வெண்டைக்காய் பொரியல்

தேதி: July 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

சத்துக்கள் நிறைந்த காய்களுள் ஒன்றான வெண்டைக்காயை எப்படி பொரியல் செய்வது என்று விளக்குகின்றார் செல்வி. புவனேஸ்வரி.

 

வெண்டைக்காய் - 12
வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 1/4 கப்
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டைக்காயை மெல்லிய வட்டவடிவில் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டைக்காயை நறுக்குவதற்கு முன்பே கழுவிவிடவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை போட்டு 3 நிமிடம் வதக்கி எடுத்து தனியே வைத்து விடவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் நறுக்கின வெங்காயம் போட்டு அரை நிமிடம் வதக்கி விட்டு, நறுக்கின தக்காளித் துண்டங்களைப் போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டங்களைப் போட்டு அதனுடன் மிளகாய் தூள், சோம்பு தூள், உப்பு போட்டு பிரட்டி விடவும்.
அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு ஒருமுறை பிரட்டி விட்டு, வாணலியை மூடி விடவும்.
சுமார் 2 நிமிடங்கள் கழித்து திறந்து தேங்காய் துருவல் தூவி கிளறி விடவும். இப்போது நீர் எல்லாம் சுண்டியிருக்கும்.
வெண்டைக்காயுடன் மசாலா நன்கு சேர்ந்து வேகும் வரை கிளறிவிட்டு, 5 நிமிடங்கள் சுருள வதக்கவும்.
மசாலா எல்லாம் நன்கு சேர்ந்து, காய்கள் நன்கு வெந்தபிறகு இறக்கிப் பரிமாறவும்.

வெண்டைக்காய் மிகவும் முற்றலாக இருந்தால் சுவையாக இருக்காது. சற்று பிஞ்சாக பார்த்து வாங்கிக்கொள்ளவும். வெண்டைக்காயின் அடிக்காம்பினை விரலால் லேசாக ஒடித்தால் ஒடியவேண்டும். அப்படி ஒடியவில்லையென்றால் காய் சற்று முற்றியது என்று முடிவு செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது தேங்காய் துருவல் போடமல் தேங்காய் பால் சேர்த்து செய்தேன் நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நேற்று வெண்டைக்காய் பொரியல் செய்தேன் நன்றாக வந்தது நல்ல குறிப்பு மிக்க நன்றி ! தோழி .....

veni raj

LIFE IS NOT A RACE
IT IS A JOURNEY!

Smile is the best medicine in the world,so keep smiling.