சுஸ்ரீக்கு வாழ்த்துக்கள் !!!

அறுசுவையின் மூத்த உறுப்பினரும், நம் அன்புத்தோழியுமான சுஸ்ரீ, வேலை மற்றும் இரண்டு பிள்ளைகள் என்று பிஸியாக இருந்தாலும்,சுவையான 25 சமையல் குறிப்புகள் கொடுத்து கூட்டாஞ்சோறு பகுதியில் சேர்ந்திருக்காங்க.அவங்களை வாழ்த்துவோம் வாங்க,தோழீஸ்!!!

அன்பு சுஸ்ரீ,
இப்போதான் குறிப்புகள் கொடுக்க ஆரம்பிச்சீங்க.அதுக்குள்ள 25 குறிப்புகள் கொடுத்து கலக்கிட்டீங்க.வாழ்த்துக்கள்.

அறுசுவையில் தோழிகளின் பல சமையல் குறிப்புகளை ட்ரை பண்ணி,தொடர்ந்து பின்னூட்டம் கொடுத்து ஊக்கபடுத்தி வரும் உங்க அன்புக்கு நன்றி.பல பட்டிமன்றங்கள் முடிந்த பிறகும் கூட,இழையை தேடி எடுத்து பதிவிட்டு,வாழ்த்தும் உங்க ஆர்வத்தை பார்த்து வியந்து இருக்கேன்.

சமையல் குறிப்புகளிலும் விதவிதமான புதிய ரெசிப்பிக்களை கொடுத்திருக்கீங்க.தொடந்ர்து இன்னும் பல சுவையான குறிப்புகளை தந்து விரைவில் கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துகிறேன்.

அன்பு சுஜாதா, நான் பார்த்த வரையில் உங்கள் அத்தனை குறிப்புகளும், புதுமை, படங்கள், செய்முறை விளக்க குறிப்புகளில் ஒரு நேர்த்தி அத்தனையும் இருந்தன. எனக்கெல்லாம் ஒரு குறிப்பை கண்டுபிடிச்சு பண்ணிட்டேன்னா அதை வச்சுட்டே ஒரு 6 மாசம் பில்டப் பண்ணிட்டு திரிவேன்பா. நீங்க & உங்களை மாதிரி தோழிகள் உண்மையாவே க்ரேட் தான்பா. சமையல் கலைங்கறது எல்லாருக்கும் நாய்க்குட்டி மாதிரி பழகிடாது. முக்கியமா என்னை மாதிரி ஆளுங்களுக்கு. ஆனா உங்களுக்கு சமையல் செல்லப்பிராணி மாதிரி சொல்ற பேச்சை கேக்குது. அதனால் தான் உங்களால 25 குறிப்புகள் தர முடிஞ்சது. சமையலோடு நிற்காமல், அறுசுவை தோழிகளின் படைப்புகள் அத்தனைக்கும் தவறாமல் ஊக்கமூட்டி பாராட்டி பதிவும் போட்டு வருகிறீர்கள். சீனியர் உறுப்பினராக உங்களிடம் என்னை கவர்ந்த உயர்ந்த பண்பு இது சுஜாதா :)

நீங்கள் மேன்மேலும் பல குறிப்புகள் தந்து, மேன்மேலும் தங்க நட்சத்திரங்களை சேர்த்துக்கொண்டே செல்லவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆகா... இதெல்லாம் எப்பங்க நடக்குது... ஹர்ஷா மட்டும் கரக்ட்டா கணக்கு எடுத்துடறாங்க!!! ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சுஸ்ரீ... ஏன்னா உங்க குறிப்புகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்... முக்கியமா படங்கள் நினைவில் நிக்கும். அந்த அளவு தெளிவா அழகா இருக்கும். இன்னும் பல 100 குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.... :) கலக்குங்க.

இது போதாதுன்னு எல்லார் குறிப்புகளிலும் பாராட்டு மழையை பெரிய பதிவுகளோட தந்து மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்குறதுலையும் உங்களை அடிச்சுக்க ஆளில்லை. என் குறிப்புகளை அதிகம் செய்து பின்னூட்டம் தந்தவர்களில் நீங்களும் மிக முக்கியமானவர். மிக்க நன்றி சுஸ்ரீ. :) உங்களை போல் தோழிகள் பெரிய பலம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் சுஸ்ரீ அழகான படங்கள் அருமையான குறிப்புகள்னு கொடுத்து அமர்க்கள படுத்தீட்டீங்க பா உங்க குறிப்புகள் அனைத்தும் புதுமை + அருமை வாழ்த்துக்கள்

மேலும் பல குறிப்புகள் தந்து மென்மேலும் பல நட்சத்திரங்கள் பெற வாழ்த்துக்கிறேன்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ..
மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :) உங்களுடைய குறிப்புகள் ,பின்னூட்டங்கள் பின்னூட்டதிற்கானா பின்னூட்டங்கள் என அனைத்துமே ரசிக்கும் படி இருக்கும். மேலும் பல குறிப்புகள் கொடுத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கை உயர வாழ்த்துக்கள்.. :)

உங்க குறிப்புகள் அனைத்தும் புதுமை + அருமை வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் இன்னும் பல பல குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்கள் உங்கள் குறிப்புகள் அருமை படங்கள் எல்லாம் அழகாக உள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள் சுஸ்ரீ

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து பல ஸ்டார்கள் வாங்க வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன் தோழி.

Expectation lead to Disappointment

சுஸ்ரீ எல்லாமே ரொம்ப நல்ல குறிப்புகள். சீக்கிரமே 25 குறிப்புகள் கொடுத்து சில்வர் ஸ்டார் வாங்கிட்டீங்க வாழ்த்துக்கள் அதுபோல நிறைய கோல்ட் ஸ்டார்ஸ் வாங்க என் வாழ்த்துக்கள்.

அன்பு சுஸ்ரீ,

மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

நேர்த்தியான படங்கள், சிம்பிளான ஸ்டெப்ஸ் என்று உங்கள் குறிப்புகளில் உங்களுடைய தனித் தன்மை தெரிகிறது.

இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து, தங்க நட்சத்திரங்கள் வாங்கி, அறுசுவையின் டாப் ஸ்டார்கள் குழுவில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்