மிளகாய் ஊறுகாய்

தேதி: February 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

 

காய்ந்த(சிவப்பு) மிளகாய் - ஒரு கப்
பூண்டு - 2 (அ) 3 பல்
எலுமிச்சை - 2
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
வெல்லம்/சர்க்கரை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிது


 

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறிய மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு இவற்றுடன் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
இதனுடன் அரைத்தவற்றை சேர்க்கவும். சிறிது வதங்கியதும் வெல்லம்/சர்க்கரை சேர்க்கவும்.
கலவை நன்கு கொதித்து சற்று திக்காக ஆனதும் இறக்கி விடவும்.
சுவையான காரமான சிவப்பு மிளகாய் ஊறுகாய் தயார். இது தயிர் சாதத்துக்கு ஏற்றது. சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இந்த ஊறுகாய் வட கர்நாடக ஸ்பெஷல். கார விரும்பிகளுக்கான சுவையான ஊறுகாய். இதில் சூடு தணிக்க அரை தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து, பொடித்து சேர்த்தால் நல்லது. மணமாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காரசாரமான குறிப்பு. எனக்கு ஊறுகாய் ரொம்ப பிடிக்கும். அந்த பாட்டில் இங்க பார்சல் பண்ணி அனுப்புங்க. ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு

ஸ்ஸ்!! பார்க்கவே வாயூறுது ஹர்ஷா.

‍- இமா க்றிஸ்

சம ஸ்பைசி ஊறுகாய் :) பார்க்கவே சூப்பரா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காரமான சிவப்பு மிளகாய் ஊறுகாய் சூப்பர்

Life is one enjoy and give happiness to others

ஊறுகாய் செய்முறை நல்ல காரசாரமா இருக்கு. குறிப்பும் பிடிச்சுருக்கு விருப்பபட்டியலில் சேர்த்துட்டேன். இந்த ஊறுகாய்க்கு எண்ணெய் எவ்வளவு சேர்க்கலாம்.

ஸ்ஸ்ஸ்.... காரசாரமான மிளகாய் ஊறுகாய் சூப்பரா இருக்கு ஹர்ஷா! :)

அன்புடன்
சுஸ்ரீ

ஒரு சைனீஸ் ரெஸ்ட்ரண்டில் மைல்டான ஃப்ரைட் ரைஸ்க்கு , போர் அடிக்கும் கெட்ச் அப் கொடுக்காமல் இதே ஸாஸ் தான் கொடுத்தார்கள். லைட்டா சேர்த்து மிக்ஸ் பண்ணி சாப்பிட நல்லா இருந்தது.அப்ப இதை செய்து வைக்கனும்னு நினைத்தேன். ரெசிபி கொடுத்திட்டிங்க. சூப்பர்.வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இது போல் நான் ஒரு முறை சாப்பிட்டு இருக்கேன்.. ஆனால் செய்வது தெரியாது. இதுபோல் செய்து இனி அசத்தபோறேன்..நன்றி ஹர்ஷா

"எல்லாம் நன்மைக்கே"

அன்பரசி,

சூப்பர் காரம்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சம காரம்..சூப்பர்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பரசி, இந்த பதிவை கண்ணை மூடிட்டு தான் பா போடுறேன். அவ்ளோ காரம். இருந்தாலும் டேஸ்டா இருக்கே ;) நான் இங்கே பண்ண முடியாது. ஊருக்கு போய் தான் பண்ணனும். வித்யாசமான குறிப்பை தந்த அன்புக்கு இனிப்பான வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இட்லி,தோசை,தயிர்சாதம்,லெமென்சாதம்,அனைத்திற்கும் பொருத்தமானது.டைப் பண்ணறப்பவே எச்சில் ஊறுது..

radharani

பார்க்கவே சாப்பிட தூண்டுதே அப்படியே எனக்கு பார்சல் பண்ணிடுங்க எனக்கு காரம்னா ரொம்ப பிடிக்கும்.
கண்டிப்பா செய்துட்டு வந்து சொல்றேன் வாழ்த்துக்கள் அன்பு...:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வேற வழியே இல்லை. நீங்க இந்த பக்கம் வரும்போது செய்தஉ எடுத்துட்டு வாங்க....அப்படியாவது வீட்டுக்கு வாங்க ;)

அட்டகாசம், அமர்களம் அமோகமா இருக்கு! கலர், ப்ரெசெண்டெஷன், குறிப்பு எல்லாமே அள்ளுது. வாழ்த்துக்கள்!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ur receipe soo good nd colorful too... I'm sure ., i will make it

god with us

குறிப்பை வெளீயிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

கௌதமி,
முதலாவதாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி.பார்சல் தானே அனுப்பிடலாம். :-)

இமா, உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி. :-)

வனிதா, உங்க பதிவுக்கு மிக்க நன்றி. :-)

ரூபி கண்ணன்,
பதிவுக்கு மிக்க நன்றி.

வினோஜா,
இதில் நான் சேர்த்தது 1 மேஜை கரண்டி எண்ணெய்.1 முதல் 1 1/2 மேஜை கரண்டி எண்ணெய் சேர்க்கலாம்.செய்து பாருங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

சுஸ்ரீ, உங்க பதிவுக்கு மிக்க நன்றி. :-)

ரம்ஸ்,
நீங்க சொல்லும் சாஸ் நான் சாப்பிட்டதில்லை.இது என் (கன்னடிகா) தோழியின் ரெசிப்பி.சமீபத்தில் நடந்த பாட் லக்கில் சாப்பிட்டு,ரொம்ப பிடித்தது.அதான் ரெசிப்பி கேட்டு செய்து வைத்து கொண்டேன்.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி, ரம்ஸ்.

பாக்ய லக்‌ஷ்மி,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.

கவிதா, எப்படி இருக்கீங்க? உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

musi,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி

கல்ப்ஸ்,
ஆமாம்.அதுவும் இங்கு கிடைக்கும் மிளகாய் சம காரம்.ஊருக்கு போனதும் அம்மாவை செய்து தர சொல்லுங்க.சரியா?உங்க இனிப்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

ராதா ராணி,
இட்லி,தோசைக்கும் இந்த ஊறுகாய் நல்லா இருக்கும்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி

ஸ்வர்ணா,
கண்டிப்பா செய்து பாருங்க.உங்களுக்கும் பிடிக்கும். :-) பதிவுக்கு நன்றி ஸ்வர்ணா.பட்டியில் கலக்கிட்டீங்க.வாழ்த்துக்கள்.

லாவண்யா,
நான் உங்க ஊருக்கு வந்து,தங்கி திரும்பவும் எங்க ஊருக்கு வந்துட்டேனே. ;-) நீங்க முன்பே சொல்லியிருந்தால் ஊறுகாய் கொடுக்கவாவது உங்க வீட்டுக்கு வந்திருப்பேன். நீங்க மிஸ் பண்ணிட்டீங்க. உங்க பதிவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

firthouse m,
மிளகாய் ஊறுகாய் செய்து பார்த்து எப்படி வந்ததுனு சொல்லுங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

ஹர்ஷா உங்க மிளகாய் ஊறுகாய் நைட் செஞ்சேன். சம காரம், சம டேஸ்ட் .அதிகமா செஞ்சென். ப்ரிட்ஜ்ல வச்சு யூஸ் பண்ணலாம்னு. ஆனா பாருங்க பாதிக்கு மேல காலி யாச்சு.என் ஹஸ் கார விரும்பி. செஞ்சவுடனே சாப்பிடுறதுக்குள்ள தொட்டு தொட்டு சாப்பிட்டுகிட்டே இருந்தாங்க. இட்லிக்கு சம சூப்பர். இப்போ இதுக்காகவே தயிர் சாதம் செஞ்சு வச்சிருக்கோம். சம டேஸ்ட். ரியலி சூப்பர்பா. தொடர்ந்து பல டேஸ்டான குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

ஹாய் அன்பு,

எப்படி இருக்கீங்க அன்பு?குட்டீஸ் எப்படி இருக்காங்க?

உங்க கூட பேசனும்னு நினைப்பேன்,ஆனா முடியறதேயில்லை.

உங்க குறிப்பு சூப்பர்ப்!!! பார்க்கும் போதே ஆசையைத் தூண்டுது,போட்டோஸ்

கொள்ளை அழகுடா அன்பு.விருப்ப பட்டியல்ல சேர்த்திட்டேன்டா.

காரமான,சுவையான,மணமான,அட்டகாசமான குறிப்பு கொடுத்திருக்கீங்க

அன்பு,,ஸ்பெஷல் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் அன்பு.

அன்புடன்
நித்திலா

கையில் காரம் இன்னமும் போகலை, வீடே மிளகாய் வாசமாய் இருக்கு, கலர் கண்ணை கட்டுது, காரம் வயித்தை சுட்டேரிக்குது இருந்தாலும் விடலை விட்டு வாங்கிட்டோம். நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நசீம்,
உங்க பதிவு பார்த்து மிக்க மிக்க மகிழ்ச்சி.குறிப்பை செய்து பார்த்து,பின்னூட்டமும் கொடுத்து பாராட்டியதற்கு ரொம்ப நன்றி.ஆனால்,ஊறுகாய் கொஞ்சமா சாப்பிடுங்க...சரியா?ஆனால்,எங்க வீட்டிலும் ஊறுகாய் காலி.திரும்ப செய்யணும்.உங்க அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றி.

நித்து,
எப்படி இருக்கீங்க? நானும்,குட்டீஸும் நலம்.உங்க பதிவு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நன்றி.என்ன பிஸியா?அறுசுவை பக்கம் பார்க்க முடியலையே...பட்டியிலும் உங்களை எதிர்ப்பார்த்தேன் நித்து.ஓகே...இனி தொடர்ந்து வாங்க.உங்க அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றி.குறிப்பை செய்து பார்த்து சொல்லுங்க.

ஊறுகாய் ரொம்ப காரமா இருக்கா?அதனுடன் இன்னொரு லெமன் பிழிந்து ஜூஸ் சேருங்க.கூட சிறிது வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி சாப்பிடுங்க.அளவுக்கு அதிகமான காரம் வேண்டாம்.ரொம்ப சிறிய அளவு சாப்பிடுங்க.வயிறு பாவம் இல்லையா? :-)

குறிப்பை செய்து பார்த்து பதிவிட்டதற்கு நன்றி லாவண்யா.