பாவற்காய் ரோஸ்ட் வித் சாஸ்

தேதி: February 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

பாவக்காய் - 2
எண்ணை - 3 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 10
சீரகம் - 1/4 ஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
புளிக்கரைசல் - 1/2 எலுமிச்சை அளவு புளி கரைசல்
மஞ்சள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
டொமடோ கெச்சப் - 2 ஸ்பூன்
ஆய்ஸ்டர் சாஸ் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு


 

முதலில் பாவற்காயிலுள்ளள விதைகளை நீக்கி வட்ட வட்டமாக அரிந்து வைக்கவும்
பின்பு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம்,சீரகம் சேர்த்து தாளிக்கவும்
பின்பு வெங்காயம்,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
பின்பு பாவக்காய் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி புளிக்கரைசல்,தூள்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
பின்பு மூடியிட்டு தேவைக்கு உப்பும் சேர்த்து தண்ணீர் தெளித்து வேக விடவும்
20 நிமிடம் கழித்து திறந்து சாஸ் வகைகளை ஊற்றி கறிவேப்பிலையும் சேர்த்து கிளறி விட்டு தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து மூடி விடவும்
நன்கு தண்ணீர் வற்றி எண்ணை தெளிந்து பாவக்காய் வெந்தபின் இறக்கி விடவும்


இது அன்றே சாப்பிடுவதை விட அடுத்த நாளைக்கு சுவையாக இருக்கும்..மோர் குழம்புக்கு,பருப்புக்கு நல்ல காம்பினேஷன்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆஹா! சூப்பரா இருக்கும் போலிருக்கே,கண்டிப்பா செய்வேன் ரூபி.உன் ரெசிப்பீஸ் எல்லாமே சுவையா இருக்கும்.தைரியமா செய்யலாம்.வெண்டக்காய் மசாலா,தளிக்கா`ஸ் சிக்கன் ரோஸ்ட்,அரிசி பருப்பு சாதம்,தால் தட்கா இதெல்லாம் என் சமையலில் எப்படியும் அடிக்கடி ரிப்பீட் ஆகும்.

யாருது புது உறுப்பினரா இருக்காங்க போலிருக்கு;-).தேன்க்ஸ் சோ மச் டியர்.பாவக்காய் விரும்பி என்றால் இனி இதையும் சேத்துக்கலாம் ரொம்ப சுவையா இருக்கும்;-)

தளி பாகற்காய் ரோஸ்ட் செய்துட்டேன். சூப்பர்! நேற்றே செய்தேன். நீங்க சொன்ன மாதிரி இன்னிக்கு சுவை இன்னும் அதிகமாயிடுச்சு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!