பான் போகிபா - 2

தேதி: February 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

ப்ரெட் துண்டுகள் - 5
கண்டன்ஸ்டு மில்க் - 150 மில்லி
முட்டை - ஒன்று
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
பொடித்த நட்ஸ் - தேவைக்கு
வெண்ணெய் - சிறிது


 

ப்ரெட் துண்டுகளை ஒன்று இரண்டாக நறுக்கி போடவும். முட்டையை நன்றாக அடித்து வைக்கவும். அவனை 200 Cல் முற்சூடு செய்யவும்.
ப்ரெட் துண்டுகளோடு கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை மற்றும் தேவையான நீர் விட்டு பிசையவும். (பொங்கல் பதம்)
இத்துடன் அடித்த முட்டை மற்றும் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
பேக் செய்ய போகும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி நட்ஸ் தூவி தயார் செய்யவும்.
முட்டை கலவையை நன்றாக கலந்து இந்த ட்ரேவில் ஊற்றி அவனில் 30 - 40 நிமிடம் பேக் செய்யவும்.
சுவையான பான் போகிபா தயார்.

பேக் செய்யும் போது மேலே எழும்பி வந்து வெளியே எடுத்த பின் சற்று அழுந்தி விடும். மேலே நன்றாக நிறம் மாறி வரும் போது உள்ளே ஒரு கத்தியை விட்டு எடுத்து பார்த்தால் வெந்திருக்கிறதா என தெரியும். உங்களுக்கு விருப்பமான வடிவில் ட்ரே பயன்படுத்தலாம். பயன்படுத்தும் ட்ரே, அளவு போன்றவற்றுக்கு ஏற்ப பேக் செய்யும் நேரம் மாறுபடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதாக்கா சூப்பர், பான்போகிபா. முதல் குறிப்பே செய்யனும்னு நினைச்சேன். டைம் கிடைக்கல. இதையும் சேர்த்து ஒரு நாள் ட்ரை பண்ணி பார்க்கிறேன். தொடர்ந்து கலக்குங்க. வாழ்த்துக்கள்.

வனி, ஈசியா கிடைக்க கூடிய பொருளை வைத்து வித்யாச சுவையில் பான் போகிபா தந்திருப்பது நன்றாக உள்ளது. இதை நான் இங்கேயே ட்ரை பண்ணிடறேன். வாழ்த்துக்கள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க, பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க குட்டீஸ்கு பிடிச்சுதான்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி.. பார்க்கவே சூப்பரா இருக்கே.. ஈஸியா கிடைக்க கூடிய பொருள் தான்.. நிச்சயம் செய்து பார்த்து சொல்றேன்.. பான் போகிபோ பேருக்கு ஏத்த மாதிரி நல்லா இருக்கு..

"எல்லாம் நன்மைக்கே"

மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து பதிவிடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதென்ன பார்ட் டூ சமையலுக்கும் போட்டாச்சா. பான் போகிபா பார்ட் ஒன்னு செய்தாச்சு இத செய்ய எனக்கு ஓவன் தான் பிரச்சனை எனக்கு எப்படி ஓவன் ஒன் பண்ணுறதுன்னு கூட தெரியாது பரவால பார்ட் ஒண்ணுல இதை ட்ரை பண்ணி பார்க்குறேன் வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

very nice vanitha mam.unga samayal kalaiku naanum fan.

முதல் குறிப்பிலே சொல்லி இருந்தீங்க நிறைய போகிபா இருக்குனு. முட்டை சேர்த்த இந்த பான் போகிபா கேக் மாதிரி நல்லா இருக்கு. இது யார் செய்தது. அவன் கிடையாது வனி. பான் போகிபா 1 ல் செய்ததது போல் செய்யலாமா.

பார்க்கவே சூப்பரா இருக்கே

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி :) தாராளமா அடுப்பிலேயே செய்யலாம். நல்ல வரும். ட்ரை பண்னிபார்த்து சொல்லுங்க. இன்னும் ஏகப்பட்ட போகிபா இருக்கு... வருசையா வரும். 2, 3, 4னு... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி தோழி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. உங்க அன்புக்கு மீண்டும் நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. வனிதா தான் செய்தது. இப்பலாம் அவங்களை குறிப்பு கேட்டுட்டு நான் செய்துடுறது. செய்துட்டு தான் அவங்களை எப்படி இருக்குன்னு கேட்குறது. :) தாராளமா அடுப்பிலேயே அவன் இல்லாம செய்யலாம். செய்து பார்த்து சொல்லுங்க வினோ. நிச்சயம் பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. :) ட்ரை பண்னி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனி மலே போய் வித விதமான பெயர்களில் சமையல் செய்து கலக்குறீங்க. வாழ்த்துகள்....

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

என்ன செய்ய இத்தனை முறை வந்தப்போ நேரம் இல்ல. இப்போ லாங் ஸ்டே... டைம் இருக்கு... அதான். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு எங்க இருந்து இப்படி புது புது பெயர் கிடைக்குது பா.
செய்து பாத்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்றேன்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

பேரு நான் வைக்கலங்க... நம்ம ஊர் இட்லி தோசைக்கு யாரோ வெச்ச மாதிரி இங்கையும் யாரோ வெச்சிருக்காங்க ;) மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிடைக்க கூடிய பொருட்களை வைத்து அருமையாக செய்து இருக்கிறீர்கள். சிம்பிள் டிஷ்

ஐய்ய்... வனி, குட்டீஸ்களுக்கு ஏற்ற குறிப்பு!

பான் போகிபா,
'போப்பா, நான் போகமாட்டேன்பா' என்று மனதில் நிற்கிறது!! :)

ரொம்ப ஈசியா, பார்க்க யம்மியா இருக்கு வனி! :) வாழ்த்துக்கள்!
தேவையான எல்லா ஐய்ட்டமும் ரெடியாவும் இருக்கு, உடனே செய்திடறேன். ஓக்கே வனி, உங்க பேக்கிங் டிஷ் சுமார் என்ன அளவுன்னு (dimensions) சொல்லுங்க, அதை வைத்துதான் என்னுடைய ட்ரேக்கு எவ்வளவு நேரம் என்று கணக்கு பண்ணனும். என்னோடது 8 x 8 ஸ்கொயர் டிஷ்!

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. டைமன்ஷன்லாம் தெரியாதுங்க... அது மேல ஒரு சைஸ், கீழ ஒரு சைஸ்... பூ வடிவா இருக்கும். நீங்க அதெல்லாம் கவலைபட வேண்டாம். நான் கொடுத்திருக்கும் சூடே வைங்க. ஆனா 30 நிமிடத்துக்கு மேல அடிக்கடி செக் பண்ணுங்க.... அது போதும். நல்லா வரும் பயப்படாதீங்க. இது கேக் போல சொதப்பாது. :) செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
பான் போகிபாவை விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு.கன்டன்ஸ்ட் மில்க் வாங்கியதும் செய்யணும்.சூப்பர் குறிப்பு.வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி. செய்து பார்த்து குட்டீஸ்க்கு பிடிச்சுதான்னு மறக்காம சொல்லுங்க :) காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி வித்தியாசமான பேர் எல்லாம் செய்து காண்பித்து அசத்துறிங்க வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

புதுசு இல்லைங்க... ஏற்கனவே தவா முறை ஒன்னு கொடுத்தனே ;) மிக்க நன்றி குமாரி. இப்போலாம் அடிக்கடி உங்களை பார்க்க முடியலயே... பிசியா? வீடு கட்டும் வேலை முடிஞ்சதா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்.. குறிப்பும், பேரும் வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு.. செய்யாமல் விட்ருவேனா? ஈஸியான செய்முறை.. மாலே ஸ்பெஷலா .. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக்க நன்றி. ஆமாம் மாலத்தீவு ரெசிபி தான். அவசியம் செய்து பார்த்து சொலுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பான் போகிபா சூப்பர் வனி செய்து பார்த்திட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி. அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,

பான் போகிபா ஈவினிங் செய்திட்டேன். ரொம்ப‌ சூப்ப‌ரா வந்த‌‌து வ‌னி! எல்லாம் க‌லந்து என் ட்ரேயில் போட்டால், ரொம்ப‌ மெல்லிய‌தாக‌ ஒரு லேய‌ர்தான் வந்த‌‌து. (அடுத்தமுறை ரெஸிப்பியை டபுள் பண்ணிட வேண்டியதுதான்!, இது எனக்கு நானே சொல்லிக்கொண்டது ! :)) அத‌னால், அவ‌னில் வைத்துவிட்டு அப்ப‌ப்ப‌ செக் ப‌ண்ணிட்டே இருந்தேன். ஒரு 20 நிமிட‌ங்க‌ளில் ரெடியாகிடிச்சி! 'ம்ம்.ம்ம்... இட்ஸ் ரிய‌லி ய‌ம்மி அம்மா!' என் ப‌ச‌ங்க‌ கொடுத்த‌ க‌ம‌ண்ட்ஸ்! :) ந‌ன்றி வ‌னி!

அன்புடன்
சுஸ்ரீ

வனி அடங்கமாட்டீங்களா? இப்படி பண்ட் கேக் மாதிரி எல்லாம்....விட்டா அழுதிடுவேன்! அசத்தல்.

இன்று மாலை செய்தேன். “ Hm...Very good mommaa...டைய்லி செஞ்ஜி தாங்க!!” இது தான் என் மகளின் கம்மெண்ட். படம் அனுப்பிட்டேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக்க நன்றி. :) எனக்கு எப்பவுமே ட்ரே அளவெல்லாம் பர்த்து செய்து பழக்கம் இல்லை, அதனால் தான் சரியா ட்ரே அளவு சொல்ல தெரியல. இவர் அத்தனை சுலபமா பேக்கிங் ட்ரேலாம் வாங்கி தர மாட்டார், முக்கியமா பெருசா வாங்க மாட்டார், அவருக்கு பிடிக்காதுன்றதால. குட்டீக்கு பிடிச்சது பெரிய மகிழ்ச்சி எனக்கு. என் செல்ல குட்டி ஆச்சே... :) தேன்க்யூ சொன்னேன் ஆண்ட்டின்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அதென்ன பண்ட் கேக்??? புரியல :(

செய்தாச்சா??? குட்டீஸ்கு பிடிச்சா போதும், நீங்க சாப்பிடலன்னா கூட எனக்கு கவலையே இல்லை :) டெய்லி செய்து கொடுங்க... செய்யலன்னு தெரிஞ்சா நாங்கலாம் போர் கொடி பிடிப்போம். படம் இன்னும் பார்க்கல, பார்ட்டி வேலையில் பிசி. பார்த்துட்டு மெயில் பண்றேன்.

- வாவ்!!! இப்ப தான் பார்த்தேன் போட்டோ... சோ கியூட்டா செய்திருக்கீங்க. தேன்க்யூ சோ மச் லாவண்யா... அப்படியே அச்சு அசப்பில் இந்த ஊர்காரங்க செய்வது போலவே வந்திருக்கு. அப்படியே குஷி தாங்கல எனக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிக்கா பான் போகிபா சூப்பர்,. நேத்து தான் ட்ரை பண்ணேன். நல்லா சூப்பரா, டேஸ்டா வந்துட்டுது. மதியம் பிரியாணியும், ஈவ்னிங் பான் போகிபாவும் செஞ்சு சாப்பிட்டு டயர்ட் ஆகிட்டதால நேத்தே பின்னூட்டம் கொடுக்க முடியல. சாரி.என் ஹஸ் தான் பாவம் . ம் பேமிலிய கூட வச்சிகிட்டதுக்க்கு இப்படியா என் வெயிட்ட ஏத்துவன்னு ஒரே புலம்பல். இருந்தாலும் இவ்ளோ டேஸ்டான சாப்பாடு எல்லாம் கொடுத்துட்டே இருந்தா நாங்க எப்படி வாய கட்டிட்டு டயட்ல இருக்க ஆசை படுறது இன்னைக்கு மட்டும், இன்னைக்கு மட்டும்னு ஒரே புதுசு, புதுசா செஞ்சு சாப்பிட்டு இருக்கேன். தாங்க்ஸ் அக்கா சம டேஸ்ட் ரெசிபி. .

மிக்க நன்றி நசீம். டயட்டா??? அறுசுவை மக்களுக்கு அதெல்லாம் கூடாதே ;) செய்து பார்த்து பிடிச்சுதுன்னு நீங்க சொன்னதும் எனக்கு அப்படியே மனசு பறக்குது நசீம்... :) ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் நசீம். மீண்டும் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த குறிப்பை நான் பல முறை செய்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் செம ஹிட் தான் போங்க. ஒரு முறை வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருக்கு அன்று பிறந்த நாள் என்று எதேச்சையா தெரிய வர சாப்பாடு சாப்பிடும் போதே இதை ரெடி செய்து கட் பண்ண வைத்தோம். அவருக்கு மிகவும் பிடித்தது. ஒரு முறை புதியதாய் கல்யாணம் ஆன தம்பதியை விருந்துக்கு அழைத்திருந்த போது செய்து. அவளுக்கு ரொம்பவே பிடித்தது. வேறு ஒருவர் வீட்டுக்கு எங்கள் இருவரையும் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அங்கே சென்றும் அதையே செய்து தர சொல்லி சாபிட்டாள். மீதத்தை எடுத்து சென்று அலுவலகத்தில் உள்ள நண்பர்களுக்கு கொடுத்தாளாம். அவர்களும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இந்தியர்கள் அல்ல :) மீண்டும் ஒருமுறை ஒரு பாட்லக்குக்கு செய்தேன். வேறு இரண்டு கேக் இருந்தபோதும் இது காலி ஆனதில் எனக்கு பெருமை அது எல்லாம் உங்களையே சேரும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இத்தனை முறை செய்து இவ்வளவு நல்ல பேர் வாங்கி கொடுத்திருக்கீங்க இந்த ரெசிபிக்கு... நினைச்சாலே எனக்கு மகிழ்ச்சியா இருக்குங்க. ஒவ்வொரு முறையும் பக்குவம் மாறாம செய்து அசத்திருக்கீங்க. கலக்குங்க. டைமிங்ல செய்து கொடுத்தீங்க பாருங்க... அங்க நிக்குறீங்க. :) ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி லாவி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா