்தம்.///

அப்படி அழுத்தம் தரும் வேலைக்கு ஏங்க போறீங்க வீட்டுலதான் இருங்களேன் அப்போ தெரியும் நாங்க படும் பாடு ;(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்