சப்பாத்தி ரோல்

தேதி: March 15, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (11 votes)

 

சப்பாத்தி செய்ய
கோதுமை மாவு – ஒரு கப்
தண்ணீர் – பிசைய தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
நெய் – ஒரு ஸ்பூன்

ரோல் செய்ய
காரட் - இரண்டு
குடமிளகாய் – ஒன்று
சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்
டொமாடோ சாஸ் – ஒரு ஸ்பூன்


 

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய் மூன்றும் கலந்து தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி. அதை சப்பாத்தி கல்லில் தேய்க்கவும்.
பின் தோசைக்கல்லில் தேய்த்த சப்பாத்தியை போட்டு எண்ணெய் விட்டு சூட்டு எடுக்கவும்.
இப்பொழுது சப்பாத்தி ரெடி.

ரோல் செய்ய

முதலில் வாணலியை எண்ணெய் ஊற்றி காரட் குடமிளகாய் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்கு வெந்து தண்ணீர் வதங்கியவுடன் உப்பு சோயா சாஸ் டொமேடோ சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு கலவையாக வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
முதலில் செய்து வைத்த சப்பாத்தியில் இந்த கலவையை நடுவில் வைத்து ரோல் செய்து பரிமாறவும்.
சூடான சுவையான சப்பாத்தி ரோல் ரெடி. குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமான உணவு.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கலக்குறே ரே சப்பாத்தி ரோல் அருமை...வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரே, சப்பாத்தி ரோல் இதுக்கு தான் கேட்டியா? ரொம்ப நல்லார்க்கு ரே. குட்டீஸ் லஞ்ச் பாக்சுக்கு ஏற்ற டிபன். என் குட்டிசுக்கு நிச்சயம் செய்து தர்றேன். வாழ்த்துக்கள் ரே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

sappaathi innaikku valakkaththai vida onnu kuuduthalaa saapteen revathy,suvai nalla irunthathu,

நேத்து நைட் எங்க குட்டீஸோட டிபன் இதான் நல்லா சாப்பிட்டாங்க பிடிச்சிருந்தது அவங்களுக்கும் எனக்கும் தான் ரேவதி