எண்ணெய் கத்தரிக்காய்

தேதி: February 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (22 votes)

 

பிஞ்சு கத்தரிக்காய் - அரைக் கிலோ
தேங்காய் துருவல் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
புளி - எலுமிச்சை பழம் அளவு
முந்திரி பருப்பு - 5
எண்ணெய் - தாளிக்க , வறுக்க
வறுத்து அரைக்க:
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடலை,உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 பூண்டின் அளவு
தாளிக்க:
கடுகு - சிறிது
கடலை, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம், வெந்தயம் - தலா அரை தேகரண்டி
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2


 

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயின் பாதிக் காம்பை மட்டும் வெட்டி நான்காக நறுக்கி தண்ணீரில் போடவும்.
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.
பின் பாதி தக்காளி, பாதி வெங்காயத்தை போட்டு வதக்கவும்
ஆறியதும் தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து அரைக்கவும்.
பின் மீண்டும் கடாயில் 2 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து, சிறிது உப்புடன் மீதமுள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
5 நிமிடம் கழித்து அரைத்த விழுதினை தூள் வகைகளுடன் சேர்த்து ஒன்று சேர பிரட்டி, நீர் தெளித்து மூடி வைக்கவும்.
பச்சை வாசம் போனதும், புளிக்கரைசலை சேர்க்கவும்.
நன்கு எண்ணெய் பிரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரோ சூப்பர்!! உங்க குறிப்பு சில நிறைய பொருட்கள் சேர்க்க வேண்டி இருக்கும், ஆனா அது தரும் வாசம்... அப்பப்பா... சூப்பர். இதையும் ட்ரை பண்ணிடுறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கும் போதே டேஸ்ட் பண்ண ஆசையா இருக்கு. படங்கள் அருமையாக வந்திருக்கு. விருப்பட்டியல் சேர்த்தச்சு

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

வனி
ரொம்ப நன்றி வனி.. கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க..

கௌதமி
ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கடைசி படம் ‘நச்’... வாழ்த்துக்கள்..

வித விதமா வருது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்போலாம் இந்த முறையும் ரொம்ப நல்லா இருக்கு சீக்கிரமே செய்து பார்த்து பின்னூட்டம் தரேன் வாழ்த்துக்கள் by Elaya.G

அடடடா எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ஆளை சுண்டி இழுக்குதே :)
ரம்ஸ் சூப்பர்ப்பா.கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எண்ணெய் கத்திரிக்காய் ரொம்ப நல்ல இருக்கும் போல முந்திரிபருப்பு எல்லாம் சேர்த்து அரைத்து போட்டு இருக்கிங்க அடுத்த முறை இந்த மாதிரி பண்ணி பார்கிறேன் நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ரம்ஸ், எண்ணெய் கத்தரிக்காய் ... வாய்ல கேன் கேனா ஜொள்ளு ஊத்த வைக்குது. சேர்த்திருக்கும் பொருளை வச்சு பார்க்கும் போதே ருசியை உணர முடியுது பா. காதலாவது, கத்தரிக்காயாவதுன்னு சொல்வாங்க. ஆனா எனக்கு எப்பவுமே கத்தரிக்காய் மேல் காதல் உண்டு. அடுத்த முறை பிஞ்சு கத்தரிக்காய் மாட்டினா, நிச்சயம் இந்த குறிப்பு செய்துடறேன். ஊருக்கு கிளம்பறதுக்குள்ளே அவசர அவசரமா குறிப்புகளா தள்றீங்க போல..;) ம்ம்.. தள்ளுங்க. எப்படியோ எங்களுக்கு நாக்குக்கு வக்கணையா வந்தா சரிதான்.. வாழ்த்துக்கள் ரம்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரம்யா
எண்ணை கத்திரிக்காய் சூப்பரா இருக்கு. அப்படியே ஒரு பார்சல் பிளீஸ்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

hai ramya
it looking also temting me.so long days after u remember my mother because i like this curry my husband he won't eat brinjal.when ever i going to my home frist i tell my mother to do this curry.sure i will try and tell u
thanks
unn valkai unn kaiyeel

எண்ணெய் கத்திரிக்காய் சூப்பர்!! சும்மா அரைச்சிவிட்ட‌ ம‌சாலா வாச‌னை ஆளைத்தூக்குது, சுவையும் அலாதியாத்தான் இருக்கும்!
க‌டைசிப்ப‌ட‌ம் படு அம‌ர்க்க‌ள‌மா இருக்கு! (அந்த கோல்ட் ரிம், வொயிட் கலர் பவுல் -‍ முக‌ப்பில் பார்த்த‌தும், நம்ம வ‌னி‍ன்னு நினைச்சேன். :)) கலக்கிட்டிங்க. வாழ்த்துக்க‌ள் ர‌ம்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

ரம்ஸ்,
எண்ணெய் கத்தரிக்காய் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.உங்க குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு.ட்ரை பண்ணி பார்க்கிறேன்.படங்கள் எல்லாம் வழக்கம் போலவே பளிச்...பளிச்.அந்த கடைசி படத்தின் ஆங்கில் சூப்பர்.வாழ்த்துக்கள்.

hai ramya samaiyal super anal oru santhegam brinjal thaniyaga oil cook panna vendama

ரம்யா இன்னைக்கு உங்க எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தான் செய்தேன். ரோம்ப நல்ல இருந்தது. என் கணவரே சூப்பர்ர்ர்ர்னு பாராட்டிடார் போங்க. நல்ல குறிப்பிற்கு நன்றி. இன்னும் பல அருமயான் குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

i try it yesterday it was delicious thank u