பொட்டேடோ கிரிஸ்ப்ஸ்

தேதி: February 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

1. Crackers (sesame / rice) - 15
2. சக்கரை வள்ளிகிழங்கு - 2 (Medium size)
3. தயிர் - 2 மேஜைக்கரண்டி
4. வறுத்து பொடித்த சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
5. உப்பு
6. இனிப்பு சட்னி - 2 மேஜைக்கரண்டி (புளி + பேரீச்சம்பழ சட்னி)
7. பச்சை சட்னி - 2 மேஜைக்கரண்டி
8. ஓமப்பொடி / சேவ் - சிறிது
9. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3 மேஜைக்கரண்டி
10. கொத்தமல்லி - சிறிது


 

தயிருடன் சீரக தூள், உப்பு கலந்து வைக்கவும்.
கிழங்கை வேக வைத்து மசைக்கவும்.
ஒவ்வொரு க்ராக்கர்ஸ் மேலும் சிறிது கிழங்கு வைக்கவும்.
அதன் மேல் தயிர் கலவை சிறிது வைக்கவும்.
அதன் மேல் சிறிது வெங்காயம், அதன் மேல் சட்னி, அதன் மேல் சிறிது ஓமப்பொடி வைத்து கடைசியாக சிறிது கொத்தமல்லி இலை வைத்து முடிக்கவும்.
இனிப்பு சட்னி செய்ய: 3 பேரீச்சம் பழம், சிறு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி வறுத்து பொடித்த சீரக தூள், 1 தேக்கரண்டி சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.
பச்சை சட்னி செய்ய: 1/2 கப் கொத்தமல்லி, 1/2 கப் புதினா, 2 பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் 1 மேஜைக்கரண்டி தயிர் மற்றும் 1/2 எலுமிச்சை பழ சாறு சேர்த்து கலந்து விடவும்.


இது பார்ட்டிக்களில் ஸ்டார்டராக தர சுலபாமானது. செய்த உடனே பரிமாறிவிட வேண்டும், நீண்டு நேரம் வைத்திருந்தால் ஈரம் க்ராக்கர்ஸில் இறங்கி விடும்.

மேலும் சில குறிப்புகள்