பஜியா (Bajiyaa)

தேதி: February 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மேல் மாவுக்கு:

1. மைதா - 2 கப்
2. உப்பு
3. எண்ணெய் - 1 தேக்கரண்டி

ஸ்டஃபிங் செய்ய:

4. ஸ்மோக்டு டூனா மீன் - 250 கிராம்
5. வெங்காயம் - 3
6. பச்சை மிளகாய் - 2
7. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
8. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - சிறிது
10. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
11. சர்க்கரை - 4 தேக்கரண்டி
12. உப்பு


 

நீரை கொதிக்க வைத்து, மைதா மாவில் எண்ணெய் உப்பு கலந்து தேவையான நீர் விட்டு பிசைந்து வைக்கவும்.
மீனை பொடித்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதில் பொடி வகை எல்லாம் சேர்த்து மீனும் சேர்த்து பிரட்டவும்.
கடைசியாக உப்பும், சர்க்கரையும் சேர்த்து 5 நிமிடம் கிளறி எடுக்கவும்.
மாவை மெல்லியதாக திரட்டி சமோசா செய்வது போல் செய்து மீன் கலவை சிறிது உள்ளே வைக்கவும்.
மேலே உள்ள மடிப்பை ஒட்ட சிறிது மைதாவை நீரில் கலந்து தடவவும்.
இதே போல் எல்லா மாவையும் செய்து ரெடியாக வைத்த பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சமோசா போல் பொரித்து எடுக்கவும்.
சுவையான பஜியா தயார்.


இது நம்ம ஊர் சமோசா போல மாலத்தீவில் மிக பிரபலம். இதில் ஸ்டஃபிங் செய்யும் போது ரம்பா இலை சேர்த்து செய்யலாம். சமைத்த பின் இலைகளை நீக்கி விட வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

விதவிதமான குறிப்புக்கள் தரும் பன்னாட்டு சமைய்ல் கலை வல்லுனர் வனிதாவுக்கு பாராட்டுக்கள். குறிப்பின் பெயரைப்பார்த்தாலே வனிதா தான்னு தெரிய ஆரம்பிச்சிருச்சு. வாழ்த்துக்கள்.

ஹலீமா

அன்புடன்,
ஹலீமா

மிக்க நன்றி. எங்க பன்னாட்டு சமையல்... இப்ப தான் மாலத்தீவில் துவங்கி இருக்கேன் :) இனி நீங்க சொன்ன மாதிரி பன்னாட்டு சமையல் கொடுக்க முயற்சி செய்யறேன் ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி ஹலீமா. உங்கள் எல்லாரோட அன்பும் இருக்கும் போது கண்டிப்பா இன்னும் நிறைய செய்யலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா