ப்ராக்கலி பராத்தா

தேதி: February 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

ப்ராக்கலி (Broccoli) பூக்கள் - 1 1/2 கப்
கோதுமை மாவு - 2 கப்
ஃப்லாக்ஸ் சீட் (Flax seeds) பவுடர் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
சீரக்கத்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
த‌யிர் - 3 மேசைக்க‌ர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் ப்ராக்கலி பூக்களை தண்ணீரில் கழுவி எடுத்து, க்ரேட்டர்/ ஃபுட் ப்ராசஸ்சர் கொண்டு துருவி வைக்க‌வும். இஞ்சியை தோலை நீக்கிவிட்டு, ப‌ச்சை மிள‌காயுடன் சேர்த்து க்ரேட் செய்து (அ) மிக்ஸியில் போட்டு தண்ணீரில்லாமல் ட்ரையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
துருவிய காய்கறிக்கலவை எல்லாவ‌ற்றையும் ஒன்றாக‌ப்போட்டு, அத‌னுட‌ன் உப்பு, சீர‌க‌த்தூள், க‌ர‌ம் ம‌சாலா சேர்த்து, க‌லந்து விட‌வும். ஒரு சில‌ நிமிட‌ங்க‌ளில் ப்ராக்க‌லி பார்க்க லேசாக‌ ஈர‌ப்ப‌தம் வந்து இருக்கும்.
இதில் கோதுமைமாவு, ஃப்லாக்ஸ் சீட் ப‌வுட‌ரைப் போட்டு, த‌யிர் விட்டு அழுத்தி பிசைய‌வும். தேவைப்ப‌ட்டால், கொஞ்ச‌ம் த‌ண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ள‌வும். பிசைந்த மாவை ஒரு ஈர‌த்துணியால் மூடி, ஒரு அரை ம‌ணி நேர‌ம் வைக்க‌வும்.
பிற‌கு மாவை பெரிய‌ எலுமிச்சை அள‌வு உருண்டைக‌ளாக‌ எடுத்து உருட்டி, மிகவும் மெல்லியதாக இல்லாமல், லேசாக தடிமனான பராத்தாக்களாக தேய்த்து எடுக்கவும்.
இதை சூடான‌ த‌வாவில் போட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு வேக விடவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பிபோட்டு, அடுத்தப்பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
இப்போது சூடான‌ சுவையான‌ ப்ராக்க‌லி ப‌ராத்தா த‌யார். இதற்கு தொட்டுக்கொள்ள என்று வேறு எதுவுமே தேவைப்படாது. அப்படியே தனியாகவே சாப்பிட நன்றாகவே இருக்கும். ஒரு கப் தயிருடன் பரிமாறி சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

ஃப்லாக்ஸ் சீட்ஸ் உணவில் சேர்ப்பது, அதிலுள்ள‌ ந‌ல்ல‌ ஃபைப‌ர், ஒமேகா 3 ச‌த்துக்காக. இது இல்லையென்றால், வெறும் கோதுமை மாவை மட்டுமே வைத்தும் ப‌ராத்தாக்க‌ள் செய்யலாம். சுவையில் பெரிதாக ஏதும் மாற்றமிருக்காது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Very nice recipe, i will try your recipe.regards.g.gomathi.

சுஜாதா, ப்ராக்கலியை வைத்து பராத்தாவா? ஆச்சர்யம் தான் பா. நம்ம சுஜாவால முடியாததா? ;) நிச்சயம் செய்து பார்க்கறேன் பா. ஒரே ஒரு டவுட் இந்த ஃப்லாக்ஸ் சீட்ஸ் தான். நம்ம ஊர்ல இது கிடைக்குமோ? கிடைச்சா அதையும் தேடி பிடிச்சு போட்டுடறேன். வாழ்த்துக்கள் சுஜா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நேற்று உங்க ப்ரொக்கலி மசாலா செய்தேன்,ரொம்ப நல்லா இருந்தது.பொதுவா ப்ரொக்க்லி எப்படி செய்தாலும் டேஸ்டியாவே இருக்காது,ஆனால் உங்க குறிப்பு எங்க வீட்டில் ஹிட்.இந்த பராத்தவையும் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

ப்ரோக்கோலியை சப்பாத்தியில் சேர்த்து ரொம்ப அருமையா செய்து இருக்கீங்க.. சத்தான உணவும் கூட.. ப்ரோக்கலி வீட்டில் இருக்கு.. இன்னைக்கு செய்திட்றேன்..

"எல்லாம் நன்மைக்கே"

அருமை அருமை!!! படமும் அருமை குறிப்பும் அருமை. ப்ரொக்கோலி பலருக்கும் என்ன செய்வதுன்னே தெரியாது... உங்க குறிப்புகள் வித்தியாசமா அதே சமயம் சுவையா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ ப்ராக்கலியில் பராத்தாவா பார்க்கவே அழகா இருக்கே கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்ப்பா.
கல்ப்ஸ் சொன்ன டவுட் தான் எனக்கும்?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஃப்ளாக்ஸ் சீட்ஸ் (Flax seeds) என்றால் என்ன? எங்கு கிடைக்கும்?

ஜெயா

ப்ராக்கலி இங்க பார்த்தது கூட கிடையாது. கிடைத்தால் நிச்சயம் செய்து பார்க்கிறேன் நல்லா இருக்கு உங்க குறிப்பு.

Very nice and different recipe... Thanks for sharing...

உடனுக்குடன் குறிப்பை வெளியிட்டு ஊக்கப்படுத்தும் அட்மின் & அறுசுவை நண்பர்களுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வ‌ருகைக்கும் பாராட்டிற்கும்‌ ந‌ன்றி!
அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க கோமதி.

அன்புடன்
சுஸ்ரீ

கல்பனா,
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றி! போங்க கல்ப்ஸ், ஆனாலும் நீங்க என்னை ரொம்பதான்... புகழறீங்க! :) கேரட் போட்டு பராத்தா செய்திருக்கேன். சோ, யொய் நாட் ப்ராக்கலி?! என்று ஒரு சின்ன‌ முயற்சி. எங்க எல்லாருக்கும், குறிப்பா என் பசங்க இரண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது! :) ட்ரை பண்ணிப்பாருங்க கல்ப்ஸ். குட்டீஸ்க்கும் பிடிச்சா நல்லதாச்சே.

ஃப்லாக்ஸ் சீட்ஸ் இந்தியாவில் கிடைக்கும், நான் அங்க வந்தப்ப வாங்கியிருக்கேன் (சென்னையில). அதை பொடித்து போட்டுக்க வேண்டியதுதான். இங்கே சமீபத்தில் பவுடராகவே கிடைக்கவே ரொம்ப குஷியா எடுத்துட்டு வந்திட்டேன், இன்னும் வேலை மிச்சமாச்சேன்னு! :)

அன்புடன்
சுஸ்ரீ

வருகைக்கும் பாராட்டிற்கும் ரொம்ப நன்றி ரீம்.
ப்ராக்கலி மசாலா செய்திங்களா?! மசாலா வீட்டில ஹிட் ஆனதில ரொம்ப சந்தோஷம். :) இதையும் ட்ரை பண்ணிப்பார்த்து சொல்லுங்க ரீம்.

அன்புடன்
சுஸ்ரீ

வ‌ருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க ந‌ன்றி!
ஆமாம், ப்ராக்கலியில் கால்சியம் முதற்க்கொண்டு நிறைய நல்ல சத்துக்கள் இருக்கு. அவசியம் செய்து பார்த்து பிடித்திருந்ததான்னு சொல்லுங்க. ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க‌ பாராட்டுக்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் ரொம்ப‌ ந‌ன்றி வ‌னி!.
ப்ராக்கலியை பொருத்த‌வ‌ரை என்ன‌ செய்ய‌ற‌துன்னு குழ‌ப்ப‌மே கிடையாது எங்க‌ வீட்டில! :) நிறைய‌ மெத்த‌ட்ல‌ செய்வேன். அதில‌ இதுவும் ஒண்ணு! :)
உங்க‌ளுக்கு முடியும்போது செய்துப்பார்த்து சொல்லுங்க‌ வ‌னி! ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி சுவ‌ர்ணா!. அவ‌சிய‌ம் செய்துப்பார்த்து சொல்லுங்க.

ஃப்லாக்ஸ் சீட்ஸ் இந்தியாவில் கிடைக்கிற‌து. நான் 2008ல் போன‌ப்போதே பார்த்து வாங்கியிருக்கேன்பா. நான் சென்னையில‌ Nuts n Spices என்ற கடையில் வாங்கினதா நியாபகம். அங்க, இல்லைன்னா நீல்கிரிஸ் போன்ற‌ சூப்ப‌ர் மார்க்கெட்டில் பாருங்க‌, கிடைக்க‌ வாய்ப்பிருக்கு. ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஃப்லாக்ஸ் சீட் ஒரு குறைந்த கார்போஹைட்ரேட் ஃபுட். இதில் நிறைய‌ ஃபைப‌ர், ஒமேகா 3 ஆசிட் எல்லாம் இருக்கு. கூடவே விட்டமின் B, மெக்னீசியம் போன்ற வேற சத்துக்களும் அடங்கி இருக்கு. இதுப்பற்றி இன்னும் நிறைய‌ தெரிஞ்சிக்க‌, நெட்டில் போய் ஃப்லாக்ஸ் சீட் என்று டைப் ப‌ண்ணிப் பாருங்க‌ள். எங்கே கிடைக்கும் என்ற‌ விஷ‌ய‌மெல்லாம் மேலே சொல்லியிருக்கேன். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வ‌ருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க ந‌ன்றி வினோ!
அச்சச்சோ... அங்க ஈசியா கிடைக்காதா?! சரி, உங்க‌ளுக்கு கிடைக்கும்போது செய்துப்பார்த்து சொல்லுங்க‌. ந‌ன்றி!.

---

வருகைக்கும் பாராட்டிற்கும் ந‌ன்றி சோனாஞ்ச‌லி! (பெய‌ர் ச‌ரியா தோழி?!!)

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,
ப்ரோக்கலி பராத்தா சூப்பரா இருக்கு.குட்டீஸ்க்கு காய்கள் கொடுக்க நல்ல ஐடியா.ஃப்லாக்ஸ் சீட் சேர்த்திருப்பது புதுமையா இருக்கு.கைவசம் ப்ரோக்கலியும் இருக்கு.செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் சுஸ்ரீ.

மிகவும் அருமையான குறிப்பு. புதுமையான குறிப்பு. flax seed எல்லாம் சேர்த்து புதுச ட்ரை பண்ணி இருக்கீங்க.

ஆரோக்கியமான குறிப்பு ;) நானும் சப்பாத்தியில் ஃப்ளேக்ஸ் சீட் போட்டு தான் செய்வேன்.. வாழ்த்துக்கள்.. சூப்பர் கிரியேட்டிவிட்டி ..டயட் சப்பாத்தி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி அன்பரசி!.
குழந்தைகள் எப்படியாவது காய்கள் சாப்பிட்டால் நமக்கு கண்டிப்பா குஷிதான் இல்லையா?! அவ‌சிய‌ம் செய்துப்பார்த்து சொல்லுங்க. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வ‌ருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க ந‌ன்றி கௌதமி!

அன்புடன்
சுஸ்ரீ

ரம்ஸ்,

பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி! :) ஓஓ... நீங்களுமா?! நானும்கூட சப்பாத்தியில எப்பவும் ஃப்லாக்ஸ் சீட் சேர்த்தேதான் செய்யறது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அருமை கண்டிப்பா செய்து பார்க்கணும்

தளிகா,
மிக்க நன்றி! கண்டிப்பா செய்துப்பார்த்து சொல்லுங்க! :)

அன்புடன்
சுஸ்ரீ