மண்ணாங்கட்டி

தேதி: March 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (9 votes)

 

மண்ணாங்கட்டி:
கொழுக்கட்டை மாவு
இட்லி மிளகாய்பொடி
உப்பு
பெருங்காயப்பொடி
தேங்காய்துருவல்
எண்ணெய்
கடுகு
கடலை உருண்டை:
நிலக்கடலை - 2 கப்
வெல்லம் - ஒரு கப்


 

<b>மண்ணாங்கட்டி</b> தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லக் கொழுக்கட்டைக்கு தயார் செய்த மேல்மாவு அதிகமாகி விட்டால் அத்துடன் தேவையான அளவு இட்லி மிளகாய்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய்துருவல் சேர்த்து நன்கு பிசையவும். அதை சிறு உருண்டையாக உருட்டி தட்டையாக்கி நடுவில் கட்டை விரலால் அமுக்கி விடவும்.
அவற்றை இட்லி வேக வைப்பது போல் ஆவியில் வேக விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, அதில் மண்ணாங்கட்டிகளைப் போட்டு ரோஸ்ட் செய்யவும்.
இனிப்பான கொழுக்கட்டைக்கு இந்த மண்ணாங்கட்டி நல்ல மேட்ச்.
<b>கடலை உருண்டை</b> கடலையை வறுத்து ஒரு முறத்தில் போட்டுத் தேய்த்து தோல் நீக்கி இரண்டாக உடைத்துக் கொள்ளவும். அல்லது கடையில் தயாராகக் கிடைக்கும் உப்பு சேர்க்காத கடலையை வாங்கி சுத்தம் செய்து லேசாக சூடு வர வறுக்கவும்.
வெல்லத்துடன் கால் கப் நீர் சேர்த்து பாகு வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மண் நீக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து கெட்டி கம்பிப் பாகு ஆக்கவும். (பாகை தண்ணீரில் போட்டால் கரையாமல் உருட்டும் பதம்.)
பாகை இறக்கி கடலையில் விட்டு ஒரு கரண்டிக் காம்பால் கிளறவும்.
சற்று ஆறியதும், கையில் சிறிது அரிசி மாவைத் தொட்டுக் கொண்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். ஆறியதும் எடுத்து வைக்கவும். சத்தான இந்த கடலை உருண்டையை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல பெயர் வைத்த ஒரு அருமையான சத்தான டிபன். வாழ்த்துக்கள்

ராதாம்மா ரொம்ப நல்ல evening டிபன் நான் அடுத்த வாரம் பண்ணிட்டு சொல்லுறேன் கொழுக்கட்டை மாவுனா பச்சரிசி மாவு தானே ராதாம்மா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மண்ணாங்கட்டி! பேர் நல்லா இருக்கு.. செய்முறை ரொம்ப எளிமையா இருக்கு.. அதோட கடலை உருண்டையும்.. சூப்பர்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.. விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன்..

"எல்லாம் நன்மைக்கே"

ராதாம்மா...இதுக்கு ஏன் இந்த பேருன்னு நீங்க சொல்லியே ஆகணும்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

1. பேர் எப்பிடி வந்துச்சு!!
2. மண்ணாங்கட்டியும் கடலை உருண்டையும் சேர்த்து சாப்பிடணுமா!

இரண்டு குறிப்புமே கலக்கலா இருக்கு ராதா.

‍- இமா க்றிஸ்

பெயரும் குறிப்பும் ரொம்பவே வித்தியாசமா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராதாம்மா மண்ணாங்கட்டி ,கடலை உருண்டை சூப்பர்.எனக்கு பாகு செய்யத்தெரியாது.எப்படி என்று கூறவும்.

ராதா பாலு,

இமா அவர்களின் முதல் கேள்வியை நான் வழி மொழிகிறேன்.. :) எனிவே பயனுள்ள குறிப்பு.. நன்றி..

மண்ணாங்கட்டி,நல்ல பெயர்.ரொம்ப வித்தியாசமா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தெரிந்த குறிப்பு , தெரியாத பெயர் . பெயர் காரணம் என்னவோ ? சின்ன வயச ஞாபகப்படுத்திட்டிங்க , எங்க பாட்டி கூட பூரண கொழுக்கட்டை செய்யும் போது கொஞ்ச மாவுல இது மாதிரி எங்களுக்கு பிடித்த வடிவங்களா செய்து தருவாங்க . ஆன சின்ன வித்தியாசம் இட்லி மிளகாய்பொடிக்கு பதிலா பூண்டு பொடி இல்ல எள்ளு பொடி போடுவாங்க . ரொம்ப ருசியா இருக்கும் . நன்றிமா.

சிவகாமி

குறிப்புகளை வெளியிட்ட அட்மின் மற்றும் அ.குழுவினருக்கு நன்றி!!

கௌதமி....உங்களுக்கு பெயர் பிடிச்சிருக்கு போல....நன்றி!!!

தனா....இது பச்சரிசி மாவேதான். கொழுக்கட்டைக்கு கிளறுவது மாதிரியே செய்ய வேண்டும். செய்து பார்த்து சொல்லு!

பாக்யா....பாராட்டுக்கு நன்றி. நீ ஜப்பானில் இருந்து கொண்டு எல்லா ரெசிபியும் செய்ய முடிகிறதா? நம் நாட்டு சாமான் எல்லாம் அங்கு கிடைக்கிறதா? பாராட்டுக்கு நன்றிப்பா!

இமா...கோமதி....வனிதா...சாந்தினி....
'பெயர்க் காரணம் கூறவும்' அப்ப்டீனு பரிட்சை மாதிரி கேட்டுருக்கீங்க!!!சொல்லிடறேன்.

இதை அப்டியே உருட்டி வெக்கிறதால மண்ணாங்கட்டி மாதிரி இருக்கில்லயா?(படம்- 2 பார்க்கவும்) அதனால் இதுக்கு இந்தப் பெயர் என்று என் அம்மா சொல்வார். எங்களுக்கெல்லாம் பெயர் வைத்த மாதிரி இந்த ரெசிபிக்கும் இப்படி பெயர் வைத்து விட்டாராம்!! விளக்கம் சரியா தோழிகளே!

இமா....கடலை உருண்டை இத்துடன் சாப்பிட இல்லை! இது கொழுக்கட்டைக்குதான் ஜோடி! இரண்டும் சின்னக் குறிப்புகள் என்பதால் அட்மின் சேர்த்துப் போட்டுள்ளார் போலும்!
அனைவரின் பாராட்டுக்கும் நன்றி

பரிமளா...வெல்லம் கரைந்து நல்ல வாசனை வந்து கெட்டியாகும். கிளறும்போதே தெரியும். ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் விட்டு அதில் ஒரு ஸ்பூன் பாகை விட்டுக் கையால் எடுத்துப் பார்க்கவும். அது கரையாமல் உருட்டும் பதம் (கமர்கட் மாதிரி) இருக்க வேண்டும். உடன் கீழே இறக்கி கடலையில் விட்டு ஒரு கரண்டியால் கிளற வேண்டும். ஒரு முறை செய்து பார்த்தால் புரியும்.

ம்யூஸி....வாழ்த்துக்கு நன்றி...
கமலி....இது அந்த நாளைய சமையல் குறிப்புதான். இந்தக் காலத்தில் இதுபோல யாராவது செய்வார்களா என்பது சந்தேகமே! பெயர்க் காரணம் மேலே பார்க்கவும்!!

ரொம்ப வித்தியாசமா,ஈஸியா இருக்குது.வாழ்த்துக்கள்.உங்களின் வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.ரொம்ப சூப்பரா இருந்தது.

Expectation lead to Disappointment

ரொம்ப நன்றி மீனா....இதையும் செய்து பார்த்து சொல்லுங்க!

அன்பு ராதா பாலு

குறிப்பின் பெயர் வித்தியாசமாக இருக்கு. கொழுக்கட்டை மாவில் இட்லிப் பொடி போட்டு செய்வது நல்லா இருக்கு. ஒரு முறை செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அட...சீதாலட்சுமி...நீங்களா? நம்ப முடியல...எப்படி இருக்கீங்க? என் ரெஸிபியைப் பாராட்டினதுக்கு ரொம்ப நன்றி....ட்ரை பண்ணிப் பாருங்க....சொல்லுங்க நல்லா இருந்ததானு!

ராதாம்மா, தலைப்பே திரும்பி பார்க்க வச்சுடுச்சி. மண்ணாங்கட்டின்னா அரிசில இருக்கும்மே அதை தானே சொல்லுவோம். நானும் அப்படி தான் நினைச்சுட்டு வந்தேன். அதை சேர்த்து தான் ஏதோ குறிப்பு செய்திருக்காங்கன்னு. இங்கே வந்து பார்த்தால தெரியுது ;) பழைய கொழுக்கட்டை மாவில் புதிய குறிப்பு. வித்யாசமான முயற்சி. வாழ்த்துக்கள் :) இப்ப கொழுக்கட்டை செய்ய மாவு ரெடி பண்னனுமா? மண்ணாங்கட்டிக்கு கொழுக்கட்டை மாவை மீதியாகுற மாதிரி பண்ணனுமா? ஒரே குழப்பத்துல இருக்கேன் யாராச்சும் பதில் தாங்கப்பா ;(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய்....குழப்பனா!(பேர் நல்லா இருக்கில்ல??!!) எப்படி இருக்க?
//பழைய கொழுக்கட்டை மாவில் புதிய குறிப்பு. வித்யாசமான முயற்சி. வாழ்த்துக்கள் :)//
ஹேய்...பழய மாவில செய்ய முடியாது! ஊசிப் போய் நாற்றம் அடிக்கும்!
//இப்ப கொழுக்கட்டை செய்ய மாவு ரெடி பண்னனுமா? மண்ணாங்கட்டிக்கு கொழுக்கட்டை மாவை மீதியாகுற மாதிரி பண்ணனுமா?//
மாவு ரெடி பண்ணும் உன் சாமர்த்தியத்தில் இருக்கு ஆமாம்!!!! எப்படியும் நீ எதுவும் செய்யப் போறதில்ல.. இங்க வந்து உங்கம்மாகிட்டதான செய்யச் சொல்லப்போற? அது அவங்க பாடு! நீ கவலைப் பட வேண்டாம்!!
எப்போ இந்தியா அரைவல்??
//ஒரே குழப்பத்துல இருக்கேன் யாராச்சும் பதில் தாங்கப்பா//
இது கேள்வி பதில் பகுதி அல்ல மேடம்!!!

ராதாம்மா...

நல்ல பேரு வச்சிருக்கீங்க.. நான் பேரு பாத்து தான் ஓபன் பண்ணி பாத்தேன். நான் என் பையனை எதாவது திட்டணும்னா.. மண்ணாங்கட்டினு தான் திட்டுவேன். எங்க ஊருல அப்படி தான் திட்டுவாங்க. இது என்னடா புதுசா இருக்கேனு பாத்தா உங்க குறிப்பு. நல்லா இருக்கு. நானும் மாவு மிஞ்சினா இப்படி தான் செய்வேன். ஆனால் இட்லி பொடி போட்டு செய்தது இல்லை. அதற்கு பதிலா மிளகாய் பொடி போடுவேன். தாளிக்கும்போதும் சிறிது மிளகாய்பொடி துாவி விடுவேன். இது வித்தியாசமா இருக்கு. அடுத்த முறை கொழுக்கட்டை மாவு மிஞ்சும்போது கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

கடலை உருண்டையும் பாக்க ரொம்ப அழகா இருக்கு... எச்சில் ஊறுது...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பு ராதா....எப்படி இருக்கீங்க? குழந்தையை அப்படியெல்லாம் திட்டாதீங்க. பாவம் அவன்... செகண்ட் இஷ்யூ ரெடியா? ரெசிபி பார்த்து பாராட்டியதற்கு மிக்க நன்றி...