இலங்கை ஆட்டு எலும்பு (இ)ரசம்

தேதி: July 30, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

ஆட்டு எலும்பு - 250g
பழ புளி - சிறிய உருண்டை
தேசிக்காய் - பாதி
மஞ்சள் - 1/2 தே.கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
அரைப்பதற்கு:
காய்ந்த சிவப்பு மிளகாய் - 4
தனியா - 2 மே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 1/2 மே.கரண்டி
கராம்பு - 1
உள்ளி - 3 பல்லு
பெருங்காயம் - சிறு துண்டு
மிளகு - 5அல்லது 6
இஞ்சி - சிறு துண்டு


 

ஆட்டு எலும்பை சுத்தம் செய்து மஞ்சள், உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.
பின்பு புளியை 3/4 லிட்டர் தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்து அதனுள் எலும்பை போட்டு அளவான தீயில் நன்றாக அவிய விடவும்.
பின்பு அரைக்க வேண்டிய பொருட்களை அரைப்பதமாக அரைத்து அவிந்து கொண்டிருக்கும் எலும்பினுள் இட்டு மீண்டும் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி தேசிப்புளி விட்டு சுடச் சுட பரிமாறவும்.


இந்த ரசம் உடம்பு டயட்டாக இருக்கும் போது அருந்தினால் கொஞ்சம் தெம்பாக இருக்கும்.
நீங்கள் விரும்பினால் ஒரு தக்காளியையும் எலும்புடன் சேர்த்து அவிய வைத்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்களின் இலங்கைச் சமையல் குறிப்புகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கின்றது. ஒரே ஒரு சங்கடம். சில (இலங்கை) தமிழ் வார்த்தைகள் புரியவில்லை. சில பொருட்களும் என்னவென்று தெரியவில்லை. மிகவும் புதிதாக இருக்கின்றது.

அன்பின் நண்பி easwari
உங்கள் சந்தேகம் சரியானது தான், சரி உங்களுக்கு எந்த வார்த்தைகள் புரியவில்லை என்றும், எந்த பொருட்களைப் பற்றி தெரியவில்லை என்று எனக்கு அறியதாருங்கள். நான் உங்களுக்கு, உங்களுடைய முறைப்படியே விளக்கம் தர முயற்சி செய்கிறேன்.