பீட்ரூட் பாலக் ரைஸ்

தேதி: February 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

பீட்ரூட் - ஒன்று
பாலக் - 2 கைப்பிடி
அரிசி - ஒரு ஆழாக்கு/டம்ளர்
துவரம் பருப்பு - கால் டம்ளர்
வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு மற்றும் எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க - கடுகு, சீரகம், சிறிது பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை


 

பீட்ரூட்டை சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பாலக் கீரையை ஆய்ந்து, நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசி மற்றும் பருப்பை களைந்து வைக்கவும்.
குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பீட்ரூட் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
இதனுடன் பாலக் கீரையை சேர்த்து கிளறவும்.
இப்போது அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
பின்னர் இதனை மூடி 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான சத்தான பீட்ரூட் பாலக் ரைஸ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் கலர்ஃபுல் ரைஸ்!!! குட்டீஸ்கு ரொம்ப பிடிக்கும். கீரை பிடிக்காத குட்டீஸூம் விரும்பி சாப்பிடும் வகையில் கொடுத்திருக்கீங்க. கலக்கல். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலர்புல் மற்றும் சத்தான ரைஸ்.

ரொம்ப நல்ல குறிப்பு கலர்புல்ல வும் இருக்கு ட்ரை பண்ணி பாக்றேன் வாழ்த்துக்கள்
by ELaya.G

சூப்பரான கலரான அட்டகாசமான ரைஸ் அழகாருக்கு அன்பு கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நாட்களுக்கு அப்பறம் உங்க குறிப்பு வந்திருக்கு போல இருக்கு. அசத்தலா இருக்கு அன்பரசி ரொம்ப கலர்புல்லா சமைச்ச விதத்த பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு செய்து பார்ப்பேன் நிச்சயம் சேவ் பண்ணிட்டேனே.

குறிப்பை இவ்வளவு விரைவில் வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

ஹர்ஷா....உங்கள் ரைஸ் சூப்பரா இருக்கு.....இப்பவே செய்யணும் போலருக்கு....கன்டிப்பா செய்து பார்த்து சொல்லுகிறேன்!

வனிதா,
முதலாவதாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி.இது குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும்.இது நான் சிறு வயதில் பால்வாடியில் சாப்பிட்ட சத்துணவு சாதம்.இப்போது என் மகனுக்கு செய்து தருகிறேன். :-)

கௌதமி,
பதிவுக்கு மிக்க நன்றி.

இளையா,
செய்து பார்த்து சொல்லுங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

ஸ்வர்ணா,
நலமா?கண்டிப்பா செய்து பாருங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

யாழினி,
ஆமாம்.பல நாட்கள் கழித்து அனுப்பிய குறிப்புதான்.விருப்ப பட்டியலில் சேர்த்துட்டீங்களா? நன்றி. :-) கண்டிப்பா செய்து பாருங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

ராதா,
உங்க வீட்டு குட்டீஸ்க்கு செய்து கொடுங்க.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிங்க.

அன்பரசி,
பீட்ரூட் பாலக் ரைஸ் கலர்ஃபுல்லா அருமையா இருக்குங்க. நான் வெறும் பீட்ரூட் மட்டும் போட்டு புலாவ் செய்வேன். இது பருப்பு, கீரை எல்லாம் சேர்த்து இன்னும் சூப்பர்!. எல்லாம் கைவசம் ரெடியாவும் இருக்கு, விரைவில் செய்துபார்த்து சொல்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி சுஸ்ரீ.கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க. :-)

harshavirku வணக்கம். netre seidhu parthen. beetroot palak rice miga nandraga irundhadhu. kuripuku mikka nandri.

கலர்ஃபுல் ரைஸ்.. நல்ல சத்தான குறிப்பும் கூட.. கீரை சேர்த்தால் கண்டிப்பா நாம விடுவோமா..செய்து பார்த்திடறேன்.. பிரசண்டேஷன் ரொம்ப அழகு..உங்களை போல :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்ப‌ர‌சி,

இன்னைக்கு லன்ச் பாக்ஸ்க்கு உங்களோட பீட்ரூட் பாலக் ரைஸ்தான். செய்ததும் பேக் பண்ணும்போதே கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தேன், டேஸ்ட் அருமையா இருக்குங்க. நல்லதொரு குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சௌமியா,
வணக்கம்.ரைஸ் செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.உங்க பதிவு பார்த்து மகிழ்ச்சியா இருக்கு.

ரம்ஸ்,
எனக்கும் கீரைனா ரொம்ப பிடிக்கும்.
//பிரசண்டேஷன் ரொம்ப அழகு..உங்களை போல :)//
அப்படினா,ப்ரசன்ட்டேஷன் நல்லா இல்லையா??!! ;-)

சுஸ்ரீ,
இந்த ரைஸ் என்னோட ஃபேவரிட்.இதில் இருக்கும் பீட்ரூட் சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதற்குள் குறிப்பை செய்து பார்த்து பதிவிட்டு சந்தோஷப்படுத்திட்டீங்க.ரொம்ப நன்றி சுஸ்ரீ.

காய்கறிகளில் ரொம்ப பிடிச்ச் காய் பீட் ரூட், கீரை வகைகளில் பாலக்\

வெஜ் பிரியாணி செய்தால் பீட்ரூட்டும் சேர்த்து தான் செய்வேன்.

இரண்டும் சேர்த்து செய்து அசத்திட்டீங்க
அருமையான் பிரஷன் டேஷன்

Jaleelakamal

ஜலீலா அக்கா,
தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும்.உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.எனக்கும் பீட்ரூட்னா ரொம்ப பிடிக்கும்.உங்க பதிவுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.