குரும்பா ஹார்ட்ஸ்

தேதி: February 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. சைனா க்ராஸ் - 10 கிராம்
2. பால் - 1/2 கப்
3. ஃபுட் கலர் + ரோஸ் எஸனஸ் / ரோஸ் மில்க் எஸன்ஸ் - தேவைக்கு
4. சர்க்கரை - 6 மேஜைக்கரண்டி
5. இளநீர் - 2 கப்


 

1 லிட்டர் நீரை கொதிக்க விட்டு அதில் சைனா க்ராஸ் சேர்த்து கரைய விடவும்.
சைனா க்ராஸ் கரைந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
பாலை காய்ச்சி அதில் ரோஸ் மில்க் எஸன்ஸ் கலந்து வைக்கவும்.
இதில் 1/4 பங்கு சைனா க்ராஸ் நீரை வடிகட்டி கலந்து செட் ஆக விடவும்.
பின் ஹார்ட் ஷேப் பிஸ்கட் கட்டர் கொண்டு சிறு சிறு இதய வடிவங்களாக வெட்டி எடுக்கவும்.
பெரிய இதய வடிவ மோல்டில் மீதம் உள்ள சைனா க்ராஸ் நீர் மற்றும் இளநீரை ஊற்றி கலந்து விடவும்.
இதில் நறுக்கி எடுத்த சிறு சிறு இதய வடிவங்களை போட்டு மீண்டும் செட் ஆக விடவும்.
பிரிட்ஜில் வைத்து பரிமாறலாம்.


திவேகியில் குரும்பா என்றால் இளநீர் :) ஆனால் இது மாலத்தீவு குறிப்பு அல்ல. சிறு சிறு இதய வடிவ மோல்டுகள் இருந்தால் அவற்றிலேயே ஊற்றி செட் பண்ணலாம், பிஸ்கட் கட்டர் தேவை இல்லை. விரும்பிய வண்ணங்களில் உள்ளே வைக்கும் இதய வடிவங்களை செய்யலாம். அவை நன்றாக தெரிய மேலே இருக்கும் பெரிய வடிவம் இது போல் ப்ளெயினாக இருப்பது முக்கியம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

குரும்பா ஹார்ட்ஸ் பேரு வித்தியாசமா இருக்கே குறிப்பு படித்தேன். ஜெல்லி தான் அழகா செய்து இருக்கீங்க. பைனல் போட்டோஸ் ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி. ஆமாம் பார்ட்டிக்கு குட்டீஸ் வந்தாங்க, அவங்களுக்காக செய்தேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அய்...அழகா இருக்கு வனிதா...:-)அது என்ன vanivasu ?வசுவோட குறிப்போ?;-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மிக்க நன்றி. வசு தானே முதல்ல சமைக்க கத்து கொடுத்தா... அதனால் ஆரம்பத்தில் இருந்து நான் எல்லா குறிப்பும் அவ பெயரையும் சேர்த்து இதே பேரில் தான் கொடுத்து இருக்கென். எல்லாம் ஒரு நன்றி விஸ்வாசம் தான் ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹெல்லோ வனி...

சைனா க்ராஸ் வாங்கி வைத்துக் கொண்டு தோதான டிஷ் தேடிக் கொண்டு இருந்தேன்... சமயம் பார்த்து குறிப்பு கொடுத்து இருக்கிறீர்கள்... இது இன்ஸ்டன்ட் மிக்ஸ் ல் செய்வது தானே? எனில் முயற்சித்துப் பார்க்கிறேன்.. நன்றி வனி.. :)

மிக்க நன்றி. இது இன்ஸ்டண்ட் இல்லை, ஆனா இன்ஸ்டண்ட்டிலும் இதே போல் செய்யலாம். நீங்க தாராளமா இன்ஸ்டண்ட் மிக்ஸிலேயே இதை செய்யுங்க. மெதட் தான் அவசியம்... மற்றபடி கடர்பாசி கலவை உங்க விருப்பம் போல தயார் செய்யுங்க. மேலே இருப்பது ப்ளெயின் அல்லது இளனீர் கலவையா இருந்தா போதும், உள்ளே இருக்கும் ஹார்ட்ஸ் நல்லா தெரிய. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா