பருப்பு பொடி

தேதி: March 8, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

துவரம்பருப்பு - ஒரு கப்
கடலைப் பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வெறும் வாணலியில் எண்ணெயில்லாமல் சிவக்க வறுக்கவும். பாதி வறுக்கும்போதே மிளகு, மிளகாய் வற்றலையும் சேர்த்துக் கொள்ளவும்.
இறக்கி ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்யவும். ரொம்ப நைஸாக இருக்கக் கூடாது.
சாதத்தில் நல்லெண்ணெயோ, நெய்யோ சேர்த்து இந்த பருப்புப் பொடி போட்டு கலந்து மோர்க் குழம்பு, அப்பளத்துடன் சாப்பிடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராதாம்மா பையனுக்கு பருப்பு பொடி தினமும் கேட்பான் இந்த வாரத்தில் பருப்பு பொடி பண்ணனும் என்று நினைத்தேன் நீங்க குடுத்து டிங்க நான் பண்ணிட்டு சொல்லுறேன் நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ராதாம்மா, என்னை போல் வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ள குறிப்பு இது. இது போல் இன்னும் நிறைய குறிப்புகள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கும் உங்கள் அன்பு மகள் சுபா.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

நல்ல குறிப்பு. முதல் புகைப்படத்திலுள்ள முகம் அருமை. பாராட்டாமல் இருக்க முடியலை.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

குறிப்பை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு நன்றி...

தனா....முதலாக வந்து பதிவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி. ஈஸி ரெஸிபி செய்து பார்த்து எழுது...

சுபா....நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? வேலைக்குப் போகும் பெண்களுக்கெல்லாம் இது போன்ற ரெடி பொடிகள் வசதிதான்...லேட்டாக வீட்டுக்கு வந்து ஒன்றும் சமைக்கத் தோன்றாதபோது இதெல்லாம் கைகொடுக்கும். நேரம் கிடைக்கும்போது செய்து வைத்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கு நன்றி!

ராஜி...நலமா? வாழ்த்துக்கு மிக நன்றி!

நான் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன். எனக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவளுக்காக தான் நான் இது போன்ற குறிப்புகளை தேடுகிறேன். அட்மின் அண்ணா இதை இங்கு வந்து பதிவு போட்டதர்க்கு மன்னிக்கவும்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.