பனீர் பட்டர் மசாலா

தேதி: February 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (29 votes)

 

பனீர் - ஒரு பாக்கெட்
பச்சை பட்டாணி - அரை கப்
உப்பு - தேவைக்கு
பட்டர் - தேவைக்கு
சர்க்கரை - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இதழ்
வெங்காயம் - ஒரு தேக்கரண்டி ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கலவைக்கு :
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் (அ) கெட்ச்அப் - ஒரு தேக்கரண்டி
தக்காளி - ஒன்று ( நன்கு அரைத்தது )
பால் - ஒரு கப்


 

முதலில் பட்டாணியை சுடு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். பனீரை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நைசாக அரைக்கவும்.
கலவை செய்ய தேவையான அனைத்தையும் ஒன்றாக ஒரு பௌலில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்து பாயாசம் பதத்தில் கலந்துக் கொள்ளவும்.
ஒரு தவாவில் வெண்ணெய் போட்டு உருக்கவும்.
நன்கு உருகியதும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கவும்.
பின் கலந்து வைத்த கலவையை ஊற்றி, 10 நிமிடம் மூடி போட்டு வைத்து கொதிக்க விடவும்.
பின் கொஞ்சம் கொஞ்சமாக மீதமுள்ள பாலை ஊற்றி தொடர்ந்து கலந்துக் கொண்டே இருக்கவும். பின் உப்பும், சர்க்கரையும் சேர்த்து பனீரை சேர்க்கவும்.
மீண்டும் திறந்து வைத்து கொதிக்க விட்டு, பட்டாணி மற்றும் பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலையை சேர்த்து இறக்கவும். ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையுள்ள பனீர் பட்டர் மசாலா ரெடி.

குறைந்த நேரத்தில் செய்யக்கூடியது. ஹோம் மேட் பனீர் மிக நல்ல ருஸியை கொடுக்கும். பட்டாணியை வெங்காயத்துடன் சேர்த்தும் வதக்கிக் கொள்ளலாம்.. கோதுமை விட மைதாவால் செய்த நாண், ரொட்டிக்கு மிகவும் ருஸியாக இருக்கும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு ரொம்ப பிடித்த ரெசிபி இது. hotel சென்றால் இது தான் ஆர்டர் செய்வோம். இந்த வாரம் வீட்டில் செய்து கலக்கிறேன். வாசனை இங்கே வருகிறது. விருப்ப பட்டியல் சேர்த்தச்சு வாழ்த்துக்கள்

போன வாரம் தான் அறுசுவை ல இன்னொரு பன்னீர் பட்டர் மசாலா receipe பார்த்து செஞ்சேன். அத விட ரெம்ப easy யா இருக்குப்பா இந்த method ...கண்டிப்பா செஞ்சு பாக்கறேன் ரம்யா..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

பனீர் பட்டர் மசாலா பார்க்கவே அழகா இருக்கு.. செய்முறையும் ரொம்ப எளிமையா இருக்கு.. ஹோட்டலில் சாப்பிடுவது போல் இருக்குமா? அப்போ நிச்சயம் செய்திடுவேன்.. வாழ்த்துக்கள் ரம்யா..

"எல்லாம் நன்மைக்கே"

ஆஹா ரம்ஸ் கலர்ஃபுல் பனீர் பட்டர் மசாலா பா கண்டிப்பா செய்துடனும் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

hai ramya உங்க ரெசிப்பி ரொம்ப superங்க.வாழ்த்துக்கள்.அம்மாவிற்கு நல்லவிதமாக operation நடந்தது.நீங்கள் அதை பற்றி விவரமாக சொன்னதால் மனதிற்கு ஒரு ஆருதல்.எல்லாவற்றிர்கும் ரொம்ப நன்ரிங்க.

ரம்ஸ்,
பனீர் பட்டர் மசாலா...பட்டாணி எல்லாம் போட்டு அருமையா செய்து இருக்கீங்க.நான் செய்து ரொம்ப நாளாச்சு.கண்டிப்பா இந்த வாரத்தில் மீண்டும் செய்துடுவேன்.வாழ்த்துக்கள்...ரம்ஸ்.

அடுத்த முறை மாலே போகும் போது பார்ட்டிக்கு செய்துருவோம் :) நல்ல ரிச் ரெசிபி. வெளிய பார்த்ததுமே கண்டு பிடிச்சுட்டனே நம்ம ரம்யா தான்னு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank u for ur delicious receipe

with love kalamurugan

மிகவும் எளிமையாவும் அதே சமையம் அழகாவும் சுவையாவும் செய்து காட்டீருக்கீங்க ரம்ஸ்.. பனீர் பட்டர் மசாலா எனக்கு ரொம்ப பிடிக்கும் ரம்ஸ். அதான் அறுசுவை ஓபன் பண்ணினதும் இந்த ரெசிப்பி பார்த்துட்டு யாரா இருக்கும் வனியா இல்லை ரம்யாவானு யோசிச்சுட்டே பாத்தேன்.... கடைசியில் ரம்யா.. அண்ணாவுக்கு இப்படி எல்லாம் பண்ணி அசத்துறீங்க...ம்ம்.. என்ஜாய்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

your recipe and photos are very nice.i tried this receipe today.thank you very much ramya akka.

god is great

ரம்யா,
ம்ம்ம் சூப்பர்..பால் சேர்த்தால் கிரேவி க்ரீமியாக இருக்கும்..
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் ரம்ஸ்,

பிஸியா இருக்கும் போதும் அசத்தலான குறிப்பு கொடுத்ததுக்கு உங்களுக்கு

ஸ்பெஷல் பாராட்டுக்கள் ரம்ஸ்.

சுவையும் மனசை அள்ளுது,படங்களும் மனசை அள்ளுதுடா ரம்ஸ்.

நன்றிகளும்,வாழ்த்துக்களும் ரம்ஸ்.

அன்புடன்
நித்திலா

பட்டர் மசாலா ரொம்ப நல்லா இருந்தது. பால் என்றால் ஆவின்பால்லா? தேங்காய் பால்லா?

ரம்யா ,
பால் சேர்த்து பன்னீர் பட்டர் மசாலா செய்முறை புதுசா இருக்கே .ஏற்கணவே பன்னீர்க்கு அடிமை இப்ப பால் எல்லாம் சேர்த்து ..... நாக்குல நீர் ஊருது . விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு .

சிவகாமி

பால் ஊற்றும் போது ப்ரித்து போகதா கொஞ்சம் விளக்கி கூறுங்கள்

பால் ஊற்றும் போது ப்ரித்து போகதா கொஞ்சம் விளக்கி கூறுங்கள்

My son's favourite recipe.I must thank for you.

நேத்து நைட் செய்தேன் ரம்யா ரொம்ப நல்லா இருந்தது. கடைசியில கொஞ்சம் கசூரி மேத்தி சேர்த்தேன் ரியல் ஹோட்டல் டேஸ்ட் . வாழ்த்துக்கள் ரம்யா.

பொன்னி

ஐய்ய்... பனீர் பட்டர் மசாலா! சூப்பரா இருக்கு! என் பொண்ணுக்கு பனீர் டிஷ்ன்னாலே ரொம்ப இஷ்டம் ரம்ஸ். உங்களோடது நல்லா டேஸ்டியாகத் தெரியுது. செய்முறையும்கூட ஈசியாவே இருக்கு. கண்டிப்பா சீக்கிரம் செய்துடறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அக்கா இன்று உங்கலுடய ரெசிபி செய்த மிகவும் அருமையாக இருந்தது என்னவருக்கு ரொம்ப ரொம்ப பிடித்து நன்றி அக்கா ,நிரைய குறிப்புகள் வழங்க வாழ்த்துக்கள்....................

ரம்யா

என்ன பால் சேர்கனும்,

ஹலோ ரம்யாகார்த்திக்

நலமா? பனீர் பட்டர் மசாலா அருமையோ அருமைங்க, மிக எளிமையான செய்முறை. பலமுறை செய்தாச்சு. எங்க வீட்டுக்கு பிரண்ட்ஸ் வந்தப்பவும் செய்து அசத்தியாச்சுங்க. எல்லோருடைய பாராட்டும் உங்களுக்கே. பின்னுட்டம் தாமதமாக கொடுத்ததுக்கு மன்னிக்கவும். விருப்ப பட்டியலிலும் சேர்த்தாச்சு. இதுபோல் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
மேனகா

Hi,
I have tried your recipe many times and it came out very well each time. Thanks for sharing this.

Thanks,
Jeyalakshmi T.

its so nice and simple recipe to cook , now this dish is favorite to my husband :)

thank u giving this recipe

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar