மார்புள் கேக்

தேதி: March 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (10 votes)

வெனிலா மற்றும் சாக்லேட் கேக் மாவுகளை ஒன்றாக கலந்து செய்வதுதான் மார்புள் கேக் (marble cake). வெனிலா கேக் மாவில் சாக்லேட் கேக் மாவு கலந்து செய்யும் முறையை கொடுத்துள்ளேன். சாக்லேட் கேக் மாவில் வெனிலா கேக் மாவு சேர்த்தும் மார்புள் கேக் (marble cake) செய்யலாம்.

 

மைதா - 2 கப்
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 1/4 கப்
வெண்ணெய் அல்லது வெஜிடபுள் ஆயில் - 3/4 கப்
முட்டை - 3
பால் - ஒரு கப்
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
கோகோ பவுடர் - கால் கப்


 

மைதாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 2 அல்லது 3 முறை சலித்து வைத்துக் கொள்ளவும்.
வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடித்து வைக்கவும். பின் பாலை இதில் சேர்த்துவிட்டு, மைதாவை சிறிது சிறிதாக கொட்டி கலக்கவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவை வழக்கமான கேக் மாவை விட சற்று திக்காக(கெட்டியாக) இருக்கும்.
இப்போது இந்த கேக் மாவில் இருந்து 3/4 கப் மாவை தனியே எடுத்து, அதனுடன் கோகோ பவுடரை சேர்த்து கலக்கவும்.
கேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி மைதா தூவி தயார் செய்து வைக்கவும். இதில் வெனிலா(வெள்ளை நிற) கேக் மாவு கலவையை ஊற்றவும். அதில் சாக்லேட் (கோகோ) கலவையை மேலே வைக்கவும். ட்ரேயில் முக்கால் வாசி வரை மாவை நிரப்பினால் போதும்.
ஃபோர்க் அல்லது கத்தி கொண்டு சாக்லேட் கேக் மாவை சுழற்றி(swirl) marble effect கொண்டு வரவும்.
இந்த கலவையை 350 டிகிரி F முற்சூடு செய்த அவனில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
இந்த கேக் மாவு நன்கு உப்பி மேலெழும்பும்.
பிறகு வேறொரு ட்ரேயில் மாற்றி நன்கு ஆறியதும் கட் பண்ணவும்.
வெனிலா மற்றும் சாக்லேட் சுவைகளில் மார்புள் கேக் (marble cake) தயார். விரும்பினால் இதனை க்ரீம் பூசியும் அலங்கரிக்கலாம். இந்த கேக் சுலபமாக தயாரிக்க கூடியது.

இதில் loaf pan பயன்படுத்தி இருக்கிறேன். 9 இன்ச் வட்ட அல்லது 8X8 சதுர ட்ரே பயன்படுத்தினால் 30 - 35 நிமிடங்களில் கேக் வெந்துவிடும். அவரவர் விருப்பப்படி ஒரு லேயர் வெனிலா, ஒரு லேயர் சாக்லெட் எனவும் ஊற்றி பேக் செய்யலாம். வெனிலா மற்றும் சாக்லேட் சுவைகள் ஒரே கேக்கில் கிடைப்பதால் குழந்தைகளுக்கும் பிடிக்கும். ஒவ்வொரு முறையும் சுழற்றும் முறையை மாற்றினால் வித விதமான பாட்டர்ன்ஸ்( patterns) கிடைக்கும். Salted Butterக்கு பதிலாக வெஜிடபுள் ஆயில் பயன்படுத்தினால் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதில் கோகோ பவுடர் சேர்ப்பதற்கு பதிலாக பின்க், பச்சை போன்ற ஃபுட் கலர்ஸ் கூட சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு, மார்பிள் கேக் சூப்பர் பா. இங்கே பேக்கரிகளில் இது மாதிரி கேக் வாங்குவோம். குட்டீசுக்கு ரொம்ப விருப்பமான கேக் இது. ஆனா பேர் வேற என்னமோ சொல்லுவாங்க. வாய்லயே நுழையாது ;) கேக் செய்முறையும், விளக்கங்களும், படங்களும் சூப்பர் அன்பு. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இதையும் பார்த்ததும் தெரிஞ்சுடுச்சே நீங்க தான்னு... :) நம்ம பிள்ளைகள் எல்லாம் அசத்துறீங்கப்பா... குறிப்பும் சரி படமும் சரி... ப்ரொஃபஷனலா இருக்கு. சூப்பர் சூப்பர்!!! கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப சூப்பர்ங்க.நானும் என் பையனுக்கு கடையில் தான் வாங்கி கொடுப்பேன்.ஈஸியா வீட்டிலே செய்யலாம்.என் கிட்ட ஓவன் இருக்கு.ஆனா பேக்கிங் எப்படி செய்யறது என்று தெரியல்ல.நீங்க படத்தில் காண்பிப்பது போல இல்லை என் ஓவன்.டேரை எல்லாம் கிடையாது.என்ன செய்யலாம் பா.

Expectation lead to Disappointment

சுப்பர் குறிப்பு. நல்ல தெளிவாக செய்து காட்டிருக்கீங்க. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

ஹர்ஷா கேக் கடையில் வாங்குறது மாதிரியே இருக்கு.. இனி கடையில் போய் வாங்காமல் வீட்டிலேயே செய்து விடலாம்.. ரொம்ப நன்றி ஹர்ஷா.. இன்னும் நீங்க புது புது விதமா ரெசிபி குடுக்க என்னுடைய வாழ்த்துக்கள்..

"எல்லாம் நன்மைக்கே"

அன்புள்ள ஹர்ஷா கேக் பார்க்க நல்ல ரிச்சா இருக்கு .பார்க்கும் போதே செய்ய ஆசையாக இருக்கு.கண்டிப்பா செய்து பார்கிரேன்.வாழ்த்துக்கள்.

கடைகளில் கூட இந்த மாதிரி கேக் பார்த்தது கிடையாது நான். தெளிவான படங்களுடன் அழகா செய்து காட்டியிருக்கீங்க. சூப்பா இருக்கு மார்புள் கேக். வாழ்த்துக்கள்.

super,கண்டிப்பா செய்து பார்கிரேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தோழி நான் இதுவரை கேக் செய்ததில்லை. உங்க குறிப்பு என்னை கவர்ந்துவிட்டது. கேக் செய்யலாம் என்று ஆசையாக இருக்கு. பேக்கிங் பவுடர்னா என்ன? இட்லி மாவில் கலப்போமே அதுவா.

மார்பிள் கேக் ரொம்ப அழகா செஞ்சு காட்டியிருக்கீங்க.பொதுவா எனக்கு கேக் சொதப்பிடும்,நீங்க பண்ணியிருப்பதை பார்க்கும் போது செய்யணும் என்று ஆசையா இருக்கு,ட்ரை பண்ரேன்.

கேக் எனக்கு ஃபேவரைட்டான உணவு;) சின்ன வயசுல காலைல எந்திரிச்சதுமே கேக்தான் ஃபர்ஸ்ட். கேக் வீட்டில இல்லைனா கடைல போய் வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. என்னோட இரண்டு வாலும் கேக்குனாலே ஓடிடும். ஃபுல் கேக்கும் நானே சாப்பிடுவேன் என்ன ஜாலியான வாழ்க்கை பாருங்க என்னது;)கண்டிப்பா உங்க கேக் நான் ட்ரை பண்ணுவேன்;)நன்றி.

Don't Worry Be Happy.

ஹர்ஷா,

மார்புள் கேக் சும்மா அசத்தலா செய்திருக்கிங்க :) போட்டோஸ் எல்லாமும் பளிச்னு வந்திருக்கு, அதிலும் அந்த கடைசி இரண்டு படங்கள் ரொம்ப அழகா இருக்கு, சூப்பர்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா........எனக்கு இரண்டு ஃப்ளேவரும் ரொம்ப பிடிக்கும். இங்கே வந்திருந்தா இதை செய்து கொடுத்திருக்கலாமில்லையா? அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சூப்பர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

அன்பு ஹர்ஷா

சூப்பராக இருக்கு கேக். பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக் கொடுப்பது போல, தெளிவாக விளக்கியிருக்கீங்க. வழக்கம் போலவே தெளிவான படங்கள்.

ஆசையாக இருக்கு செய்து பார்க்க, அவன் இல்லையே, என்ன செய்யுறது?

படத்தைப் பார்த்துத் திருப்திப் பட்டுக்கறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

மார்பிள் கேக் மார்பிள் மாதிரியே பளபளப்பா இருக்கு ..அருமையான முறை...
எங்க வீட்டில குட்டீஸ்க்கு வெனிலா ஃஃபேலவர் மட்டும்தான் பிட்க்கும்..அதனால நான் இந்த சாக்லேட் மிக்ஸிங்க்கு போறதேயில்ல...
ஆனா இத பார்த்தவுடனே செய்யலாமின்னு இருக்கு
சூப்பர் குறிப்பு ...அதும் ப்ரசன்டேஷன் அண்ட் டிப்ஸ் அருமை....வாழ்த்துக்கள்
அன்பு :-

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

hi very yummy cake intha mathiri seiyalam nu than eruthan thanks for ur useful recipes and all the best

கல்ப்ஸ்,
முதலாவதாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி.ஆமாம்...குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும்.அதிசயமா என் மகனும் விரும்பி சாப்பிட்டான். :-) உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி கல்ப்ஸ்.

வனிதா,
//நம்ம பிள்ளைகள் எல்லாம் அசத்துறீங்கப்பா...// நிஜமாவா? நன்றி..நன்றி.எல்லாம் நீங்க கொடுக்கும் ஊக்கம் தான்.உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றி வனிதா. :-)

மீனாள்,
உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.பேக்கிங் ட்ரே அவன்’கூட வரலன்னா தனியே கடையில் வாங்கிக்கோங்க.நீங்க என்ன மாடல் அவன் வச்சுருக்கீங்கனு எனக்கு தெரியல.(அதனால் பதிலளிப்பது சிரமம் மீனாள்.)உங்க அவனில் டெம்ப்ரேச்சர் செட் பண்ணி, ப்ரீ ஹீட் பண்ணிக்கோங்க.பின்னர் கேக் மாவை வைத்து பேக் செய்யுங்க.முதல்முறை செய்யும் போது கொஞ்சமா செய்து பாருங்க. நல்லா வந்தால் அதிக அளவில் செய்யலாம்.

சுபாராம்,
உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க. :-)

பாக்யலக்‌ஷ்மி,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.கண்டிப்பா செய்து பாருங்க. மிகவும் சுலபம்தான்.

பர்வீன் பானு,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க. :-)

வினோஜா,
நானும் இங்குள்ள பேக்கரியில் தான் முதன்முறையா இந்த கேக் பார்த்தேன். :-) உங்க பதிவுக்கு மிக்க நன்றி வினோஜா.

முசி,
கண்டிப்பா செய்து பாருங்க. மிகவும் சுலபமான செய்முறைதான்.

உமா,
இட்லி மாவில் பேக்கிங் சோடா தான் சேர்ப்போம்.இது பேக்கிங் பவுடர்.கேக்,பிஸ்கெட் எல்லாம் செய்ய பயன்படுத்துவது.கடைகளில் கிடைக்கும்.சூப்பர் மார்க்கெட்களில் பேக்கிங் செக்‌ஷனில் இருக்கும்.

ரீம்,
கண்டிப்பா செய்து பாருங்க.எப்படி வந்ததுனு சொல்லுங்க.சரியா?உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ஜெய்,
இங்கும் அதே கதைதான்.என் மகன் இந்த முறைதான் கொஞ்சம் சாப்பிட்டான். :-) கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி ஜெய்.

சுஸ்ரீ,
உங்க பதிவுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுஸ்ரீ. :-)

லாவண்யா,
நீங்க இங்கு வாங்க.கண்டிப்பா செய்து தரேன்.சரியா? உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

ஆசியா,
மிக்க நன்றிங்க. :-)

சீதாலக்‌ஷ்மி அம்மா,
உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.அங்கிள் கிட்ட சொல்லி சீக்கிரமே அவன் வாங்கிடுங்க.
இல்ல...இங்கு வரும் போது வீட்டுக்கு வாங்க.செய்து தரேன்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

இளவரசி,
நீங்களே கேக் செய்வதில் எக்ஸ்பர்ட்.உங்களிடம் பாராட்டு வாங்குவது மகிழ்ச்சியா இருக்கு.கண்டிப்பா செய்து பாருங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ஃப்ரூட்டி,
உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

தெளிவான செய்முறை. படங்களும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் ஹர்ஷா.

‍- இமா க்றிஸ்

அன்பு,
எளிமையான கேக்....
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இமா,
உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி. நன்றி இமா. :-)

நன்றி கவிதா. ;-)

அன்பு நேற்றே உங்க குறிப்பை பார்த்தேன் பதிவு போடுவதற்க்குள் நெட் ப்ராப்ளம் ஆய்டுச்சி ;(
சூப்பரான சுவையான எளிமையான் கேக் பார்க்கவே ஆசையா இருக்குப்பா வாழ்த்துக்கள்.கண்டிப்பா செய்து பார்க்கனும்.

அவன் இருக்கு இந்த கேக்குக்கு தேவையான பொருளும் இருக்கு ஆனால் நான் கேக் செய்தாலே சொதப்பிடுது :(
அதனாலயே செய்யறது இல்லை இந்த முறை ரொம்பவே ஈசியா இருக்கு செய்துட்டு சொல்றேன், மிக்க நன்றி இது போன்ற குறிப்புகளை தள்ளிக்கிட்டே இருங்க.......:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்களுடைய ressp மிகவும் அருமை,பால் காட்சின தா ?என்று சொல்லுங்களேன்

இந்த கேக் செய்முறை ரொம்பவே ஈஸி.செய்து பாருங்க.இம்முறை சொதப்பாது. :-)
சிறிய முட்டை என்றால் 3 சேர்த்துக்கோங்க.லார்ஜ் சைஸ் என்றால் 2 போதும்.
செய்து பார்த்து எப்படி வந்ததுனு சொல்லுங்க. முழு அளவு வேண்டாம்னா,எல்லா பொருட்களிலும் பாதியளவு எடுத்து ட்ரை பண்ணுங்க.

உங்களை மாதிரி பலகாரம் எல்லாம் எனக்கு செய்ய வராது.ஆனால் பேக்கிங் செய்துடுவேன்.கலக்கி அவனில் வைக்கும் வேலை...ரொம்ப ஈஸிதானே.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி ஸ்வர்ணா.

இங்கு நான் காய்ச்சாத பால் தான் பயன்படுத்தி இருக்கிறேன்.(pasteurized milk) பாஸ்ட்டுரைஸ்ட் மில்க் என்றால் அப்படியே சேர்க்கலாம்.காய்ச்ச தேவையில்லை.பதிவுக்கு மிக்க நன்றி.கேக் செய்து பார்த்து சொல்லுங்க.

Dear madam,

is this receipe can be tried in Microwave oven?

thanks.

gshalini