வாழைக்காய் குழம்பு

தேதி: March 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

வாழைக்காய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 1 அல்லது 2
பூண்டு - 5 அல்லது 6 பல்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
புளி - சிறிதளவு
வறுத்து அரைக்க:
தனியா - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
வெந்தயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

வறுக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும். இதனை தேங்காய் துருவலுடன் அரைத்து வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய் சேர்த்து வதக்கவும்.
இப்போது மிளகாய் தூள், அரைத்த விழுது மற்றும் தேவையான புளி தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். உப்பு சரிப்பார்க்கவும்.
வாழைக்காய் வெந்து, எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
சுவையான வாழைக்காய் கார குழம்பு தயார். இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

விரும்பினால் மிளகாய் தூளுக்கு பதில் காய்ந்த மிளகாயை வறுத்து அரைத்தும் சேர்க்கலாம். அரைக்கும் விழுது நைசாக இருக்க வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு ஹர்ஷா

வழக்கம் போலவே தெளிவான படங்கள், செய்முறை விளக்கங்கள்!

நல்லா இருக்கு பாக்கறப்பவே, செய்து பாக்கறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

வாழைக்காய் குழம்பு சூப்பர்.. வறுத்து அரைத்தாலே தனி சுவை தான்.. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.. கலர்புல்லா குழம்பு செய்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..

"எல்லாம் நன்மைக்கே"

அரைத்து வைத்தால் வாசமே சூப்பரா இருக்குமே... :) யம் யம்னு சாப்பிடுவேன். செய்துடறேன் இன்னக்கே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் நான் இன்னைக்கு தான் வாழைக்காய் வாங்கிட்டு வந்தேன் நீங்க வேற அரைத்து வைக்கிறது சொல்லி இருக்கிங்க கண்டிப்பா நல்ல இருக்கும் நாளைக்கு இந்த குழம்பு பண்ணிட்டு சொல்லுறேன் படங்கள் ரொம்ப நல்ல இருக்கு ஹர்ஷா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தெளிவானபடம் செய்வதற்குஎழியவழி நன்றிசகோதரி.

காரக்குழம்பை பாத்ததுமே பசியாயிருச்சு!!

வாழ்த்துக்கள்டா;-)

Don't Worry Be Happy.

ஹ‌ர்ஷா,

வாழைக்காய் குழம்பு சூப்பர்! போட்டோஸ் அத்தனையும் ஒன்னுப்போல அவ்வளவு அழகா, பார்ப்பவர்களை செய்யத் தூண்டுவதா இருக்கு! :) கண்டிப்பா ட்ரை பண்ணிப்பார்க்கனும். வாழ்த்துக்க‌ள்.

அன்புடன்
சுஸ்ரீ

வாழைக்காய் வாங்கினாலே அவியல் இல்லைனா வருவல் தான்.....குழம்பு செய்ததே கிடையாது. ஒரு முறை கண்டிப்பாக அதுவும் உங்களின் முறைப்படியே செய்திடுவோம்! வாழ்த்துக்கள். முகப்பில் பார்த்தும் நீங்கள் தான் என்று கண்டுபிடித்துவிட்டேன்!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.கடைசி படத்தை மாற்றி அப்லோட் செய்ததற்கும் மிக்க நன்றி.

சீதாலக்‌ஷ்மி,
உங்க பதிவு பார்த்தாலே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.அதுவும் முதலாவதாய் பதிவிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துட்டீங்க.ரொம்ப ரொம்ப நன்றி.கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.

பாக்கிய லக்‌ஷ்மி,
ஆமாம்.வறுத்து அரைத்து செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்.கண்டிப்பா செய்து பாருங்க.பதிவுக்கு ரொம்ப நன்றி.

வனிதா,
கண்டிப்பா செய்து பாருங்க.வாழைக்காய் வாசமும் சேர்ந்து சூப்பரா இருக்கும்.பதிவுக்கு மிக்க நன்றி.

தனா,
குழம்பு செய்துட்டீங்களா?எப்படி வந்தது?பதிவுக்கு மிக்க நன்றி.

டெய்ஸி தாரா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ஜெய்,
எப்படி இருக்கீங்க? குட்டீஸ் நலமா?உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்களுக்கு நன்றி. :-)

சுஸ்ரீ,
ஃபோட்டோஸ் நல்லா இருக்கா?எல்லாம் என் கைவண்ணம்தான்.;-) உங்க பதிவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சுஸ்ரீ.செய்து பாருங்க.

லாவண்யா,
ஓ..அந்த கண்ணாடி பௌல் வச்சு கண்டுபிடிச்சீங்களா?சரி...அப்ப அடுத்த குறிப்புக்கு பௌலை மாத்திடுவோம்.சரியா? குழம்பு செய்து பார்த்து சொல்லுங்க.பதிவுக்கு நன்றி.

கண்ணாடி பவுள் (Pyrex?) + மாட் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஒகே...அடுத்த தடவை ப்ளேஸ் மாட்டை(Place mat)யும் மாற்றிடலாம். இப்ப ஓகே வா?

அன்பு வாழைக்காய் குழம்பு முந்தின நாள் செய்தேன் ரொம்ப அருமையா இருந்துச்சி பா.
மிளகாயும் வறுத்து அரைத்தேன் வாசணை + சுவை சூப்பர்ப்பா வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குழம்பு செய்துட்டீங்களா?மிக்க மகிழ்ச்சி.உங்க பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி ஸ்வர்ணா.

super

super