மாசி பிரட்டல்

தேதி: February 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

தேவையான பொருட்கள்:
மாசித்தூள் - 3 டீஸ்பூன்
பெரிய அல்லது சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு


 

காய்ந்த மாசித்துண்டை இடித்து தூளக்கவும்.வெங்காயம் தக்காளி,மிளகாய்,மல்லி இலை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை, தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தூள் செய்த மாசியை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி, சிறிது கூட்டானவுடன் அடுப்பை அணைக்கவும்.

சுவையான மாசி பிரட்டல் ரெடி.


இதனை சாதம் ,சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மாசில புது டிஷ்ஷா கண்டிப்பா ட்ரை பண்றேன் நன்றி..

அன்புடன்,
zaina.

யம்... சூப்பர் ஆசியா.

‍- இமா க்றிஸ்