பட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?

அன்புகோழீஸ், என்ன வீக் எண்ட் அதுவுமா பறக்குறது, நடக்குறது, ஓடுறது, நீந்துறது எல்லாத்தையும் வறுத்து பொரிச்சு வயத்துக்கு அனுப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா? உங்களை யார் நிம்மதியா விட்டா? இதோ வந்துட்டேன் பட்டிமன்ற தலைப்போட..

நம் அறுசுவையின் அன்புத்தோழி அன்பரசி அவர்களின் தலைப்பாகிய

*************************************************************
அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா ?
வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
*************************************************************

சிறு மாறுதல் செய்து இங்கே தந்துள்ளேன். அன்பு தலைப்புக்கு நன்றி பா :)

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

என்ன தலைப்பை பார்த்துட்டீங்கல, இன்னும் என்ன வேடிக்கை? மளமளன்னு உங்க அழுத்தம், எதிர் வீட்டு அழுத்தம், பக்கத்து வீட்டு அழுத்தம் எல்லாத்தையும் போட்டு இங்கே அழுத்த வாங்க. எல்லாத்தையும் வாங்கி ஒரு பெரிய சாக்கு பைல போட்டு அழுத்தி வைக்க நான் இங்கே காத்திருக்கேன். வாங்க கோழிகளே!! வாங்க !! வாங்க !!

ஹாய், ஹாய் தோழிகளே!
ம். ரொம்ப நாளாச்சு அறுசுவைக்கு வந்து.

அருமையான பட்டிமன்றத் தலைப்பு – அன்புக்கு அரசியே பிடியுங்கள் அதற்கு ஒரு பாராட்டு. (வராதவங்களையும் இழுத்துவர அளவுக்கு அருமையான தலைப்பு) பிடி இன்னும் ஒரு பிடி பாராட்டு.

தலைப்பு என்ன?
//அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா ?
வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?//

இதுல இருந்து என்ன தெரியறது? ரெண்டு பேருக்கும் மன அழுத்தம் இருக்கு. அதுல யாருக்கு அதிகம். இருங்க சொல்றேன். அவசரப் பட்டா எப்படி?
***
காலைக் காட்சி ஆரம்பம்

’மாமி, மாமி’

காலை மணி 0415 – வாங்க நடுவரே. நல்லா இருக்கீங்களா? என்ன பதிலா? ஏங்க நடுவரே. இப்பத்தானே எழுந்திருந்திருக்கேன். அதுக்குள்ள பதில் கேட்டா. கொஞ்சம் இருங்க. மருமகளை ஆபீசுக்கு அனுப்பிட்டு வந்து சொல்றேன்.

0520 – இருங்க நடுவரே. நான் போய் குளிச்சுட்டு, சமைச்சுட்டு, எல்லா வேலையும் செஞ்சுட்டு சொல்லறேன்.

0845 – ஏம்மா இப்பதானே சாப்பாடு கட்டிக்கிட்டு இருக்கேன். 4 பேருக்கு சாப்பாடு கட்ட வேண்டாமா? கொஞ்சம் கழிச்சு வா. (மனதுக்குள்) இவ திரும்பி வரதுக்குள்ள சுவாமி விளக்கேத்தி நைவேத்யம் செஞ்சுடணும்).

0905 – என்ன கண்ணம்மா இப்ப வந்து நிக்கற?. நான் ஆட்டோ புடிச்சு ஸ்டேஷனுக்குப் போய் ரயில புடிக்க வேண்டாமா? வெய்ட் வெய்ட்.

0915 – பொண்ணு இப்பதாண்டா ஹேண்ட்ஸ் ப்ரீயைப் போட்டுண்டு ஸ்லோகம் கேட்டுண்டே சொல்லிண்டிருக்கேன். ப்ளீஸ் அப்பறம் என்ன.

0935 – இரு இரு ரயில் வந்துடுத்து. ஏறிட்டு சொல்லறேன்.
இதை விட்டா ஆபீசுக்கு லேட் ஆயிடும் இல்ல. ஏங்க கொஞ்சம் வழி விடுங்க. என்ன. நிதானமா ரயில்ல ஏறி உக்காந்து பேசுங்கன்னு சொல்றீங்களா? வேணாம் அழுதுடுவேன். ம்க்கும். உக்காரறதா. சீட் எங்க கிடைக்குது. கொஞ்சம் மன்னிச்சுக்கங்க.

1000 – தே பொண்ணு இப்பதானே ஆபீசுக்குள்ள வந்திருக்கேன். ரொம்ப அவசரமோ?

1300 – நீயே பார்த்த இல்ல. காலையில இருந்து எவ்வளவு வேலை செஞ்சிருக்கேன்னு. வயிறு கூவுது கண்ணு. காலையில கஞ்சிதானே குடிச்சேன்.

1730 – ஆத்தா அப்படியே போற வழியில பேசிக்கலாம்.

1800 – ’மேடம், மேடம்’ கொர். கொர்......சாயங்காலம்தானே லேடீஸ் ஸ்பெஷல் ட்ரெயின்ல சீட் கிடைக்குது. தூங்கிட்டேன் நடுவரே.

1900 – இப்ப தானே வீட்டுக்குள்ள வந்திருக்கேன். ஒரு வாய் காபி குடிச்சுட்டு வரேன். இரும்மா

2100- அப்பா இப்பதான் எல்லா வேலையும் முடிஞ்சுது. இரு சொல்லட்டுமா. சாரி பொண்ணே நான் பார்க்கற ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். என் மனஅழுத்தத்தைக் குறைக்கற ஒரே நிகழ்ச்சி. முடிச்சுட்டுசொல்றேன் வாங்க நடுவரே. என்ன நிகழ்ச்சியை பாத்துண்டே சொல்லணுமா? நல்ல கதையா கீதே. அப்ப நாளைக்குக் காலையில சமையலுக்கு எப்ப காய் நறுக்கி வெக்கறதாம்?

1030 – இருங்க எல்லாருக்கும் பால் எடுத்துக் குடுத்துட்டு வரேன்.

1100 – என்ன கண்ணு, பால் உரை குத்தணும். சமையல் மேடையை துடைக்கணும். அப்பால வாம்மா.

1130 – ஆஆஆ கொட்டாவி வருது. என்ன சந்தியா? ‘அம்மா இங்க வந்து பாரு. நாங்க எடுத்த SHORT FILMக்கு இன்னொரு அவார்ட் கிடைச்சிருக்கு.’ - இதோ வந்துட்டேன் கண்ணு.

1145- என்ன வேணும் – ம். என்ன? யாருக்கு மன அழுத்தம் அதிக்மா?

பதிலா ஓணும் பதிலு.

தோ பாரு நடுவரு சொல்லாம ஓடிப்பூடு. நின்ன தாராந்துடுவ. வாய் வெத்தல பாக்கு போட்டுக்கும். யார் கையில வெச்சுக்கின. நெஞ்சுல இருக்கற மஞ்சா சோற எத்துடுவேன். அய்.

நடுவர் – தூக்கத்திலிருந்து திருக்கிட்டு எழுந்து ‘ ஐயோ!. நான் எலுமிச்சம்பழ சாதம் சாப்பிட்டது இவங்களுக்கு எப்படி தெரிஞ்சுது’
- ஓ எல்லாம் கனவா?
அன்புடன்
ஜெமாமி

ஏன் சொல்லமாட்டீங்க !!ரிலாக்ஸ் இல்லத்தரசின்னு ... நீங்களும் அதே போட் ல தானே போயட்டிருக்கிங்க .. அட்லீஸ்ட் நினைச்ச நேரத்துக்கு நம்ம விருப்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்க முடியது தானே..

வேலைக்கு செல்லும் பெண்கள் ரெண்டு பதவி வகிக்கணும் .. அதாவது ரெண்டு வேற வேற போட் .... இல்லத்தரசியாகவும் , வொர்கிங் ராணியாகவும் .. சமயத்துல ரெண்டு போட் லையும் ஒவ்வொரு கால வெச்சுக்குவாங்க ..அவங்க பாடு கேக்கவே பரிதாபமா இருக்கும்பா ..

நான் வேலை பார்த்த இடத்தில் , ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை யூனிபார்ம் புடவை அணிந்து வர வேண்டும்.. எப்படியும் ஒரு நாலு பேராவது .. மறந்து விடுவாங்க.. மத்தவங்களை பார்த்தபின்பு தான் நியாபகத்துக்கே வரும்.அப்போ அவங்க முகத்தில வரும் டென்ஷன் இருக்கே ... அப்பப்பா !!இல்லத்தரசியா இருக்கும் பெண்களுக்கு இல்லைப்பா இந்த சோதனை வேதனை எல்லாம்.. என்னமோ கொலை குத்தம் பண்ணினா மாதிரி நாலு பேர் சுத்தி நின்னுகிட்டு " என்ன மேடம் , இத போய் மறந்துட்டிங்க .. அப்படி என்ன வேலை மேடம்.ச்சே உங்க விட்ல இப்படி கூடவா கோ ஆ ப்ரெட் பண்ணாம இருப்பாங்க !! நீங்க கிளம்ப கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம் தானே"ம்பாங்க
போருமே கேக்கவா வேணும் .எரியற நெருப்புல எண்ணையை ஊத்தற மாதிரி இன்னும் கோவம் ஜாஸ்த்தியாகி , அன்னிக்கு தொட்டதெல்லாம் வேஸ்ட் தான்.. எதை எடுத்தாலும் தப்பும் தவறுமா வரும்..

இப்படிப்பட்ட மறதிக்கு என்ன காரணம் !!
அதிகப்படி வேலை
*மனசுலையே ஏகப்பட்ட வேலைகளை யோசிச்சி வெச்சுக்கறது
*நமக்கு ஏத்தா மாதிரி எல்லாரும் ஹெல்ப் பண்ணனும் நு நினைப்பாங்க ---
*அதை சொல்ல கூட முடியாத டைம் லிமிட் ... அவங்க வேற விதமா புரிஞ்சிக்கிட்டு "நீ வேலைக்கு போற திமிர் " னுட்டு சேம் சைட் கோல் அடிப்பாங்க ..
* அப்படியே பொத்துகிட்டு வரும் அழுகை..சுயபச்சாதாபம் ..விரக்தி எல்லாம்
*அடுத்ததா செய்ய வேண்டிய வேலை கூட மறந்துரும் ..
* பசி வேற ஒரு பக்கம் காதடைக்கும் (என்ன சமையல் செய்யறதுன்னு யோசிக்கரதுக்குள்ளே ஒரு போன் கால கத்தி தொலைக்கும்)
*வயித்தை காய போடு !! ஜோலியை முதலில் பாரு !!ன்னு மனசு சொன்னதை கேட்பாங்க .. எல்லாம் இந்த சம்பளக்கவர் படுத்தும் பாடு ..

சமபளக்கவர் கூட லைட்டா தான் இருக்கும் .. ஆனா அதுக்காக இவங்களுக்கு கிடைக்கிற மன அழுத்தம் .. இவங்க வீட்டு தலையணை போல் இருக்கும் ..
இல்லத்தரசி வீட்லையும் இருக்கு தலையணை .. கொஞ்சம் பஞ்சு தான் பா .. பார்க்க புஸ்சுன்னு இருக்கும் ..
ஆனா நம்ம கட்சி பொண்ணுங்க வீட்டு தலையணை புஸ்சுன்னு மட்டுமில்ல கனமாவும் இருக்கும் ( ஏன்னா அழுது அழுது ஈரம இறங்கி தான் )

ஏதேது .. நிறைய இல்லத்தரசிகளுக்கு சப்போர்ட் பண்றவங்க (மன அழுத்தம் அதிகம்)ன்னு சொல்ற தெல்லாம் நம்பும்படியா இல்லை .. இல்லவே இல்லை ..

//நாம நினைச்ச நேரத்துக்கு ஒரு அவுட்டிங் போக முடியுதா..(அங்க இதை விட மோசம் வாரம் முழுதும் வேலைக்கு போனியே இன்னிக்கு ஒழுங்கா சமைச்சு போடுன்னுவாறு கணவர்.. பசங்க .. அம்மா இன்னிக்கு ஸ்பெஷல் ஐடம் செயமா ன்னு சொல்லும்...மாசத்துல ஒரு நாள் வேணா அவங்களும் வெளியில போய் சாப்பிடமுடியும்.. அது இங்கயும் நடக்கும் யுவர ஆனர்.. என் தோழி ஒருத்தி வேலைக்கு போகும் பெண் போனவாரம் பேஸ் புக்கில் ஸ்டேடஸ் பேஜில்"பீலிங் ஹாப்பி பியிங் அட் ஹோம் " ன்னு போட்டிருக்கா ...... இதிலேந்து என்ன தெரியுது .. பூதக்கண்ணாடி .. இல்ல சாதாக்கண்ணாடி வெச்சு பார்த்தாலும் எப்பவும் வொர்கிங் வுமனுக்கு தான் டென்ஷன் அதிகம் ..

*எல்லா செலவுக்கும் கணவர் கையை எதிர்பர்ர்க்க வேண்டியிருக்கு//. இங்கயும் அதே கதை தான் .. அங்கேயாவது (இல்லத்துல) விட்ல கிடந்து லோல் படரா.. ஏதாவது வாங்கிக்கோ ன்னுவாங்க .. இங்கே எப்படா இவ சம்பளம் வரும்.. ஏன் குறையுது .. ன்னுவாங்க சில பேருக்கு சம்பளமே வராது.. எல்லாம் லோனுக்கே போய்டும்../?

//நாலு பேரிடம் பேசாது, ஒரு எக்ச்போஷர் இல்லாது , என்ன வாழ்க்கை !!// யாரு சொன்னா அங்கயும் நீங்க நினைக்கிற மாதிரி பேசிட முடியாது..ஏகப்பட்ட அனுபவங்கள் (பயங்கள்) சில சமயத்துல வாயே திறக்காம இருக்க வெச்சுடும்.
நிறைய பேர் நடை பிணமா வேலைக்கு போறதை பாத்திருக்கேன் யுவர ஆனர்..

//தைரியமா நம்மை ஒரு வேலை செய்ய விடாம வீட்டு பறவை மாதிரி அடைச்சு வைக்கறது .... நிங்களா கற்பனை பண்ணிகிருங்க..வீட்டு பரவையாம்ல .. சாவி உங்க கையில தான்பா இருக்கு..உங்களை நம்பி தானே இருக்காங்க .. நிங்களே ராணி நிங்களே சேவகி அவ்வளவு தான்..

சும்மா தானே வீட்ல ஒக்காந்து டி வி பாக்குறா.. இன்னும் கொஞ்சம் நல்லா சமைச்சா என்ன .. இந்த ஒரு சொல்லுக்கே மூஞ்சியை தூக்கினா .. அம்புடு தென் சொல்லிபுட்டேன்,.. அந்த பொண்ணுங்களை பாருங்க .. ஊர் பேர் தெரியாதவங்ககிட்டல்லாம் வசவு வாங்கி கட்டிக்கிட்டு,, வடிவேலு ஸ்டைலில் ஆக்டிங் வேற கொடுக்கணும்..
உள்ள மௌன குரு ஹீரோ மாதிரி கொந்தளிக்கும்..அது தான் மன அழுத்தம், மனந உளைச்சல் எல்லாத்தயும் கொடுக்கும் கொடிய நோய..
யாருகிட்டே புலம்பலாம் ன்னு காத்திருப்பாங்க.. ஒரு நிமிஷம் ஆறுதலா பேசுங்க .. வெடிச்சுருவாங்க !!

இன்னும் இருக்கு நடுவரே!! ஓடிப போய் வேலைக்கு போகும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகம்னு தீர்ப்பு எழுதப்போரிங்க தானே..

பரவாயில்ல எதிர் அணியனருக்கும் வாதாட டைம் கொடுங்க..

எனக்கும் இன்னும் சொல்ல நிறைய இருக்கு>>
இல்லத்தரசி..வொர்கிங் ராணிக்காக வாதாடறேன் ..எப்படி

அழுத்தமான பதிவை போடுவேன்..
வெயிட்டிஸ்

நடுவரே எதிரணி போட்டிருக்கற ஷெட்யூல் பார்த்து பயந்துடாதீங்க. வேலைக்குப் போகும் ராணிகளை அதிகம் இல்லை ஒரே ஒரு மாசம் லீவ் எடுத்து வீட்டுல இருக்க சொல்லுங்க. முதல் வாரம் அவங்க நினைச்ச நேரம் தூங்குவாங்க நினைச்ச நேரம் சாபிடுவாங்க நினைச்ச நேரம் வேலை பார்ப்பாங்க நினைச்ச நேரம் டிவி பார்ப்பாங்க வெளிய சுத்துவாங்க மகிழ்ச்சியா இருப்பாங்க.

அவசரப் படாதீங்க நடுவரே! இது முதல் வாரம்தான். அடுத்த வாரம் தூக்கம் கட் ஆகும் ஏன்னா தூங்க முடியாது. டிவி பார்ப்பது குறையும் . போரடிச்ச ப்ரோகிராமை எவ்வளவு நேரந்தான் பார்க்கறது அதான். வெளிய சுத்துனதும் குறைஞ்சிடும் தினம் தினம் எங்க போறது. லைட்டா போரடிக்க ஆரம்பிக்கும். ஆனாலும் வலிக்காத மாதிரியே நடிப்பாங்க. இது ரெண்டாவது வாரம்.

மூணாவது வாரம் என்னடா இது இப்படி போரடிக்குது. இதுக்கு வேலைக்குப் போயிருக்கலாமோன்னு யோசிப்பாங்க. வீட்டுல என்ன வேலை செய்தாலும் விதம் விதமா சமைச்சுப் போட்டாலும் எந்த ரியாக்‌ஷனும் யார்கிட்டயும் இருந்து கிடைக்க மாட்டேங்குது. மரியாதை குறையுதோன்னு தோன்ற ஆரம்பிக்கும். பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும்

நாலாவது வாரம் லீவை கேன்சல் பண்ணிட்டு பேகை மாட்டிட்டு வேலைக்கு கிளம்பிடுவாங்க. மன அழுத்தத்தை தாங்கிக்க முடியாது நடுவரே! இதுக்கு வேலைக்குப் போறது எவ்வளவோ மேல்னு ஓடிடுவாங்க.

ஆனா இல்லத்தரசிகளை வேலைக்குப் போக சொல்லுங்க. எத்தனை வேலை செய்தாலும் எவ்வளவு ஓட்டம் ஓடினாலும் அம்மாடியோவ் அந்த தனிமைக் கொடுமைக்கு இது எவ்வளவோ பரவயில்லைன்னு கிடைச்ச வேலையை கெட்டியா புடிச்சுக்குவாங்க. இதுதான் நடுவரே நிதர்சனம்.

இப்ப வருவாங்க உங்களை யாரு புடிச்சு வச்சிருக்கா வேலைக்கு போக வேன்டியதுதானேன்னு. சூழ்நிலை நடுவரே சூழ்நிலை வேறென்ன்னத்த சொல்ல :(

ஃபேஸ் புக் ஸ்டேட்டஸ்ல வீட்டுல இருக்கறது ஜாலியா இருக்குன்னு போட்டிருக்காங்களாம். இதெல்லாம் வடிவேலு சொல்லுவாரே நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு அந்த கதைதான். சந்தோஷமா இருக்கோம்னு சொன்னாலாவது சந்தோஷம் கிடைக்குதா பார்ப்போமேங்கற பாசிட்டிவ் அப்ரோச் நடுவரே! ஆனா எதுவும் வேலைக்காக மாட்டேங்குது :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்படிலாம் தீர்ப்பு எழுத நடுவரை விட்டுருவோமாக்கும்???

நடுவரே... நல்லா கதை சொல்றாங்க டைம் டேபில் போட்டு... நம்பி போடாதீங்க. ஆனா ஒன்னு கவனிச்சீங்களா நடுவரே??? வேலைக்கு மருமகளும் போறாங்க... மாமியாரும் போறாங்க... ஆனா மாமியார் எல்லா வேலையும் செய்து கொடுக்கறாங்க... அப்ப மருமகள் பாடு ஜாலி தானே??? :) எல்லாத்துலையும் தேவையான பாயிண்ட்டை கப்புன்னு பிடிக்கனும் நடுவரே... என்ன நான் சொல்றது???

சரி நான் ஒன்னு கேட்கறேன்... இப்ப பிள்ளைகள் வளர்ந்து தலை தூக்கியாச்சு... இனி ஏன் ஓடனும்??? ஓய்வு எடுக்கலாம் தானே??? ஏன் இத்தனை மன அழுத்தம்??? எதுக்கு யாருக்காக உழைக்கனும் இனி??? பதில் கிடைக்குமா??? சொந்த காலில் நிக்கனும்... அதுக்காக நடக்குது இந்த ஓட்டம். அது நிச்சயம் உடம்புக்கு எத்தனை கஷ்டமா இருந்தாலும் மனதுக்கு க்லுகோஸா தான் இருக்கு நடுவரே. அதை முதல்ல புரிஞ்சுக்கனும். இல்லன்னா எதிர் அணியில் போட்ட ஷெடியூல்கு எப்பவோ வேலையை ரிசைன் பண்ணிட்டு அவங்க சொல்ற மாதிரி ஜாலியா இருந்திருப்பாங்க வீட்டில். (அவங்களுக்கும் தெரியும்... வீட்டில் இருந்தா ஜாலியா இல்லையான்னு.)

நடுவரே... நான் ஒரு உண்மையை கேட்கறேன்... அடிச்சு பிடிச்சு வேலைக்கு போறோம்னே சொல்றாங்களே... இதுவரை எதாவது அரசு அலுவலகத்தில் உள்ள பெண்கள் கஷ்டபடுறதிஅ பார்த்திருப்போமா??? நான் சொல்றேன் கேளுங்க...

நாம போய் மேடம் மேடம்னு கால் கடுக்க நிப்போம், காலையில் புருஷன் பஸ்டாண்டில் விட லேட் பண்ண கோவத்தை நம்ம கிட்ட காட்டுவாங்க... உர்ருன்னு வல்லுன்னு விழுவாங்க. ஆனா வேலையில் ஒன்னும் இருக்காது... பக்கத்து சீட்டில் உள்ளவங்ககிட்ட கிகிகீன்னு ஜோக் சொல்லி சிரிப்பாங்க, புக் படிப்பாங்க, லன்ச்சுன்னு 2 மணி நேரம் ஓடிடுவாங்க. நம்ம பார்த்தா மட்டும் தான் கோவம் வரும். நாம பாவம் வீட்டிலும் வேலை பார்த்து இங்கையும் வேலை பார்த்துகிட்டிருக்குன்னு நினைப்போம்... உண்மையில் அதெல்லாம் இல்ல... இங்க நல்லா டைம் பாஸ் பண்ண, அரசு பணத்தில் கேட்பாரின்றி அரைகுறை வேலை பார்க்க தான் செய்றாங்க.

நான் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு காலையில் வரும் ரயிலில் தனியே பயணிப்பது வழக்கம். அதுவும் லெடீஸ் கோச். வரும் பெண்கள் எல்லாம் தலை விரிச்சுட்டு தான் வருவாங்க. வந்து இது அதுன்னு ஊர் கதை, வீட்டு கதை எல்லாம் பேசி சிரிச்சு அட்டகாசம் பண்ணிட்டு கூட வரும் மற்ற பெண்களை காலாய்ச்சுட்டு இறங்க 1/2 மணி நேரம் முன்னாடி ஃபுல்லா ஒரு மேக்கப் செஷன் முடிச்சுட்டு தான் போவாங்க. இதுல என்ன கொடுமை தெரியுமா??? முதலில் ஏறுபவர் எல்லாரும் சீட் புடிப்பார்... யார் ஏறினாலும் சீட் விட மாட்டாங்க. நான் முதல்லயே ஏறி உட்கார்ந்திருந்தா கூட வந்ததும் “கொஞ்சம் நகருங்க... அது நான் வழக்கமா உட்காரும் இடம்”னு என்னை கடுப்பேத்துவாங்க. இவங்களா நடுவரே கஷ்டப்பட்டு வேலைக்கு போய் சம்பாதிக்கறாங்க??? அவங்க பேசும் கதை எல்லாம் இங்க சொன்னா வீட்டில் இருக்க யாரும் அவங்களை இனி வேலைக்கே அனுப்ப மாட்டாங்க... மாமியார், நாத்தனார் எல்லாம் கிழி கிழின்னு கிழிவாங்க. யார் குடும்பத்தில் எத்தனை பேர், என்ன செய்றாங்கன்னு முதல் எனக்கே தெரியும்... அப்படின்னா பார்த்துக்கங்க. இவங்க உட்கார நேரம் இல்லை, பேச நேரம் இலைன்னு சொல்ற கதையை எல்லாம் நம்பி போடாதீங்க நடுவரே.

தனியார் பள்ளி, கல்லூரி பக்கம் போய் பாருங்க... அரட்டையை... ஒரு வகுப்பு முடிஞ்சா அடுத்த வகுப்பு ஃப்ரீ. இப்படி தான் ஷெடியூல் போடுவாங்க. எல்லாருக்கும் 8 மணி நேரமும் வேலை இருக்காது. ஒரு நாளைக்கு 4 வகுப்பு எடுப்பாங்க. மற்ற நேரம் முழுக்க அரட்டை கச்சேரி தான்.

சரி விடுங்க நடுவரே... இவ்வளவு உதாரணம் எதுக்கு... இங்க வீட்டில் இருக்க எங்க பதிவுகளுக்கு சமமா வேலைக்கு போய்கிட்டு இருக்கவங்க அபபீஸ்ல இருந்து பதிவு வருது... அப்படின்னா அவங்க அங்க டென்ஷனா உட்கார்ந்து வேலை பார்க்கறாங்கன்னா அர்த்தம்??? ஏன் நடுவரே... அதை பார்த்தா தெரியலயா... இவங்க வேலைக்கு போய் நிம்மதியா தான் உட்கார்ந்திருக்காங்க அங்கன்னு. எப்போதும் ஓட்டமும் டென்ஷனும் இருப்பதில்லை... எப்பவாது எட்டி பார்க்கும் அந்த டென்ஷனை காரணமா நீங்க சொல்லும் போது நாங்களும் சொல்லலாம் ஆயிரம் காரணம்.

நடுவரே... இப்படி நாங்க வீட்டில் இருக்கோம்னே விருந்தினர் தொல்லை ஏகமா இருக்கும். ஆபீஸ் போனா இப்படி கெஸ்ட் வர யோசிப்பாங்க. வந்தாலும் லீவ் நாள் தான். ஆனா இப்படி வீட்டில் இருந்தா அவங்க இஷ்டம் போல வருவாங்க... சொல்லாம கூட வருவாங்க. :( நாங்க சமைச்சு போட்டு படும் அவஸ்தை... எல்லாம் செய்து அதன் பின்னும் 1000 குறைகளை சொல்லிட்டு போவாங்க பாருங்க... அங்க இருக்க மன அழுத்தம். விடுங்க நடுவரே... சொன்னா புரியாது எதிர் அணிக்கு. ஆனா உங்களை நாங்க விடுறதா இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

///நீங்கள் வீட்டில் இருப்பதால் எப்ப வேண்டுமானாலும் கம்ப்யூட்டரில் வேலை செய்யலாம். இதுதான் இல்லத்தரசி!///

நடுவர் அவர்களே இங்க பட்டியில வரும் பதிவுகளை பார்த்தும் இதை நம்பறீங்களா வீட்டுல் இருந்தா எப்ப வேனாலும் கம்புயூட்டர்ல வேலை செய்யலாமாம் அப்போ எதிரணி தோழிகள் ஆபிஸ்ல இருந்து எங்களுக்கு இனையா பெரும் பெரும் பதிவுகளா போடுராங்களே அது எப்படி? அப்ப வேலை இல்லாம ஃப்ரீயா இருப்பதால தானே போடுறாங்க அவங்க வேலை செஞ்சாலும் செய்யலைன்னாலும் சம்பளம்.
உடனே எதிரணி கேப்பாங்க நிங்க மட்டும் போடலயான்னு
ஆனால் எங்க நிலமையை சொல்றேன் கேளுங்க நாங்க ஒரு பதிவ டைப் பன்னறதுக்குள்ள எத்தனை இடையூறுகள் வரும் பாருங்க பாதிதான் டைப் பன்னிருப்போம் அதுக்குள்ள மாமியார் சாப்பிடலாமான்னு கேப்பாங்க அதை முடிச்சி திரும்ப வந்து உட்க்கார்ந்தா சிலிண்டர்ன்னு வெளில சத்தம் வரும் அதையும் முடிச்சி வந்தா புருஷன் காபி போடலயான்னு அடுத்த கேள்வி இப்படி எல்லாத்தையும் முடிச்சுட்டு ஒரு வழியா வந்து பதிவ போடறதுக்குள்ள நாங்க படும் பாடு இருக்கே ஐய்யய்யோ இத்தனை சிரமத்துக்கு இடையில் நாங்க கம்ப்யூட்டரில் உட்கார்ந்தா இவங்க என்னடான்னா ஈசியா சொல்லிட்டாங்க எப்பவேனாலும் வேலை செய்யலாம்னு.

இதுமட்டுமா நடுவர் அவர்களே வேலைக்கு போற மருமகள்னா மாமியார் கூட நகை நட்டு வாங்க அனுமதிக்கறாங்க வேலைக்கு போகாத ஆளுன்னா அதில் கூட குறைவு தான் நகையை விடுங்க துணியும் அதே கதை தான்
அவ வேலைக்கு போறா வெளிய போக நிறைய வேணும்
உனக்கு ஏன் இவ்வளவு, எங்க போற நீன்னு ஒரு கேள்வி பல வீடுகளில் வருது அதோட வீட்டுல இருக்கறவளுக்கு என்ன ஆடம்பரம் வேண்டிக்கிடக்குன்னு சொல்லிடுவாங்க :( நாங்க வெளிலதான் போகமுடியலன்னா ஆசைபட்ட துணிகளை கூட உடுத்த முடியலை என்ன கொடுமை பாருங்க நடுவரே எங்க நிலையை.இல்லத்தரசிகள்ன்னா இப்படித்தான் இருக்கனும்னு பச்சைகுத்தாத குறைதான் :(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//அவசரம்னு ரயில்ல போறவங்க அங்கையே இறங்கும் இடம் வரௌம் முன் பெரிய மேக்கப் செஷன் நடத்துறாங்க.// , //டிரெயின்னில் (அம்பத்தூர் T சென்ட்ரல்) பார்த்தா எல்லாரும் குளிச்சிட்டு தலைவிரித்துபோட்டு தான் வருவங அப்புரம் மாமியார் கதை பக்கத்துவீட்டுகத ஆபிஸ் நடந்ததுன்னு பேசி தலவாரி மேக்கப் போடுவாங்க அதுக்குள்ள் கரெக்ட்டா ஸ்டாப் வர்ம்// நாங்க சொல்றது சரியாதானே போச்சு நடுவரே!! கிளம்புற நேரம் குழாயில் தண்ணி வராது. அதனால அந்த காக்கா குளியல் போடகூட நேரம் இல்லாத பெண்கள் இப்படி மேக்கப், சென்ட் எல்லாம் போட்டுதான் ஷோக்கா இருக்குற மாதிரி ஒப்பேத்தவேண்டியிருக்கு. இது எவ்வளவு பெரிய கொடுமை நடுவரே!! வேலைக்கு செல்லும் பெண்களுக்கு.
//ஒருத்தருக்கு மன அழுத்தம் ஏற்ப்பட காரணமா இருக்கும் மூனாவது மனுசங்களால நிச்சயமா நமக்கு உளைச்சல் ஏற்படாது அதாவது ஆபிஸில் உயர் அதிகாரியோ இல்லை கூட வேலை செய்பவர்களாலயோ ஏற்படாது// ஓ அப்படியா நடுவரே!! ஒரு ஆபிஸில் அழகான, திறமையான ஒரு பெண் வேலை பார்க்குறாங்க, அந்த ஆபிஸ் உயரதிகாரி அந்த பெண்ணின் திறமைக்காக அவரைதான் எல்லாவற்றிலும் முன்னிறுத்துறாங்கன்னு வைங்க, உடனே கூட வேலை செய்றவங்க பொறாமையால என்னவெல்லாம் சொல்வாங்கன்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன் நடுவரே!! இதனால் எவ்வளவு பெரிய மன அழுத்தம் ஏற்படும் அந்த பெண்ணுக்கு. வேலை பார்க்குற இடங்கள்ல 1008 பாலிட்டிக்ஸ் நடக்குது நடுவரே!! யாரை பத்தி என்ன பத்த வைக்கலாம், எப்படி கிசுகிசு பரப்பலாம், யாரை கவுத்து வெரட்டிட்டு அந்த அதிகாரத்தை கைப்பற்றலாம் இப்படி, இதையெல்லாம் சாமர்த்தியமா கடக்கனும் அதுக்கு யோசிச்சு, யோசிச்சு மனசு பூரா அழுத்தம்தான் வரும் நடுவரே!! பெண்களுக்கெல்லாம் வெளியில் சொல்ல முடியாத பாலியல் தொந்தரவுகள் கூட இருக்காம். அங்காடி தெரு படத்தில் கூட பார்த்திருப்பீங்க!!
//வேலைக்குப் போற பெண்களுக்காவது சம்பளக் கவர் கையில் வருது. ஆனா இல்லத்தரசிகளுக்கு மன அழுத்தம் மட்டும்தான் கூடை கூடையா கிடைக்குது :).// 8 டூ 6னு வேலை பார்த்து சம்பளம் வாங்க இது என்ன ஆபீஸா? குடும்பம் நடுவரே குடும்பம்!! அப்போ இல்லத்தரசிகளுக்கு சந்தோஷ தருணங்களே இல்லையா குடும்பத்தில்? நம் நாட்டை காட்டிலும் அப்ராடில் மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாம், அங்கெல்லாம் குடும்ப அமைப்பு இல்லாம அத்துவிட்டு அலையறதுதான் இதுக்கு காரணமாம்.
//மாச கடைசியில சொளையா சம்பள கவரை பாத்ததும் அதெல்லாம் பஞ்சா பறந்துடும்.// அப்படி தோணாது நடுவரே!! இந்த பணத்துக்காகதானே இவ்வளவு அனுபவிக்க வேண்டியதா இருக்குன்னுதான் தோணும்.
வீட்டுக்குள், உறவுகளுக்குள் ஆயிரம் பிரச்சினை வந்தாலும், வெளியிலிருந்து நமக்கு ஒரு பிரச்சினை வரும்போது, எல்லாத்தையும் மறந்து, ''நாங்க இருக்கோம்னு'' வந்து நிப்பாங்க பாருங்க, அங்க இருக்கு உறவுகளின் அருமை. ஆபீஸ்ல இருக்கவங்க எல்லாம் நமக்கேன் வம்புன்னு ஒதுங்கிதான் போவாங்க. சரியா நடுவரே!!
நடுவரே!! எதிரணி தோழிங்க தனிமை பத்தி பேசுறாங்க. எதுக்கு வெளிநாட்டில் போய் தனியா கஷ்டபடுறாங்க, ஜாப் ஓரியன்டான பணத்துக்காகதானே. இதிலிருந்தே தெரியலையா நடுவரே!! வேலையாலதான் இவ்வளவு மன அழுத்தம்னு.
நடுவரே!! எங்க வீட்டு பொண்ணு ஒருத்தி கால் சென்டர்ல வேலை பார்த்தா, அங்கெல்லாம் நைட்தான் வேலைன்னு உங்களுக்கு தெரியுமே. இந்த பொண்ணு பார்க்க ரொம்ப அழகா, நல்ல கலரா இருப்பா. ஆனா பாருங்க நடுவரே!! நைட் ஷிஃப்ட் வேலைக்கு போயி, போயி அவ கண்ணெல்லாம் உள்வாங்கி, கருவளையத்தோட, கன்னமெல்லாம் ஒடுங்கி, உடம்பெல்லாம் மெலிஞ்சி ரொம்ப அசிங்கமா ஆயிட்டா, இதனால அவளுக்கு மட்டுமில்லாம அவ அப்பா, அம்மாக்கும் பயங்கர மன அழுத்தம் நடுவரே!! அப்புறம் வேலையை விட்டு நின்னது வேற கதை.
இன்னொரு சொந்தகார பொண்ணு ஐடி கம்பெனில வேலை பார்க்குறா. அவளுக்கு 5வது மாசத்துல குழந்தை வயித்துக்குள்ளயே இறந்து போச்சு, காரணம் வேலை ப்ரஷரால வயித்துல குழந்தை இருக்குறதையே மறந்து, சரியா சாப்பாடு சாப்பிடவும், டேப்லெட் சாப்பிடவும் கூட மறந்து போயிருக்கா!!
ஐடி கம்பெனிகள்ல மேலதிகாரிக்கு ஒருத்தரை பிடிக்கலைன்னா அவருக்கு அதிபயங்கரமான மன அழுத்தத்தை கொடுத்து தற்கொலைக்கே தூண்டுறாங்களாம். கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி கூட ஒரு ஐடி கம்பெனி மாடியிலிருந்து குதிச்சு வேலை பார்க்குறவர் தற்கொலை பண்ணிட்டார்னு நியூஸ் படிச்சேன். அப்புறம் பார்த்தா அது இவர் ஃப்ரெண்ட் வேலை பார்க்குற கம்பெனிதான். மனுஷன் மன அழுத்தத்தால செத்ததுக்கப்புறம் பணத்த வெச்சிட்டு என்ன பண்ண நடுவரே!! ஐடில லட்ச, லட்சமா பணம் கிடைக்குற அளவுக்கு மேல ஃப்லைட்ல ஏத்தி கொண்டு போற அளவுக்கு காஸ்ட்லியான மன அழுத்தம் பணத்தோட பரிசா வருது நடுவரே!!
//தனியார் பள்ளி, கல்லூரி பக்கம் போய் பாருங்க... அரட்டையை... ஒரு வகுப்பு முடிஞ்சா அடுத்த வகுப்பு ஃப்ரீ. இப்படி தான் ஷெடியூல் போடுவாங்க.// நடுவரே!! தோனி படம் பாருங்க, அதில்தான் மேலிடத்தில் 100% ரிசல்ட் காட்ட ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்குறாங்கன்னு சொல்லி இருக்காங்க. எக்ஸாம் டைமிலும், ரிசல்ட் டைமிலும் மாணவர்களை காட்டிலும் ஆசிரியர்கள்தாங்க அதிக மன அழுத்தத்தோட டென்ஷனா இருப்பாங்க!! சும்மா காசு வாங்கிட்டு பென்ச்ச தேய்ச்சுட்டு போனா ஸ்கூலெல்லாம் நடத்த முடியுமா நடுவரே!!
//எல்லாருக்கும் 8 மணி நேரமும் வேலை இருக்காது. ஒரு நாளைக்கு 4 வகுப்பு எடுப்பாங்க. மற்ற நேரம் முழுக்க அரட்டை கச்சேரி தான்.// ஏங்க!! இல்லத்தரசிகளெல்லாம் 24 மணி நேரமும் தூக்கம் கூட இல்லாம, ஓய்வு ஒழிச்சல் இல்லாமதான் உழைக்குறீங்களா? பேச மாட்டீங்களா?, சிரிக்க மாட்டீங்களா?, எப்பவும் சீரியசா, சின்சியர் சிகாமணிகளாதான் இருப்பீங்களா? நாம பெத்த ஒன்னு, ரெண்டு பசங்களை பார்க்குறதுக்கே மன அழுத்தம் வருதுங்கறீங்க, 20, 30 பசங்களை பார்க்குற அவங்களுக்கு எப்படி இருக்கும்? இப்ப எல்லாம் பசங்க டீச்சர்ஸை என்னவெல்லாம் செக்ஸியா, அசிங்கமா பேசுறாங்க தெரியுமா? அனுபவிச்சாதாங்க தெரியும் அந்த வலி. இவ்வளவெல்லாம் அனுபவிச்சுட்டு இறுக்கமாவே திரியனும்னா எப்படி நடுவரே!!
நடுவரே!! என்னோட கஸின் சிஸ்டர் ஒரு குட்டி பையனை கொஞ்சம் மிரட்டி டியூசன் எடுத்திட்டிருந்தா, கொஞ்ச நேரம் கழிச்சு அவனுக்கு பக்கத்திலிருந்த குட்டி பையன் எழுந்து "மிஸ் நீங்க வெளிய வந்தா இவன் உங்களை கல்லால அடிப்பானாம்" என்கிறான். இந்த பசங்களுக்கு எத்தனை வயசிருக்கும்னு நினைக்குறீங்க. ஒரு 7, 8 வயசுதான் இருக்கும். இவ்வளவு ஏன் இப்பகூட ஒரு பையன் டீச்சரையே கொலை பண்ணலையா. எவ்வளவு மோசமா இருக்கு பாருங்க ஆசிரியர்களோட நிலைமை.
//எங்க நிலமையை சொல்றேன் கேளுங்க நாங்க ஒரு பதிவ டைப் பன்னறதுக்குள்ள எத்தனை இடையூறுகள் வரும் பாருங்க// வொர்கிங் வுமன்ஸுக்கு மட்டும் என்ன நடக்கும்னு நினைக்குறீங்க!! அப்பதான் ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையோட வந்து நிப்பாங்க. மேலதிகாரி வந்துடுவாரோங்குற பயத்தோடதான் டைப் பண்ணிட்டு இருப்பாங்க.
//எங்களுக்கு இனையா பெரும் பெரும் பதிவுகளா போடுராங்களே அது எப்படி? அப்ப வேலை இல்லாம ஃப்ரீயா இருப்பதால தானே போடுறாங்க// ஆபிஸ் போறவங்கெல்லாம் சும்மாவே இருக்காங்கன்னா நம்ம நாடு இவ்வளவெல்லாம் முன்னேறியே இருக்காதுங்க. நடுவரே!! கண்ணும் கருத்துமா, கடமை உணர்வோடதான் வேலை செய்யனும்னா, எந்த வேலையும் நடக்காம உலகமே முடங்கி போய்தான் கிடக்கும். ஆனா கொடுக்கிற காசுக்கு குறை வைக்காம நிச்சயம் வேலை செய்வாங்க.
இதோட கம்பேர் பண்ணும்போது இல்லத்தரசிகளின் மன அழுத்தம் பூச்சி மாதிரி நடுவரே!! நசுக்கி போட்டு போயிடலாம்.
நடுவரே!! திரும்பவும் சொல்றோம் வேலைக்கு போகும் பெண்களின் வாழ்க்கை "மதில் மேல் பூனை மாதிரி". இந்த பக்கம் விழுந்தால் குடும்பம், அந்த பக்கம் விழுந்தால் வேலை. ஆக மொத்தம் பக்கம் விழுந்தாலும் அடிபடுறது உறுதி! உறுதி! உறுதி!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

பாக்யலஷ்மி,

//நிஜத்தில் அனைத்து ஆண்களும்(சிலரை தவிர) யாருமே வீட்டு வேலையில் கொஞ்சம் கூட உதவி செய்வதில்லை என்பதே உண்மை..// நிஜத்துல நடக்காததால, காமெடியாச்சும் பண்ணிப்போமேன்னு சினிமால போடுறாங்க. இப்ப புரியுதுங்களா?

//அவர்கள் சாப்பிட்ட தட்டை மட்டும் அவர்களே கழுவி வைத்தாலே 'என்ன என் மகனை கொடுமைபடுத்துறையா' என்று கேட்கும் மாமியார்களே அதிகம்..
// இந்த டயலாக் மோஸ்ட்லி எந்த மாமியார்கிட்ட இருந்து வரும்னு நினைக்கறீங்க. பூதத்தை பாட்டில்ல போட்டு அடைச்சு வச்சிருக்க மாதிரி புருஷனை அடக்கி வச்சிருப்பாங்க பாருங்க. அவங்க தான் இப்படி சொல்வாங்க. பம்பின் கால் பம்பு அறியும்.. (அட பாம்புக்கு கால் இல்லன்னு சொல்லிட்டாங்க. அதான் இப்படி) ;)

//இல்லத்தரசிகளுக்கு எல்லா வேலையும் முடித்து அவர்களுக்கு ஓய்வெடுக்க நிச்சயம் குறைந்தது ஒரு மூன்று மணி நேரமாவது கிடைக்கும்// அவங்கள கேட்டா வேலைக்கு போற பொண்ணுங்களுக்கு 8 மணி நேரம் ப்ரீன்னு சொல்றாங்க. யாரை தான் நம்புவதோ இந்த நடுவர் நெஞ்சம் ;(

பாக்யா, இன்னும் உங்களுக்கு சொல்ல பாக்கி உண்டா? வந்து சொல்லுங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜென்னி,

//நடுவரே, நான் அனைத்து வாதங்களையும் படிக்கவில்லை. ஏதோ படித்தவரை பதிவிடுகிறேன் // நானுந்தான் ;(

//நாங்க வீட்டுக்கு கிளம்ப இரவாகி விடும். இதெல்லாம் எதிரணி கண்களுக்கு தெரியாது.// அவங்க கிட்ட சொல்லிடாதீங்க. அப்புறம் வீட்டுக்கு கிளம்பும் போது மேக்கப் பண்ணதான் லேட்டாயிருக்கும்னு கதை கட்டிருவாங்க. மோசமான பயபுள்ளைங்க ;)

//ஏதாவது குட்டி கலாட்டா பண்ணிகிட்டே தான் இருப்பாங்க. // அவங்களுக்கு வீடு கலகலப்பா இருந்தா பிடிக்கும்ங்க. இதிலென்ன தப்பு?

//1 0 நிமிஷத்துல அவதி அவதியா சாப்டிட்டு ஓடனும். அப்போதான் மாலை வீடு இல்லைனா இரவுதான்.// 10 நிமிஷத்துல என்னத்த சாப்பிடுறது. டிபன் பாக்சை வாயில கொட்டிட்டு, வேலை பார்க்கும் போது இரைப்பைல இருந்து வாய்க்கு கொண்டு வந்து தான் அசை போடனும் மாடு மாதிரி.. ரொம்பவும் கஷ்டம் தாங்க ;(

//வேலைக்கு போயும் தாய், தந்தைக்கு ஏதும் செய்ய முடியாமல் தவிப்போர் எத்தினை பேர் தெரியுமா? அது மிக கொடுமை. சாதாரணம் இல்ல// வேலைக்கு போறவங்களை தான் சிங்கிள் பைசா கூட இல்லாம நிராயுதபாணியா அனுப்பி வைக்கிறாங்க. பத்தாததுக்கு எல்லா கார்டையும் வாங்கி வச்சுக்கறாங்க.. உங்க வேலை பணி செய்து கிடப்பது மட்டும் தான்.

//7 மணிக்கு அவர் சென்ற பின் என்ன வேலை ? குழந்தையை பார்ப்பீர்கள் என்று பொய் சொல்ல வேண்டாம். // உங்களுக்கும் மேட்டர் தெரிஞ்சு போச்சா?

//உங்களுக்கென்றே காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இருக்கிறது சீரியல்ஸ்.// ஒரு கற்பனையை ஓட விடுங்க.. ஒரு சீரியல் காமெடியா இருக்கும். அப்ப சிரிப்பாங்க. அப்புறம் வர்றது அழுகாச்சி காவியமா இருக்கும்.. அப்ப ஒரே அழுக்காச்சி தான்.. அதுக்கு அடுத்து வரும் சீரியல்.. பழி வாங்குதல்.. அப்ப வெறியோட இருப்பாங்க. அதுக்கு அடுத்தாப்ல.. கைகேயி மாதிரி திட்டம் போடுற சீரியல்.. அப்ப ஏடாகூடமா யோசிச்சுட்டு இருப்பாங்க... எப்படிங்க இருக்கு? கற்பனைல ஓட விட்டீங்களா? எத்தனை கலவையான மன அழுத்தம் தான் போங்க .

//எங்களுக்கு தான் மன அழுத்தம் அதிகம் என்று கிங்காங் மாதிரி அடித்துக்கொள்ள கூடாது.// இவங்க சொல்றது எப்படி இருக்குன்னா.. போற வழில கல்லு தடுக்கி இருக்கும். இவங்களா போய் அடிபட்டுகிட்டதை சொல்ல மாட்டாங்க. கல்லு இடிச்சுருச்சுன்னு சொல்லுவாங்க. என்னமோ கல்லு... இவங்க ஊர், வீடு எல்லாம் தேடி கண்டுபிடிச்சு இடிச்சு விட்ட மாதிரி.. அட போங்க.. எதுவும் சொல்ற மாதிரியே இல்ல ;(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி,

//7 மணிக்கு அவர் கிளம்பினா வேற வேலையே இல்லாமலா நாங்க நேரத்துக்கு சாப்பிடாம கெடக்கோம்??? எங்களூகென்ன மண்டையில் கோலாரா???// அதானே? விட்டா, 7 மணிக்கே சமையலை செய்துட்டு மூணு வேளை சாப்பாட்டையும் சாப்டுட்டு, சும்மாவே பாவம் போல முகத்தை வச்சிருக்கீங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க போல ;)

//நாங்க டிவி முன் உட்கார்ந்தா வீடு தானே சுத்தம் பண்ணிக்கும், துணி தானே துவைக்கும், தானே காய போடும், தானே இஸ்திரி போடும், பாத்திரமெல்லாம் கழுவி தானே அடுக்கிடும், மதிய உணவு தானா தயார் ஆயிடும்// கேக்கவே நல்லார்க்கே. நிஜத்துல இருந்தா... நம்மை கைல பிடிக்க முடியாதே..

//குழந்தைகளை பார்ப்பது அத்தனை சுலபமான வேலையாமா??? விட்டுட்டு வேலைக்கு போறது தான் கஷ்டமா???// ஒருநாள் உங்க வீட்டு வாண்டுகளுக்கு சாப்பாடு ஊட்டி பாருங்க தெரியும் சங்கதி.. ஏங்க..ஏங்க... நீங்க வேற கெளப்பிட்டு..;(

//சாப்பாட்டில் கை வைப்போம்... இவங்க ஆய் போய் வைப்பாங்க... // ஆனாலும் இந்த பசங்க நக்கலுக்கு அளவே இல்ல போங்க. நம்ம சாப்பாடும் அப்படி தான் இருக்கும்னு சொல்லாம சொல்றாங்க போல ;) ஆய் பசங்க ;)) உணவுக்கு மணம் கூட்டி..;)

//நாங்க எங்களூக்கு உட்கார்ந்து ரூம் போட்டு யோசிக்க நேரம் வேணாம்னு தான் கெஞ்சுறோம் நடுவரே.// ம்ஹூம்ம்... ஹால்ல உக்காரும் போதே என்னமா யோசிக்கறாங்க.. இன்னும் ரூம் போட்டா...சாமியோவ்வ்வ்வ்

//எங்க சொந்த காலில் நிக்க முடியலயே என்ற ஆதங்கம் எங்களுக்கு.// பெரும்பாலான படித்த இல்லத்தரசிகள் செயற்கை கால்ல தான் நிக்கறாங்க ;(

//உண்மையில் வேலைக்கு போகும் பலரால் வேலையை விட்டுட்டு இருக்கவே முடியாது நடுவரே. அனுபவத்தால் சொல்றேன், நம்பி தான் ஆகனும்.// நம்பியாச்சு..

//அட நாங்களாம் உடம்பில் பிரெச்சனைன்னு சொன்னா காது கொடுத்து கேட்க வீட்டில் ஆளில்லைன்னு சொல்றோம்// நான் சொல்ற வைத்தியத்தை பண்ணி பாருங்க. ஈயம் இருந்தா நல்லா சுண்ட காய்ச்சி கால் படியாக்கி காதுல ஊத்தி பாருங்க.. அப்புறம் எப்பவும் காதை உங்ககிட்ட தான் தந்து வச்சிருப்பாங்க ;)

//கணவர் செய்த ஒரே விஷயம்... வேலைக்கு அனுப்பியது தான். இப்போ நல்லா இருக்காங்க. லீவ்ன்னா கூட எதாவது வேலையை செய்ய கிளம்பிடுவார்..// இப்ப கணவருக்கு மன அழுத்தம் குறைஞ்சிருக்கும்.

//எதிர் அணியை வேலையை விட்டுட்டு வெட்டியா டிவி பார்க்க சொல்லுங்க... நாங்க போறோம் வேலைக்கு, எங்களூக்கு இந்த அழுத்தத்தில் இருந்து விடுதலை வேண்டும்.// ஏங்க போறதும் போறீங்க.. சீரியல்ல முன்னாடி கதையெல்லாம் சொல்லிட்டு போங்க. கதை புரியனுமில்ல.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கவி,

//எல்லாத்தையும் அனுப்பிட்டு உட்கார்ந்து டிவி பார்க்க வேண்டியதுதானேங்கறாங்க. //அதை விட ஒரு துளி விஷம் தந்துடலாம்ங்க.

//வீட்டில் யாருமில்லா தனிமையை போக்க, அந்த மயான அமைதியை விரட்ட, பயத்தைப் போக்க கண்டு பிடித்த உபாயம் அவ்வளவுதான் அது பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கும் அவ்வளவுதான். // சொந்தம் பதினாறோட ஒண்ணா பாசமா வாழ்ந்தவங்களுக்கு, தனிமை கொடுமை தானே. அதை விரட்ட டீவி போட்டா எதிரணி எப்படி தப்பா புரிஞ்சுட்டு.. நாக்கே இல்லாம பேசுறாங்க..

//சும்மா காலாட்டிக்கிட்டு இருக்காங்க வெட்டியா இருக்காங்க இதுதான் :(// எல்லாரும் காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருப்பாங்க போல.. அங்கே தானே காலாட்டிட்டே தறி நெய்வாங்க.

//ஒருநாள் இருந்தா மவுனவிரதம் பலநால் இருந்தா அதுக்குபேர் மன அழுத்தம் :(// அரசர்கள் பாடு கொண்டாட்டம்.. அரசிகள் பாடு திண்டாட்டம் ;(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்