சிக்கன் கட்லெட்

தேதி: February 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

உருளைக்கிழங்கு - 3
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா -‍ 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 3/4 தேக்கரண்டி
ப்ர‌ட் ஸ்லைச‌ஸ் - 4
முட்டை - 1
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப‌


 

முதலில் உருளைக்கிழங்கை கழுவிவிட்டு வேக வைத்து எடுக்கவும். சூடு ஆறியதும், தோலுரித்து மசித்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

சிக்கனை நன்கு கழுவி அலசி எடுத்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, மஞ்சள்த் தூள், சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ள‌வும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு சில நொடிகள் பல்ஸ் மோடில் சுற்றி, உதிர்த்து வைக்கவும்.

ஒரு கடாயில், ஒரு தேக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, முறையே பொடியாக‌ ந‌றுக்கிய‌ வெங்காய‌ம், இஞ்சிபூண்டு விழுது, ப‌ச்சை மிள‌காய் போட்டு வ‌த‌க்க‌வும். வெங்காய‌ம் சிறிது வதங்கி நிறம் மாறியதும், தூள் வகைகளைப்போட்டு ஒரு வதக்கு வதக்கி, அடுப்பை அணைத்துவிடவும்.

இதனுடன், உதிர்த்துவைத்த சிக்கன், மசித்துவைத்த உருளைக்கிழங்கு, தேவையான அளவிற்கு உப்பு எல்லாம் சேர்த்து ரொம்ப‌வும் அழுத்தாம‌ல் க‌லந்து பிசைய‌வும்.

ப்ர‌ட்டை ஒன்றிரண்டாக பிய்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சில‌ நொடிக‌ள் ப‌ல்ஸ் மோடில் ஓட்ட‌வும். தயாரான ப்ர‌ஷ்ஷான இந்த ப்ரட் க்ர‌ம்ஸை ஒரு பெரிய‌ த‌ட்டில் கொட்டி ப‌ர‌த்தி விட‌வும்.

முட்டையை உடைத்து வெள்ளையை மட்டும் ஒரு கிண்ணத்தில் போட்டு லேசாக அடித்து வைக்கவும்.

இப்போது த‌யார் செய்து வைத்திருக்கும் கட்லெட் க‌‌ல‌வையை சிறிய‌ எலுமிச்சை அளவாக எடுத்து உருட்டி, லேசாக‌ த‌ட்டி, முட்டையில் தோய்த்து, ப்ர‌ட் க்ர‌ம்ஸ் உள்ள‌ த‌ட்டில் போட்டு, இர‌ண்டு ப‌க்க‌மும் லேசாக‌ அழுத்தி எடுத்து வைக்கவும்.

ஒரு த‌வாவில், சிறிது எண்ணெய்விட்டு, சூடான‌தும் நான்கைந்து க‌ட்லெட்டாக‌ போட்டு ஷாலோ ஃப்ரை செய்யவும்.

இப்போது சுவையான சிக்கன் க‌ட்லெட் த‌யார்! டொமெட்டோ கெட்சப் உடன் பரிமாற நன்றாக ஒருக்கும்.

இதையே கொஞ்சம் பெரிய அளவில் செய்து, பன்னிற்கு நடுவில் வைத்து, ஒரு சீஸ் ஸ்லைஸ் சேர்த்து சான்ட்விச் மாதிரியும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

விருப்பப்பட்டால் ஷாலோ ஃப்ரைக்கு பதில், வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் இரண்டு மூன்று கட்லெட்டுகளாகப் பொரித்தும் எடுக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த ரெசிபி. கண்டிப்பா ட்ரை பண்ணுவேன். வாழ்த்துக்கள்

ரொம்ப எளிமையான குறிப்பு. சிக்கனை முதலில் வேக வைத்து செய்வதற்கு பதில் இப்படி செய்வது எளிது தான். நன்றி.

அன்புடன்,
ஹலீமா

அன்புடன்,
ஹலீமா

குறிப்பு வந்தப்பவே பின்னூட்டம் போட்டு இருக்கிங்க. சாரி, நான் இன்னைக்குதான் பார்க்கறேன்.

வருகைக்கும் பாராட்டிற்கும் ரொம்ப‌ நன்றி கௌதமி! முடியும்போது செய்துபார்த்து சொல்லுங்க‌.

வ‌ருகைக்கும் பாராட்டிற்கும் ந‌ன்றி ஹ‌லீமா!

அன்புடன்
சுஸ்ரீ

சிக்கன் கட்லெட் நல்ல குறிப்பு.. செய்முறை ரொம்ப சுலபமா குடுத்திருக்கீங்க.. படம் சூப்பர்... சாண்ட்விட்ச் டிப்ஸ் ரொம்ப நல்லா இருக்கு..

"எல்லாம் நன்மைக்கே"

i am the new entry. so now only i am saw. very fantastic recipe. the tips are really beautiful and step by step. my friends are really love this cutlet. thank u 4 ur tips. plz continue tis type of tips