சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட்

தேதி: March 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

சேப்ப‌ங்கிழ‌ங்கு - 5 (அ) 6 (மீடிய‌ம் சை‌ஸ்)

சாம்பார் பொடி - 1 தேக்க‌ர‌ண்டி

ம‌ஞ்ச‌ள்த்தூள் - 1/2 தேக்க‌ர‌ண்டி

க‌டலைமாவு - 2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீர‌க‌ம் - 3/4 தேக்க‌ர‌ண்டி

பெருஞ்சீர‌க‌ம் (சோம்பு) - 1/2 தேக்க‌ர‌ண்டி

க‌றிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - 1 சிட்டிகை

உப்பு - சுவைக்கேற்ப‌

எண்ணெய் 1 - மேசைக்கரண்டி (அ) தேவையான அள‌வு


 

சேப்ப‌ங்கிழ‌ங்கை தண்ணீரில் போட்டு, உப்பு சேர்த்து வேக‌விட‌வும்.

ரொம்ப‌வும் குழைந்துவிடாமல் வேகவிட்டு எடுத்து, சூடு ஆறியதும் தோலுரித்து, 1/2 அல்லது 3/4 இன்ச் அளவு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

இதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள்த்தூள், கடலைமாவு எல்லாமுமாக சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து வைக்கவும். (கிழங்கில் உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் துளி உப்பும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.)

வாண‌லியில் எண்ணெய் விட்டு, சூடான‌தும், க‌டுகு போட்டு பொரிந்ததும், பெருங்காய‌ம், சீர‌க‌ம், பெருஞ்சீர‌க‌ம், க‌றிவேப்பிலை எல்லாம் வ‌ரிசையாக‌ போட்டு லேசாக‌ வ‌த‌க்க‌வும்.

இத‌னுட‌ன், தயார் செய்து வைத்திருக்கும் சேப்ப‌ங்கிழ‌ங்கைப்போட்டு, சாம்பார்ப்பொடி வாசனைபோய் முறுக‌லாகும் வ‌ரை வ‌த‌க்க‌வும்.

இப்போது சேப்ப‌ங்கிழ‌ங்கு ட்ரை ரோஸ்ட் த‌யார்!
இது ரசம்/த‌யிர் சாத‌த்துட‌ன் சாப்பிட‌ அருமையாக இருக்கும். எல்லாவிதமான கலந்த சாத வகைகளுக்கும் பெஸ்ட் மேட்ச்சாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று தான் செய்தேன்.ரொம்ப சூப்பரா இருந்துச்சு.நன்றி.

Tharifa.

மிசஸ் ஹனீபா,

இப்பதான் பார்க்கிறேன் உங்க பதிவை.
குறிப்பை செய்து பார்த்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி. உங்களுக்கு குறிப்பு பிடித்திருந்த‌தில் மிக்க மகிழ்ச்சி!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,
உங்க சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட் செய்தாச்சு.ரொம்ப நாளா செய்யணும்னு நினச்சுட்டு இருந்தேன்.கடலை மாவு சேர்த்து செய்தது,ரொம்ப நல்லா இருந்தது. காரம் குறைவா போட்டதால் ஹர்ஷாக்கும் பிடிச்சது.கிழங்கில் உப்பு சேர்த்து வேக வைக்க சொன்னது நல்ல டிப்ஸ்.அருமையான குறிப்புக்கு நன்றி சுஸ்ரீ.