சன்னா ரோல்

தேதி: July 28, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

இந்த சன்னா ரோல் செய்முறை ஏறக்குறைய கட்லெட் செய்முறையை ஒத்தது. கட்லெட்டிற்கும் இதற்கும் சுவையில் வித்தியாசம் இருக்கின்றது. மாலை நேரத்தில் ஏதேனும் வித்தியாசமாக சாப்பிட விரும்புகின்றவர்கள் இதனை முயற்சிக்கலாம். சன்னா ஊற வைத்து எடுத்தல்தான் அதிக நேரம் எடுக்கும் வேலை. மற்றவை அரை மணி நேரத்தில் முடிந்துவிடும்.

 

சன்னா - கால் கிலோ (2 கப்)
நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப்
நறுக்கிய முட்டைக்கோஸ் - அரை கப்
நறுக்கிய காரட் - அரை கப்
குடைமிளகாய் - கால் கப்
கொத்தமல்லி - கால் கப்
புதினா - 4 கொத்து
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை லிட்டர்
சோள மாவு - 5 தேக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி


 

காரட், முட்டைகோஸ், வெங்காயம், கொத்தமல்லி, புதினா, குடைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சன்னாவை சுமார் 8 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய சன்னாவை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
சோளமாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். தேவையான மசாலாப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சோம்பு தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, கரகரப்பாக அரைத்த மாவு, நறுக்கின வெங்காயம், முட்டைக்கோஸ், காரட், குடைமிளகாய், புதினா, மல்லி அனைத்தையும் ஒன்றாய் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு பிசைந்த மாவை உருட்டிக் கொள்ளவும். இதனை நீங்கள் விரும்பிய வடிவத்தில் செய்து கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். நன்கு சூடேறியதும் சன்னா ரோலை கரைத்து வைத்துள்ள சோள மாவில் பிரட்டி எண்ணெய்யில் போடவும்.
எண்ணெய் சற்று பொங்கினாற்போல் வரும். ஒரு முறைக்கு மூன்று அல்லது நான்கு ரோல்கள் போட்டு எடுக்கலாம். சட்டியின் அளவைப் பொறுத்தது.
அவ்வபோது சன்னா ரோலை திருப்பிப் போட்டு வேகவிடவும். சன்னா ரோல் பொன்னிறமாக வெந்ததும் சாரணி கொண்டு, எண்ணெய்யை வடித்து விட்டு எடுக்கவும்.
சுவையான சன்னா ரோல் தயார். இதனை சூடாக தக்காளி சாஸுடன் சாப்பிட வேண்டும்.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Dear Sumathi madam,
I tried this recipe yesterday. It came out very well. This is the first time I am trying a recipe from this site & I felt really happy. Yummy healthy rolls. Thanks.