மீன் குழம்பு - 2

தேதி: July 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மீன் - 500 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
புளிக்கரைசல் - 2 கப்
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி


 

மீனை சுத்தம் செய்து வெட்டி கொள்ளவும். வெங்காயம், தக்காளியை அரிந்து கொள்ளவும்.
புளிக்கரைசலில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம் மற்றும் சோம்பை போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளியை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதங்கியவுடன் புளிக்கரைசலை இரண்டு கப் தண்ணீருடன் ஊற்றவும். நன்கு கொதி வந்தவுடன் மீனை போடவும்.
5 நிமிடம் ஆனவுடன் இறக்கி வைத்து விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சகோதரி வாணி ரமேஷ்

நேற்று இந்த மீன் குழம்பு செய்தேன் நன்றாக இருந்தது என்று என் மனைவியிடம் சொன்னதும் புதுசேரியில் இருந்து புகைவந்தது.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126