மொஹல் பிரியாணி

தேதி: February 29, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (12 votes)

 

மட்டன் - அரைக் கிலோ
பாஸ்மதி (அ) சீரக சம்பா அரிசி - அரைக் கிலோ
பிரிஞ்சி இலை - 3
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 4
கெட்டி தயிர் - அரை கப்
குங்குமப் பூ - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை - ஒரு கட்டு
புதினா - கால் கட்டு
பூண்டு - 50 கிராம்
இஞ்சி - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
பாதாம் (அ) முந்திரி - 20
காய்ந்த திராட்சை - 15
வினிகர் - 2 தேக்கரண்டி
பால் - கால் கப்
நெய் - கால் கப்


 

மட்டனை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பாதாமை அரைத்து வைக்கவும்.
நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் பிரிஞ்சி இலை தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
பச்சை வாசனை அடங்கியதும் மட்டன் சேர்த்து கிளறவும். ஐந்து நிமிடம் வதக்கி வினிகர், மட்டனுக்கு தேவையான உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். தீயை குறைத்து வைக்கவும்.
மல்லி இலை, புதினா, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும். தயிர் கெட்டியாக இல்லையென்றால் ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டிக் கொள்ளவும். இப்பொழுது அரைத்தவற்றை தயிருடன் சேர்த்து கலக்கவும்.
மட்டன் ஒரளவுக்கு வெந்த பிறகு, அதில் உள்ள கிரேவி திக்கான பின் தயிர் கலவையை சேர்க்கவும். பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
தனியே வேறு ஒரு பாத்திரத்தில் அரிசியை முக்கால் பதமாக வடித்து வைக்கவும். வடித்தவுடன் வாய் அகலமான பாத்திரத்தில் கொட்டி விடவும். குங்கும பூவை சிறிதளவு பாலில் கலக்கி சாதத்தில் ஆங்காங்கே ஊற்றவும். திராட்சையை தனியே நெய்யில் வறுத்து சாதத்தில் கொட்டவும்.
அவனை 300 F (150 C) முற்சூடு செய்யவும். இப்பொழுது ஒரு பெரிய ட்ரேவில் ஒரு லேயர் சாதம் போட்டு அதன் பின்னர் மட்டன் கலவை போட்டு பின்னர் வறுத்த வெங்காயம் போடவும். சிறிதளவு பாலை ஊற்றவும். இதே போல் எத்தனை லேயர் வருகிறதோ அது வரையில் செய்யவும்.
மேலே ஒரு ஃபாயில் போட்டு சீல் செய்து அவனில் வைக்கவும். (அறுசுவையில் உள்ள வேறு முறையிலும் கூட தம் போடலாம்!)
ஒரு மணி நேரம் கழித்து திறக்கவும். இப்பொழுது சுவையான மொஹல் பிரியாணி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மொஹல் பிரியாணி சூப்பர். ரிச்சா நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

மொஹல் பிரியாணி பார்க்கவே சூப்பரா இருக்கு.சாரி உங்க பெயர் எனக்கு தெரியலை தப்பா நினைக்காதிங்க......வெள்ளிக் கிழமை தான் அவருக்கு லீவு கண்டிப்பா நான் செய்து பார்க்கிறேன் எனக்கு 1 பிளேட் தனியா பார்சல் பண்ணிட்டு அடுத்த வேளைய பாருங்க ...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கலக்கிட்டீங்க. நல்ல எடுப்பான Ingredients எல்லாம் போட்டு சூப்பரா செஞ்சு அசத்திருக்கீங்க. எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. நான் கண்டிப்பா ட்ரை பண்ணுவேன். விருப்ப பட்டியலா சேர்த்தச்சு. ரொம்ப ரிச்சான பிரியாணி. வாழ்த்துக்கள்

பாயில் பேப்பர் போட்டு தம் பண்ணினால் பேப்பர் மெல்ட் ஆகாதா. என்னிடம் ஓவன் இருக்கிறது ஆனால் நான் அதை அதிகம் பயன் படுத்தியது இல்லை. முர் சூடு என்று போட்டு இருக்கிங்க. அதை விளக்கமாக கூற முடியுமா?

பாவி... என்ன அருமையான பிரியாணி!!! அப்படியே இங்க அனுப்பிருக்கலாம்... ரொம்ப சூப்பர். நிச்சயம் ஊருக்கு போன பின் செய்து பார்க்கிறேன். அவன் வேணும்ல ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவண்யா செம பிரியாணிங்க அட்டகாசமா இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சப்புக் கொட்ட வைச்சுட்டீங்க போங்க... ப்ரெசண்டேஷன் சூப்பர்... :)

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி.

முதல் ஆளாய் வந்து வாழ்த்து சொன்னதற்க்கு நன்றி வினோ! ஆமாம் பாதாம் கிஸ்மிஸ் பால் நெய் என்று எல்லாம் சேர்ப்பதால் சுவையும் அமோகமாக இருக்கும்.

கவிதா என் பெயர் லாவண்யா....இதற்க்கு எதுக்கு சாரி எல்லாம்...வாழ்த்துக்கு மிக்க நன்றி. தோ வந்தாச்சு வெள்ளி. செய்து சாப்பிட்டு மறக்காம வந்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க சரியா? அட்ரெஸ் சொல்லுங்க பார்செல் தானே அனுப்பிடுவோம்....ஆனாலும் இங்கிருந்து சவுதி வரதுக்குள்ள நீங்க செய்து சாப்பிட்டு ஏப்பமே விட்டிருப்பீங்க :)

தொடர்ந்து என்னுடைய குறிப்புகளை பாராட்டி வாழ்த்துவதர்க்கு மிக்க நன்றி. விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சா ரொம்ப சந்தோஷம். செய்து சாப்பிட்ட பின்பு கண்டிப்பாக வந்து சொல்லணும் சரியா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வருகைக்கு நன்றி.

கண்டிப்பாக அலுமியம் பாயில் அவனில் மெல்ட் ஆகாது. அதுவும் நீங்கள் உபயோகிக்கும் பாத்திரம் ஸ்டீல், சில்வர் அல்லது இரும்பாக இருக்கக் கூடாது. அதை தவிர்த்து அலுமினியம், க்ளாஸ், பீங்கான் உபயோகிக்கலாம். அதே போல் அவனில் உள்ள ஓரம் அல்லது காயிலில் பாயில் படக் கூடாது. பாத்திரத்தில் எல்லாம் போட்டு பாயில் படும் முன்னர் அந்த பாயில் உள்ளே இருக்கும் பதார்த்தின் மேல் படாமல் பார்த்துக் கொள்ளனும்.

முற்சூடு என்றால் அவனை குறிப்பிட்டுள்ள டெம்பரேச்சரில் செட் செய்து ஆன் செய்ய வேண்டும். அப்பொழுது உள்ளே எதையும் வைத்து சமைக்க வேண்டாம். குறிப்பிட்ட அந்த டெம்பரேச்சர் வந்தவுடன் அவனின் லைட் அணைந்து விடும். இது தன் முற்சூடு என்பது. பிறகு நீங்கள் உள்ளே வைத்து தாராளமாக சமைக்கலாம்.

வேறு என்ன சந்தேகம் என்றாலும் கேட்கலாம். அவன் இருக்கில்ல இனி எல்லா அவன் குறிப்பும் செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்க!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனி என்ன இப்படி சொல்லிட்டீங்க. நீங்க இந்தியா போனது தெரியாமல் மாலேவுக்கு அனுப்பிட்டேன் .....இருந்தாலும் உங்களை விட்டுட்டு சாப்பிடுவேனா அதானால தான் டேபிளுக்கு இந்த பக்கம் ஒரு ப்ளேட் அந்த பக்கம் ஒரு ப்ளேட் (உங்களுக்கு ஒன்னு எனக்கு ஒன்னு) வெச்சி சாப்பிட்டேன் ;) உடனே கிளம்புங்க மாலேவுக்கு பார்சல் வந்து சேர்ந்திருக்கும்!

ஸ்வர்ணா வாழ்த்துக்கு மிக்க நன்றி. அட்டாகாசம் தான் அதானால் தான் அன்னைக்கு அளவு தெரியாமல் அதுவும் இல்லாமல் வனி பங்கும் சேர்த்து சாப்பிட்டு மலை பாம்பு போல் உருண்டுகிட்டு இருந்தேன் :P. சீக்கிரம் செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

ஐயையோ சப்பு கொட்ட வெச்சிடனோ.......நல்ல வேலை நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன் இல்லைனா உங்களை பார்க்க வெச்சி சாப்பிட்டால் எனக்கு வயறு வலி வந்திருக்கும். வாழ்த்துக்கு மிக்க நன்றி Chandgini :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
கம கம பிரியாணி..அவசியம் செய்து பார்க்கிறேன்..
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
கவிதா

இதே veg ல பன்னுனும்னா என்ன போட்டு பண்ணலாம்...?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இது தான் லாவண்யா குறிப்புங்கறது.அசத்தலா இருக்கு. நான் வெஜ் குறிப்புன்னாலும் பதிவு போடாமல் போக முடியல.(கிண்டல் பண்ணாதீங்க. :-) )

பிரியாணி சூப்பர். பார்க்கவே அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

Can this be done with pressure cooker instead of Oven?

லாவண்யா முகல் பிரியாணி சூப்பர்..எனக்கு இப்பிப்போ இப்படியான தனிதனி பிரியாணி சமைக்க ஆசை அதிகம் ..செய்துட வேண்டியது தான்

பிரியாணி சூப்பர். பார்க்கவே அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள்.

It's different.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிதா. செய்து பிடித்திருந்த வந்து சொல்லுங்க, பிடிக்கலைனாலும் வந்து சொல்லுங்க!

கோமதி வருகைக்கு நன்றி. இதில் வெஜ் என்றால் வெஜ் பிரியாணிக்கு போடும் காய்கறிகள் அதாவது காரட், பீன்ஸ், உருளை, பட்டாணி போன்றவைகளை சேர்த்து செய்துப் பாருங்கள். நன்றாக வந்ததா என்று சொல்லுங்கள்.

அன்பரசி யாரு உங்களை போய் கிண்டல் பண்ணுவாங்க? யாராவது பண்ணினா என்கிட்டே சொல்லுங்க சரியா? நீங்க செய்து எனக்கனுப்பிய போட்டோ பிரமாதமா இருந்தது. சாப்பிட்டு மலைப் பாம்பு போல் நீங்கள் இருந்ததை பார்த்து எனக்கு சிரிப்பை அடக்கமுடியலை ;))

வாழ்த்துக்கு மிக்க நன்றி சங்கரி.

லட்சுமி கண்டிப்பாக குக்கரில் பண்ணலாம். அறுசுவையில் தம் பிரியாணி வைத்து ஏகப்பட்ட குறிப்புகள் இருக்கு. அதில் உள்ள எதாவது ஒரு முறையிலும் பண்ணலாம். குக்கரில் பண்ணும் போது தண்ணீர் ஒன்றுக்கு ஒன்னு என்னும் விதத்தில் உபயோகிக்கவும். குக்கர் இல்லாமல் அடிகனமான பாத்திரத்திலும் தம் போடலாம்.

தளிகா உங்களின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. எனக்கு பிரியாணி என்றில்லை சாப்பாடு என்றாலே விதம் விதமா செய்து சாப்பிட ஆசை. என் மகளின் பிறந்த நாளுக்கு வந்த என் ஷெப் நண்பி செய்ததை மறு முறை நான் செய்தேன். அது தான் இது. பிடித்தா என்று வந்து சொல்லுங்க?

திலகம் உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

நன்றி லதா .

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பிரியாணி சூப்பரா இருக்கு.. presentation அழகா இருக்கு... ரொம்பவே ரிச் பிரியாணியா இருக்கு.. நிச்சயம் செய்து பார்க்கிறேன்.. ingredients எல்லாம் பார்த்தாலே ருசி தெரியுது.. வாழ்த்துக்கள் லாவண்யா..

"எல்லாம் நன்மைக்கே"

லாவி, தாமதமான பதிவிற்கு மன்னிக்கனும். மொஹல் பிரியாணி பாதாம் போட்டு அரைச்சு, முற்றிலும் புது முறையா பண்ணியிருக்கீங்க பா. அவன்ல வேற செய்திருக்கீங்க. நிச்சயம் ட்ரை பண்ணியே ஆகனும். கேப்சிகம்,தக்காளி போட்டு மறைச்சு வச்சா எங்களுக்கு உள்ளே பிரியாணி இருக்க விஷயம் தெரியாதுன்னு நினைச்சுடாதீங்க.மேலே பூசணிக்காயையே வச்சாலும் நாங்க நோண்டி பார்த்துடுவோமாக்கும் :D. இப்போதைக்கு அந்த கடைசி ப்ளேட்டை மட்டும் எனக்கு அனுப்பிடாதீங்க. ஏன்னா,செய்து ஒருவாரம் ஆயிட்டு போல ;) புதுசா செய்து கொரியர் பண்ணி விடுங்க. நான் ஊருக்கு போய் செட்டில் ஆனதும் பொறுமையா செய்து பார்த்து கண்டிப்பா பதிவு போடுவேன். வாழ்த்துக்கள் லாவி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

செய்முறை ரொம்ப எளிமையா இருக்கு..

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

லாவண் தாமதமான கருத்து பதிவு செய்வதறகு மன்னிக்கவும்.அன்னைக்கே உங்கள் குறிப்பை பார்த்துவிட்டேன்.பார்த்தவுடன் எடுத்து சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது.சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.அதை செய்து பார்க்கும் பொறுமையும்,நேரமும் இப்ப எனக்கு இல்லை.ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் செய்வேன்.அப்புறம் உங்க கிட்ட சொல்றேன்.
டெலிவரி முடிந்து நான் தனியாக தான் சமாளிக்கிறேன்.என் கணவர் உதவி செய்து கொடுப்பார்.எப்பிடியோ 3 மாசம் முடிய போகுது.உங்களின் அன்பான பேச்சுக்கு ரொம்ப தேங்ஸ்.பொண்ணுங்களை கேட்டதாக சொல்லவும்.

Expectation lead to Disappointment

உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. பாக்கியலக்ஷ்மி. பிரியாணி என்றாலே ரிச் தான் அதுவும் நட்ஸ் திராட்சை சேர்த்தல் கேக்கவா வேணும்? செய்ததோடு மட்டுமல்லாமல் வந்து எப்படி இருந்ததுன்னு சொல்லணும் சரியா?

கல்பூ லேட்டா வந்தாலும் லேடஸ்ட்டா தான் வந்திருக்கீங்க. சோ நோ மன்னிச்சு பிசினஸ். கண்டுபிடிச்சிட்டீங்களா, வெரி குட. யாருக்கும் தெரியாம உங்களுக்காக மட்டும் தான் ஒளிச்சி வெச்சிருந்தேன். நீங்க லேட்டா வந்ததால் நானே (பர்ப்!) சாப்டுட்டேன் (!).....அதெல்லாம் முடியாது நீங்க உடனே கிளம்பி இங்க வாங்க உங்களுக்கு பிரியாணி செய்து போட்டுட்டு தான் மறு வேலை. ஊருக்கு பாக்கிங் அப்புறமா பணிக்கலாம் ;) வாழ்த்துக்களுக்கு நன்றி.

மூஷி (சாரி உங்களின் பெயரை மறந்துட்டேன்!)....நன்றி.

மீனாள் மன்னிப்பெல்லாம் கேட்டா உங்க பேச்சு கா....இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியாதா.... அதுவும் பச்சை புள்ள வேற....ப்ரீயா விடுங்க. ஆசையாய் இருந்தா உடனே கிளம்பி வாங்க. நான் உங்களுக்கு செய்து தரேன். எனக்கு சமைக்க மட்டும் எப்பவுமே போர் அடிக்கறதே இல்லை. என்னை பார்த்தாலே தெரியும் நான் ஒரு சாப்பாட்டு பிரியை என்று. மூணு மாசம் சமாளிச்சாச்சு இல்லையா இனி ஒன்றுமே கஷ்டம் இல்லை. உங்களின் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். முடியாத சமயங்களில் கோவம் வரும் தான் இருந்தாலும் அவர்களின் சேட்டை நம்மை அதையெல்லாம் மறக்க செய்து விடும். என் அம்மா அடிக்கடி சொல்வார் ஒரு பெண்ணின் பொறுமையே அவள் தாயானதும் தான் அதிகம் வெளிப்படும். எவ்வளவு கோவக்காரியாக இருந்தாலுமே அவர்களை அவ்வளவு பொறுமைசாலிகளாக இந்த சின்ன வாண்டுகள் மாற்றிவிட்டுடுமாம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் லாவண்யா அக்கா நேத்து தான் உங்க பிரியாணி செஞ்சேன். சம டேஸ்ட். இனிமேல் பிரியாணினா இந்த முறையும் வீட்ல உண்டு. கொஞ்சமாவது மிச்சம் இருக்கும் நைட்டும் சாப்பிடலாம்னு இருந்ததுக்கு எங்க வீட்டு சார் நைட்டும் சாப்பிடுறேன்னு எனக்கு தராம சாப்பிட்டாங்க. ரொம்ப நல்லா இருந்தது. அரச்சு செய்யுற முறை வித்தியாசமாகவும் , டேஸ்டாகவும் இருந்தது. செஞ்சு பார்த்துட்டு தான் பின்னூட்டம் போடணும்னே இருந்தேன். உங்க குறிப்பும், படங்களும் என்னை சீக்கிறமே செய்ய வச்சிருச்சு. . , நம்மெல்லாம் பிரியாணி ரசிகையாச்சே.......

லாவண்யா,

வாவ்... மொஹல் பிரியாணி - ரிச் & டேஸ்டி குறிப்பா தெரியுது, சூப்பர்! அதைவிட நீங்க செய்து காட்டியிருக்கும் விதம், கொடுத்திருக்கும் விளக்க‌ங்கள் எல்லாம் அருமை! அந்த கடைசிப்படம், சான்ஸே இல்லை! எதோ, ஃபுட் மேகசின்ல போட்ட படம்போல செம ஷார்ப்பா வந்திருக்கு!! :) வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

நசீம் ரொம்ப நன்றி. உங்களின் வாழ்த்து என்னை அப்படியே பறக்க வைக்குது.

சுஜாதா இப்படியெல்லாம் கமென்ட் போட்டா எனக்கு வெட்கம் (இருக்கானு தானே கேக்குறீங்க) எல்லாம் வருது. கொஞ்ச நாளாய் புட் போடோக்ராபி பத்தி படிச்சிட்டு இருந்தேன்...அதன் தாக்கமோ என்னவோ தெரியலை. வாழ்த்துக்கு மிக்க நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!