வெல்ல கொழுக்கட்டை

தேதி: February 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

மேல் மாவுக்கு:
அரிசி மாவு - ஒரு கப்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
பால் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
பூரணத்திற்கு:
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
பொடித்த வெல்லம் - கால் கப்
ஏலப்பொடி - அரை தேக்கரண்டி


 

அரிசிமாவை நன்கு சலித்துக் கொள்ளவும். நல்ல நைஸாக இருக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கால் கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதில் எண்ணெய், உப்பு, பால் சேர்த்து கொதித்ததும், அதில் கரைத்த அரிசிமாவை விட்டுக் கிளறவும்.
மாவு கெட்டியாகி, கட்டி இல்லாமல் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கவும். அதில் இருக்கும் சூட்டுக்கு உள்ளே நன்கு வெந்துக் கொள்ளும். ஆறியதும் கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
தேங்காய் துருவலையும், வெல்லத்தையும் சேர்த்து வாணலியில் போட்டு கிளறவும்.
இரண்டும் சேர்ந்து பூரண பதம் வந்ததும் அதில் ஏலப்பொடி சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக்கவும்.
மாவையும் சிறு உருண்டையாக்கி, உள்ளங்கையில் வைத்து சிறிய கப் போல செய்யவும்.
அதனுள் உருட்டி வைத்திருக்கும் பூரணம் வைத்து அழகாக மூடவும்.
இதுப் போல் செய்த கொழுக்கட்டைகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சுவையான வெல்ல கொழுக்கட்டை ரெடி.

கொழுக்கட்டை மாவு கிளறுவது ஒரு சிரமமான விஷயம். புதிதாக சமைப்பவர்களுக்கு சரியாக வராது. வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் மாவை அப்படியே போடும் போது கட்டி தட்டி விடும். சரியாக கப் செய்ய வராது. நான் எழுதியுள்ள முறை மிக சுலபமானது. மேல்மாவு அதிகமாகிவிட்டதா? கவலையே வேண்டாம், அதற்கு ஒரு ஐடியா இருக்கு அடுத்த ரெசிபியில் சொல்றேன் (மண்ணாங்கட்டி)


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரெசிபி சூப்பர். எங்க வீட்டிலும் செய்வோம். ஆனா பிள்ளையார் சத்துர்த்தி அன்று மட்டும் தான். சிறிது எள் சேர்த்து செய்வோம். இந்த கொழக்கட்டை மிகவும் சுவையாக இருக்கும். படங்கள் அருமையாக வந்திருக்கு.

கொழுக்கட்டை செய்முறை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினரே! நன்றிகள் பல!

கௌதமி...இது பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல்தான். ஆனால் மாலை டிஃபினுக்கும் இது செய்யலாம். பாராட்டுக்கு நன்றி.

ராதாம்மா இந்த மாதிரி தான் எங்க அம்மா பன்னுவாங்க ஆனா பால் சேர்க்க மாட்டாங்க அம்மாவும் விநாயகர் சதுர்த்திக்கு தான் செய்வாங்க நாங்க ஸ்கூல் லீவ் ல கேட்டா பண்ணி குடுப்பாங்க எனக்கும் இந்த சொப்பு செய்றது மட்டும் வராது நான் மறுபடியும் முயற்சி பண்ணி பார்கிறேன் நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எனக்கு இது போன்ற கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்று நெடுநாள் ஆசை.. ஒரு முறை முயற்சித்தேன்.. ஆனால் சரியாக வரவில்லை.. உங்கள் வழிமுறைப்படி செய்து பார்க்கிறேன்.. குறிப்புக்கு நன்றி.. :)

முயற்சி செய்துவிட்டு மறுபடி பதிவிடுகிறேன்.. :)

மோதகம் தானேம்மா...என்னோட favorite ...பார்த்த உடனே சாப்பிடனும் போல இருக்கே...
அதற்கு ஒரு ஐடியா இருக்கு அடுத்த ரெசிபியில் சொல்றேன் (மண்ணாங்கட்டி)/// யாரை திட்டறீங்க?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ராதாம்மா கொழுக்கட்டை பார்க்கவே அவ்வளவு அழகு! அப்ப செய்து சாப்பிட்டா எவ்வளவு சூப்பரா இருக்கும்??!!!. கண்டிப்பா இன்னைக்கு செய்ய போறேன். ஒரு உண்மை உங்களுக்கு சொல்லணும். நானும் என் பொண்ணும்தான் பார்த்தோம். அவளுக்கு பூரணம் வைத்த கொழுக்கட்டை பிடிக்காது. ஆனா இன்னைக்கு உங்களுடைய ரெசிப்பியை பார்த்து கேட்டிருக்கிறாள். இன்னைக்கு செய்து சாப்பிட்டு நாளைக்கு கண்டிப்பா மறுபடியும் பதில் போடுறேன்.

தனா....வாழ்த்துக்கு நன்றி. பால் 2 டீஸ்பூன் சேர்த்தா போதும். மாவு நல்ல ஸாஃப்ட்டாக வரும். முயற்சி பண்ணினா சொப்பு நல்லா செய்ய வரும். ட்ரை பண்ணிப் பாரு.

சாந்தினி....கண்டிப்பா இந்த முறையில செய்து பார்த்து பதிவு போடு. நன்றாக வர வாழ்த்துக்கள்!

கோமதி....நன்றி.
//(மண்ணாங்கட்டி)/// யாரை திட்டறீங்க?//
யாரையும் இல்லப்பா! அது ஒரு ஈஸி ரெசிபிதான்! கொழுக்கட்டைக்கு மேட்சான ஜோடினு வெச்சுக்கோயேன்!!

காயத்ரி....கொழுக்கட்டை செய்தாயா? சரியா வந்ததா? உன் பெண்ணுக்கு பிடிச்சுதா? கண்டிப்பா சொல்லு.

வெல்லக் கொழுக்கட்டை பிரமாதமா இருக்கு! ரொம்ப அழகா செய்து காண்பித்து இருக்கிங்க. வாழ்த்துக்கள் ராதாம்மா!

நான் இதுப்போல பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்வது கிடையாது. யூஷ்வலா பிடிக்கொழுக்கட்டைதான் செய்ய‌றது. இந்தமுறையிலும் எப்பவாது ஒருதரம் செய்துப்பார்க்கனும் என்று நினைத்துக்கொண்டதுண்டு. இப்பா கரக்ட்டா உங்க குறிப்பும் வந்திருக்கு! :) எனக்கு ஒரே ஒரு சந்தேகம்‍ இதற்கு இடியாப்பமாவு உபயோகிக்கலாமா? இல்லை அரிசிமாவுதான் இருக்கனுமா?!

அன்புடன்
சுஸ்ரீ

கொழுக்கட்டை சூபெர் படங்கள் ரொம்ப தெளிவா நல்லா இருக்கு. நான் இந்த கொழுக்கட்டை செய்து இருக்கேன் உங்க முறைளையும் செய்து பார்கிறேன் விரைவில். மாவு மிக்ஸ் முறை அருமை ஏழாம் இடத்தில உள்ள படம் கொள்ளை அழகு அப்படியே குடுத்த கூட தின்னுடுவேன் நான் . வாழ்த்துக்கள் ஆன்டி by Elaya.G

கொழுக்கட்டை செய்து பார்க்க விருப்பம்.இதில் நீங்கள் கொடுத்திருக்கும் கப் அளவு என்பது எவ்வளவு மில்லி?

(1 cup = howmuch ml)

கொழுக்கட்டை செய்து பார்க்க விருப்பம்.இதில் நீங்கள் கொடுத்திருக்கும் கப் அளவு என்பது எவ்வளவு மில்லி?

(1 cup = howmuch ml)

வெல்ல கொழுக்கட்டை பார்த்ததும் என் அம்மா நியாபகம் வந்துவிட்டது.ரொம்ப நல்லா இருக்குது.நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்.கடைசி படம் அப்படியே எடுத்துக்கோ என்று சொல்ற மாதிரி இருக்குது.வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

கொழுக்கட்டை வடிவம், செய்முறை, படங்கள் அனைத்தும் அழகு.. நிச்சயம் இது போல் செய்யணும்..அருமை..

"எல்லாம் நன்மைக்கே"

ராதா,

அழகான மோதகம்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சுஸ்ரீ....வாழ்த்துக்கு நன்றி....இது இடியாப்ப மாவில் சரியாக வராது. கிண்ணம் விரிந்து விடும். ப்யூர் அரிசி மாவுதான் நன்றாக இருக்கும்.
கடையில் ரெடி அரிசிமாவு கிடைக்காவிட்டால் நான் கீழே சொல்லியுள்ள முறையில் மாவு தயாரித்துக் கொள்ளுங்கள்.

தேவையான பச்சை அரிசியை நன்கு களைந்து, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வடிகட்டியில் ஈரம் போக வடிகட்டவும். அதனை மிக்ஸியில் அரைத்து நைஸாக சலிக்கவும். இந்த அரிசிமாவை காய வைத்தோ, அப்படியே நீரில் கரைத்தும் கொழுக்கட்டை செய்யலாம். இது போல் அதிகமாக செய்து வைத்துக் கொண்டால் தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம்.

கொழுக்கட்டைக்கு மட்டுமன்றி பிட்டு, அதிரசம், சீடை, கைமுறுக்கு செய்யவும் இந்த மாவை உபயோகிக்கலாம்.

இளயா....நன்றி....மாவை நீரில் கரைத்து கிளறும்போது கட்டிகள் வர வாய்ப்பு இல்லை. அதனாலேயே இந்த முறையை எழுதினேன். அனுபவம் இல்லாதவர்களுக்கு மாவை அப்படியே தூவிக் கிளறும்போது சரியாக வராது. இந்த முறையில் செய்து பார்த்து எழுது.

லதா.....உங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. கப் என்பது மில்லி கணக்கெல்லாம் வேண்டாம். நீங்கள் எந்த கிண்ணம் அளவுக்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அதை ஒரு கப் அளவாக வைத்துக் கொள்ளுங்கள். அதே அளவில் மற்ற சாமான்களையும் எடுத்துக் கொள்ளவும். எல்லா ரெசிபிக்குமே இதே மாதிரி செய்யலாம்.

மீனாள்....பாராட்டுக்கு நன்றி. செய்து பாருங்க! சொல்லுங்க! உங்க பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்!!

பாக்கியா....கண்டிப்பா செய்து பார்த்து சொல்லு!

கவிதா....மோதகம் மட்டும் அழகு இல்ல....ருசியும் அருமையாக இருக்கும்!

ராதாம்மா, வெல்லக்கொழுக்கட்டை சூப்பர் போங்க. அதைவிட நீங்க செய்த விதம் ரொம்ப அழகு. மந்திர சக்தி மட்டும் இருந்தா அந்த கடைசி தட்டை இங்கே லவட்டி இருப்பேன். ;) எஸ்கேப் ஆய்ருச்சி. வாழ்த்துக்கள்ங்கம்மா.. ஊர் ஞாபகம் வந்துருச்சி ;(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ராதாம்மா மோதகம் சூப்பர்ர்ர்ர்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

neenga seitha vella kolukkattai paarka migavum alagaaga irukkirathu,na kandipa seithu paarkiren.nandri.

கல்பனா.....சூ...மந்திரக்காளி....ஏ தட்டே பறந்து காங்கோ செல்! ஹ்ம்ம்ம்ம்....! வந்துதா? சாப்பிடு! பாராட்டுக்கு நன்றி!

ஸ்வர்ணா....உன் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி!

சூப்பரான கொழுக்கட்டை, அவருக்கு இஷ்டமானது கண்டிப்பா செய்துபார்த்து சொல்ரேன்மா...

இப்படிக்கு ராணிநிக்சன்

ஃபௌஸியா....வாழ்த்துக்கு நன்றி...

ராணி....எப்படி இருக்க? செய்து பார்த்து சொல்லு. நன்றி.

பால் ஊற்றி செய்திருப்பது நல்லயிருக்கு. அதுவும் நீங்கள் நேர்தியாக பிடித்திருக்கும் விதம் அருமை!

உங்களின் மண்ணாங்கட்டி தான் என்னை இங்கே இழுத்து வந்தது. நான் கூட யாரையோ திட்டுறீங்க என்று தான் நினைத்தேன்.....இருந்தாலும் இப்படி பப்ளிக்காவா இருக்கும் என்று பார்க்கவே வந்தேன்!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கொழுக்கட்டை அருமையா செய்து இருக்கீங்க.வாழ்த்துக்கள்.மேல் மாவு செய்ய கொடுத்திருக்கும் டிப்ஸ் சூப்பர்.அடுத்த முறை கொழுக்கட்டை செய்யும் போது உங்க முறைப்படி செய்து பார்க்கணும்.

லாவண்யா....பதிவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி. மண்ணாங்கட்டி இதே மாவில் செய்யும் காரமான ரெசிபி! அதை இன்னும் அட்மின் வெளியிடவில்லை. விரைவில் வெளிவரும்!!

ஹர்ஷா....வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க. கொழுக்கட்டை செய்வதில் மாவு கிளறுவதுதான் கஷ்டமான வேலை என்று பலரும் குறைப்படுவார்கள். அதனாலேயே . இந்த ரெசிபி எல்லாருக்கும் ஈஸியாக இருக்கும் என்று எழுதினேன். கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லுங்கள்!

/ராதாம்மா
பார்க்கவே சூப்பரா இருக்கு நாங்களும் பூரண கொழுக்கட்டை செய்வோம் இதே மாதிரி கடலை பருப்பு அவித்து உள்ளே வைத்து ,,,செய்ரது,,,,இது மாதிரி செய்தது இல்ல அம்மா நானும் செய்து பார்க்கனும் ,,,,,,செய்து பார்த்துட்டு சொல்றேன்
வாழ்த்துக்கள் ராதாம்மா,,வாழ்க வளமுடன்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கைப்பிள்ளை...ஆஜரா அறுசுவைக்கு! வாழ்த்துக்கு நன்றி. இந்த முறையில் செய்து பார்த்து சொல்லு கவிதா!

super