க்ரப்ஸ் & ஸ்ட்ராபெர்ரி சாஸ்

தேதி: March 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

க்ரப்ஸ் (Crepes) செய்ய:
ஆல் பர்ப்பஸ் மாவு - ஒரு கப்
முட்டை - 2
பால் - 1 1/4 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
ஸ்ட்ராபெர்ரி சாஸ் செய்ய:
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் நறுக்கியது - 1 (அ) 1 1/2 கப்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - ‍ தேவைக்கு


 

முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி எக் பீட்டர்/முள் கரண்டி கொண்டு அடிக்கவும்.
அத‌னுட‌ன் சிறிது சிறிதாக‌ ஆல் பர்ப்பஸ் மாவை சேர்த்து க‌ட்டியில்லாம‌ல் ந‌ன்கு க‌ல‌க்க‌வும். ஒரு சிட்டிகை உப்பு, எண்ணெய் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் க‌ல‌க்கி, ப்ரிட்ஜில் குறைந்தது ஒரு ம‌ணி நேர‌ம் வைக்க‌வும்.
சாஸ் செய்ய‌, ஸ்ட்ராபெர்ரி ப‌ழ‌ங்க‌ளை சிறிய‌ துண்டுக‌ளாக‌ ந‌றுக்கி, ஒரு பாத்திர‌த்தில் போட்டு, கூட‌வே ச‌ர்க்க‌ரை, இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி த‌ண்ணீர் சேர்த்து, அடுப்பில் குறைந்த‌ தீயில் வைக்க‌வும்.
சிறிது நேர‌த்தில், ச‌ர்க்க‌ரை க‌ரைந்து ப‌ழ‌ங்க‌ளும் சேர்ந்து நீர்க்க‌ ஆர‌ம்பிக்கும். இப்போது ஒரு க‌ர‌ண்டியால், மெல்லிய‌ அழுத்த‌ம் கொடுத்து, ஒன்றிர‌ண்டு ப‌ழ‌ங்க‌ளை ந‌சுக்கி விட‌வும். (ஒரேடியாக‌ எல்லாவ‌ற்றையும் ந‌சுக்கி கூழாக்கி விட‌க்கூடாது.) டெக்ஸ்ச்சர் முக்கியம், அப்போதுதான் செர்வ் செய்யும் போது பார்க்க அழகாக இருக்கும்.
எல்லாம் சேர்ந்து லேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விடவும். இப்போது ஸ்ட்ராபெர்ரி சாஸ் த‌யார்!
க்ர‌ப்ஸ் த‌யாரிக்க, அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் பேனை வைத்து, சூடான‌தும் சிறிது வெண்ணெய்/எண்ணெய் த‌ட‌வ‌வும். (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்)
ஒரு கர‌ண்டி மாவை எடுத்து அதில் ஊற்றி, பேனை கையில் எடுத்துக்கொண்டு, மாவு எல்லா இட‌மும் ப‌டுமாறு பேனை சுழ‌ற்றிவிட்டு வைக்க‌வும்.
இது மெல்லியதாக எல்லா இடமும் ஒரே மாதிரியான தடிமனில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஒரு சில நொடிகளில் வெந்து, ஓரங்களில் லேசாக நகர்த்தினால், பேனைவிட்டு விலகுமாறு இருக்கும்போது, திருப்பிப் போடவும்.
மறுபக்கமும் சில நொடிகள் வெந்ததும், செர்விங் ப்ளேட்டில் மடித்து வைத்து, மேலே ஸ்ட்ராபெர்ரி சாஸ் விட்டு பரிமாறவும். சுவைமிகு க்ரப்ஸ் வித் ஸ்ட்ராபெர்ரி சாஸ் தயார்!
இது ரொம்பவும் திகட்டாமல், வித்தியாசமானதொரு டெஸர்ட்டாக இருக்கும்.

க்ரப்ஸ் ஒரு ஃப்ரஞ்ச் (french) நாட்டு உணவு வகையாகும். இங்கே ஸ்ட்ராபெர்ரி சாஸ் செய்முறை கொடுக்கப்பட்டு உள்ளது. வேறு விதமான சாஸுடனும், அல்லது வெறும் நறுக்கி வைத்த பழங்களுடனும்கூட பரிமாறி சாப்பிட சுவையானதாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் சூப்பர்... ரொம்ப சூப்பர். படங்கள் நல்ல வெளிச்சத்தில் அழகாக வந்திருக்கு. குறிப்பு அருமை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்...பார்க்கவே அழகா இருக்கு.கலர் மற்றும் படங்கள் எல்லாமே பளிச்.வித்தியாசமான புதுமையான டெசர்ட்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன் சுஸ்ரீ.வாழ்த்துக்கள்.

சுஜாதா, வழக்கம்போல படங்கள் அருமை. செய்முறை விளக்கங்களும் சூப்பர். குட்டிங்க விரும்பி சாப்பிடுவாங்க. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மைதாவில் செய்த டிஷ்.. ஸ்ட்ராபெர்ரி சாஸ் இரண்டுமே அருமை.. பெரும் நல்லா இருக்கு.. இப்போ இரண்டுமே வீட்டில் இருக்கு.. செய்து பார்த்து நாளையே சொல்றேன்.. நன்றி சுஸ்ரீ

"எல்லாம் நன்மைக்கே"

வாவ்! சூப்பர். ;P

‍- இமா க்றிஸ்

ஆல் பர்ப்பஸ் மாவு - இது என்ன மாவு. தயவுசெய்து சொல்லவும்.

அன்புடன்
ஜெயா

ஆல் பர்பஸ் மாவு என்றால் மைதா மாவு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா
அன்புடன்
ஜெயா

சுஸ்ரீ,
superb ..
இதனுடன் சாக்லேட் சாஸ் சேர்த்து சாப்பிடுவதுண்டு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பார்க்க அழகா உள்ளது, செய்வதும் சுலபமாக உள்ளது.
தேவையானவை லிஸ்டில் பால் - 1 1/4 கப் என்று சொல்லியிருகின்றீர்கள், செய்முறையில் பால் சேர்ப்பது பற்றி எந்த இடத்திலும் சொல்லவில்லை. பின்னர் பால் எதற்கு??

இதுவும் கடந்து போகும் !

மஹி, சுஸ்ரீ குறிப்பிட மறந்திருப்பார். முட்டையோடு பாலை கலந்து நன்கு அடித்து விட்டு அதனுடன் மாவை கலக்க வேண்டும். சுஸ்ரீ பதிலளிக்க தாமதமானால் இந்த பதில் உங்களுக்கு உதவும் :) சுஜா, சரியா சொல்லியிருக்கேனா பா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸ்ட்ராபெர்ரி சாஸ் நானும் இதே போல் செய்வேன். ஆனால் அதனுடன் பான்கேக் தான். எங்களின் ஞாயிறு சிற்றுண்டி பொதுவாக இதுவாக தான் இருக்கும் :) இனி உங்களின் இந்த ரெசிபியும் உண்டு. ( இந்த சீசனில் எங்கும் எதிலும் எங்கள் வீட்டில் ஸ்ட்ராபெர்ரி இருக்கும்! )

படங்கள் எல்லாம் கலக்கலாக வந்திருக்கு. லாஸ்ட் பட் பிஃபோர் படத்தின் கலரின் கச்சிதமாக இருக்கு.

ஆல் பர்பஸ் மாவு ஒரு வகையான கிராஸ் அல்லது ரூட் அல்லது விதையிலிருந்து எடுக்கப்படுவது. மைதா கோதுமையின் கடைசி ப்ராடக்ட். நம்மூரில் தான் பொதுவாகவே மைதாவை ஆல் பர்பஸ் மாவு என்று சொல்லுவோம்.

கல்பூ நீங்க கரீக்டா சொல்லியிருக்கீங்க....ஒன்னியும் நினைக்க வேண்டாம் நம்ப சுஜா தானே அட்ஜஸ்ட் மாடிப்பாங்கோ! (சுஜா நீங்க தப்பா நினைக்கமாட்டீங்க என்று தான் சொல்லிட்டேன்....கோவிச்சிக்காதீங்க!)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுஸ்ரீ வழக்கம் போல அருமையான குறிப்பு அழகான படங்கள்.வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு சுஸ்ரீ,

விருப்பப் பட்டியலில் சேர்த்துட்டேன்.

நான் முட்டை சேர்த்து சமைப்பதில்லை, மகள், மருமகள்களுக்கு இந்தக் குறிப்பை அனுப்பி வைக்கிறேன். பாக்கறதுக்கே அவ்வளவு அழகாக இருக்கு.

முட்டை சேர்க்காமல், இந்த க்ரப்ஸ் செய்ய முடியுமா?

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி!

முதலில், என தாம‌த‌மான‌ ப‌திலுக்கு தோழிகள் ம‌ன்னிக்க‌னும். இடையில் ஒரு வார‌ம் ப‌ய‌ங்க‌ர‌ பிஸி! இன்னைக்கு ச‌ன்டே, அதான் ஓடோடி வந்திட்டேன், க‌ண்டிப்பா இன்னைக்காவது ப‌தில் ப‌திவுக‌ள் போட்டிட‌ வேண்டுமென்று! :)

அன்புடன்
சுஸ்ரீ

வனி,
முத‌ல் ஆளா வந்து பாராட்டி, வாழ்த்துக்கள் சொன்ன‌துக்கு மிக்க‌ ந‌ன்றி வனி! :)

ஹர்ஷா,
பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! ஆமாம், வித்தியாசமான டெசர்ட் இது. முடியும்போது செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

கல்பனா,
பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! ஆமாம் க‌ல்ப‌னா, என் ப‌ச‌ங்க இரண்டு பேருக்கும் ரொம்ப இஷ்டமா இருந்திச்சி! நீங்களும் முடியும்போது செய்து பாருங்கள். உங்க‌ வீட்டு குட்டிஸ் என்ன சொல்றாங்கன்னும் சொல்லுங்க‌. :) ந‌ன்றி!

பாக்கியா,
உங்க‌ பாராட்டுக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி பாக்கியா! அப்புற‌ம் செய்து பார்த்திங்க‌ளா?! பிடித்து இருந்ததா?

இமா,
என் குறிப்பில், உங்க‌ பதிவு பார்த்த‌தில் ரொம்ப‌ சந்தோஷ‌ம்! :) பாராட்டிற்கு மிக்க‌ ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஜெயா,
வாங்க‌ ஜெயா, உங்க கேள்விக்கு தோழிகள் பதில் சொல்லியிருக்காங்க.வேறு ஏதேனும் தெரியனும்னாலும் கேளுங்க. ந‌ன்றி!

ப‌தில‌ளித்த‌ தோழிக‌ள் வனி & லாவண்யாக்கு நன்றி! :)

க‌விதா,
பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க‌ ந‌ன்றி க‌விதா! ஆமாம், எங்க‌ வீட்டு சின்ன வாலுக்கு பேவ‌ரைட் சாக்லெட் சாஸ்சுட‌ன்தான்! :)

ம‌கி,
பாராட்டிற்கு மிக்க ந‌ன்றி ம‌கி. ஆமாம், பால் சேர்ப்பதை செய்முறையில் எழுத விட்டுதான் போச்சு. (தூக்க‌க்க‌ல‌க்க‌த்தில் குறிப்பு எழுதி அனுப்பினால் இப்ப‌டிதான்!! :)) அதை க‌ர‌க்ட்டா க‌ண்டுபிடிச்சு சொன்ன‌த‌ற்கு ந‌ன்றி ம‌கி!அட்மின் குழுவின‌ருக்கு மெயில் அனுப்பி திருத்திவிடுகிறேன்.

கல்பனா,
ரொம்ப‌ சரியா சொல்லொயிருக்கிங்க கல்ப்ஸ்! தேங்ஸ்!. அதேதான், முட்டையை அடித்தவுடன் அடுத்த ஸ்டெப், பாலையும் அதில் போட்டு கலந்துவிடவேண்டும் என்பதுதான். நான் இல்லைன்ன‌தும் ஓடி வந்து ப‌தில் சொன்ன‌துக்கு ரொம்ப‌ ந‌ன்றி கல்ப்ஸ்! :)

அன்புடன்
சுஸ்ரீ

லாவ‌ண்யா,

சேம் பின்ச்! நானும்கூட வீக்கென்ட் ஸ்பெஷல் ப்ரேக்பாஸ்டா பான் கேக் செய்வதுண்டு + எங்க வீட்டிலும் இந்த‌‌ சீச‌னில், ஒரே ஸ்ட்ராபெர்ரி ம‌ய‌ம்தான்! :)

பாராட்டிற்கு ரொம்ப‌ ந‌ன்றி! இந்த குறிப்பு செய்து, ப்ர‌ச‌ண்டேஷ‌ன் ப‌ட‌ங்க‌ள் எடுக்கும்போதும் எங்க‌ வீட்டு ஜூனிய‌ர் போட்டோகிராஃபரும் (என் பொண்ணுதான்!) என்னோடு சேர்ந்துக்கொண்டு எக்கச்சக்க படம் எடுத்தாங்க!! :) எல்லாவ‌ற்றிலும் பெஸ்ட்டா தோனின‌தை எடுத்து போட்டேன்! :)

'ந‌ம்ம‌ சுஜா'தானேன்னு சொல்லிட்டு, கூட‌வே ஏன் த‌ப்பா நினைக்க‌மாட்டிங்க‌தானே, கோவிச்சிக்காதீங்க‌ எல்லாம்?!! போங்க, இப்ப‌தான் கோவிச்சிக்க‌ போறேன்! :))

உண்மையில், நான் காணாமபோயிருக்கும் சமயங்களில், அடுத்த‌வ‌ர் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍கேட்ட‌ சந்தேக‌ங்க‌ளுக்கு, கேள்விக‌ளுக்கு ஓடோடி வந்து ப‌தில் அளித்த‌‌த‌ற்கு, ரொம்ப ந‌ன்றி, கல்பனா & லாவண்யா!
------------------

சுவ‌ர்ணா,
பாராட்டுக்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி சுவ‌ர்ணா!

அன்பு சீதால‌ஷ்மிமா,
விருப்பப் பட்டியலில் சேர்த்திட்டிங்களா?! :) உங்க‌ ப‌திவை இங்கே பார்த்த‌தில், பாராட்டுகளை படித்ததில் ரொம்ப‌ ம‌கிழ்ச்சியா இருக்கு! :) மிக்க‌ ந‌ன்றி!

முட்டை சேர்க்காம‌ல் செய்ய‌லாமா என்று தெரிய‌வில்லையே?! கேக், ம‌ஃபின் போன்ற‌ ஐட்ட‌ங்க‌ளில் முட்டை சேர்க்காம‌ல், அத‌ற்க்குண்டான‌ ச‌ப்ஸ்ட்டிடியூட் வைத்து செய்து பார்த்திருக்கிறேன். இதில் முட்டையில்லாமல், இதுவ‌ரை முய‌ற்சித்த‌தில்லை. வேண்டுமானால் கொஞ்சமாக செய்துபார்க்கலாம். நான் செய்து பார்த்தால் கட்டாயம் வந்து சொல்கிறேன். மீண்டும் ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ