கத்தரிக்காய் பருப்பு

தேதி: July 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 500 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
துவரம் பருப்பு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கருவடாம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலை
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சையளவு


 

கத்தரிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்து கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.
பிறகு கத்தரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதங்கியவுடன் 2 கப் தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும்.
பருப்பை குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். கத்தரிக்காய் வெந்தவுடன் வேகவைத்த அனைத்தையும் புளி சேர்த்து கடைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கருவடாமை போடவும்.
பிறகு கறிவேப்பிலை சேர்த்து கடைந்தவற்றை அதில் சேர்க்கவும். நன்கு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்