மிளகுக் குழம்பு

தேதி: February 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (11 votes)

 

மிளகு - 25 கிராம்
சீரகம் - 3 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறு துண்டு
கறிவேப்பிலை - 5 கொத்து
நல்லெண்ணெய் - கால் கப்
கடுகு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

நான்கு தேக்கரண்டி எண்ணெயில் முறையே பெருங்காயம், மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வரிசையாக சிவக்க வறுக்கவும். கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும்.
இவை எல்லாவற்றுடன் புளி, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
வாணலியில் மீதியுள்ள எண்ணெயை விட்டு, அதில் கடுகு தாளிக்கவும். வெடித்ததும் அரைத்த கலவையை விட்டு கிளறவும்.
நன்கு கெட்டியாகி எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவும் அருமையாக இருக்கும் இந்த மிளகுக் குழம்பு.

இதில் பூண்டு, முருங்கை, கத்தரிக் காய்களை வதக்கி குழம்புடன் சேர்த்து கொதிக்க விடலாம். பிள்ளை பெற்ற பெண்களுக்கு நல்ல பத்தியக் குழம்பு இது. குளிர் காலத்தில் உடலுக்கு சூடு கொடுக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா இருக்குங்க. முகப்பை பார்த்ததும் என் குறிப்பான்னு கொஞ்சம் குழம்பிட்டேன் ;) ஏன்னா நானும் மிளகு குழம்பு அனுப்பி ரொம்ப நாள் ஆச்சு... அது தான் வந்திருக்கோன்னு நினைச்சுட்டேன். இது ஈஸியா நல்லா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை உடனுக்குடன் வெளியிடும் அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு அன்பார்ந்த நன்றிகள்!

வனிதா....முதலாவதாக வந்து பதிவிட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!

எனக்கு மிளகு காரம் ரொம்ப பிடிக்கும் இந்த முறைலையும் செய்து சாப்பிட்டு பார்கிறேன் பார்க்க பிக்கில் மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G

ராதாம்மா சுவையான சூப்பரான மிளகு குழம்பு பார்த்ததுமே பசியை தூண்டுதே வாழ்த்துக்கள்ம்மா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

காரசாரமான குழம்பு. எங்க வீட்டிலும் இது போல் தான் செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

ராதாம்மா, அரைச்சு வச்ச மிளகு குழம்பு சூப்பர். முதல் தட்டில் வரைஞ்சிருக்க படமும் சூப்பர். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ராதாம்மா மிளகு குழம்பு ரொம்ப நல்லது உடம்புக்கு நான் கண்டிப்பா 2 நாள்ல ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுறேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ராதாம்மா குழம்பு பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குமா. சுட சுட சாத்தில் போட்டு பிசைந்து அப்பளம் பொரிச்சு சாப்பிட்டால் ஆஹா ஆஹா எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம். அம்மா இதுப்போல் தான் செய்வாங்க.

Very nice and tasty gravy

ஆன்ட்டி சூ....ப்பர் குழம்பு :) பாட்டி ஞாபகம் வந்துடுச்சு :(

யாழி ///ராதாம்மா குழம்பு பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குமா. சுட சுட சாத்தில் போட்டு பிசைந்து அப்பளம் பொரிச்சு சாப்பிட்டால் ஆஹா ஆஹா எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்./// "நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து" மிஸ்ஸாகிடுச்சு

KEEP SMILING ALWAYS :-)

மிளகுக்குழம்பு செய்முறை ஈஸியா, நல்லா இருக்கு. இப்ப இங்க இருக்கும் குளிருக்கு, ரொம்ப சரியா வந்து இருக்கு குறிப்பு!. கூடவே நம்ம யாழினியோட வர்ணிப்புவேற உடனே சாப்பிடும் ஆசையைத்தூண்டுது! :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

இளயா....நன்றி....இதை ஊறுகாய் மாதிரி தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளே போகும்!!

ஸ்வர்ணா...வாழ்த்துக்கு நன்றி...செய்து சாதத்துடன் சாப்பிட்டு பார்..

கௌதமி....இது பாரம்பரியமான பழைய முறை...இதன் ருசி தனிதான்!

வாழ்த்துக்கு நன்றி கல்பனா....உன் பேய்க் கதை படிச்சுட்டு வரைஞ்ச படம்!! நல்லா இருக்கில்ல?!

தனா...பாராட்டுக்கு நன்றி...செய்து பார்.

முகில்...நீ சொன்ன காம்பினேஷன் இதுக்கு பெஸ்ட்...என் வீட்டில் இந்தக் குழம்பு எப்பவும் ஸ்டாக்ல இருக்கும்.

ஸோனா....வாழ்த்துக்கு நன்றிம்மா...

ஹேய் நாகா...இதுவரை என்னை அறுசுவைல அம்மானுதான் கூப்பிட்டிகிட்டு இருந்தாங்க....நீ பாட்டி ஆக்கிடுவ போலருக்கே!? நீ சொன்ன மாதிரி நல்லெண்ணை விட்டு சாப்பிட்டால் 'அஹா! அருமை!'னு சொல்லத் தோன்றும்!

சுஸ்ரீ....உடனே செய்து பார்த்து சாப்பிட்டு சொல்லுங்க...மறக்காதீங்க!!

ராதாம்மா சூடா மிளகு குழம்பு செய்து சூடாக சாப்பிட்டு அதே சூட்டோடு பின்னூட்டமும் கொடுக்க வந்துட்டேன். சூப்பர். சுட்ட அப்பளமும் மிளகு குளம்பும் சூப்பர் காம்பினேஷன். நன்றி ராதாம்மா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிளகு குழம்பு சூப்பர்.. பார்க்கவே நல்லா இருக்கு.. அரைத்து வச்சதுன்னாலே டேஸ்டா தான் இருக்கும்.. நிச்சயம் செய்ய போகிறேன்.. வாழ்த்துக்கள்...

"எல்லாம் நன்மைக்கே"

கவி....நீங்க செஞ்சு பார்த்து பின்னூட்டம் கொடுத்ததுக்கு நன்றி...தினமும் ஹெவியா சாப்பிட்டு நடுவுல ஒரு நாள் இப்படி சாப்பிட்டா அஜீரணமெல்லாம் வராதுனு என் அம்மாவெல்லாம் சொல்வாங்க...அது சரிதான்! சுட்ட அப்பளம்....ரொம்ப சரி...எண்ணையில்லாத சைட் டிஷ் ஆச்சே?
இந்தக் குழம்பை அதிகமா செஞ்சு ஃப்ரிட்ஜில் வெச்சா ஒரு வாரம் வரை நல்லா இருக்கும்.

பாக்கியா செய்து பாரு..பிடிச்சிருந்தா சொல்லு...வாழ்த்துக்கு நன்றி...

ராதாம்மா மிளகு குழம்பு
பார்க்கையிலேயே சாப்பிடனும் போல இருக்கு அப்பிடியே ஷைடிஷா ஒட்டக கறி பிரட்டல் வைச்சு சாப்பிட்டா செம டேஸ்டா இருக்கும் போங்க நானும் செய்து பார்த்துறேன் அம்மா...
வாழ்த்துக்கள் ராதாம்மா இன்னும் நிறைய செய்து அசத்துங்க அம்மா....

வாழ்க வளமுடன்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஆன்டி ஈசியா செய்யகூடிய குறிப்பா தான் கொடுத்திருக்கீங்க. வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் கவிதா....எப்படி இருக்க? செய்து பார்த்து சொல்லு....இந்த ஒட்டகக்கறி, பாம்பு, பல்லிக்கறியெல்லாம் இதுக்கு ஒத்து வராது கைப்புள்ள! நீ சொன்னதே எனக்கு குமட்டுது!

ரேவதி நலமா? வாழ்த்துக்கு நன்றி...

ராதாம்மா உங்க மிளகு குழம்பு செய்து பார்த்தேன் ரொம்ப அருமையா இருந்துச்சு என்னோட அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு நான் இதுவரைக்கும் மிளகு குழம்பு வைச்சதே இல்லை இது தான் முதல் முறை ...சீக்கிரம் சீரணம் ஆகிரும் போல மறுபடியும் நைட்டு 12 மணிக்கு சாப்பாடு இன்னோரு கட்டு கட்டிட்டு தான் தூங்கினேன் போங்க ....
வாழ்த்துக்கள் ராதாம்மா .....வாழ்க வளமுடன்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நாளை இந்த குழம்பு செய்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்கிறேன் .பார்க்கவே சூப்பரா இருக்கு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குரைவான பொருட்களை வைத்து நிறைவான குறிப்பு கொடுத்து இருக்கிங்க.பார்க்கவே சாப்பிட தூண்டுது.வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவிதா....செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி

குமாரி....எப்படி இருக்கீங்க? அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்ததுனு சொல்லுங்க!

ரம்யா....பதிவுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி!

மிளகு குழம்பு செய்து பார்த்தேன்.ROMBA TASTE...BUT COLOUR DHAN BLACKAA VANDHADHU...BUT WE BOTH ENJOY THIS MADAM.SIMPLE & SPICY........

அனிதா...ஆந்திராவாசியா? கலர் கருப்பாக இருந்தால் தவறில்லை. மிளகின் வாகாக இருக்கும். செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி!

ராதா ஆன்ட்டி நேத்து மிளகு குழம்பு செய்தேன் ரொம்ப நல்லா இருந்துது.. இது மாதிரி பாரம்பரியமான சமையல்ல இருக்கற சுவை, மணம் இப்போ இருக்கற சமையல்ல கிடையாது. இதுபோல இன்னும் நிறைய கொடுங்க.. நான் ரொம்ப ஆவலா இருக்கேன்.. குறிப்புக்கு நன்றி ஆன்ட்டி

KEEP SMILING ALWAYS :-)

நீ சொல்றது ரொம்ப சரி நாகா....மசாலா சமையலை விட இந்த சமையல்லாம் சுவை அதிகம்தான். பின்னூட்டத்துக்கு நன்றி நாகா!

உங்க‌ மிளகுக்குழ‌ம்பு நேற்று ல‌ன்ச்கு செய்து சாப்பிட்டாச்சு, சுட்ட அப்பளத்தோடதான்! :) நல்லெண்ணெயும்விட்டு பிசைந்து சாப்பிட சூப்பரா இருந்திச்சி. (வீட்டில் சின்ன கத்திரிக்காய் 3 இருந்தது, நீங்க சொன்னமாதிரி அதையும் வதக்கி போட்டு செய்தேன்). மொத்தத்தில் அருமை!! சூப்பர் குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ....செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி! உங்க ஊர் குளிருக்கு அருமையா இருக்குமே!

ரொம்ப நல்லா இருந்ததும்மா உங்க மிளகு குழம்பு. நிஜமாவே தயிர் சாதத்துக்கு நல்லா மேட் ஆச்சு சூப்பர்.
பொன்னி

பொன்னி...நலமா? மிளகு குழம்பு செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!