சிக்கன் பிட்ஸா

தேதி: March 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

பிட்ஸா பேஸ் 6" - 3
சிக்கன் - 100 கிராம்
பல்லாரி வெங்காயம் - 2
தக்காளி - 2 (சிறியது)
குடைமிளகாய் - ஒன்று
தக்காளி சாஸ் - சிறிது
கார்லிக் சில்லி சாஸ் - சிறிது (விருப்பப்பட்டால்)
பார்பிக்யூ சாஸ் - சிறிது
சீஸ் - 7 ஸ்லைஸ்
ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய்
மிளகாய் தூள் - சிறிது
உப்பு - சிறிது


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் சிக்கனை பார்பிக்யூ சாஸ், மிளகாய் தூள், உப்பு போட்டு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
பின் அதை ஒரு வாணலியில் சிறிது நீர் விட்டு வேக விடவும். உடனே வெந்து விடும்.
பிட்ஸா பேசில் சுற்றிலும் சிறிது ஆலிவ் ஆயில் தேய்க்கவும்.
பிட்ஸா பேசில் மேல் பகுதியில் தக்காளி சாஸ் மற்றும் கார்லிக் சில்லி சாஸ் இரண்டையும் பரவலாக தேய்க்கவும்.
பின்னர் அதில் நடுத்தரமாக நறுக்கிய வெங்காயத்தை பரவலாக தூவவும். இவ்வாறே தக்காளி, குடைமிளகாய், சிக்கன் ஆகியவற்றையும் பரவலாக தூவவும்.
அதன் மேல் சீஸ் ஸ்லைஸ் துண்டுகளை பரப்பி வைக்கவும்.
பின்னர் 220 டிகிரிக்கு, 15 நிமிடம் அவனை ப்ரீஹீட் செய்யவும். அதில் பீட்ஸாவை 10 நிமிஷம் அல்லது சிறிது பிரவுன் நிறம் வரும் வரை வைக்கவும். பின் அதை எடுத்து பார்பிக்யூ சாஸை குறுக்கும் நெடுக்குமாக ஊற்றி மேலும் 2 நிமிஷம் வைக்கவும்.
சுவையான பார்பிக்யூ சிக்கன் பிட்ஸா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

படங்கள் அழகா இருக்கு,இது உங்க முதல் குறிப்பா?டேஸ்டியானபிட்ஸா.வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய நல்ல குறிப்புகள் குடுங்க.

என்ன அவன் வைத்து இருகீங்கள்,,டீடெய்ல் சொல்லுன்களேன்...pizza. super

ரொம்ப நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சுவையான பிட்ஸா சுலபமான செய்முறை :) நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் முதல் குறிப்பை தவறில்லாமல் வெளியிட உதவி செய்து பிரசுரித்த அட்மின் அண்ணாவுக்கு நன்றிகள் பல.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

இது இங்கே எனக்கு பிடித்த பார்பிக்யூ சிக்கன் பீட்ஸா.ஆனால் எனக்கு டைம் இல்லாததால் ஷேர் பண்ற ஐடியா இல்லே. இது நல்லா இருப்பதால் என் வீட்டில் ஷேர் பண்ண சொன்னாங்க.அதுக்கு உடனே வாழ்த்து சொல்லி ஊக்குவித்த தோழிகள் ரீம்,ரியாசா,முஸி,வனி ஆகியோருக்கு நன்றிகள் .

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

என்னோட oven பேர் elba the classic .ஹாட் பிளாட்டோட இருக்கும் ரியாசா.பொண்ணு நலமா?

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.