மஷ்ரூம் காலிஃப்ளவர் ஃப்ரை

தேதி: March 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

 

பட்டன் மஷ்ரூம்- 5
காலிஃப்ளவர்- 100கிராம்
தயிர்- 1மேசைக்கரண்டி
எண்ணெய்- 1மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- 1இனுக்கு

அரைக்க:
மல்லிக்கீரை- சிறிய கைப்பிடி அளவு
புதினா இலைகள்- 10
இஞ்சி- 1இன்ச் துண்டு
பூண்டு- 5பல்
பச்சை மிளகாய்-5 (காரத்திற்கேற்ப)
உப்பு- தேவையான அளவு


 

பட்டன் மஷ்ரூமை சுத்தம் செய்து நான்காக வெட்டிக் கொள்ளவும். காலிஃபிளவரை சிறிய பூக்களாக உதிர்த்து உப்பும் மஞ்சள்தூளும் கலந்த வெந்நீரில் சுத்தம் செய்யவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து அதனுடன் தயிர் கலக்கவும்.
இந்த கலவையை மஷ்ரூம் காலிஃப்ளவருடன் கலந்து 15நிமிடங்கள் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி கறிவேப்பிலை தாளித்து ஊற வைத்த மஷ்ரூம் கால்ஃப்ளவரை சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
தீயைக் குறைத்து மூடி போட்டு 5நிமிடம் வேக விடவும்.
மூடிய எடுத்து விட்டு இடையிடையே கிளறி மேலும் 5 முதல் 10நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கவி, மஷ்ரூம் காலிப்ளவர் ப்ரை நல்லா பச்சைபசேல்னு அட்ராக்ஷனா இருக்கும் போல இருக்கு பா. கற்பனைலயே டேஸ்ட் பண்ணிட்டேன். நல்ல மணமா ருசியா இருந்தது. மசாலா, தயிரோட மேரினேட் பண்னி வச்சிருந்தீங்களே.. புதுமையான குறிப்பு கவி. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்களுக்கு நன்றி கல்பூ! இந்த ரெசிப்பி கிடைச்ச ரகசியத்தை சொல்லவா?
மட்டன் கிரேவிக்கு அரைத்த பச்சை மசாலா கொஞ்சம் மீதி இருந்துச்சு. காலிஃப்ளவரும் மஷ்ரூமும் தனித்தனியா பொரியல் செய்ய போதுமானதாக இல்லை. எல்லாத்தையும் கலந்து ஊறவைத்து செய்தேன் :). டேஸ்ட் பிடிச்சிடுச்சு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!